கற்பனை 18
ஷனா - 10
லைப்ரரிக்கு சென்ற ஆகாஷனாவும் நேத்ராவும் பொன்னியின் செல்வன் புத்தகத்தை தேடிக்கொண்டிருந்த சமயம் அஜய்யும் சரியாக அவ்விடத்துக்கு வந்தவன் இவர்களிடம்
"என்னப்பா ரெண்டு பேரும் ரொம்ப மும்முரமா ஏதோ ஆராய்ச்சிக்கு புக்ஸ் தேடுற மாதிரி இருக்கு" என்று கேட்க
"ஆமா சார் ஆராய்ச்சிதான்.ஆதித்த கரிகாலன யாரு கொன்னா என்ற ஆராய்ச்சி.நான் ஐந்தாம் பாகத்த எடுத்துட்டேன்.இந்த 3,4,5 ஒரே புக்கா இருக்கா அத தேடுறோம் கிடைக்கவே மாட்டேங்குது "என்று கூறிய ஆகாஷனாவை புன்னைகயுடன் ஏறிட்டவன்
"இந்த புக்கா கொஞ்ம்ச பாருப்பா?" என்று கேட்க முதலில் புன்னகைத்தாலும் உடனே பொய்யான கோபத்தை முகத்தில் காட்டி
"அப்போ இன்னும் நீங்க திருப்பிக்கொடுக்கல்லயா?" என்று கேட்டவளை
"ஹேய் எப்போல இருந்தும்மா என்ன மரியாதையா கூப்பிட பழகின.ஹ்ம்ம் இருந்தாலும் நீ அப்படி கூப்பிடறப்போ நல்லாதான் இருக்கு.சரி சரி நீ 5 வது பாகத்த எடுத்துக்க.நான் என்னோட கார்ட்லயே மறுபடி ரினீவ் (புதுப்பித்து) கொடுக்கிறேன்.ஏன்னா நான் இப்போ ரிட்டேர்ன் பண்ணா அது செல்ப் கு வராது.கொஞ்சம் லேட் ஆகும்.கவுன்டர்ல உடனே வேற கார்ட்கு கொடுக்க மாட்டாங்க.என்னோட கார்டுக்கே மறுபடி எடுக்குறதுன்னா ப்ராப்ளம் இல்லை"என்றவனை ஆகாஷனா நேத்ராவை நோக்கி
"நேத்ரா டார்லிங்க், நீ அஜய் கார்ட்லயே ரினீவ் பண்ணி எடுத்துக்க.நான் 5ம் பாகத்த எடுக்கிறேன்"என்றவளை அஜய் லேசாக முறைத்தான்.அவன் எதற்காக முறைத்தான் என்று நேத்ராவுக்கு மட்டுமே புரிந்தது.
நேத்ராவிடம் புத்தகத்தை கொடுத்து அவன் லைப்ரரி விட்டு சென்றவனுக்கு இதயம் படபடப்பாக அடித்துக்கொண்டது.வீட்டிற்கு வரும் வழியில் ஆகாஷனா நேத்ராவிடம் இருந்த புத்தகத்தை பறித்தவள்
"செல்லக்கட்டி எனக்கு இன்னைக்கு நைட்கு இத படிக்கலன்னா தூக்கமே வராது.இன்னைக்கு நான் படிக்கிறேன்டி ப்ளீஸ்"என்று முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு கெஞ்சிய தன் தோழியை முறைத்தவள்
"நாயே உனக்கு ஏதும் காரியம் ஆகனும்னா மட்டும் இப்படி ஏதும் திருகுதாளம் பண்ணு.ஒரு நாள் பாரு நீ என்ன கெஞ்சினாலும் நான் உன் பேச்ச கேட்காமலே இருக்க போறேன்"என்று விளையாட்டாக கடிந்து கொண்ட தோழியை
"அது உன்னால முடியாது டார்லிங்க்.வேணும்னா சாலேஞ்ஜ் பண்ணிக்கலாம்"என்றாள்.
வீட்டுக்கு வந்த ஆகாஷனா முகத்தில் பூரிப்பை கண்ட அவர் தாய் என்றுல் தன் மகள் இப்படி சந்தோசமாகவே இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கொண்டார்.இரவு உணவு உண்டு முடித்து தூங்க அறைக்கு சென்றவள் பொன்னியின் செல்வனை எடுத்து படிக்கலாம் என்று கையில் புத்தகத்தை எடுக்க அதற்குள் இருந்து ஒரு கடிதம் கீழே விழுந்தது.அதை எடுத்துப்பார்த்தவள் ஒரு வேலை நேத்ராவுடையதாக இருக்குமோ என்று படிக்க ஆரம்பித்தாள்.
என் உயிர் தேவதைக்கு,
உன்ன முதல் முதலா பார்த்தப்போவே நீ எனக்கானவன்னு நான் தெரிஞ்சிக்கிட்டேன் அப்படின்னு பொய் எல்லாம் சொல்ல விரும்பல.நம்ம முதல் சந்திப்பே உன் ப்ரெண்ட்னாலதான் ஆரம்பிச்சது.எனக்கு என்ன சொல்ரது எப்படி சொல்ரது என்று எதுவுமே தெரியல.நான் நேரடியாவே சொல்ரேன்.எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு.எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும்.உனக்கும் என்னை பிடிக்கும்னு நான் நினைக்கிறேன். நான் உன்ன அறைஞ்சப்போ அப்பாவியா முகத்தை வெச்சிக்கிட்டு பார்த்தியே அப்பவே நான் ப்ளாட் ஆகிட்டேன்.
பசங்க நாங்க அப்படித்தாம்மா காதல் எந்த செக்கன்ல எங்கள போட்டுத்தாக்கும்னு சொல்ல முடியாது.அப்புறம் டெல்லில வெச்சி உன் ப்ரெண்ட்காக நீ எடுத்த ரிஸ்க் இருக்கே, அத பார்த்து நான் அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்.எந்த பொண்ணும் செய்ய துணியாத ஒரு காரியத்த உன் ப்ரெண்காக செஞ்ச.சரி நான் எதையோ பேச வந்து வேற எதுவே பேசிக்கிட்டு இருக்கேன்.
நான் சொல்ல வந்தது ஒன்னே ஒன்னுதான்.ஐ லவ் யூ.காலம் பூரா உன் முட்டைக்கண்ண பார்த்துக்கிட்டே வாழனும்.என்கூட வாழ்க்கைத்துனையா வர உனக்கு விருப்பம்னா அடுத்த வாரம் இதே நாள் என்கிட்ட உன் முடிவ சொல்லு.அதுவரைக்கும் நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.ஒரு வாரம் கழிச்சி உன் பதிலாக காத்திருப்பேன். நீ பிடிச்சிருக்குன்னு சொல்ல எந்த ரீசனும் வேணாம்.ஆனா என்ன பிடிக்கலன்னு சொல்ல அட்லீஸ்ட் ஒரு ரீசனாச்சும் சொல்லனும்.
உனக்கு நிஜமாவே லவ் இல்லைன்னாலும் அட்லீஸ்ட் இந்த ஒரு வாரத்துக்குள்ள அலைபாயுதே,டைட்டானிக் ரெண்டையும் பாரு.அட்லீஸ்ட் என்மேல ஒரு சின்ன ஒரு இரக்கமாச்சும் வரும் ஹிஹி...
உன் பதிலை காத்திருக்கும்
அஜய்..."
இதை படித்து முடித்த ஆகாஷனா ஆரம்பத்தில் இந்த கடிதம் நேத்ராவுக்கு அஜய் எழுதியதாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டவள் மீண்டும் படிக்க அவளுக்கு பின்வரும் வரிகள் மிகவும் தெளிவு படுத்தியது.
'.நம்ம முதல் சந்திப்பே உன் ப்ரெண்ட்னாலதான் ஆரம்பிச்சது' ஆமா நேத்ரா மீது மோதியதாலதான் எங்க அறிமுகமே வந்தது.
'நான் உன்ன அறைஞ்சப்போ அப்பாவியா முகத்தை வெச்சிக்கிட்டு பார்த்தியே அப்பவே நான் ப்ளாட் ஆகிட்டேன்' அஜய் அன்னைக்கு என்னத்தான் அறைஞ்சான்,
'டெல்லில வெச்சி உன் ப்ரெண்ட்காக நீ எடுத்த ரிஸ்க் இருக்கே, அத பார்த்து நான் அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்.எந்த பொண்ணும் செய்ய துணியாத ஒரு காரியத்த உன் ப்ரெண்காக செஞ்ச' நேத்ராக்கு ப்ராப்ளம் வரக்கூடாதுன்னு அவள ரூம் விட்டு வெளில அனுப்பிட்டு நானே எல்லாத்தையும் பண்ண பார்த்தேன்.
அப்போ அஜய் என்னத்தான் காதலிக்கிறாரா' என யோசித்தவள் மனதுக்குள் 'அவரு காதலிச்சா நானும் என்ன காதலிக்கனுமா? எவ்ளோ பேரு காலேஜ்ல என் பின்னாடி சுத்தியிருக்காங்க.அவங்க எல்லோரையும் நான் சுத்தல்லதானே விட்டேன்.ஹ்ம்ம் இந்த அஜய் பயலயும் சுத்தல்லயே விடலாம்' என்று மனதுக்குள் நினைத்தவள் அப்படியே உறங்கினால்.
காலையில் எழுந்ததும அவள் நேத்ராவிடம் இது பற்றி கூறலாமா வேண்டாமா என்று மனதுக்குள் பட்டி மன்றம் நடத்தியவள் இறுதியில் அஜய்யை சுத்தலில் விடப்போவதாள் அவனுக்கு எந்த ஒரு ரெஸ்பான்ஸும் பண்ணாமல் இருந்தால் கண்டிப்பாக அவன் நேத்ராவையே கேட்பான்.அந்த நேரத்துல அவளுக்கும் தெரியாம இருந்தா பயபுள்ள இன்னும் குழம்பி போயிடுவான்.அப்படியே இருக்கட்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.
தோழிகள் இருவரும் காலேஜ்கு செல்ல எப்போதும் வல வல என்று பேசிக்கொண்டிருக்கும் ஆகாஷனா எதையோ யோசித்த வன்னம் அமைதியாக வருவதை பார்த்தவள்
"என்னடி ஏதும் பேய் பிடிச்சிடிச்சா உன்ன இப்படி அமைதியா வர்ர" என்று நேத்ரா கலாய்க்க ஆகாஷனா அவளை பார்த்து புன்னகைத்தவள்
"ஏன்டி பேய் பிடிச்சா எல்லோரும் சத்தம் போட்டு கத்துவாங்க.நான் அமைதியாதானே வர்ரேன்.அதுக்கு ஏன்டி இப்படி சொல்ர" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டாள்.ஆகாஷனாவின் முகம் குழந்தைகள் சாக்லேட் கேட்டு கிடைக்காமல் இருந்தால் எப்படி இருக்குமோ அதே பாவனையில் இருக்க சிரித்தவள்
"ஹேய் அது பேசாம இருக்குற பொண்ணுங்களுக்கு பேய் வந்தாத்தான் கத்துவாங்க.நீதான் எப்பவும் பேசியே எங்கள எல்லாம் கொல்லுவியே அதான் உனக்கு பிடிச்ச பேய் நல்ல பேய் போல ,அதான் உன்ன அமைதியாக்கிடிச்சி"என்று கூறிய தன் தோழியை ஆகாஷனா புன்ன்கையுடன்
"இல்லடி ஒரு மேட்டர்ட் இருக்கு.ஒரு வாரத்துல உனக்கே தெரிஞ்சிடும்.அது வரைக்கும் என்னான்னு கேட்காத ப்ளீஸ் "என்க
"ஹேய் ப்ளீஸ் டி எனக்கு மன்டையே வெடிச்சிடும் .நான் தான் சஸ்பன்ஸ் தாங்க மாட்டேன்ல அப்புறம் எதுக்கு இப்படி சொன்ன.ப்ளீஸ்பா இப்பவே சொல்லேன்"என்று கெஞ்சியவளை
"நோ முடியாதுன்னா முடியாதுதான்.வெய்ட் பார் வன் வீக்.கடைசில அந்த விசயம் எப்படியும் உங்கிட்டதான் வரும்"என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தால்.
இரண்டு நாட்கள் காலேஜில் அஜய்யை ஆகாஷனா கண்டுகொள்ளாமல் இருந்தவள் எப்படியும் அவளின் பாராமுகத்தால் அவன் கொஞ்சம் தடுமாறுவான் என்று நினைத்தவளுக்கு எல்லாமே தலைகீழாக நடந்தது.அஜய்யோ எதற்கெடுத்தாலும் நேத்ராவுடன் சேர்ந்து கொண்டு ஆகாஷனாவை கவனிக்காது விட்டான்.இதை கண்ட ஆகாஷனாவின் திட்டம் அவளுக்கே திருப்பியடிப்பதை என்னி மனதுக்குள் பொருமியவள் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினால்.
மேலும் இரண்டு நாட்கள் செல்ல ஆகாஷனாவால் இப்போது எதிலும் ஒருமுகப்படுத்த முடியவில்லை.எதனால் இப்படி என்று யோசித்தவளுக்கு கடைசியில் கிடைத்த ஒரே ஒரு பதில் அஜய்.ஒரு வேலை தனக்கு அஜய் மீது காதல் வந்ததால்தான் இப்படி ஆகிவிட்டதோ என்று நினைத்தவள் உறங்கும் முன் டிவி பார்க்கலாம் என அமர அதில் "டைட்டானின்" தமிழ் டப்பிங்க் மூவீ ஓடிக்கொண்டிருந்தது.கடைசியில் 'ஜாக் வந்துடு ஜாக் வந்திடு (Comback Jack Comback - எனக்கு ரொம்ப பிடித்த சீன்) என்று ரோஸ் கூறும் போது ஆகாஷனாவின் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.எத்தனையோ முறை இந்த படத்தை பார்த்திருந்தாலும் இன்று அழுதது போல் அவள் என்றும் எமோசனல் ஆகவில்லை.படம் முடிந்த்தும் உடனே நேத்ராவுக்கு கால் செய்தவள் அவளிடம் அஜய் லெட்டர் கொடுத்தது முதல் இப்போது அவளுக்கு இருக்கும் மனநிலை வரை கூறினால்.எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட நேத்ரா
"உன் மனச தொட்டு சொல்லு,உனக்கு அஜய் மேல விருப்பம் இல்லைன்னு" என்று கேட்க
"நான் பொய் சொல்ல விரும்பலடி. என்ன காரணம்னு தெரியல நேத்து வரைக்கும் மத்த பசங்கள சுத்துல விட்ட மாதிரி அஜய்யையும் விடலாம்னுதான் ப்ளான் பண்ணேன்.ஆனா அவன் என்ன அவாய்ட் பண்ணத என்னால தாங்கிக்க முடியல.ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் ஹிம்" என்று கூற
"ஹேய் திங்க்ளாம் இல்ல, யூ ஆர் இன் லவ்.இனி இந்த மேட்டர விடு நான் அஜய் கிட்ட பேசிக்கிறேன்"என்று கூறியவளை ஆகாஷனா
"இல்லைடி நானே நாளைக்கு அஜய் கிட்ட பேசுறேன்.ஆனா பாரு எல்லோரையும் கலாய்ச்ச எனக்கு கடைசில ஏதோ (fairy tales)தேவதை கதைகள்ள வர்ர மாதிரி காதல் வந்திடிச்சில்ல" என்று கூற
"அதுதான்டி காதலோட மகிமை"என்று கூறி காலை கட் செய்தவள் உடனே அஜய்க்கு கால் செய்து
"அஜய் நான் நேத்ரா பேசுறேன்.உங்கள நாளைக்கு கொஞ்சம் தனியா மீட் பண்ணனும் முடியுமா?"என்று கேட்க
"கண்டிப்பா நேத்ரா அதுக்காகத்தான் நான் இவ்வளவு நாளா காத்துகிட்டு இருக்கேன்"என்று கூறி நாளை அவள் கூறப்போகும் விடயத்தை என்னி சந்தோசமாக அடுத்த நாள் விடியலை நினைத்து தூங்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் விடியல் இவர்கள் மூவரின் வாழ்க்கையிலும் கண்ணாமூச்சி ஆட போவது தெரியாமல் எல்லோரும் அவரவர் கனவுலகத்தில் சஞ்சரிக்க தொடங்கினர்.
----வருவாள்----
---------------------------
வாட்பெட்டில் எனக்கு பிடித்த எழுத்தாளினி Nivethamagathi ப்ரடிலிபி செயலியில் இந்த வாரம் முதல் இடத்தையும் ,இந்த மாதத்துக்கான எழுத்தாளர்கள் பட்டியலில் 9வது இடமும் கிடைத்திருக்கிறது.மிக குறுகிய நாட்களில் இந்த இடத்தை அடைந்ததற்கு பாராட்டுக்கள்.சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் சந்தோசமாக உள்ளது.
You deserve it ma.....bz all of sadhana charactor hehe...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro