கற்பனை 20
ஷனா -11
ஒவ்வொருவரின் மனநிலையும் இன்றைய விடியல் அவர்கள் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரும் என நினைத்து ஒருவரை மற்றவர் சந்திக்க தயாராகினர்.என்றும் ஆகாஷனாவுடன் செல்லும் நேத்ரா இன்று அவளுக்கு முன்பாகவே தனக்கு ஒரு வேலை இருப்பதாக கூறி முன்னமே காலேஜுக்கு சென்றுவிட்டால்.வழமையில் இப்படி நேத்ரா ஏர்லியாக காலேஜ் செல்லும் நாட்களில் ஆகாஷனா மிகவும் தாமதமாகவே செல்வது வழக்கமாக இருந்தது.ஆனால் இன்று அவளால் அஜய்யை சந்திக்காமல் எந்த வேலையும் ஓடாது என நினைத்தவள் அவளும் நேத்ரா கிழம்பிய அரை மணி நேர்த்திலேயே காலேஜ் சென்றாள்.
காலேஜ் வந்த நேத்ரா அஜய்யை கண்டதும் அவனிடம் சென்று
"அஜய் நீங்க ஆகாஷனாவ காதலிக்கிறதா சொல்லி அவகிட்ட சர்ப்ரைஸ்ஸா ஒரு லெட்டர் கொடுத்திருக்கீங்கல்ல சூப்பர்பா" என்று கூறிய நேத்ராவின் முகத்தை பார்த்தவன்
"என்ன சொல்ர நேத்ரா நான் எப்போ ஆகாஷனாக்கு லெட்டர் கொடுத்தேன்"என்று கூறி ஏதோ யோசித்தவன்
"ஹேய் அன்னைக்கு பொன்னியின் செல்வன புக்க நீ கொண்டு போகலையா?" என்று கேட்க
"இல்ல நாந்தான் கொண்டு போனேன்.ஆனா அவ வழில என்கிட்ட இருந்து பறிச்சிக்கிட்டா.ஆமா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் "என்று கேட்டவளை அஜய் கோவத்துடன்
"இங்க பாரு நேத்ரா நான் காதலிச்சது உன்னதான் ஆகாஷனாவ இல்லை" என்றதும் அதிர்ச்சியாக அவனை பார்த்தவள்
"எது என்னையா ?அஜய் சும்மா விளையாடாதீங்க"
என்று கூற
"இல்லை நேத்ரா நான் விளையாடல்ல.நான் சீரியசாத்தான் சொல்ரேன் நான் காதலிச்சது உன்னைத்தான்"என்று கூற உடனே முகத்தில் கடுகடுப்பை கொண்டு வந்தவள்
"அப்போ எதுக்கு அஜய் //'நம்ம முதல் சந்திப்பே உன் ப்ரெண்ட்னாலதான் ஆரம்பிச்சது'நான் உன்ன அறைஞ்சப்போ அப்பாவியா முகத்தை வெச்சிக்கிட்டு பார்த்தியே அப்பவே நான் ப்ளாட் ஆகிட்டேன்','டெல்லில வெச்சி உன் ப்ரெண்ட்காக நீ எடுத்த ரிஸ்க் இருக்கே, அத பார்த்து நான் அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்.எந்த பொண்ணும் செய்ய துணியாத ஒரு காரியத்த உன் ப்ரெண்காக செஞ்ச//இப்படில்லாம் எழுந்தி இருந்தீங்க" என்று கேள்வியால் துளைத்த நேத்ராவின் முகத்தை ஆழமாக பார்த்தவன்
"ஏன் அதெல்லாம் உனக்கு பொருந்தாதா.நல்லா யோசிச்சி பாரு"என்று பதில் கொடுத்தான்.
"நீங்க என்ன லவ் பண்ணாலும் நான் உங்கள பண்ணனும்ல.எனக்கு உங்க மேல அப்படி எந்த நினைப்பும் இல்ல"
"ஓஹ் அப்படியா, சரி அப்போ என்மேல உனக்கு லவ் இல்லைன்னு ஆகாஷனா மேல சத்தியம் பண்ணு"என்றவனை நேத்ரா கண்கலங்கியவள்
"ஏன் அஜய் இப்படி பண்றீங்க.ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க,அவ உங்கள உயிரா காதலிக்கிறா.அவ மனசு கஷ்டப்பட்டா என்னால தாங்கிக்க முடியாது.அன்னைக்கு உங்க கடிதம் எனக்கு கிடக்காம அவளுக்கு கிடைக்கனும்கிறது கடவுளோட சித்தம்.நீங்க ரெண்டு பேரும்தான் சேர்ந்து வாழனும் நம்ம இல்ல"என்று கூற ஆத்திரம் கொண்ட அவன் அவளை முறைத்து
"வாய மூடு எல்லாம் அந்த லெட்டர்னால வந்தது.அன்னைக்கே அத உன்கிட்ட நான் நேரடியா கொடுத்திருந்தா எந்த பிரச்சினையும் வந்திருக்காது.அதுல சொன்ன 3 விசயம் தான் இப்போ தப்பாயிடிச்சி.
'.நம்ம முதல் சந்திப்பே உன் ப்ரெண்ட்னாலதான் ஆரம்பிச்சது' இது நான் ஏன் சொன்னேன்னா ஆகாஷனா கூட சண்டை போட்டதாலதான் உன் அறிமுகம் எனக்கு கிடைச்சது.
'நான் உன்ன அறைஞ்சப்போ அப்பாவியா முகத்தை வெச்சிக்கிட்டு பார்த்தியே அப்பவே நான் ப்ளாட் ஆகிட்டேன்' அன்னைக்கு நீ ஆகாஷனா என்ன பழிவாங்க கிஷோர் கூட கூட்டு சேர்ந்திருக்கான்னு எனக்கு கால் பண்ணி என்கூட நேர்ல பேசனும்னு சொல்லி நம்ம சந்திச்சப்போ நான் உன்ன அறைஞ்சேனே அதத்தான் சொன்னேன்.
'டெல்லில வெச்சி உன் ப்ரெண்ட்காக நீ எடுத்த ரிஸ்க் இருக்கே, அத பார்த்து நான் அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்.எந்த பொண்ணும் செய்ய துணியாத ஒரு காரியத்த உன் ப்ரெண்ட்காக செஞ்ச.' நான் சொன்ன ஒரே காரணத்துக்காக கிஷோர் அந்த ரூம்ல இருக்கான்னு தெரிஞ்சும் உன் ப்ரெண்டோட பெயர் கெட்டுட கூடாதுன்னு அந்த ரூமுக்குள்ள போனியே அதத்தான் நான் சொல்ல வந்தேன்.நான் சொல்ல வந்த ஒன்னு அவ புரிஞிச்சிக்கிட்டது ஒன்னுன்னு இருக்குறப்போ நான் என்ன செய்ய முடியும்.உனக்கும் என்ன பிடிக்கும்னு அந்த லெட்டர்ல சொன்னது அவ கண்ணுக்கு தெரியலயா.நீ எத்தனவாட்டி ஆகாஷனா பக்கத்துல இருக்கும் போது எனக்கு கண்ணாலயே பதில் சொல்லிருக்க.அதெல்லாம் என்ன பொய்யா?ஏன் இப்படி பண்ற? ஆகாஷனாக்காக ஏன் நீ உன் வாழ்க்கையில எல்லாத்தையும் விட்டுக்கொடுக்க நினைக்கிற"என்று ஆக்ரோசமாக பேசியவனை கவலையாக பார்த்தவள்
"ஏன்னா அவ என் ப்ரெண்ட்" என்று கத்தியவள்
" ப்ளீஸ் அஜய் ,சரி நான் உண்மைய ஒத்துக்கிறேன் எனக்கு உங்க மேல ஈர்ப்பு வந்தது உண்மைதான்.ஆனா அது காதல் இல்லையே .இங்க நீங்க என்ன காதலிக்கிறீங்க.அவளும் உங்கள காதலிக்கிறா.ஆனா நான் உங்கள காதலிச்சேன்னான்னு கேட்டா நிச்சயமா இல்ல.ஆனா ஒரு ஈர்ப்பு இருந்திச்சி.இப்போ நீங்க உங்க காதல விட்டுக்கொடுத்து ஆகாஷனா கூட சந்தோசமா வாழலாம்.ஆனா ஆகாஷனா காதலிச்ச ஒரு பையன் கூட என்னால எப்படி வாழ முடியும்" என்று பேசிய நேத்ராவை முறைத்தவன்
"சட் அப் நேத்ரா. இதுல வேற ஏதோ ஒரு காரணம் இருக்கு.அத என்னன்னு சொல்லாத வரைக்கும் நான் உன்ன விடப்போறதில்ல.அப்புறம் ஆகாஷனா உனக்குதான் ப்ரெண்டு எனக்கில்ல.அவள என் வாழ்க்கைல ஏத்துக்கிறது என்பது முடியாத காரணம்.உன் ப்ரெண்டுக்காக என் காதல விட்டுக்கொடுக்க சொல்ரியே ஏன் உன் ப்ரெண்ட் கிட்ட சொல்லேன் எனக்காக அவ காதல விட்டுக்கொடுக்க சொல்லி"என்றவனை நேத்ரா கண் கலங்க
"அஜய் ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க என்னால அவகிட்ட அப்படி கேட்க முடியாது" என்று கூற
"அதான் ஏன்னு சொல்லு"என்றான்.
"ஏன்னா அவ இதயம் ரொம்ப பலவீனமா இருக்கு.அவளால எந்த அதிர்ச்சியையும் தாங்கிக்க முடியாது."
என்றவளை அஜய் அதிர்ச்சியுடன் நோக்கியவன் உடனே சுதாகரித்து
"அவ இதயம் பலவீனமா இருக்கா?இத என்ன நம்ப சொல்ரியா? அன்னைக்கு டெல்லில அவ்வளவு பெரிய காரியத்த எப்படி சாதரணமா செஞ்சா" என்று கேட்க அவனை முறைத்தவள்
"அவளோட சின்ன வயசுல இருந்தே இதயத்துடிப்பு அதிகமாகுறத கன்ட்ரோல் செய்றதுக்கான யோகா வகுப்புல அவங்க அம்மா அப்பா சேர்த்துவிட்டாங்க.அதனாலதான் அவ என்ன ப்ராப்ளம்னாலும் ஈசியா அவ மனச பாலன்ஸ் பண்ணிடுவா.முதன் முதலா உங்க விசயத்துலதான் அவ இப்படி இருக்கா. உங்க லெட்டர படிச்சதுல இருந்து உங்க கிட்ட அவ காதல சொல்ல ரொம்ப ஆர்வமா இருக்கா.ஆனா அவ அந்த லெட்டர பத்தி சொன்னதும் எனக்கும் புரிஞ்சிடிச்சி அது நீங்க எனக்கு எழுதினதுன்னு.எவ்வளவு கஷ்டம்னாலும் தாங்கிக்க்கிற மனித மனசு காதல்னு வரும் போது அதனால ரொம்ப ஈசியா தாங்க முடியாது.என்னால ஆகாஷனா கிட்ட நீங்க என்னத்தான் காதலிக்கிறீங்க, அந்த லெட்டர் எனக்கு எழுதினதுன்னு சொல்லவே முடியல அஜய்.அவ பின்னாடி எத்தன பசங்க சுத்தினாலும் அவங்க யாரையும் அவ ஏறெடுத்தும் கூட பார்க்கல.முதன் முதலா அவ எக்சைட் டாகி என்கிட்ட பேசின ஒரே ஒரு ஆம்பள நீங்கதான்.இப்போ சொல்லுங்க நான் என்ன செய்யனும்.என் ப்ரெண்ட்கிட்ட உண்மைய சொல்லி அவள கொன்னுட்டு உங்க கூட வாழனுமா?" என்றவளை இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை மறைவில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஆகாஷனா அவர்கள் முன் வந்து
"சூப்பர்டி நேத்ரா, அப்போ இவ்வளவு நாளும் நீ எனக்கு பண்ண எல்லாமே நான் செத்துடுவேன்னுதானா? என்மேல உனக்கு நிஜமான அன்பில்லையாடி" என்று கேட்க ஆகாஷனா இங்கு திடீரென்று வருவாள் என்று எதிர்பார்க்காத இருவரும் என்ன சொலவது என்று முழித்துக்கொண்டிருக்க
"ஷனா என்மேலதான் தப்பு. நாந்தான் லெட்டர்ல பேர போடாம கொடுத்துட்டேன்"என்று கூற
"சார் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க.முதல்ல நான் என் ப்ரெண்ட் கிட்ட பேசிட்டு வரேன்"என்றவளை அவன் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழிக்க
"என்னடி இப்படி சொல்ர, நீன்னா எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு தெரியும்ல.ஏன்டி இப்படி கேட்குற"என்று நேத்ரா கண்கலங்கவும்
"அடி லூசு நான் சும்மா உன்ன கலாய்ச்சேன்டி.உன்ன லவ் பண்றவர நான் எப்படிப்பா கல்யாணம் பண்ண முடியும்"என்று ஆகாஷனா கூற
"நான் அவர காதலிக்கல்லயேடி.நான் எப்போமே அவர காதலிக்கிறேன்னு சொல்லலயே"என்றதற்கு
"அஜய்ய காதலிக்கிறதும் காதலிக்காததும் உன் இஷ்டம் நேத்ரா.இனிமே என் மனசுல அஜய் இல்ல.இன்னொரு பொண்ண மனசுல நினைச்ச அவர என்னால காதலிக்க முடியாது.அப்புறம் எந்த முட்டாயப்பயடி என்னோட இதயம் பலவீனமானதுன்னு சொன்னது.இதவிட ஒரு பெரிய அதிர்ச்சியான நிகழ்வு இனிமே என் வாழ்க்கைல நடக்கவா போகுது.நான் ரொம்ப ஸ்ட்ரோங்க்டி"என்றவளை அனைத்துக்கொண்ட நேத்ராவுக்கு அப்போதுதான் தெரிந்தது ஆகாஷனாவின் இதயம் தாறுமாறாக அடிப்பது.உடனே அவளை விட்டு விலகி
"ஹேய் நம்ம உடனே ஹாஸ்பிடல் போகலாம் "என்று நேத்ரா கூற அவள் கைகளிலேயே ஆகாஷனா சரிந்தாள்.உடனே அவளை ஹாஸ்ப்பிட்டலில் சேர்க்க அவளை பரிசோதித்த டாக்டர் கூறியதை கேட்டு நேத்ராவுக்கு இதயமே வெடித்துவிடும் போலானது.
---வருவாளா மாட்டாளா?--
----
sorry guys...lats ud comments ku innum reply pannala...innaikula pannirren...
Thitravga thittalam...bz of aakashana
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro