Authors Note
எல்லோருக்கும் ஒரு பெரிய ஹாய்,
இந்த வாரத்துக்குள் கதையை முடித்து விட்டு வாட்பெட்டில் இருந்து சீக்கிரம் சென்றுவிட வேண்டும் என்று கூறியுருந்தேன். அதற்கு காரணம் மே மாதம் முஸ்லிம்களுக்கான நோன்பு ஆரம்பமாக போகின்றது.அந்த நேரத்தில் அதிகமாக இறை வணக்கத்தில் காலத்தை செலவிட வேண்டும் என்பது முஸ்லிமாக பிறந்த எல்லோரருடைய ஆசையும்.
அலுவலகத்தில் கடந்த ஒரு வார காலமாக வேலைப்பழு மிகவும் அதிகரித்துள்ளது. அதனாலேயே என்னால் கமண்ட்ஸ்களுக்கு ரிப்ளை பண்ண முடியவில்லை. அது போல சக எழுத்தாளர்களின் கதைகளையும் படிக்க நேரம் கிடைக்கவில்லை.முடிந்த வரை கமண்ட்ஸ்களுக்கு பதில் அளிக்க முயற்சிக்கின்றேன். சக எழுத்தாளர்களின் கதைகளையும் படித்துவிடவும் முயற்சிக்கின்றேன்.
வாட்பெட் விட்டு எங்கும் நான் சென்று விட மாட்டேன். இங்குதான் மற்ற ரைட்டர்களின் கதைகளை படித்துக்கொண்டு சுத்திக்கொண்டிருப்பேன்.அடுத்த கதை வருவதற்கு கொஞ்சம் நாள் ஆகலாம்.ஏன் சில மாதங்கள் கூட ஆகலாம்.வழமை போல ஏடாகூடமான சப்ஜக்ட் எடுத்து எழுதட்டுமா அல்லது லாஜிக்கே இல்லாமல் ஒரு காதல் கதை எழுதட்டுமா? இதற்கு மட்டும் பின்னூட்டமிட்டால் உதவியாக இருக்கும.
முடிந்தவரை அவசரமாக பதிவிட முயற்சிக்கின்றேன் .
நன்றி..( இந்த பதிவுக்கு யாரும் வோட் போட வேண்டாம்)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro