கற்பனை 16
அப்டேட் போட்டு விட்டு ஆகாஷனாவுக்ககாக கதிர் காத்திருக்க அவனை ஏமாற்றாமல் அவனுடைய கதைக்கு வோட் செய்தவள் அவனுக்கு மெசேஜ் செய்தாள்.
"ஆகாஷனா-ஹாய் கரு, கதை சூப்பரா போகுதுப்பா.கிஷோர கெட்டவனா காட்டிட்டு அந்த கெட்டவனுக்குள்ளேயும் ஒரு சோகம் இருக்குறத சூப்பரா சொல்லிருக்கீங்க.நிஜமாவே சூப்பரா இருக்கு"
"கரு-ஹேய் நிஜமாவா ஷனா-அவ்ளோ நல்லாவா இருக்கு.இல்ல என்னை ஓட்றீங்களா?"
"ஆகாஷனா-ஓய் என்ன பார்த்தா என்ன ஓட்ற மாதிரியா இருக்கு.நான் ரொம்ப சீரியசா சொல்ரேன் கதிர் ரொம்ப அழகா இருக்கு உங்க ஸ்டோரி.அப்புறம் கெட்டவங்க கொஞ்சம் திருந்தினதும் எல்லோரும் அவங்கள் ப்ரெண்டா ஏத்துக்குற மாதிரிதான் அதிகமா வரும்.ஆனா நீங்க அத கூட ரொம்ப அழகா சிம்பிளா ஒரு பொண்ணு வாழ்க்கையில அப்படியான ஆளுங்க கூட பழக்கம் வெச்சிக்கிட்டா எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பத சொன்ன விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது."
"கரு-எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு ஷனா.என் ஸ்டோரி நல்லாருக்கு ,சூப்பர் அப்படின்னுதான் எல்லோரும் சொல்வாங்க.ஆனா யாரும் என்ன இப்படி ஊக்கப்படித்தினது இல்ல"
"ஆகாஷனா-ஹேய் கூல் கூல்.யூ டிசேர்வ் இட். அப்புறம் ஒரு விசயம் ரைட்டர்ஜி இன்னும் ஒரு மாசத்துக்கு வாட்பெட் பக்கம் வரமாட்டேன்"
"கரு-ஏன் என்னாச்சி"
"ஆகாஷனா- சும்மா சும்மா டென்சன் ஆகாதீங்க.பைனல் எக்சாம்ஸ் வருது .அத க்ளியர் பண்ணாத்தான் ஆகஸ்ட் 5ம் திகதி நடக்கிற கான்வகேசன்ல எங்களுக்கு சர்டிபிகேட் கிடைக்கும்"
"கரு-அதெப்படிப்பா.எக்ஸாம் முடிஞ்சி ஒரு வாரத்துல க்ராடுவேசன் பங்க்சன்?"
"ஆகாஷனா- அது எங்க டிபார்ட்மன்ட்ல ஒரு ஸ்ட்ரைக்னால எங்க கிலாசஸ் கொஞ்சம் டிலே ஆகிடிச்ச்சி.அதான் எங்க டிபார்மன்டுக்கு மட்டும் ஸ்பெசல் எக்சாம்.சரி ரைட்டர்ஜி , எக்சாம் முடிச்சிட்டு பார்க்கலாம்.ஆனா ஒன்னு மட்டும் சொல்ரேன் ஆகாஷனாக்கு மட்டும் ஏதும் ஆச்சி அப்புறம் உங்கள உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்"
"கரு-ஹாஹா அப்போ நமக்குள்ள ஒரு பெரிய சண்டையே இருக்கு போல"
"ஆகாஷனா-அப்போ நீங்க ஆகாஷனாவா ஏதோ பண்ண போறீங்க.அப்படி மட்டும் பண்ணீங்க அப்புறம் உங்க கூட பேசவே மாட்டேன்.சரி இப்போ எனக்கு சமையலுக்கு டைம் ஆச்சி பாய்" என்று கூறி செல்ல இங்கு கதிரோ தன் மனம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த முகம் தெரியாத பெண் மீது செல்வதை அறியாமல் இருந்தான்.
---------------------------------
காலேஜ் கடைசி நாளில் எல்லோரும் இருக்க நந்தினியோ
"எங்கடி உன் ஆள கானோம்"என்று கேட்க சந்தியாவோ
"ஏய் லூசு யாரடி சொல்ர.சொல்ரதுதான் சொல்ர கொஞ்சம் நல்ல வாட்டசாட்டமான ஆளா சொல்லுடி"என்று கலாயத்தவளை நந்தினி நக்கலாக
"அதான் அன்னைக்கி நம்ம போன் பண்ணி பேசினப்போ உன்ன பத்தி விசாரிச்சாரே ர்ர்ர்ர்ர்ராஜ்ஜ்ஜீவ்வ்வ்வ்"என்று இழுக்க ஒரு கணம் சிரித்த சந்தியா மனதுக்குள்
'ஏன்டி சொல்ல மாட்ட.ஏன் ஆளா ? அவன் உன் ஆளு ஆனதுக்கு அப்புறம் தெரியும்' என்று எண்ணியவள் நந்தினியிடம்
"ஹ்ம்ம் ஏன் சொல்லமாட்ட மகளே.எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும்டி"என்று கூற அவ்விடத்துக்கு ராஜீவும் வந்து சேர சரியாக இருந்தது.
"ஹாய் சந்தியா, நந்தினி.என்னப்பா காலேஜ் லாஸ்ட் டே அதுவுமா சோகமா இல்லாம இப்படி சந்தோசமா இருக்கீங்க"என்று கேட்க நந்தினையை முந்திக்கொண்டு சந்தியா
"அது ஒன்னுமில்ல ராஜீவ் நந்தினி கல்யாணத்துக்கு அப்புறமா எத்தனை குழந்தை பெத்துக்கலாம்னு கேட்டா.நான் எதுக்குடி ஏன்கிட்ட கேட்குற அதான் உன் முறைப்பையன் இருக்கானே அவன்கிட்ட கேட்ட்குக்கன்னு சொல்லிட்டு இருந்தேன்.மேடம்கு காலேஜ் முடிய போகுதே என்ற கவலைய விட எத்தனை குழந்தைங்க பெத்துக்க போறோம்ன கவலைதான் அதிகமா இருக்காம்"என்று கூறி ராஜீவை குறும்பாக பார்க்க இங்கு நந்தினியோ என்ன கூறுவது என்று முழித்துக்கொண்டிருந்தாள்.அவளை மேலும் கலாய்க்க எண்ணிய ராஜீவ்
"அட ஆமால்ல அன்னைக்கு கூட நந்தினி சொன்னாங்களே.அவங்க முறைப்பையனத்தான் அவங்கவீட்டுல பார்த்திருக்காங்கன்னு"என்று கூறியவனை சங்கடமாக பார்த்தவள் சந்தியா நேரம் பார்த்து காலை வாரியது நந்தினிக்கு புரிந்தது.
"சரி சரி பொய் சொன்னவங்க யாரும் முகத்தை பாவமா வெச்சிக்க வேணாம்.எல்லொரும் ஒரு செல்பி எடுக்கலாமா?" என்று கேட்டவனை நந்தினியும் சந்தியாவும் சரி என்று கூற ராஜீவ் செல்பி எடுத்துக்கொள்ள சந்தியாவும் அவளது மொபைல கொடுக்க அது ஐபோன் 6s rose gold ஆக இருந்தது.அதை வாங்கியவன்
"ஹ்ம்ம் யூ எஸ் பொண்ணுன்னா சும்மாவா ஆப்பிள் லாப்டாப், ஆப்பிள் போன் கலக்குற சந்தியா கலக்குற"என்று கூற சந்தியாவும்
"ஹலோ மேடம் கூடத்தான் இதே மொபைல் வெச்சிருக்காங்க"என்று கூற நந்தினையை பார்த்தவன்
"ஹேய் நந்தினி உன் மொபைலயும் கொடுப்பா.அதுலயும் எடுக்கலாம் "என்று கூற தனது மொபைல கொடுத்த நந்தினி ராஜீவிடம்
"ராஜீவ் அதுல செல்பி கேமரா வேர்க் ஆகாது.லாஸ்ட் வீக் மொபைல் கீழ விழுந்ததுல போனோட மேல் பக்கம் சின்ன ஒரு scratch (கீறல்) விழுந்துடிச்சி.அதுல இருந்து பின்னாடி இருக்குற கேமரா மட்டும்தான் வேலை செய்ய்து.சோ முடியும்னா பின்னாடி இருக்குற கேமரவால எடுங்க "என்று கூற அவளது மொபைலை பார்த்தவன் இரண்டு மொபைலும் ஒரே போல இருந்தது.ஆனால் சந்தியாவின் மொபைல் எந்த ஒரு கீறலும் இல்லாமல் இருக்க நந்தினியின் போனில் முன் பக்கம் ஒரு சிறிய கீறல் இருந்தது.அவளது மொபைலை வாங்கியவன் அவள் சொன்னது போல கஷ்டப்பட்டு பின்னாள் இருக்கும் கேமரா மூலம் செல்பி எடுத்தான்.எல்லோரும்பேசிவிட்டு அவர்களின் கடைசி கல்லூரி நாளை எண்ணி சிறிய ஒரு மன வேதனை கொண்டாலும் வாழ்க்கையில் முன் செல்ல வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி கனத்த இதயத்துடன் பிரிந்து சென்றனர்.
சந்தியாவின் தாய் தந்தையர் இந்தியா வந்து சேர்ந்ததும் அவர்கள் கூறிய முதல் செய்தியே அவளுக்கு பேரிடியாக இருந்தது.22 வரும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் தங்களுக்கு மனது ஒத்துப்போகவில்லை என்று இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்து இந்தியா வந்திருந்தனர்.இதை கேள்விப்பட்ட நந்தினிக்கு எப்படி அவளுக்கு ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை.முதல் முறையாக சந்தியா தன் பெற்றோரை வெறுக்க தொடங்கினால்.ஒரு நாள் இரவு சந்தியாவின் தாய் தந்தையர் இருக்கும் விட்டிற்கு சென்ற நந்தினியும் சந்தியாவும் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் சந்தியாவின் அம்மா
"என்ன சந்தியா நாங்க வந்து ஒரு வாரம் ஆகுது.நீ எங்க ரெண்டு பேருகிட்டயும் எதுவுமே பேசல்ல"என்று கேட்க கோபம் கொண்ட சந்தியா
"என்ன பேச சொல்ரீங்கம்மா.22 வருசம் ஒன்னா வாழ்ந்துட்டு இப்போ திடீர்னு பிரிஞ்சி போக போறோம்னு சொல்ரிங்க.உங்க ரெண்டு பேருக்கும் என்ன லூசா"என்றவளை அவளது தந்தை முறுவலுடன்
"உன் கோபம் நியாயம்தான் சந்தியா.ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒன்னா வந்ததுல இருந்து உனக்கு தெரிய வேணாம் நாங்க இது பத்தி பேசி ரொம்ப தெளிவா இருக்கோம்னு.கணவன் மனைவின்ற உறவு ஒரு அக்ரீமண்ட் கிடையாது.ஆனா நாங்க ரெண்டு பேரும் இவ்வளவு நாளும் ஏதோ பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் மாதிரிதான் இருந்திருக்கோம்.ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினப்போதான் எங்களுக்கு அது புரிஞ்சது"என்று கூற அவரை கோவமாக பார்த்தவள்
"இப்போ பிரிஞ்சி என்ன பண்ண போறீங்க.நீங்க எனக்கு ஒரு சித்தியையும் ,அம்மா எனக்கு ஒரு சித்தப்பாவையுமா கொண்டு வரப்போறீங்க "என்று கேட்க அவளின் தாய் தந்தை இருவருமே வாய்விட்டு சிரித்துவிட்டனர்.
"அப்படி இல்லடா, உங்கம்மாக்கு வெற யாரையும் பிடிச்சிருந்தா அவ கல்யாணம் பண்ணிக்கட்டும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல "என்று கூற சந்தியா கோவத்தின் உச்சியில் இருந்தாள்.நிலமை மோசமாவதை உணர்ந்த நந்தினி
"அங்கிள் நீங்க ரெண்டு பேரும் என்ன உங்களோட இன்னொரு பொண்ணு மாதிரின்னுதான் சொல்வீங்க.அதனால நான் ஒன்னு சொல்லட்டா"என்று கேட்க அவர்கள் இருவரும் சரி என்று தலை அசைத்தனர்,
"நீங்க இப்போ உங்க ரெண்டு பேருக்கும் உங்க வாழ்க்கைல பிடிப்பு இல்லாம ஏதோ பிஸ்னஸ் மாதிரி பொயிட்டு இருக்குனு சொல்ரீங்க,உங்க பார்வையில அது தப்பு கிடையாது.ஏன்னா நீங்க வாழ்ற சூழல் அப்படி.அப்பா உங்களோட வேலை நேரமும் அம்மாவோட வேலை நேரமும் என்ன"என்று அவரோ
"இவ காலைல 8மணிக்கு போன பகல் 3 மணிக்கு வருவா.எனக்கு 12 மணில இருந்து இரவு 10 மணி வரைக்கும் வேலை"என்று கூற நந்தினி மேலும்
"உங்க வீக் எண்ட் லீவ் எப்படி "என்று கேட்க அவர்
"அவளுக்கு ஞாயிறு லீவு.ஆனா எனக்கு வீக்லி டே ஆப்"என்று கூற அவர்களின் பிரச்சினை அவளுக்கு இலகுவாக புரிந்தது.இவரின் பதிலை கேட்டு நந்தினி சந்தியாவை பார்த்து முறுவலித்தால்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro