கற்பனை 36
முதல் இரவு அறை மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்க அவளுக்காக காத்துக் கொண்டிருந்த கதிர் சந்தியாவை கண்டதும் புன்னகையுடன்
"உட்காரு சந்தியா"என்று கூற அவனின் அருகில் அமர்ந்தவளை நோக்கியவன்
"நீ ஏதும் சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட நான் சில விசயங்கள தெளிவு படுத்தனும்மா.சின்ன வயசுலயே எங்கம்மா தவறினதும் எங்கப்பா என்ன ஹாஸ்டெல்ல சேர்த்துவிட்டாங்க. அம்மாவோட அரவணைப்புன்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவன் நான்.கொஞ்ச நாள்ள அப்பாவும் இறந்து போக என் வாழ்க்கை ஹாஸ்டல்லயே போயிடிச்சு. எனக்கு இருந்த பல உறவுகள்ள என்கூட தொடர்புல இருந்தது நந்தினி அப்பா மட்டும்தான். காலேஜ் படிக்கிற வரைக்கும் எனக்கு பெண்களோட அருகாமையே கிடைக்கல" என்று கூற அவனை சந்தியா முறைப்பதை கண்டவன்
"ஐய்யோ தப்பா எடுத்துக்காத நான் சொல்லவந்தது எந்த பொண்ணோட அன்பான வார்த்தைகளோ ஏன் என்கிட்ட சாப்பிட்டியான்னு கேட்க கூட யாரும் இருந்ததில்ல. ஆனா நான் இது எதுக்குமே கவலைப்பட்டது இல்ல. உனக்கே தெரியும் நந்தினி எவ்வளவு அழகுன்னு. அவ எனக்கு முறைப்பொண்ணா இருந்தும் கல்யாணத்துக்கு முன்னாடி நான் ஒரு தடவை கூட பேசினது இல்ல.நான் பேசின ஒரே பொண்ணுன்னா அது வீணாதான். அதுவும் சுமன் மூலமா, எனக்கிருந்த ஒரே ஒரு ப்ரெண்ட் அவந்தான்.அவனோட மாமா பொண்ணுதான் வீணா. எனக்கு தங்கச்சி மாதிரி ஆனா என்னால அந்த உரிமையை எடுதுதுக்க முடியல.காரணம் நான் அவகிட்ட ஏதும் பேசப்போயி அது தப்பாயிடிச்சின்னா அதனால அவகிட்ட கூட நான் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணியே பழகுவேன். அப்படி இருக்கும் போதுதான் எனக்கு ஆகாஷனா அறிமுகம் கிடைச்சது, ஆகாஷனா என்ற பேருல நீ பேசும் போது ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணுவேன். ஒரு சில நேரங்கள்ள உன் பாராட்டு, சில நேரங்கள்ள நீ கோபிக்கிறது. சில நேரங்கள்ள எனக்கு அட்வைஸ் பண்றது எல்லாமே ஒரு பையன் தன் தாய்கிட்ட எதிர்பார்க்குற ஒரு சில விசயங்கள் உன் மூலமா எனக்கு வந்திச்சு. ஆனா அதுக்கு பேரு என்னன்னு தெரியல. ஆனா சுமன் அதை காதல்னு சொல்லிட்டான்... உனக்கே தெரியும் ப்ரெண்ட்ஸ்னா இப்படித்தான் எதையாச்சும் சொல்லுவாங்கன்னு"என்று இதற்கும் ஒரு முறைப்பை சந்தியாவிடம் இருந்து வாங்கியவன்
"கடைசியா உன் காலேஜ கண்டுபிடிச்சி உங்க கான்வகேசன்ல வெச்சு உன்ன மீட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணப்போதான் உங்களுக்கு ஆக்சிடன்ட் ஆச்சி. அதுக்கு அப்புறம் அநத் ஆகாஷனாவ கண்டுபிடிக்க முடியலை. நந்தினி கூட கல்யாணம் ஆகி ஒரு நாள் தெலுங்கு மூவி ஒன்னுல ஹீரோயின் பேரு ஆகாஷனா சிங்க்னு வர எனக்கு பழைய ஞாபகம்லாம் வந்திச்சு. சோ நம்ம சாட் பண்ணினத எடுத்து பார்த்துட்டு தூங்கிட்டேன். ஆனா அதே ஐபாட்ட நந்தினி எடுத்து பார்ப்பான்னு நான் கனவுலயும் நினைக்கல. நீ நினைக்கலாம் ஆகாஷனாக்காகத்தான் நான் நந்தினிய விட்டு பிரிஞ்சேன்னு. ஆனா நிஜம் அது இல்லை. நந்தினி அவளுக்கு ஹஸ்பண்ட்டா வர போறவரை பத்தி பல கனவுகள் வச்சிருந்தா அது உனக்கே தெரியும், அவ ஆகாஷனா பத்தி தெரிஞ்சதும் ரொம்ப மெச்சூர்ட்டா பேசினா. எனக்கு அவ பேசும் போது ஒரே பயம்தான் என்னால அவ வாழ்க்கை கெட்டுட கூடாதுன்னு. ஆனா அவதான் இருக்குற மீதி வாழ்க்கையையாச்சும் அர்த்தமுள்ளதா வாழலாம்னு சொன்னா. எனக்கு ஆரம்பத்துல ரொம்ப பயமா இருந்திச்சு. எனக்கு இருந்த ஒரே உறவு நந்தினி அதையும் இழந்துடுவோமோன்னு. ஆனா அவளோட பிடிவாதமும் சாதுர்யமான பேச்சாலையும் என்னால எதுவும் பண்ண முடியல"என்று பேசிக் கொண்டிருக்க சந்தியா வாயை ஆவென திறந்து கொட்டாவி விட்டால்!!!.. கதிருக்கு அவள் என்ன கூற வருகின்றாள் என்பது புரிய
"சரி நான் என் கதைய இத்தோட முடிச்சிக்கிறேன்.உனக்கு ஏதும் சொல்லனுமா?" என்று கேட்க அவள் கேட்ட கேள்வி அவனை பைத்தியமாக்கியது.
"எதுக்கு நீங்க ஆகாஷனாவ கொன்னீங்க.. எனக்கு அது பிடிக்கவே இல்லை. ஐ ஹேட் யூ!" என்று சீரியசா கூற கதிருக்கு நிஜமாகவே சிரிப்பு வந்துது. உடனே அவன்
"அது அப்படி இல்லமா"என்று அவள் அருகில வர அவனை பார்த்து முறைத்தவள்
"எதுக்கு கொன்னீங்கன்னு உங்க கிட்ட கேட்டா ஏதாச்சும் லூசுத்தனமா பேசுவீங்கன்னு தெரியும். எனக்கு அந்த ஸ்டோரிக்கு ஆல்டர்னேடிவ் முடிவு வேணும். அதுக்கு அப்புறமா என்கிட்ட வாங்க. அது வரைக்கும் நமக்கு கல்யாணம் ஆகலன்னு நினைச்சிக்கோங்க" என்று கூற கதிருக்கு உண்மையிலேயே இப்போது தலை சுற்றியது. கதிருக்கு நன்றாக புரிந்தது தனது மனநிலையை மாற்றத்தான் சந்தியா இப்படி எல்லாம் பேசுகின்றால் என்று, உடனே அவன்
"சரிடி எழுதுறேன்.கடைசில என்னயும் ஒரு சாதாரண வாட்பேட் ரைட்டராக்கிட்டல்ல" என்று கூற புன்னகைத்தவள்
" என்னது டி ஆ!!! இருக்கட்டும் இருக்கட்டும். நான் தூங்க போறேன், நீங்க கதைய எழுதி முடிச்சிட்ட்டு வந்து தூங்குங்க" என்று கூறி தூங்கினால்.கதிரால் அந்தக்கதைக்கு எப்படி இன்னொரு முடிவு கொடுப்பது என்று தெரியாமல் முழிக்க அவன் 2 முறை எழுதிப்பார்த்தும் அது சரியாக அமையவில்லை.
காலையில் துயில் கலைந்த சந்தியா கதிரை பார்க்க அவன் கதிரையிலேயே தூங்கி இருக்க குளித்துவிட்டு காப்பி போட்டு கொண்டு வந்தால். வீட்டில் எல்லோரும் நந்தினி ராஜீவின் திருமண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நந்தினிக்கு கால் செய்த சந்தியா அவளுடன் பேசிக்கொண்டிருக்க சந்தியா
"ஹேய் நேத்து நைட்டு கதிருக்கு வச்சேன் ஒரு ஆப்பு. பயபுள்ள ஆள் காலிடி" என்று கூற ஒரே நாளில் சந்தியா இவ்வளவு சந்தோசமாக மாறுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. இருந்தாலும் தன் தோழி இவ்வளவு சீக்கிரத்தில் பழையபடி கலகலப்பாக மாறியதில் சந்தோசம் கொண்ட நந்தினி
"அப்படி என்ன பண்ண"என்று கேட்க நடந்தவற்றை சந்தியா கூறியதும் விழுந்து விழுந்து சிரித்த நந்தினி
"பாவம்டி அவரு" என்று கூற
"ஆகாஷனாவ கொன்னாருல்ல. நல்லா மாட்டிக்கிட்டு முழிக்கட்டும்" என்று கூறியவள் நந்தினியின் திருமண விசயங்கள் பற்றி பேசி காலை கட் செய்தால்.
அடுத்த நாள் கதிர் சந்தியாவுக்கு முன்பாகவே அறைக்குள் சென்று இன்று எப்படியும் ஆல்டர்னேடிவ் எண்டிங் கொடுக்க தனது கதையை முழுமையாக படித்து எழுத ஆரம்பித்தான்.
சந்தியாவோ இனி கதிருக்கு அவன் வாழ்க்கையில் கிடைக்காத ஒரு பெண்ணின் அன்பையும், உள்ளார்ந்தமான அரவணைப்பையும் இன்றே கொடுக்க தயாராகியவள் நேற்று அவன் அவளை டி போட்டு பேசியதில் இன்னும் கொஞ்சம் அவனுடன் சகஜமாக பழகினால் தனிமையில் தத்தளிக்கும் அவன் மனதை இலகுவாக கரை சேர்க்க முடியும் என்று நினைத்தால்.
அறைக்குள் சந்தியா நுழைய கதிர் புன்னகையுடன்
"பொண்டாட்டி, ஸ்டோரி எழுதிட்டேன்டி" என்று தான் எழுதிய முடிவை அவளிடம் கொடுக்க அவளும் ஆர்வமாக படிக்க ஆரம்பித்தவள் தொடர்ந்து படித்த அவள் முகம் கோபத்தில் சிவக்க கட்டிலில் அமர்ந்திருந்தவனை "டேய்" என சத்தமிட்டு அடிக்க ஆரம்பித்தால். தன்னவள் கோபத்தில் தன் அருகில் வந்து அவனை அடித்தாலும் அவளின் அருகாமை அவனை இம்சிக்க அவளை பூப்போல அணைத்துக் கொண்டான்.. சந்தியாவுக்கும் அதுவே தேவையாக இருந்தது, காரணம் இருவரும் மீண்டும் மனதில் உள்ளதை பேசுவோம் என்று கதிர் ஆரம்பித்துவிட்டால் அவனின் தனிமை உணர்வு மீண்டும் அவனை கொல்லும் என்று தெரிந்தவள் சண்டையில் தங்களது கூடலை ஆரம்பிக்க எண்ணியவள் அவனுடன் சண்டை இட அவனும் அவள் எண்ணியது போலவே அவளின் எண்ணத்தை பொய்ப்பிக்காமல் அவனும் அவளுடன் இணைந்தவன் அவள் காதை கடித்து
"என்னடி புருசன டேய்னு சொல்ற" என்று கூற அவள்
"ஆமா நேத்து நீங்க என்ன டி!!போடல"என்று பதில் கூறியவளை இறுக்கி அனைத்தவன்
"எனக்கு தெரியும் சந்தியா என் மனசுல இருக்குற பாரம் குறையனும்னுதான் நீ இதெல்லாம் பண்றேன்னு" என்றவனை இதற்கு மேலும் இவனை பேசவிட்டால் பேசிக்கொண்டே இருப்பான் என்று நினைத்தவள் அவனது இதழ்களை கடிக்க ஆரம்பித்தவளை அவன் ஆக்கிரமிக்க தொடங்கினான். நேரம் சென்றது தெரியாமல் ஒருவர் மற்றவரின் அணைப்பில் இருக்க சந்தியா
"ஏன் கதிர் என் முகத்த பார்க்கும் போது உங்களுக்கு அருவறுப்பா இல்லையா. கால் இல்லைன்னா கூட பரவாயில்லை.ஆனா முகத்த பார்க்காம நாம எப்படி இருக்க முடியும்?"என்று கூற அவளை மேலும் தன்னுடைன் இறுக்கியவன்
"சரியான கேள்விய கேட்ட சந்தியா. ஒரு பொண்ண மனசுக்கு பிடிக்கனும்னா ஆரம்பத்துல அவ அழக பார்த்துதான் அதிகமானவங்களுக்கு பிடிக்கும். ஆனா எனக்கு உன்ன பிடிக்க ஆரம்பிச்சது உன் வார்த்தைகள் மூலமா. உன் முகத்தை பத்தி நான் என்னைக்குமே கவலைப்பட்டது இல்லை. இன்பாக்ட் உனக்கு இப்படி ஆனது கூட ஒரு வகைல நல்லதா போச்சு. இல்லன்னா நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்டியே" என்றவனை ஆச்சரியமாக பார்த்தவள்
"உண்மையா பேசுறீங்க, ஏன் தெரியுமா சொல்றேன் என்ன பார்க்குறவங்க எல்லோருமே என்ன பாவமாத்தான் பார்ப்பாங்க. அவங்க அனுதாபத்த பார்க்கும் போதுதான் எனக்கு இப்படி இரு குறை இருக்குறது தெரியும். ஆனா எனக்கு இப்படி ஆனத கூட இவ்வளவு சிம்பிளா சொல்றீங்களே ஐ அம் சோ லக்கி கதிர் "என்றவளை அவன்
"ஹேய் நிஜமா உனக்கு ஆல்டர்னேடிவ் எண்டிங்க் பிடிக்கலயா?" என்று கேட்க அவள்
"இதுக்கு பேசாம அவங்க எல்லோரையும் அந்த காலேஜ்ல வெச்சு பாம்ப் போட்டு கொன்னிருக்கலாம்" என்றவள் உடனே எழுந்து அவன் மேல் அமர்ந்தவள்
"டேய் யாருடா அது எல்லாம் உன்ன அண்ணா அண்ணானு சொல்லி ரொம்பத்தன் பண்றாங்க. மவனே இப்பவே உன் வாட்பெட்ல ஒரு போஸ்ட் போடுற உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சுன்னு. இல்ல அவ்வளவுதான்"என்று கூற அவனோ புன்னகையுடன்
"ஹேய் அதெல்லாம் சிஸ்டர்ஸ்பா" என்றவனை முறைத்து
"ஓஹ்ஹ் அவங்கள்ளாம் சிஸ்டர்ஸ், அப்போ நான் மட்டும் எப்படி ஸ்பெசல் ஆனேன். உன்ன நம்பமுடியாது நீ இப்பவே அப்டே............."என்றவளை மேலே பேச விடாது தன் மேல் இருந்தவளை மீண்டும் ஆக்கிரமிக்க செய்தான்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro