கற்பனை 35
"அப்போ நான் வேறொரு பொண்ண கல்யாணம் பண்ணி...,எதுக்கு வேறொரு பொண்ணு சந்தியாவையே கல்யாணம் பண்ணி டிவோர்ஸ் பண்ணிட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்க கேட்டா நீ ஓக்கே சொல்லுவியா "என்றவனை முறைத்தவள் ஆட்டோ ஒன்றை அழைத்து அவளின் வீட்டுக்கு சென்றால். அவள் சென்றதும் உடனே சந்தியாவுக்கு கால் செய்த ராஜீவ் இங்கு நடந்த எல்லாவற்றையும் கூற புன்னகைத்தவள்
"டேய் ஒன்னும் யோசிக்காத.உன்ன அவ பின்னாடி சுத்தல்ல விடனும்னு மேடம் ரொம்பதான் பண்றாங்க. உனக்கு தான் நான் முன்னாடியே சொல்லிருக்கேன்ல அன்னைக்கு அவ உங்கிட்ட அப்படி பேசிட்டு வந்து எவ்வளவு பீல் பண்ணான்னு.சோ ஒன்னும் யோசிக்காத.அவளுக்கு இன்னைக்கே இன்னொரு சர்ப்ரைஸ் இருக்குள்ள" என்று கூற அவனும் புன்னகைத்து
"ஆமால்ல சரி நான் போன வைக்கிறேன் பாய் "என்றான்.
வீட்டிற்கு வந்த நந்தினிக்கு அங்கிருந்தவர்களை கண்டதும் ஆச்சரியமாக இருந்தது.உடனே நந்தினியின் தாய்
"நந்தினி போய் ரெடியாகுமா. உன்ன பொண்ணு பார்க்க வந்திருக்காங்க"என்று கூற ராஜீவின் மேல் ஆத்திரம் கொண்டவள் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் செல்ல அங்கு ராகவி
"அண்ணி ,சாரி உங்கள அண்ணின்னு சொல்லலாம்ல" என்றவளை நந்தினி புன்னகையுடன் பார்த்து எதுவும் பேசாமல் இருந்தால். ராகவியுடன் இருந்த ராஜீவின் அக்கா
"நந்தினி உன்ன நாங்க யாருமே கட்டாயப்படுத்தல. உனக்கு இஷ்டம்னா மட்டும்தான் இந்த கல்யாணம். ராஜீவ் கூட அதத்தான் சொன்னான்.உங்கிட்ட சில விசயங்கள் ஓப்பனாவே பேசனும்னுதான் உன் ரூம்ல நாங்க வெயிட் பண்ணோம். பெரியவங்களுக்கு அது தெரிய வேண்டாம்" என்றவளை என்ன என்பது போல கேட்க
"இன்னைய நாளுக்குத்தான் நாங்க 6 மாசமா வெயிட் பண்ணோம் ஏன் தெரியுமா, இன்னைக்கு நீ புது நந்தினி.அப்புறம் அதுமட்டுமில்லாம எங்க அம்மாக்கு ஆரம்பத்துல ராஜீவ் உன்ன விரும்புறேன்னு சொன்னதும் அவங்களுக்கு பிடிக்கல. என் பையனுக்கு விவாகாரத்தான பொண்ண கட்டிக்கொடுக்க மாட்டேன்னு ரொம்ப பிடிவாதமாக இருந்தாங்க" என்றவளை நிமிர்ந்து கேள்வியாக நந்தினி நோக்க புன்னகைத்த ராஜீவின் அக்கா
"நீ என்ன நினைக்கிறேன்னு புரியுது.எங்கம்மா அவ்வளவு பெரிய வில்லிலாம் இல்லப்பா.ஒரு டிபிகல் இண்டியன் மதர் எப்படி யோசிப்பாங்களோ அப்படித்தான் அவங்களும் யோசிச்சாங்க. அவங்கள இந்த கல்யாணத்துக்கு கன்வின்ஸ் பண்ணவும் எங்களுக்கு இந்த 6 மாசமும் தேவைப்பட்டது. இப்போ அவங்க முழு மனசோடதான் உன்ன பொண்ணு கேட்டு வந்திருக்காங்க. ஆனா எங்கம்மா எல்லா நேரமும் உன்கிட்ட அன்பா இருப்பாங்களான்னு கேட்டா என்னால ஆமான்னு பொய் சொல்ல முடியாது. என்னதான் பாசமான மாமியாரா இருந்தாலும் அப்பப்போ அவங்களுக்குள்ள இருக்குற அந்த மாமியார் என்ற மிருகம் முழிச்சிக்கும். இது உனக்கு மட்டுமில்ல பொண்ணா பொறந்த எல்லோருக்கும் பொருந்தும். ஏன் என்னோட மாமியார் என்ன அவங்க பொண்ணு மாதிரிதான் பார்த்துப்பாங்க. ஆனா அவங்க பொண்ணுங்க ஊருல இருந்து வந்துட்டா என்ன கண்டுக்கவே மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு அவங்க பொண்ணுங்கதான் பர்ஸ்ட்டு.இது அவங்களுக்கு மட்டுமில்ல எனக்கு நாளைக்கு பையன் பொறந்து அவன் பொண்டாட்டி வந்தாலும் என் பொண்ணுங்க வீட்டுக்கு வந்தா எனக்கு என்னோட பொண்ணுங்கதான் பர்ஸ்ட்டா இருக்கும்.ஏன் இந்த ராகவி, அப்புறம் நீ எல்லோருமே இப்படித்தான் இருக்க போறோம்.ஏன்னா அதுதான் பொண்ணுங்களோட சைக்காலாஜி. சில பொண்ணுங்க வேணும்னா இதுக்கு மாற்றமா இருக்காலம். அதுல்லாம் ஆயிரத்துல ஒன்னு மானுபக்சரிங்க் டிபக்ட்ஸ்" என்றவரை நந்தினி மனதில் இருந்த பாரம் குறைந்து புன்ன்கைத்தால். தான் கூறியதை கேட்டு நந்தினியின் முகத்தில் ஒரு நிம்மதி பரவியதை கண்ட ராஜீவின் அக்கா
"அப்போ உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்தானே" என்று கேட்க ராஜீவிடம் பேசியது போல அவனின் அக்காவிடம் பேச முடியவில்லை.காரணம் ராஜீவிடம் அவள் பேசியது அவனுக்கும் அவளுக்குமான தனிப்பட்டது.ஆனால் இப்போது அவனின் அக்காவிடம் பேசப்போவது அவளுக்கும் அவனின் குடும்பத்துக்குமான ஒன்று. இருந்தாலும் அவள் மனதில் ராஜீவ் மீது ஒரு நல்ல அபிப்ராயம் இருந்ததால் அவளும் புன்னகையுடன் சரி என்று கூற ராகவி
"அக்கா நீ கீழ போ. நான் அண்ணிய ரெடி பண்ணி கூட்டிட்டு வரேன்" என்று கூறினால்.தனது அக்கா சென்றதும் ராகவி தன் ஹேண்ட்பேக்கை திறந்து ஒரு சில காகிதங்களை வெளியில் எடுத்தவள் நந்தினியிடம் கொடுக்க அதை வியப்பாக பார்த்தவளை ராகவி
"அண்ணி இது நீங்க எங்க அண்ணனுக்கு கொடுத்த அசைன்மண்ட். இதனாலதான் ஒரு நாள் அந்த பக்கி என்கிட்ட மாட்டிகிச்சு. நான் வெறும் வார்த்தைக்காக சொல்லல அண்ணி, இது என் வயித்துல இருக்குற குழந்தை மேல சத்தியம். அவன் உங்கள ரொம்ப லவ் பண்ணான்.ஆனா எங்க வீட்டுல இருந்த ப்ராப்ளம்ஸ் காரணமா அவனால அந்த நேரத்துல உங்க கிட்ட அவன் காதல் சொல்ல முடியல.
சந்தியா அக்கா சொல்வாங்க உங்கள மட்டுமே காதலிச்ச, காதலிக்கிற,காதலிக்க போற ஒருத்தன் வரனும்னு. அது கண்டிப்பா எங்கண்ணந்தான். உங்கள மட்டுமே காதலிச்சான். இப்பவும் காதலிக்கிறான். இனிமேலும் காதலிப்பான். கோர்ட்ல நடந்தத அவன் சந்தியா அக்காக்கு கால் பண்ணி சொன்னான்.அவங்களும் என்கிட்ட சொன்னாங்க.ஆனா உங்க மனசுல எங்கண்ணன் மேல ஒரு பிடிப்பு இருக்கும்னு சொன்னாங்க.ஏன்னா எங்கண்ணன் கூட அன்னைக்கு நீங்க ப்ரண்ட்ஸா இருந்துடலாம்னு சொல்லிட்டு வந்து ரொம்ப பீல் பண்ணதா சொன்னாங்க.. அப்பவே எங்களுக்கு தெரிஞ்சிது உங்க மனசுலயும் ஆச இருக்குன்னு. என்ன உங்க கடந்தகால வாழ்க்கை அத ஏத்துக்க விடாம பண்ணுது. சப்போஸ் உங்களுக்கு கல்யாணமாகாம எங்கண்ணன் இப்படி உங்க கிட்ட ப்ரபோஸ் பண்ணியிருந்தா நீங்க ஏத்துக்கிட்டு இருப்பீங்களா?" என்றவளை நந்தினி எதுவும் பேசாமல் அமைதிகாக்க தொடர்ந்த ராகவி
"இதுலேயே தெரியல எங்கண்ணன் உங்கள கண்மூடித்தனமா லவ் பண்றத உங்க மனசு விரும்புது.ஆனா நீங்க முன்னாடியே கல்யாணம் ஆனவங்க என்றது உங்களுக்கு அவன் காதல அக்சப்ட் பண்ண விடாம தடுக்குது" என்று கூற நந்தினி ஆம் என்று தலை அசைத்தாள்.
"பொதுவா நம்ம சமூகத்துல விவாகரத்தான ஒரு ஆணுக்கு கல்யாணமாகாத ஒரு பொண்ணு கிடைக்கிறது ரொம்ப ஈசி. ஆனா அதுவே விவாகரத்து ஆன பொண்ணுக்கு அப்படி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். ஆனா அது உங்களுக்கு ஈசியா நடக்கும் போது உங்க மனசால அத உடனே ஏத்துக்க முடியல. அதுதான் இப்போ உங்க ப்ராப்ளம். சரி நான் ஒன்னு சொல்லட்டா" என்றவளை என்ன என்று நந்தினி கேட்க
"இப்போ நீங்க எங்க அண்ணன கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்புறமா உங்களுக்கு சண்டை, ஈகோ.மனசுல இருக்குற பாரம் எக்சட்றா எக்சட்றா எல்லாத்தையும் பேசி தெளிவு படுத்திக்கோங்க" என்று கூற நந்தினியால் மறுத்து எதுவுமே பேச முடியாமல் இருந்தவள்
"சரி ராகவி உங்க அக்காகிட்ட கூட நான் சம்மதம் சொன்னது முடியாதுன்னு சொன்னா 'என்னடா இவ இவ்வளவு திமிரு காட்டுறாளேன்னு' நினைச்சிடக்கூடாதுன்னு தான். ஆனா உங்கிட்ட பேசின பிறகு எனக்கு 100% கல்யாணத்துக்கு சம்மதம்தான்.மீதி இருக்குறத உங்க அண்ணன் கிட்ட பேசிக்கிறேன்" என்று குறும்புடன் கூற நந்தினியை அணைத்தவள்
"ஐய்யோ அண்ணி இவ்வளவு சீக்கிரம் நீங்க அக்சப்ட் பண்ணிக்குவீங்கண்ணு நான் எதிர்பார்க்கவே இல்லை. தாங்க்யூ சோ மச். இந்த தாங்க்ஸ் எதுக்கு தெரியுமா எங்க குடும்பத்துக்காக அவன் காதலை இழந்த எங்க அண்ணனுக்காக அவன் காதல மறுபடி அவனுக்கு கிடைக்க உதவி செஞ்சதுக்கு. ஐ லவ் யூ அண்ணி"என்று அவளை முத்தமிட்டு கீழே அவளை அழைத்து செல்ல தயார்படுத்தினால்.
கீழே வந்தவளுக்கு ஆச்சரியத்துக்க்கு மேல் ஆச்சரியம். காரணம் அங்கு ராஜீவ் பட்டு வேட்டி சட்டையில் அக்மார்க் மாப்பிள்ளை கோலத்தில் மிடுக்காக மெல்ல நடை நடந்து வரும் தன் காதல் கண்மணியை கண்கள் இமைக்காது பார்த்துக்கொண்டே இருந்தான்.திருமணம் பற்றி எல்லோரும் பேசி முடிவெடுத்து இன்னும் சரியாக ஒரு மாதத்தில் இவர்கள் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது. எல்லோரிடமும் சகஜமாக பேசிய நந்தினி ராஜீவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இது எல்லாவற்றையும் பார்த்து ராகவியும் ,சந்தியாவும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்.
திருமண நாள் நெருங்க நெருங்க நந்தினிக்கு ஒரு படபடப்பு அவளை தொற்றிக்கொண்டது. அப்படி இருந்தும் அவள் ராஜீவை சந்திப்பதையோ அல்லது அவனுடன் போனில் பேசுவதையோ அவள் நாசூக்காக தவிர்த்துக்கொண்டால். இவர்களின் திருமணத்திற்கு சரியாக ஒரு வாரம் முன்னால் கதிர், சந்தியாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. காரணம் சந்தியாவின் விசாவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நந்தினியின் திருமணம் முடிந்த கையோடு அவர்கள் யூஎஸ் செல்ல வேண்டியிருந்தது.
கடைசியில் கதிர் தன் மனதை ஆக்கிரமித்த ஆகாஷனா அல்லைஸ் சந்தியாவை தன் மனைவியாக சொந்தமாக்கிக் கொண்டான்.சிறு குழந்தை தனக்கு விருப்பமான பொம்மை கிடைத்துவிட்டால் எப்படி குதூகலமாக இருக்குமோ அது போல அவன் உள்ளம் சந்தோசமாக இருப்பதை அவனது முகமே காட்டிக் கொடுத்தது. சந்தியா கதிரின் திருமணம் விமர்சையாக நடக்கவில்லை எனினும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சகிதம் நடைபெற்று முடிந்தது.
முதலிரவுக்கு செல்லும் முன் கண்ணாடி முன் நின்று தனது முகத்தில் இருந்த வடுவில் கை வைத்து அதை தடவிக்கொடுக்க அவள் பின்னால் இருந்து அணைத்த நந்தினி
"என்னடி கல்யாண பொண்ணே, ரொம்ப ஹாப்பியா இருக்க போல"என்று கூற சந்தியாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. எதற்காக சந்தியா அழுகின்றால் என்பது புரியாமல் நந்தினி இருக்க சந்தியாவோ
"இப்ப கூட உன் வாழ்க்கைய பரிச்சிட்டேனோன்னு ஒரு கவலை இருக்குடி. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ப்ரெண்டோட ஹஸ்பண்ட கல்யாணம் பண்ணிக்கிட்டவ என்ற பேரு எனக்கு காலம் பூரா இருக்கும்ல" என்று கூற புன்னகைத்த நந்தினி
"லூசு இதுக்குத்தானா நீ அழுத.ஹ்ம்ம் நீ இப்போ சமூகத்த பத்தி யோசிக்கிறியா. அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும் சமூகம் என்பது நாய போல.அது நம்ம என்ன பண்ணாலும் குரைக்கும்.அத கண்டுக்காம இருக்குறதுதான் நமக்கு நல்லது.என்ன கடிக்க வந்தா மட்டும் கல்லெடுத்து அடிச்சா போதும்" என்று கூற புன்ன்கைத்த சந்தியா
"நந்தினி என் மேல சத்தியமா சொல்லு. என் மேல உனக்கு கொஞ்சம் கூட கோவம் இல்லைன்னு"என்றவளை முறைத்த நந்தினி
"யாரு சொன்னா உன் மேல கோபம் இல்லைன்னு அதெல்லாம் டன் கணக்குல இருக்கு.ஆனா என்னதான் கோபம் இருந்தாலும் நீ என் ப்ரெண்ட்டுடி.அப்புறம் கதிருக்கு எப்படி அவருக்கு பிடிச்ச வாழ்க்கை அமைஞ்சதோ எனக்கும் அதே போல ஒரு வாழ்க்கை அமைய போகுது. இதுக்கு அப்புறமும் பழசயே பேசிக்கிட்டு இருந்தா மீதி இருக்குற வாழ்க்கைய வாழ முடியாம போயிடும்"என்று கூற சந்தியாவும் அவள் கூறுவதை சரி என்று ஏற்றுக்கொண்டவள் முதல் இரவு அறைக்குள் நுழைந்தால்.
------------------
இந்த வாரத்துக்குள் இந்த கதை முடிந்துவிடும்..இன்னும் ஒரு 4 அப்டேட் வர வாய்ப்புகள் உண்டு.
அவசரமாக பதிவிடுவதற்கு மன்னிக்கவும்..
ஒரு சில காரணங்காளுக்காக வாட்பெட் விட்டு வெகு சீக்கிரத்தில் சென்று விட வேண்டும் என்ற எண்ணம்.ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றிகள்.
😊😊😊😊😊😊😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro