Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கற்பனை 28

சந்தியா எதை பற்றி கூற போகின்றாள் என்று புரியாமல் நந்தினி குழம்பியே  இருந்தாள். ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது கண்டிப்பாக அது தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றியது என்று.


மறு நாள் காலையில் ராஜீவிற்கு கால் செய்த சந்தியா

"ராஜீவ் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.நீங்க ப்ரீயா இருக்கீங்களா?" என்று கேட்க அவன்

"ஹேய் என்ன பார்த்தா எப்படி இருக்கு.நாளைக்கு தங்கச்சி கல்யாணத்த வெச்சிக்கிட்டு இன்னைக்கு ப்ரீயான்னு கேட்குற"என்று கூற சந்தியா


"ஹ்ம்ம் சாரிப்பா, ஒரு முக்கியமான விசயம் அதான்" என்று பம்மியவளை கண்டிப்பாக ஏதோ தலை போகின்ற காரியமாக இருக்கும் என்று ஊகித்தவன்

"இட்ஸ் ஓக்கே சந்தியா பரவாயில்லை சொல்லு" என்று கூற 

"இல்லப்பா போன்ல பேச முடியாது.நேர்லதான் பேசனும்"என்றவளை

"நேர்லயா ? சரி இப்போ நான் கல்யாண வேலையா கொஞ்சம் லாங்க் டிரைவ் போக வேண்டியிருக்கு. என் ப்ரெண்டோட கார எடுத்துக்கிட்டு வரேன், நீயும் வா ரெண்டு பேருமா போகலாம்"என்று கூற அவளும் சரி என்றால்.

ஊதாக்கலர் சேலையில் பார்டருக்கு பிங்க்  கலரில் டிசைன் செய்திருக்க, ஒப்பனை எதுவுமே இல்லாமல் அலை அலையாய் அசைந்தாடும் கூந்தலை தன் காதோரம் இழுத்துக்கொண்டு வந்த சந்தியாவை கண்கொட்டாமல் பார்த்தவன் அவள் அருகில் வந்ததும் சுதாரித்து கார் கதவை திறந்துவிட்டான்.


"என்ன ராஜீவ் உழுந்தூர்பேட்டை நாய் நாகூர் ப்ரியாணிய பார்த்தமாதிரி பார்க்குற "என்று நகைச்சுவை உணர்வுடன் கூற அவன்

"அப்போ என்ன நாய்னு சொல்ற, ஹ்ம்ம் இரு மவளே உன்ன வெச்சிக்கிறேன். ஆனா சந்தானத்தோட காமெடிய செம்மயா யூஸ் பண்ணிக்கிட்ட, பார்த்து அந்த ஆளு ராயல்டி பீஸ் கேட்டுட போறாரு." என்று பொய்யாக கோவித்தவனை

"அய்யோ ராஜீவ் உங்களுக்கு இது செட்டே ஆகலப்பா" என்று கூறியவளை


"நீ ஏன் சந்தியா இன்னும் கல்யாணம் பண்ணிக்கல" என்று கேட்க உலர்ந்த புன்னகையுடன் தன் வலது கண்ணத்தை மறைத்திருந்த கூந்தலை பின்னால் ஒதுக்கியவள்

"இதப்பார்த்து எவன் என்ன கல்யாணம் பண்ணிக்க போறான்.நீயே சொல்லு" என்று கூற ராஜீவ்

"ஏன் இப்படி சொல்ற, எல்லா பசங்களும் அழகுக்காக அலையிறவங்க இல்லப்பா. உனக்கு ஒருத்தன் இருப்பான். கண்டிப்பா உன்ன தூக்கிட்டு போக வருவான். நீ வந்ததும் ஏதோ கேட்டல்ல. இந்த சாரில நீ ரொம்ப அழகா இருக்க. காலேஜ்ல எப்பவுமே ஜீன்ஸ்,குர்தில பார்த்ததால உனக்கு சாரி எவ்வளவு அழகுன்னு தெரியாமலே போச்சுப்பா. ஓபனா சொல்லனும்னா உன்ன சைட் அடிச்சேன்னே சொல்லலாம் " என்றவனை அவள் விளையாட்டாக 


"சரி அப்போ என்ன நீயே கட்டிக்க" என்று கூற அவன் அமைதிகாக்க தொடர்ந்தவள்

"ஹேய் நான் சும்மா  விளையாட்டுக்குதான் அப்படி கேட்டேன். பார்த்தியா ஒரு நிமிசம் நீயே ஷாக் ஆகி இவள எப்படி நம்ம கட்டிக்கிறதுன்னு யோசிக்கிற "என்று கூற ராஜீவ் இன்னமும் அமைதியாக இருந்தான்.அந்த அமைதியை கலைக்க எண்ணியவள்

"சரி நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல" என்று கேட்க


"எங்க ஊரு வழக்கப்படி தங்கச்சி இருந்தா அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டுதான் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணுவாங்க.சோ என் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமாத்தான் என் கல்யாணத்த பத்தி யோசிக்க முடியும்" என்று கூற சந்தியா நக்கலாக

"அப்போ ரீசன் அது மட்டும்தானா. வேற ஏதுமில்லயா?" என்று கேள்வியாக கேட்டவளை அவள் எதை கேட்க வருகின்றால் என்று புரிந்தவன்

"நீ எதை பத்தி கேட்க வறேன்னு நல்லாவே தெரியுதுமா. நந்தினியை பத்திதானே, என்கூட பழகினதே அவளுக்கு நியாபகம் இல்லை. இதுல கல்யாணம் வேற ஆகிடிச்சி. ஆனா ஒரு உண்மைய சொல்லட்டா சந்தியா, இது தப்பா கூட இருக்கலாம் நீ என்றதால சொல்றேன். காலேஜ் டேய்ஸ்ல நந்தினி என் மனசுக்குள்ள வந்ததுல இருந்து வேற எந்த பொண்ணையும் என்னால அந்த இடத்துல வெச்சி பார்க்க முடியல. ஆபீஸ்ல கூட சில பொண்ணுங்க எங்கிட்ட அப்ரோச் பண்ணாங்க. ஆனா அவங்க யாருக்கும் என்னால எந்த பதிலையும் சொல்ல முடியலப்பா" என்று கூற ஒரு கணம் யோசித்த சந்தியா 

"அப்போ நீ இன்னும் நந்தினியை காதலிக்கிறியா?" என்று கேட்டவளுக்கு பதில் அளிக்காமல் ராஜீவ் அமைதியாக இருப்பதை கண்டவள் கதிருக்கும் நந்தினிக்கும் இடையில் இருக்கும் பிரிவு பற்றி கூறினால். கடைசியில் அவர்கள் விவாகரத்து செய்துகொள்ள போவதாக முடிவெடுத்தது பற்றி கூற ராஜிவின் முகத்தில் பிரகாசம் அதிகமானது. இதை கவனித்த சந்தியா தான் செய்ய இருந்த முட்டாள்தனத்தை எண்ணி 

"ஹேய் ராஜீவ் நீ நினைக்கிற மாதிரி இல்ல.அந்த ஆகாஷனா அவதான். எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறியா. எங்களுக்கு ஆக்சிடன்ட் ஆனப்போ என்னோட மொபைல் முழுசா டேமேஜ் ஆச்சு.ஆனா எங்க ரெண்டு பேரோட மொபைலும் ஒரே மாதிரி இருக்குமா அதனால அவளோட மொபைல என் மொபைல்னு நினைச்சி எங்கம்மாப்பா கொண்டு வந்துட்டாங்க.நாங்க யூஎஸ் போற அவசரத்துல மறந்து அந்த மொபைலையும் கொண்டு போயிட்டோம். அதுக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது அது அவளோட மொபைல்னு.சரி யூஎஸ்ல இருந்து மறுபடி அதை கூரியர்ல அனுப்பினா கஸ்டம்ஸ் டியூட்டு பே பண்ணனும் அது இதுன்னு ஆயிரம் ப்ரோசீஜர்ஸ் இங்க இருக்கு அதனால அந்த மொபைல இங்க நந்தினிக்கு அனுப்பி வைக்கல. ஆனா இப்போ அந்த மொபைல் வந்தாத்தான் நந்தினியையும் கதிரையும் ஒன்னு சேர்த்து வைக்கலாம்" என்று கூற ஒரு கணம் தன் மனதில் தோன்றிய மோசமான எண்ணத்தை நினைத்து ராஜீவ் தலை குணிவதைக்கண்ட சந்தியா 

"நீ என்ன நினைச்சேன்னு எனக்கு தெரியுது ராஜீவ்.இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி நந்தினிகிட்ட உன் காதல சொல்லலாம்னுதானே நினைச்ச. அப்படி சொன்னா மட்டும் அவ உடனே உன்ன ஏத்துக்குவாலா இல்லைன்னா உங்க வீட்டுலதான் ஏற்கனவே கல்யாணமான பொண்ணு மருமகளா வர்றதுக்கு சம்மதிப்பாங்களா. ரெண்டுமே நடக்காதுப்பா. அப்புறம் நம்ம ஒன்னும் வெஸ்டர்ன்  கண்ட்ரில வாழல, நமக்குன்னு ஒரு கலாச்சாரம் பண்பாடு எல்லாமே இருக்கு. இங்க ஒருத்தனுக்கு ஒருத்தின்னு சொல்லி சொல்லி வளர்த்ததனால மறுமணம் செய்றது என்பது குதிரைக்கொம்பா ஆகிடிச்சி. பிடிக்காத வாழ்க்கையா இருந்தா கூட அவங்க ஏனோதானோன்னு வாழ்ந்துட்டு போறாங்க. அப்படியே மறுமணம்  செஞ்சிகிட்டாலும் ரெண்டு பேரும் முன்னாடி கல்யாணமாகி விவாகரத்து ஆனவங்களா இருப்பாங்க அப்படிங்கிறது எழுதாத ஒரு சட்டம ஆகிடிச்சி" என்று கூற சந்தியாவின் ஒவ்வொரு வார்த்தையும் ராஜீவை முள் போல குத்தி எடுத்தது.சந்தியாவின் பேச்சை கேட்டவன் அடுத்து என்ன செய்வது என்று ஒரு கணம் தடுமாறி 

"சாரி சந்தியா இந்த கேப்ல உள்ள நுழையலாம்னு ஒரு செக்கன்ட் நான் யோசிச்சது உண்மைதான். ஆனா நீ சொன்னதெல்லாம் கேட்ட பிறகு எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. சரி நீ சொல்லு இப்போ நான் என்ன பண்ணனும்" என்று கேட்க ராஜீவ் இவ்வளவு சீக்கிரத்தில் தனது கருத்தை ஏற்றுக்கொள்வான் என்று நினைத்திருக்காத சந்தியா அடுத்து அவன் என்ன செய்யவேண்டும் என்று கேட்டது மிகவும் சந்தோசமாக இருந்தது.

"ராஜீவ் இப்போ நந்தினிக்கிட்ட எது சொன்னாலும் அவ நம்பமாட்டா. பர்ஸ்ட்டு அவ மொபைல் வரட்டும். அதுல லாகின் ஆகி வாட்பெட் போயி அவ கதிர் கூட ஆகாஷனா என்ற பேருல சாட் பண்ணத காட்டினா கண்டிப்பா நம்பிடுவா.சப்போஸ் அப்பவும் அவ நம்பலைன்னா உங்க உதவி தேவைப்படும்.நம்ம காலேஜ்ல பேசிக்கிட்ட சில விசயங்கள நான் சொல்வேன். அத நீங்க உண்மைன்னு சொன்னா போதும் "என்று கூற ஏதோ மனதில் தோன்ற ராஜீவ்


"சரி ,நந்தினி மொபைல் பிங்க்ர்ப்ரின்ட் லதானே ஓப்பன் ஆகும்.நீங்க எப்படி அதை ஓபன் பண்ணீங்க"என்று கேட்க புன்னகைத்தவள்

"ஐபோன்ல 5 விரல பதிஞ்சி வெச்சிக்க முடியும்.அவளோட இடது கட்டைவிரல என் மொபைல்லயும் என்னோட இடது கட்டைவிரல அவ மொபைல்லயும் சேவ் பண்ணியிருந்தோம்.சோ 4 விரல் மொபைல் சொந்தகாரரோடது, கடைசியா இருக்குறது மத்த ஆளோடது.அப்புறம் எனக்கு அவளோட Lock Code தெரியும்.நீங்க வேணும்னா அவகிட்ட கேளுங்க ஏதாச்சும் நம்பர்ஸ் சொல்ல சொல்லி.அவள தூக்கத்துல இருந்து எழுப்பி கேட்டாக்கூட அவ இந்த ஓடர்லதான் சொல்லுவா 3,5,4,6,2,7,1,8"என்று கூற ராஜீவ்


"இதுல என்ன ஸ்பெசல் இருக்கு" என்று கேட்க அவள் 

"1ல இருந்து 8 வரைக்கும் ஆர்டரா எழுதிட்டு ஒரு நம்பர்ல இருந்து அடுத்த நம்பர ஒரு வளையம் மாதிரி தொடர்ந்து வரைஞ்சா 4 வதும் நம்பர் மட்டுமே இடையில வெட்டுப்படும்.மத்த எல்லாமே வெட்டுப்படாம அப்படியே இருக்கும்.இத ஒரு நாள் அவ சொல்லிட்டு ரொம்ப எக்சைட் ஆனா. நான் கேட்டேன் இதுல என்னடி இருக்குன்னு.அதுக்கு அவ கண்டுபிடிச்சதாம்.வேற யாருக்கும் இது தோனலயாம்னு சொன்னா" என்று கூற ராஜீவ் தலையில் அடித்துக்கொண்டு 


"இதெல்லாமா ஒரு கண்டுபிடிப்பு முடியலப்பா "என்று சிரித்துக்கொண்டான். 

-------
Special Thanks to
Nivethamagathi myazhini KarthikaRajkumar...
ஏன்னு‌ கேட்குறீன்ங்களா...ஒவ்வொரு ஸ்டோரிக்கும்‌ ஒவ்வொருத்தங்க எனக்கு ஹெல்ப்‌ பண்ணுவாங்க .இந்த ஸ்டோரி 28-35 அப்டேட்ஸ்கு இவங்க உதவி‌ மிகவும் பெறுமதியானது..பொறுமையாக‌ எனக்கு‌ உதவிய மூவருக்கும்‌ நன்றிகள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro