Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கற்பனை‌ 19

"டேய் கதிர்  எவ்வளவு தேடியும் அந்த ஆகாஷனா யாருன்னு கண்டுபிடிக்கவே முடியலடா.ரொம்ப கெயார்புல்லா ப்ளே பண்றான்னு மட்டும் தெரியுது" என்று கூறிய சுமனை முறைத்தவன்

"அவ ஒன்னும் ப்ளே எல்லாம் பண்ணல.அவ சாதாரணமா எங்கிட்ட பேசுரா.ஏதோ ஒரு ஆர்வத்துல அவ யாருன்னு தெரிஞ்சிக்கணும்னுதான் உன்கிட்ட சொன்னேன்.நமக்கு அவ யாருன்னு தெரியலன்னா கூட ஓக்கேதான்.என்ன இந்த ஆகாஷனாவ ஒரு மாசமா தெரியுமா?" என்று கோர்வையாக பேசியவனை வீணா ஆச்சரியமாக பார்த்து

"நீங்க இவ்வளவு கோர்வையா பேசி நான் பார்த்ததே இல்லையே.என்ன ரைட்டர்ஜி ஏதும் லவ்ஸா.ஏன்னா காதல் வந்தாதான் பேசாம இருந்தவனும் பேசுவான்.பேசிக்கிட்டே இருக்குறவனும் பேசாம அமைதியாகிடுவான்"என்று கூற

"சரியா சொன்ன வீணா.இவன் எப்போமே எந்த பொண்ண பத்தியும் பேசவே மாட்டான்.ஆனா இப்போலாம் அடிக்கடி அந்த ஆகாஷனா பத்தி மட்டுமே பேசுரான்.கேட்டா ரீடர்,ரைட்டர் ரிலேசன்சிப்பாம்.ரிலேசன்சிப் வெக்கிற மூஞ்ச பாரு.அதான் ஆகாஷனானு பேர சொன்னால சாரு மூஞிச்ல 1000 வாட்ஸ் பல்ப் எரியுதே" என்று கலாயக்க வீணாவை நோக்கிய கதிர்

"ஹேய் நீ இப்போ என்ன சொன்ன ரைட்டர்ஜி ஆ.ஹேய் வீணா உண்மைய சொல்லு நீதான் ஆகாஷனா என்ட பேருல விளையாடுறியா.உன்மைய சொல்லிடு வீணா.ஏன்னா ஆகாஷனா மட்டும்தான் என்ன ரைட்டர்ஜி அப்படின்னு சொல்வா"என்று கேட்க வீணா தலையில் அடித்துக்கொண்டு

"ஆமா எனக்கு வேற வேல  இல்ல பாரு உன்கிட்ட விளையாட" என்று சலித்துக்கொள்ள

"யப்பா சாமி கடைசில என் மடியிலயே கைய வெச்சிடாதடா.இரு இன்னும் கொஞ்ச நாள் இருக்குல்ல அதுக்குள்ள யாரு ஆகாஷனான்னு கண்டுபிடிச்சிடலாம்"என்று நம்பிக்கையாக கூறிய சுமனை பார்த்த‌‌ கதிர்

"சரிடா எனக்கு ஒரு வேலை இருக்கு.நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க.நான் அப்புறமா கால் பண்றேன்"என்று அவர்களுக்கு தனிமையை கொடுக்க நினைத்து அவ்விடத்தை விட்டு சென்றான்.

கதிர் சென்றதும் சுமனை  கவலையாக பார்த்த‌ வீணா

"டேய் என்னடா கதிர் இப்படி இருக்கான்.காலேஜ்ல படிக்கிறப்போ சரி வேலை செய்ற இடத்துலயும் சரி எந்த பொண்ணு கூடவும் பேசவே மாட்டான்.ஏன் அவன் வேலை விசயம் இல்லாம பேசுற ஒரே ஒரு பொண்ணு நான் மட்டும்தான் ,அதுவும் உன் லவ் பண்ணி தொலைச்சதால"என்று வீணா கூற அவளை முறைத்தவன்

"ஓஹ் லவ் பண்ணி தொலைச்சதாலயா?" என்று கேட்க

"ஆமா வேற என்ன சொல்ல சொல்ர. உன்ன நல்லவன்னு லவ் பண்ணா நீ ஊருல இருக்குற எல்லா பொண்ணுங்க கூடவும் கடலை போடுற.ஏன்டா உன்ன லவ் பண்ணோம்னு இருக்கு"என்று சலித்துக்கொள்ள  இப்போது எது சொன்னாலும் வீணாவிடம் மாட்டிக்கொண்டு அடி வாங்க வேண்டும் என்பதை உணர்ந்த்தவன் உடனே

"வீணா ஜோக்ஸ் அபார்ட், எனக்கு கதிர நினைச்சா ரொம்ப பயமா இருக்குடி.சின்ன வயசுல அவனோட அம்மா இறந்துட்டாங்க.அதுக்கு அப்புறம் அவங்க அப்பா அவன ஹாஸ்ட்டல்ல சேர்த்துவிட்டுட்டாரு.அவன் ஸ்கூல் படிச்சது முழுக்க பாய்ஸ் ஸ்கூல்ல.காலேஜ்ல சேர்ந்தப்போதான் அவன் பொண்ணுங்க கிளாஸ்ல ஒன்னா படிக்க ஆரம்பிச்சான்.அப்பவும் உன்கூட மட்டும்தன் பேசுவான்.ஏன்னா நீ என் முறைப்பொண்ணு என்டதால" என்று ஆதங்கப்பட்டு பேசியவனை அவளும் ஆமாம் என்பது போல கேட்டுக்கொண்டிருக்க தொடர்ந்தவன்

"அவங்க அப்பா எப்போமே ரொம்ப கண்டிப்போட அவன்கூட நடந்துக்குவாரு.அம்மா இல்லாத பையன்னு ரொம்ப செல்லமா வளர்ந்துட கூடாதுன்னு அப்படி நடந்துக்கிட்டாரு.ஆனா என்ன அவரும் இவன் காலேஜ் படிக்கும் போது இறந்து போக தனி மரமா நின்ன கதிர அவங்க மாமாதான் படிக்க வெச்சாரு. அவனுக்கு நிறைய உறவுகள் இருந்தாலும் அவங்கப்பாவோட கண்டிப்புனால அவன் அவங்களோட சொந்தம் யாரு கூடவும் பேசமாட்டேன்.இது ஏன் ,உனக்கு தெரியும்ல அவனோட மாமா பொண்ணு செம்மயா இருப்பா"என்றவனை வீணா முறைக்க

"ஹேய் முறைக்காதப்பா நிஜமாத்தான் சொல்ரேன் அவ அவ்ளோ அழகா இருப்பா.பசங்க நீ நான்னு போட்டி போட்டு அவ பின்னாடி சுத்துவானுங்க.பார்க்க செம்மயா இருப்பா"என்று அவளின் அழகை வர்ணித்துக்கொண்டு செல்ல பொறாமையில் பொங்கியவள்

"டேய் நாயே என்கிட்டயே இன்னொருத்தி செம்மயா இருப்பான்னு சொல்ரியா.போ போயி அந்த செம்மயா இருக்குற தேவியையே காதலிச்சி கல்யாணம் பண்ணிக்க"என்று கோவத்தில் கொந்தளிக்க தன்னவளின் பொசசிவ்னஸ்ஸை எண்ணி மனதுக்குள் சிரித்தவன்

"லூசு அவ வேணா மத்தவங்களுக்கு அழகா இருக்கலாம்.எனக்கு எப்போமே நீதான்டி அழகு ராணி.என் இதய வீட்டோட சாவிக்கொத்த பட்டா போட்டு வாங்கிகிட்ட தேவதைடி நீ"என்றதும் கோவத்தில் இருந்த வீணாவின் முகம் வெட்கத்தால் சிவக்க ஆரம்பித்தது.இதை கண்ட சுமன்

"செல்லமே இப்படி வெட்கப்பட்டு உன் முகம் அந்திமாலை நேர அடி வானம் மாதிரி சிவந்திச்சின்னா அப்புறம் நடக்க போறதுக்கு மாமா நான் பொறுப்பில்ல"என்று கூற அவனை செல்லமாக அடித்தவள்

"ஆமா சுமன் நீ சொல்ரது நிஜம்தான்டா அவன் அந்த தேவி பொண்ணையே கண்டுக்க மாட்டான்.ஆனா இந்த ஆகாஷனா பத்தி ரொம்ப கெயார் எடுத்துக்கிறான்.இப்ப கூட பாரு நான் ஏதோ சும்மா ரைட்டர்ஜின்னு பொதுவா சொன்னதுக்கே இது ஆகாஷனா சொல்ரமாதிரி இருக்கு ,நாந்தான் அந்த ஆகாஷனாவன்னு கேட்கிறான்.பொண்ணுங்க கூட இவன் பேசி பழகாததால அவனுக்கு வித்தியாசம் தெரிய மாட்டேங்குது.அவன நினைச்சா கொஞ்சம் பாவமா இருக்குடா.ஏன்னா அவன் ரொம்ப நல்லவன் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.தண்ணி சிகரட் ஏன் பொண்ணுங்க ப்ரெண்ட்சிப் கூட கிடையாது.என்ன அவனுக்கு இருக்குற ஒரே கெட்ட பழக்கம் உன்னோட ப்ரெண்ட்சிப்"என்றவளை முறைத்தவன்

"அடிங்க என் ப்ரெண்ட்சிப் கெட்ட பழக்கமா?"என்று எகிற

"ஆமா நீ ப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து தண்ணி அடிப்ப, அப்பப்போ தம்மு, பொண்ணுங்க சகவாசம்"என்று கூற பதறிய சுமன்

"என்னடி சொல்ர பொண்ணுங்க சகவாசமா?"என்றவனை

"பொண்ணுங்க சகவாசம்னா அது இல்ல.எப்ப பாரு ஏதாச்சும் பொண்ணுகிட்ட கடல போடுறது. சோ இந்த பழக்கம் எதுவுமில்லாத கதிர் உன்கூட ப்ரெண்ட்சிப் வெச்சிக்கிறது கெட்ட பழக்கம் தானே"என்க சுமன் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டான்.

"டேய் மாமா பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்படி அப்பாவியா முகத்த வெச்சிக்காதடா. இருந்தாலும் நீ இப்படி அப்பாவியா முகத்தை வெச்சிக்கும் போது ரொம்ப க்யூட்டா இருக்கு"என்று அவனது கன்னத்தை பிடித்து கிள்ளினால்.

"இல்லடி எனக்கு ரொம்ப பயமா இருக்கு.இவன இப்படியே விட்டா ரொம்ப ப்ராப்ளம் ஆகிடும்னு நினைக்கிறேன்.சரி நம்மளால முடிஞ்சத பார்க்கலாம்" என்று கூற அவளும் சரி  என தலை அசைத்தாள்.

-----------------------

"நந்தினி கொஞ்சம் அர்ஜெண்டா எங்க வீட்டுக்கு வரியா?" என்று கேட்ட தன் தோழியை 

"எந்த வீட்டுக்குமா.இப்போ நீ கொஞ்ச நாளா எங்க வீட்டுல டேரா போட்டுட்ட.சோ அது என் வீடு.உன் வீடுன்னா........ஓ ராஜீவ் வீட்ட சொல்ரியா ?"என்று கலாய்த்தவளை சந்தியா

"ஏண்டி எரும மாடு ரொம்ப சீரியசா உன்ன எங்க வீட்டுக்கு ஐ மீன் எங்க அம்மா அப்பா இருக்குற வீட்டுக்கு வான்னு சொன்னா வர மாட்டியா.உனக்கு எப்போ கலாய்க்கிறதுன்னு ஒரு நேரம் காலம் இல்லையாடி" என்று கேட்க 

"கலாய்க்கிறதுக்கு நேரம் காலம் நீ கேட்குற.அப்படியே ஒன்னு விட்டேன்னா பாரு.சரி என்னடி இவ்வளவு அவசரம் உடனே வர சொல்ர.ஏதும் அவசரமா?" என்று கேட்க 

"நீ வா முதல்ல மிச்சத்த அப்புறமா பார்த்துக்கலாம்"என்று கூறி காலை கட் செய்தாள்.

சந்தியாவின் அம்மா அப்பா இருக்கும் வீட்டுக்கு சென்றவள் அங்கு சந்தியாவின் தந்தை வாடிய முகத்துடன் கானப்பட நந்தினி என்ன நடந்தது என்று கேட்க சந்தியா

"இல்லடி அம்மாக்கு திடீரென்று சுகமில்லாம போச்சுடி.டாக்டர்ஸ்கிட்ட கன்சல்ட் பண்ணா அம்மாக்கு முள்ளந்தன்டுல ஏதோ ப்ராப்ளம் இருக்காம்.ஆப்ரேசன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க.ஆபரேசன் பண்ணாலும் அம்மா நடக்குறது 50% தான் சான்ஸ் இருக்காம்" என்று கூற நந்தினியோ என்ன சொல்வது என்று புரியாமல் நின்றால்.உடனே அவள்

"அப்பா ஏதும் யோசிக்காதீங்க அம்மாக்கு ஏதுமாகாது.அவங்க பழைய படி எழுந்து வந்திடுவாங்க.நீங்கதான் இப்போ அவங்களுக்கு ஆறுதல் சொல்லி உறுதுணையா இருக்கனும்.நீங்களே இப்படி இடிஞ்சி போய் இருந்தா என்ன பண்றது"என்று கூற அவளின் பேச்சை கேட்டவர் உடனே ஏதோ தோன்றியவர் போல தன் மனைவியின் அருகே சென்று அவரின் கைகளுடன் தன் கையை கோர்த்தவர்

"இங்க பாரும்மா, இனி என்னோட இருக்குற மீதி வாழ்க்கைல நீ மட்டும்தான் இருக்க போற.டிவோர்ஸ் வாங்கலாம்னுதான் நம்ம இந்தியா வந்தோம்.ஆனா நந்தினி சொன்னத வெச்சி நம்ம இந்த ஒரு வாரமா மனசு விட்டு பேசி ரொம்ப சந்தோசமா இருந்தோம்.இப்படியே காலம் பூரா இருக்கலாம்னு நினைச்சப்போ இப்படி ஒரு நிலமை வந்திடிச்சி.இனி என்ன நடந்தாலும் சரி உன்ன விட்டு ஒரு செக்கன் கூட நான் தனியா இருக்க மாட்டேன்.நான் சேர்த்து வெச்சிருக்க சொத்தும் எல்லா அழிஞ்சாலும் பரவாயில்ல உன்ன பழையபடி நடமாட வைக்க என்னாலான  எல்லாமே நான் செய்வேன்மா"என்றவரை கண்களில் கண்ணீருடன் அவரின் மனைவி அனைத்துக்கொண்டார்.இவர்களை தனிமையில் விட்டு தோழிகள் இருவரும் வெளியில் வர நந்தினி 

"என்னடி ரெண்டு பேரும் அவங்க வாழ்க்கைய அர்த்தமுள்ளதாக்க நினைக்கும் போது இப்படி ஆகிடிச்சு" என்று கவலையா கூறியதற்கு சந்தியா கூறிய பதில் நந்தினியை கோபம் கொள்ள செய்து அவளை அறைந்துவிட்டால்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro