கற்பனை 15
ஷனா - 9
அன்றைய சம்பவத்தின் பின் கிஷோர் இவர்களை எதுவும் தொல்லை செய்யாமல் இருந்தான்.டிறைனிங்க் முடித்து வந்து 2 நாட்களில் திடீரென்று ஆகாஷனாக்கு புதிய நம்பரில் இருந்து கால் வர அதை பிக் செய்தவள்
"ஹலோ ஷனா, நான் கிஷோர் பேசுரேன்" என்று கூற முதலில் அவனின் காலை கட் செய்யலாமா என யோசித்தவள் தன் எண்ணத்தை மாற்றி
"சொல்லு கிஷோர் என்ன புது நம்பர்ல இருந்து கூப்பிடுற"என்று கேட்க அவனோ
"அன்னைக்கு என் மொபைல் மிஸ் ஆச்சி.அது இப்போ அஜய் கிட்ட இருக்கு.என்னால அவன் கிட்ட போய் என்னோட போன கேட்க முடியாது.தயவு செஞ்சி கொஞ்சம் அவங்கிட்ட அத அத வாங்கி கொடுக்கிறியா?" என்று கேட்க அவளோ நக்கல் தொனியில்
"எது எங்கள வீடியோ எடுத்து ப்ளாக்மெயில் பண்ணியே அந்த மொபைலா" என்று கேட்க அவனோ
"ஆகாஷனா நான் பண்ணது தப்புதான்.அது என்னோட பிறந்த நாளைக்கு அப்பா வாங்கி கொடுத்தது.தயவு செய்து அவன் கிட்ட இருந்து வாங்கி கொடுத்துடு" என்று கூற இப்பொழுது இவனை நம்புவதா வேண்டாம என்று யோசித்தவள்
"சரி கிஷோர் உன்ன இரண்டாவது தடவையா நம்புறேன்.இந்த முறையும் நீ எங்களுக்கு துரோகம் செய்யனும்னு நினைக்காத"என்று கூற அவள் பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளாமல் அவனிடம் இயல்பாக பேசியது கிஷோருக்கு ஏதோ போன்று இருந்தது.கிஷோரிடம் பேசிவிட்டு அஜய்க்கு கால் செய்த ஆகாஷனா கிஷோரிடம் பேசியது பற்றி கூறி அவனது மொபைல கேட்க
"ஈவினிங்க் உங்க வீட்டு பக்கத்துல இருக்குற பார்க்குக்கு வா.அங்க வச்சி பேசிக்கலாம்"என்று கூற ஆகாஷனாவும் நேத்ராவை அழைத்துக்கொண்டு பார்க்கிற்கு சென்றால்.அங்கு அஜய்யை கண்டவர்கள் அவன் அருகில் சென்று பேச ஆரம்பிக்க அவன்
"நீ என்ன லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா.அவன் மொபைல கேட்டா நீ எந்த தைரியத்துல கொடுக்க போறேன்னு சொல்ற.உங்க வீடியோ இன்னும் அந்த மொபைல்ல இருக்கு.அது ஐபோன்னதால அன்லாக் பண்ணவும் முடியல"என்று கூற ஆகாஷனா அமைதியாக இருக்க அவன் நேத்ராவை பார்த்து பார்வையால்
'நீதான் இந்த ஐடியாவை கொடுத்தியா' என்பது போல கேட்க நேத்ராவும் பார்வையாலேயே
'ஐயையோ எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல ' என்பது போல ஜாடை செய்ய இது எதையும் கவனிக்காத ஆகாஷனா
"அது கிஷோர் எனக்கு கால் பண்ணி கேட்டபோ நான் முடியாதுன்னுதான் சொன்னேன்.ஆனா நேத்ராதான் பாவம் அவன் திருந்துரதுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாமேன்னு சொன்னா" என்று கூற நிஜமாகவே அஜய்க்கு சிரிப்பு வர
"ஏன்மா உன் வாய்ல இருந்து உண்மையே வராதா? எப்ப பாரு பொய்தான் பேசுவியா?" என்று கலாய்க்க பாவமாக முகத்தை அவள் வைத்துக்கொள்ள அதை கண்டவன்
"சரி சரி ரொம்ப அப்பாவி மாதிரி இருக்காத. நீ சொல்ர ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் நான் அவனோட மொபைல கொடுக்க ஒத்துக்கிறேன்.இதுல இருக்குற உங்களோட வீடியோவ ட்டெலீட் பண்ண வேண்டியது உன்னோட பொறுப்பு" என்று கூற முகம் மலர்ந்த ஆகாஷனா
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அஜய்.அவனும் நல்லவந்தான் .என்ன செய்ய சேர கூடாத ஆளுங்களோட சேர்ந்து இப்படி கெட்டு போயிட்டான்.அவன நல்ல பையனா மாத்திடலாம்"என்று கூற இவளை பரிதாபமாக பார்த்தவன்
"அவனே சேர கூடாத ஆளுதான்.இதுல நீ அவன் சேர கூடாத ஆளுங்களோட சேர்ந்து கெட்டு போயிட்டான்னு சொல்ர.எல்லாம் காலம்டா"என்று தலையில் அடித்துக்கொண்டவனின் பேச்சை மாற்றும் முகமாக
"ஹேய் அது என்ன அஜய் கையில பொன்னியின் செல்வன் புத்தகமா?" என்று கேட்க அவனோ
"ஆமாப்பா பாகம் 2,3,4 எல்லாம் ஒரே புத்தகமா வந்திருக்கு.அதான் லைப்ரரில இருந்து எடுத்துட்டேன்."என்று கூற ஆகாஷனாவும்
"நேத்ராவும் நானும் பாகம் 1 படிச்சிட்டோம்.வெயிட்டிங்க் பார் நெக்ஸ்ட் பார்ட்" என்று கூற முகம் மலர்ந்த அஜய்
"சரி ஷனா நான் லைப்ரரிக்கு ரிட்டேர்ன் பண்ணும் போது சொல்ரேன்.நீங்க எடுத்துக்கோங்க"என்று கூறினான்.அவளும் சரி என்று கூறி கிஷோரின் போனை வாங்கி சென்றாள்.
கிஷோருக்கு கால் செய்த ஆகாஷனா அவனை காலேஜ் லைப்ரரிக்கு வரும்படி கூறியிருந்தாள்.அவன் வந்தததும் சுற்றும் முற்றும் பார்க்க அவளோ
"என்ன தேடுற கிஷோர் "என்று கேட்டவனை தலையை குனிந்தவனாக
"இல்ல உன் ப்ரெண்ட் இல்லாம எங்கேயும் போக மாட்டியே அவ வரல்லயா"என்று கேட்க அவனை பார்த்து முறுவலித்தவள்
"இனிமே அவ உன் விசயத்துல தலை இட மாட்டேன்னு சொல்லிட்டா.அவ எவ்வளவு சொல்லியும் நான் உன்ன மறுபடி நம்புறேன்னு என் மேல கோவமா இருக்கா" என்று கூற கிஷோருக்கு நிஜமாகவே இப்போது வலித்தது.
"நான் பண்ணது தப்புதான் மன்னிச்சிடுங்கன்னு சொல்ல மாட்டேன்.ஏன்னா எனக்கு சின்ன வயசுல இருந்தே பணம் ,அதிகாரம் எல்லாமே இருந்ததால நான் பண்ணாத தப்பே இல்லை.எத செஞ்சாலும் நான் செய்றது சரின்னு சொல்ல ஒரு கூட்டம் என்கூட இருந்துக்கிட்டே இருக்கும்.என்னோட தவறுகளை சுட்டிக்காட்ட யாருமே எனக்கு இருக்கல்ல"என்று கூற அவளோ
"அப்போ உங்க அம்மா...."என்று இழுக்க
"இருந்தாங்க, ஆனா இப்போ இல்லை"என்று கூற ஷனா
"இல்லைன்னா" என்று கேட்டவளை
"என் அம்மா அப்பா கூட இல்லை.வேறொருந்த்தர் கூட இருக்காங்க.எங்கப்பாக்கு கட்சியில சேர்ந்தப்போ அவரு பெரிய புள்ளியா இருந்திருக்காரு .எங்கம்மா பார்க்க ரொம்ப அழகா இருப்பாங்க.அந்தாளு எங்கம்மாவ ஆசை வார்த்தை காட்டி எங்கப்பாகிட்ட இருந்து அவங்கள பிரிச்சி அவருகூட வெச்சிக்கிட்டாரு.வெச்சிக்கிட்டாருன்னு சொன்னா தப்பா இருக்கும் கல்யாணம்தான் பண்ணிக்கிட்டாரு.அத கேட்க போன எங்கப்பாக்கு கட்சியில ஒரு போஸ்ட்டிங்க் கொடுக்கவும் அவரும் அமைதியாகிட்டாரு.இப்படி பட்ட ரெண்டு பேருக்கு பொறந்த நான் மட்டும் எப்படி நல்லவனா இருப்பேன்.எங்கம்மா என்ன அவங்க கூட வெச்சிக்கிரேன்னு சொல்லியும் அந்த பெரிய மனுசன் எங்கப்பாக்கு பெரிய அமெளன்ட கொடுத்த என்ன பார்த்துக்குற பொறுப்ப எங்கப்பாக்கே கொடுத்துட்டாரு.அதுக்கு அப்புறமா எங்கப்பா எலக்சன்ல ஜெயிச்சி செய்யகூடாத திருகுதாளம் எல்லாம் செஞ்சி இப்போ மத்திய அமைச்சர் ஆகிட்டாரு"என்று கூற இது எல்லாவற்றையும் கேட்ட ஆகாஷனா ஒரு கணம் திகைத்து
"அப்போ உங்கம்மா யாரு" என்று கேட்க அவன் ஒரு வறண்ட புன்னகையுடன்
"இப்போ இருக்குற கட்சித்தலைவரோட பொண்டாட்டி"என்று கூறியவனின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தது.இதை கண்ட ஆகாஷனா இதுக்கு மேல் இது பற்றி பேசி அவனை மேலும் கவலைப்படுத்தாமல் இருக்க என்னி
"சரி கிஷோர் ,இந்தா உன் மொபைல்"என்று கொடுக்க அதை வாங்கி அன்லாக் செய்தவன் அவள் அருகில் வந்து
"ஏன் ஷனா என்மேல இவ்வளவு நம்பிக்கை வெச்சி இப்படி பண்ற.இங்க பாரு இப்ப கூட என் மொபைல்ல உங்க வீடியோ இருக்கு.நான் இத வெச்சி ஏதும் பண்ணமாட்டேன்னு எப்படி என்ன நம்புற"என்று கேட்க அவளோ
"என்னதான் கெட்டவங்களா இருந்தாளும் ஒரு கட்டத்துக்கு மேல அவங்களால கெட்டவங்களா இருக்க முடியாது.எந்த கெட்டவனுக்கும் ஒரு முடிவுப் புள்ளியும் அவன் நல்லவனா மாறுறதுக்கு ஒரு ஆரம்ப புள்ளியும் வேணும்.அது ஏன் என்மூலமா நடக்க கூடாதுன்னு நினைச்சேன்.அது இப்போ நடந்துடும்னு நம்பிக்கை இருக்கு"என்று கூற கிஷோர் அவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தவன்
"இல்ல ஷனா, என்னால நல்லவனா மாற முடியுமான்னு தெரியல.ஆனா கெட்டவனா இருக்காம இருக்க டிரை பண்றேன்.அன்னைக்கு நேத்ரா அவ்வளவு நடந்தும் அவ யார்கிட்டயுமே என்ன பத்தி எதுவுமே சொல்லல.அன்னைக்கே எனக்கு ஒரு மாதிரி இருந்திச்சி .அவ நினைச்சிருந்தா என்ன லெக்சரர்ஸ்கிட்ட மாட்டிவிட்டிருக்கலாம்.ஆனா அவ அத பண்ணல"என்று கூறியவனை பார்த்து சிரித்தவள்
"அவ எப்போமே அப்படித்தான் யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்கமாட்டா.ஏன் நம்மளே அவளுக்கு கெட்டது பண்ணாலும் அவ நமக்கு நல்லததான் நினைப்பா "என்று கூற கொஞ்சம் தயங்கிய கிஷோர்
"இனிமே உங்க கூட நான் ப்ரெண்ட்லியா இருக்கலாமா?" என்று தயங்கி கேட்டவனை பார்த்து சிரித்தவள்
"நீ பண்ண எல்லாத்தையும் மறந்துட்டு உன்கூட எங்களால ப்ரெண்ட்லியா பழக முடியாது கிஷோர்.நீ நல்லவனா மாறினா கூட எங்களால உங்கூட க்லோஸ் ஆக முடியுமான்னு தெரியல.ஏன்னா பசங்க மாதிரி இல்ல பொண்ணுங்க.பசங்க எது பண்ணாலுமே அது ப்ராப்ளம் இல்லை.ஆனா பொண்ணுங்க எங்களுக்கு நாங்க யாரு கூட பழகுறோம்,எங்க போறோம்,என்ன பண்றோம் என்கிறத வெச்சிதான் எங்கள இந்த சமூகம் எடைபோடும்.நீ கெட்டவன்னு ஊருக்கே தெரியும் .இப்போ உங்கூட நாங்க ப்ரெண்ட்சிப் வெச்சிக்கிட்டா அது எங்க எதிர்காலத்துக்குதான் பாதிப்பாகும் கிஷோர்.வாழ்க்கை ஒன்னும் சினிமாவோ இல்ல நாவலோ இல்லைப்பா.கெட்டவனா இருந்த ஒரு பையன் நல்லவனா மாறினதும் அவனுக்கு நிறைய நல்ல ப்ரெண்ட்ஸ் கிடைக்கிறதுக்கு"என்று கூற அவனும் அவள் கூறியவதை ஏற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டு கனத்த இதயத்துடன் நீங்கினான்.
ஆனால் இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் சினிமாவே கண்டிராத ஒரு திருப்பு முனைக்கு செல்லும் என்பதை அப்போது ஆகாஷனா உணரவில்லை.
----வருவாள்-----
-------------------
இதுநான்,
இது ஒரு ஸ்பாய்லர் அலேர்ட்.....இந்த கதை கொஞ்சம் வித்தியாசமான முடிவை நோக்கி போகும்.பலருக்கு இந்த கதையின் முடிவு பிடிக்காமல் போகலாம்..சோ அதை நான் முன்கூட்டியே சொல்லிடுறேன்.
நான் கண்ட சிலரின் வாழ்க்கையில் நடந்ததுதான் இந்த கதையின் முடிவாக இருக்கும்.அது ஒரு சந்தோசமான முடிவா இல்லையா என்பது நபர்களை பொறுத்து வேறுபடும்..ஒரு சில சமூக கட்டுப்பாடுகள், வசைகளை இந்த கதையில் நான் விமர்சிக்கலாம் என்று உள்ளேன்.
திருமணம் தொடர்பாக சமூக பார்வையும், உண்மையாக பாதிக்கப்படவர்கள் அதை எப்படி எடுத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல போகின்றார்கள் என்பது பற்றியும் கூற போகின்றேன்.என்னுடைய முந்தைய கதைகளில் வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கதையை போக்கை மாற்றுவேன்.ஆனால் மன்னிக்கவும் இந்த கதையில் அதை செய்ய போவதில்லை.என் மனது எதை கூறுகின்றதோ அதையே எழுத போகின்றேன்.ஏனென்றால் ஒரு வேலை இது என்னுடைய கடைசி கதையாக இருக்கலாம் அல்லது அடுத்த கதைக்கு நான் மிக நீண்ட ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ளலாம்.அதனால் இந்த கதையை என்னுடைய 100% விருப்பின் பேரில் எழுத போகின்றேன் என் மனைவியின் உதவியுடன். முந்தைய கதைகள் போன்று இதை வேறு யாரிடமும் கலந்தாலோசிக்க போவதில்லை.என் மனைவியின் உதவியுடன் இந்த கதையை உங்களுக்கு தொடர போகின்றேன் ..
நன்றி....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro