கற்பனை 2
தான் எழுதிய கதையின் பெயரிலேயே ஒரு வாசகர் அவனுடைய கதைக்கு வோட் பண்ணியதை நினைத்து வியந்தவனுக்கு அடுத்து அந்த ஐடியில் இருந்து "ஹாய்"என்று மெசேஜ் வர ஸ்தம்பித்து நின்றான்.சிறு வயது முதலே பெண்களிடம் அதிகம் பழகாமல் ஆண் நண்பர்களை மட்டும் கொண்டிருந்த கதிருக்கு இது கொஞ்சம் புதிதாக இருந்தது.பேஸ்புக்கில் கூட அவனுக்கு அவ்வளவாக பெண் நண்பிகள் கிடையாது.அவன் என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்த வேலை அடுத்த மெசேஜ்
"ஆகாஷனா- இருக்கீங்களா? எழுத்தாளரே"
"கரு(கதிருடைய வாட்பெட் ஐடி பெயர்)- இக்கேனே.நீங்கயாரு?"
"ஆகாஷனா -ஹஹா..என்ன ரைட்டர் சார் இப்படித்தான் எடுத்த உடனே யாருன்னுன் கேட்பீங்களா.உங்களுக்கு இருக்குற நூற்றுக்கணக்கான ரசிகர்கள்ள நானும் ஒருத்தர்"
"கரு-எது நூற்றுக்கணக்கான ரசிகர்களா ?ஐய்யோ நீங்க வேற.இது என்னோட முதல் ஸ்டோரி.வேலை டென்சன குறைக்குரதுக்காக சும்மா கதை எழுதலாம்னு வந்தேன்.எனக்கு கிடைச்ச முதல் வோட் உங்களோடது" என்று கூற அடுத 10 வது செக்கனில்
"Aakashana is follwing you" என்று நோட்டிபிகேசன் வர அவனோ
"தாங்க்ஸ் "என்று கூறினான்.
"ஆகாஷனா-எதுக்கு ரைட்டர் ஜி தாங்க்ஸ்லாம்.அப்புறம் நான் உங்கள பாலோ பண்ணதுக்கு நீங்க என்ன பாலோ பண்ணனும்னு கட்டாயம்லாம் இல்ல.ஓக்கே பாய்.அப்புறமா பார்க்கலாம்"என்று கூறி அவள் மறைய இங்கு அவனோ
"பாய்" என்று ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு புன்னகைத்தான்.
------
"ஹேய் சந்தியா என்னடி பண்ற இன்னும் காலேஜ்கு ரெடியாகாம?உங்க அம்மா அப்பா உன்ன இங்க விட்டுட்டு யூ எஸ்ல இருக்காங்க என்றதுக்காக நீ இப்படி டெய்லி லேட்டா எந்திரிக்கிறது சரியில்லை.அப்புறமா நான் உங்க அம்மாக்கு கால் செஞ்சி உன்ன போட்டுக்கொடுக்க வேண்டி வரும் "என்று கூறிய தன் தோழி நந்தினியை சந்தியா இழுத்து கட்டிலில் தன் அருகில் அனைத்துக்கொண்டு தூங்க முற்பட நந்தினியோ
"என்னடி பண்ற எங்கம்மா பார்த்தாங்கண்னா அவ்ளோதான் "என்று கூற சந்தியாவோ
"இதெல்லாம் அமெரிக்கால சகஜம்டி. அங்க போனா நம்ம ரெண்டு பேரும் லீகலா கல்யானமே பண்ணிக்கலாம்.என்ன பண்ணிக்கலாமா மைடியர் டெட்டி பெயார்" என்று கண்ணடித்து கேட்ட சந்தியாவை
"அடி செருப்பால , இரு உன்ன உங்கம்மாகிட்ட சொல்ரதுக்கு பதிலா எங்கம்மாகிட்ட சொல்ரேன்.அவங்கதான் உனக்கு சரி "என்று கூற உடனே எழுந்த சந்தியா
"அம்மா தாயே உன் கால்ல வேணும்னாலும் விழுகிறேன் தயவு செஞ்சி அந்த அட்வைஸ் சென்பகம் கிட்ட மட்டும் என்ன மாட்டிவிடாத.அப்புறம் இன்னைக்கெல்லாம் என்ன அட்வைஸ் பண்ணியே கொன்னுடுவாங்க" என்று கூற நந்தினியோ
"அந்த பயம் இருக்கட்டும்"என்று கூறி அவளை காலேஜ் செல்ல ரெடியாகுமாறு கூறி கீழே சென்றாள்.
தலை குளித்து ப்ரெஷ்ஷாக வந்த சந்தியா ஜீன்ஸ் அண்ட் குர்தி அணிந்திருந்தாள்.நந்தினியோ சுடிதாரில் இருக்க சந்தியா
"ஏண்டி முன்னாடிலாம் நான் ஜின்ஸ் டீசேர்ட்தான் போடுவேன்.ஆனா உங்கம்மா என்ன திட்டி திட்டி இப்போ குர்திக்கு மாறியிருக்கேன்.எனக்காக ஒரு நாளாச்சுக் நீ ஜீன்ஸ் போடலாம்ல "என்று கேட்க நந்தினியோ
"இல்லடி எனகு அதெல்லாம் செட் ஆகாது.சரி வா சாப்பிட்டு உடனே காலேஜ் போகலாம்"என்று கிளம்பினர்.
சந்தியா பார்ப்பதற்கு மிக அழகா தோன்றும் ஆங்கிலோ இண்டியன் பெண் போல இருப்பவள். தன் அழகை சரியான முறையில் பரமாரித்து அதை வெளிப்படுத்த தெரிந்த ஒரு கலா ரசிகை.பார்ப்பவரை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகு.எல்லோரிடமும் சகஜாமக பழகுபவள்.
நந்தினியும் அழகுதான், ஆனாக் பார்ப்பவரை அடித்துப்போடும் அழகு கிடையாது.பார்ப்பதற்கு கொஞ்சம் குள்ளமாக மாநிறத்தில் இருப்பவள்.சந்தியா அளவுக்கு அழகு ஒப்பனையில் கரிசனை எடுத்துக்கொள்ள மாட்டாள்.இப்போதெல்லாம் அவளின் ஆடைக்கு மேட்சிங்காக பேங்கிள்ஸ் மற்றும் ஜிமிக்கி அணிவது கூட சந்தியாவின் வற்புறுத்தலினால்தான்.
சந்தியாவின் தாய் தந்தையர் அமெரிக்காவில் இருக்க இவளோ இங்கு காலேஜ் ஹாஸ்டலில் தங்கி MA Psychology மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கின்றால்.ஹாஸ்டலில் தங்குகின்றால் என்றுதான் பெயர்.நந்தினியின் அக்காவிற்கு இவர்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது திருமணமாகிவிட வாரத்தில் குறைந்தது 3 நாள் நந்தினியின் வீட்டிலேயே டேரா போட்டுவிடுவாள்.நந்தினியின் தாய் சென்பகத்திற்கும் சந்தியாவை பிடித்து விட அவரும் அவளை தன் சொந்த மகள் போலவே நடத்த துவங்கினார்.ஆரம்பத்தில் பட்டும் படாமல் இருந்தவர் இப்போதெல்லாம் அவளின் தவறுகளை சுட்டிக்காட்டி திட்டும் அளவுக்கு மாறியிருந்தது.சரியாக சொல்வதென்றால் சந்தியா ஒரு பணக்கார வீட்டுப்பெண்.நந்தினியோ நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவள்.
இருவரும் காலேஜ் வந்து சேர அன்று முக்கியமான ஒரு விசிட்டிங்க் லெக்சர்ஸ் இருக்க இருவரும் அவசரம் அவசரமாக தங்கள் வகுப்புக்களுக்கு சென்றனர்.வகுப்புக்கு சென்றதும் தத்தமது மொபைல்களை சைலண்டின் போட்டு விட்டு பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்த வேலை சந்தியாவிடம் இருந்து நந்தினிக்கு மெசேஜ் வந்தது.நந்தினி இருந்தது முன் இருக்கை என்பதால் அவளால் போனை வெளியில் எடுக்க முடியாமல் இருக்க சந்தியாவோ தொடந்து கால் செய்து கொண்டே இருந்தாள்.தொடர்ந்து அவளது மொபைல் வைப்ரேட் ஆவதை கண்ட லெக்சரர்
"எப்ப பாரு உன் மொபைல் கிர் கிர்னு அடிச்சிக்கிட்டெ இருக்கு.அத ஆப் பண்ணி வைக்கிறியா இல்லையா" என்று கோவத்தில் கத்த அவளோ பரிதாபமாக அவரை பார்த்து
"சாரி சேர் ,நான் என் மொபைல ஆப் பண்ணிடுறேன்"என்று கூற அவரோ
"சரிமா ஏதும் அவசரமா இருக்க போகுது.நீ எடுத்து பேசு.ரொம்ப நேரமா அடிச்சிக்கிட்டே இருக்கு"என்று கூற அவளோ வந்த காலை அட்டண்ட் செய்தாள்.நந்தினி காலை அட்டண்ட் செய்தாலும் சந்தியாவாள் கதைக்க முடியவில்லை.ஆனால் பொய்யாக பேசுவதை போன்று நடித்தவள்
"பாட்டிக்கு சுகமில்லயாம் சார்.ரொம்ப சீரியஸ் கண்டிசன்ல இருக்காங்களாம்.அதான் அவசரமா வீட்டிலிருந்து கால் பண்ணியிருக்காங்க" என்று கூற அவரோ
"சரிமா உடனே நீ போ" என்று கூற உடனே எழுந்த சந்தியா
"சார் நான் போய் அவள் விட்டுட்டு வர்ரேன்.ஏன்னா இப்போ பஸ் கிடைக்க ரொம்ப கஷ்டமா இருக்கும்"என்று கூற அப்போதுதான் ஏதோ ஒன்று தோன்ற
"நந்தினி உன் மொபைல கொஞ்சம் கொடு"என்று கூற அவளோ எதற்கு என்று தெரியாமல் அவரிடம் கொடுக்க அதை வாங்கி லாஸ்ட் கால் ஹிஸ்டரி பார்த்தவர் உடனே கோபத்துடன்
"வாயத்திறந்தாலே பொய்தானா.லாஸ்ட்டா உனக்கு கால் பண்ணிருக்கிறது சந்தியா.நீங்க ரெண்டு பேரும் என்ன ப்ளான் பண்ணி ஏமாத்தலாம்னு பார்க்குறீங்களா.நவ் யு போத் கெட் அவுட் ஆப் மை க்ளாஸ் " என்று கூற சத்தமில்லாமல் இருவரும் வெளியில் செல்ல அவரோ
"நாளைக்கு உங்க பேரண்ட்சோடதான் வரனும் .அப்புறம் இன்னைக்கு விசிட்டிங்க் லெக்சர்ஸ்கு அட்மிசன் கிடையாது" என்று கூற இருவரும் கொஞ்சம் கவலையுடன் வெளியேறினர்.ஏனென்றால் இன்று இருந்த விசிட்டிங்க் லெக்சர்ஸ் ஊரிலேயே மிகவும் பிரபல்யம் வாய்ந்த மனநல வைத்தியர் ரங்கபாஸ்யம் அவர்களால் நிகழ இருநதது.அதற்கு செல்ல முடியவில்லையே என்ற கவலையுடன் இருவரும் இருக்க சந்தியா தனது மொபைலை நோண்டிக்கொண்டே வந்தாள்.இதை கண்டு கோபம் கொண்ட நந்தினி
"எல்லாம் உன்னாலதான் எருமை மாடு" என்று திட்ட அவளோ
"ஹேய் என்ன வாய் ரொம்ப நீளுது. நீதான் பாட்டிக்கு சுகமில்லைன்னு பொய்ய சொன்ன.நானா உன்ன சொல்ல சொன்னேன்" என்று கூற நந்தினியோ
"இல்லடி இந்த ஆளோட பாடம் ரொம்ப போரிங்கா இருந்திச்சா அதான் அப்படி ஒரு பிட்ட போட்டேன்.ஆனா சும்மா நீ வேற இடையில வந்து எல்லாத்தையும் கெடுத்துட்ட" என்று கூற சந்தியாவோ
"ஓய் நீ மட்டும் எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தியா.அதான் நானும் கூட வந்துட்டேன்"என்று கூற நந்தினியோ
"இல்லடி இந்த சொட்டயோட க்ளாஸ் மிஸ் ஆனா ப்ராப்ளம் இல்ல,ஆனா விசிட்டிங்க் லெக்சர்ஸ் மிஸ் ஆகிறதுதான் கவலையா இருக்கு"என்று கூற சந்தியாவோ
"அடி போடி லூசு அதுக்கு எல்லாம் நான் ஆளு செட் பண்ணிட்டேன்.நமக்கு இன்னைக்கு லைவ் டெலிகாஸ்ட் நடக்கும் .சோ நீ ரொம்ப வொரி பண்ணிக்காத" என்று கூறியவள் ஏதோ ஒரு நோட்டிபிகேசன் வர தன் மொபைலை எடுத்து பார்த்தவள் சிரித்தவள்
"அதென்னடி இப்போலாம் அடிக்கடி மொபைல பார்த்து சிரிக்கிற" என்று கேட்க அவளோ
"வாட்பெட்ல ஸ்டோரிஸ் அப்டேட் அண்ட் காமண்ட்ஸ் வருமா அதான்.அதுவும் அதுல வர்ர சில காமண்ட்ஸ் ரொம்ப காமடியா இருக்கும்.ஹேய் நீயும் அத இன்ஸ்டால் பண்ணுடி நம்ம ஒரு கலக்கு கலக்கலாம்" என்று கூற நதினியோ
"எதுக்கு பேஸ்புக்ல என்ன டக் பண்ணி கொல்ரது போதாதுன்னு இதுல வேறயா.நான் வாட்பெட் யூஸ் பண்ணாலும் உன்கிட்ட என் ஐடிய நான் கொடுக்கவே மாட்டேன்" என்று கூறினால்.ஆனால் சந்தியாவுக்கு தெரியும் நந்தினி ரகசியாமக வாட்பெட் யூஸ் செய்வது.ஆனாள் அவளின் ஐடி எது என்று மட்டும் சந்தியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.
---
புதுகதை அறிமுகம் SumiSumi046 இன்
"என் உயிரின் ஒளி நீ" நன்றாக உள்ளது.
4 எபிசோட் படித்தேன்.எல்லோரும் ஆதரவு கொடுக்கலாமே.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro