Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

8

"என்ன நீ வெளியூருக்கு போறோம்னு சொல்லிட்டு ஏர்போர்ட்க்குக்  கூட்டி வந்திருக்க?" என்று கேட்க லட்சுமியோ

"வெளியூர் இல்லை வெளி நாடு போற" என்றவளை பிருந்தா நெற்றியை சுருக்கி

"என்ன போறியா? அப்போ நீ வரவில்லையா என்கூட?" என்று கேட்டவளை

"இங்க பாரு பிருந்தா , இங்க ஏற்கனவே தலைக்கு மேல பிரச்சினை இருக்கு. நீயும் நானும் ஒன்னா ஒரே நேரத்துல ஊர விட்டு போனோம்னா தேவையில்லாம எதையாச்சும் பேசி இருக்குற பிரச்சினைய இன்னும் அதிகமாக்கிடுவாங்க. உனக்கு இப்போ மன நிம்மதி வேணும். இங்க இருந்தா கண்டிப்பா உனக்கு அது கிடைக்காது. சோ நீ முதல்ல ஊரவிட்டு போ" என்றவளை பிருந்தா

"என்னால உன்ன விட்டு தனியா போக முடியாதுடி. எங்கம்மாக்கு அப்புறமா எனக்கு எல்லாமுமா  நீதான் இருக்க. நீயும் என்கூட வா , இரண்டு பேரும் ஒன்னாவே போகலாம். நம்ம இங்க திரும்பி வரவே தேவையில்லை.என்ன சொல்ற?" என்று கேட்டவளை

பிருந்தா சில நேரங்களில் பெரிய துணிச்சலான பெண் போல இருந்தாலும் பல நேரங்களில் அவளது பேச்சு குழந்தை தனமானதாகவே இருக்கும்.

அவளைப் பார்த்து புன்னகைத்தவள்

"மேடம் நீங்க வெளியூருக்கு போகல. போறது வெளி நாட்டுக்கு. சோ நீங்க விசா முடிஞ்சதும் எப்படியும் இங்கதான் வரனும். அப்புறம் நம்ம கைல காசும் கம்மியாத்தான் இருக்கு. ஆனா நீ ஒன்னும் பயப்படாத நீ போற இடத்துல தங்குறது மற்ற தேவை எல்லாத்துக்குமே ஆளு செட் பண்ணிட்டேன். நீ எந்த பயமும் இல்லாம போகலாம்" என்றவளை

"சரி நீ முடிவெடுத்திட்டேன்னா யார் பேச்சையும் கேட்கமாட்டியே. சரி எந்த நாட்டுக்கு நான் போகப் போறேன்" என்றவளை லட்சுமி

"நீ இலங்கைக்கு போற" என்றாள்.
அதைக் கேட்டதும் பிருந்தாவின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது. உடனே பிருந்தாவின் மன ஓட்டத்தை அறிந்த லட்சுமி

"இங்க பாருடா, இலங்கைன்னாதான் எதுன்னாலும் உடனே வந்து உன்ன பார்க்க முடியும். வீசாவும் ப்ராப்ளம் இல்லாம எனக்கு கிடைக்கும். முக்கியமா அங்க நமக்கு செலவும் பெருசா இருக்காது. இப்போ நமக்கு இருக்குற முக்கியமான பிரச்சினை நம்ம கிட்ட இருக்குற காசு முடியிறதுக்கு முன்னாடி நமக்கு நிரந்தரமா வருமானம் வர்றதுக்கு  ஏதும் ஏற்பாடு செஞ்சாகனும் இல்லைன்னா இப்போ இருக்குற பிரச்சினைய என்ன  செஞ்சாச்சும் சால்வ் பண்ணியாகனும். இப்போ நீ இருக்குற நிலைமைக்கு எல்லோர்கிட்டயும் சண்டைக்குத்தான் போவ.
உனக்கு வேற நடிக்கிறதுக்கு ரெட் கார்ட் போட்டிருக்காங்க. இங்க இல்லைன்னா வேற ஏதும் மொழியில நடிக்க சான்ஸ் கிடைக்குமான்னு தேடனும். அதுவரைக்கும் நீ இங்க இருக்குறது பாதுகாப்பு இல்ல. அதனாலதான் சொல்றேன்  நீ இலங்கைக்கு போ. நான் எப்படியும் ஒரு மாசத்துல இந்த பிரச்சினை எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்ட பார்க்குறேன். ஏற்கனவே உனக்கும் விக்னேஷுக்கும் நடந்த ப்ராப்ளம் முடியிறதுக்குள்ள நீ ராமலிங்கத்தையும் டீல்ல இழுத்துவிட்ட. சோ இத கொஞ்சம் டிப்லோமேட்டிக்காத்தான் முடிக்க பார்க்கனும்" என்றவளை பிருந்தா

"நான் எதுவும் தப்பாவோ இல்லைன்னா பொய்யோ சொல்லலையே. உண்மையத்தானே சொன்னேன். இங்க பாரு லட்சுமி எனக்கு இப்படி ஓடி ஒளியிரதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல. எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா நின்னு பேஸ் பண்ணனும். அதான் எனக்கு பிடிக்கும்" என்றவளை சலிப்புடன் நோக்கிய லட்சுமி

"அம்மா தாயே நீ இந்த சினிமா இண்டஸ்ட்ரில  ஒரு வருசமாத்தான் இருக்க, நான் சின்ன வயசுல இருந்தே இங்க என்ன விசயம் எப்படி நடக்குது என்ற சூட்சுமம்  அறிஞ்சவ. உனக்கு தெரியாது பிருந்தா சினிமா உலகம் என்பது வெளில பார்க்கத்தான் அழகா இருக்கும். ஆனா  உள்ள அது ஒரு பாதாள உலகம். நிஜமாவே இங்க யாரு வெல்லனும் யாரு தோற்கனும் என்று டிசைட் பண்றதுக்கு ஒரு கூட்டமே இருக்கு. அவங்களுக்கு பிடிக்காத மாதிரி நாம  நடந்துகிட்டோம்னா ஒன்னு நம்மல இந்த இண்டஸ்ட்ரி விட்டு ஓரமாக்கிடுவாங்க இல்லைன்னா இந்த உலகத்த விட்டே ஓரமாக்கிடுவாங்க. நீ இங்க இருக்குற ஒவ்வொரு நிமிடமும் உனக்கு பிரச்சினைதான். நீ கொஞ்ச நாள் அங்க போய் இரு. நாம் தனியா இங்க எல்லாத்தையும் முடிக்க பார்க்குறேன்" என்றவளை பிருந்தா கண்கள் கலங்க

"நிஜமா இங்க இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா லட்சுமி. நான் வேற மாதிரில்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன். நான் நடிக்க வந்ததே அம்மாவுக்காகத்தான். சின்ன சின்ன விளம்பரத்துல நடிச்ச என்ன வினீத் சார் பார்த்துதான் எனக்கு சினிமால நடிக்க சான்ஸ் கொடுத்தாரு. நானும் ஒரு துணை  நடிகையா நடிச்சி கைல கொஞ்சம் காசு பார்க்கலாம்னுதான் இருந்தேன். ஆனா அதுக்கிடையில்  என்னன்னமோ ஆயிடிச்சி. இந்த சினிமா உலகுல இப்படியெல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் நிஜமா இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன். வீடு பெருக்கப் போயாச்சும் சம்பாதிச்சிருப்பேன்" என்றவளை லட்சுமி

"விடுடி, அதான் இறங்கியாச்சில்ல. இனிமே நாம  பின் வாங்க முடியாது. நான் ஆரம்பத்துல இருந்தே உன்னைக் கொஞ்சம் அனுசரிச்சி போன்னு சொன்னது இதுக்காகத்தன். நான் சொன்ன அனுசரிக்கிறது என்றத நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட. ஹீரோ தொட்டான்னா சிரிச்சிக்கிட்டே விலகிடு. அப்படி பண்ணா  உனக்கு அவன் மேல இஷ்டம் இல்லைன்னு தெரிஞ்சி அவனே மூணு நாலு தடவை டிரை பண்ணிட்டு விட்டுடுவான். ஆனா நம்ம அவன் பண்ணதுக்கு ரியாக்ட் பண்ணோம் அவ்வளவுதான். அதுவும் என்னையும் உன்னையும் மாதிரி இருக்குற எந்த ஒரு பின்புலமும் இல்லாம இருக்குற ஆளுங்க ரொம்ப பாவம். சரி டயத்த வேஸ்ட் பண்ணாம நீ கிளம்பு. இங்க இருக்குற ப்ராப்ளம் எல்லாம் சால்வ் பண்ணிட்டு நான் கூப்பிடுறேன். அங்க உன்ன பிக்கப் பண்ண கைட் வருவாங்க. டேக் கேர்  ,டைமுக்கு சாப்பிடு, டயட் இருக்கேன்னு பட்டினி கிடக்காத ஓக்கே" என்றவளை புன்னகையுடன் பிருந்தா

"சரிங்க பாட்டி, நீங்க சொன்ன எல்லாத்தையும் நான் செய்றேன். ஆமா உன் புருசன் எங்கடி" என்று கேட்க லட்சுமியின் முகம் மாற்றமடைந்தது.

"இப்போ எங்க குடிச்சிட்டு விழுந்துகிடக்கோ இல்லை எவ வீட்டுல கூத்தடிக்குதோ. அவன விடு, நீ நிம்மதியா போயிட்டு வா" என்று கூற பிருந்தா

"சரி லட்சுமி, நீயும் ரொம்ப கவனமா இருந்துக்கோ. நீ வேற தனியா இருக்க. இதுல வெளில இருந்து ஒரு பக்கம் ப்ராப்ளம்னா உன்கூட இருக்குற புருசன் அதவிட பெரிய ப்ராப்ளம். சரி லட்சுமி நான் போயிட்டு வரேன்" என்றவளின் கைகளில் லட்சுமி இரண்டு புத்தகங்களைக் கொடுத்தவள்

"டைம் கிடைக்கிறப்போ இந்த இரண்டு புத்தகத்தையும் வாசி" என்றவளிடம் தன் கையில் தினிக்கப்பட்ட புத்தகதின் பெயர்களை பார்த்தவள் 'சினிமா, நிழலும் நிஜமும்', '30 நாட்களில் ஆங்கிலம் பேசுவது எப்படி' என்றும் இருக்க இரண்டாவது புத்தகத்தை காட்டி

"இது இப்போ முக்கியமா?" என்று பொய்க்கோபத்துடன் கேட்க

"இல்லைடி உன்னோட எதிர்காலத்துக்கு இங்கிலீஷ் ரொம்ப முக்கியம். உனக்கு அது வரும்தான்.ஆனா சரளமா பேச வருதில்லையே. சோ இருக்குற இந்த லீவு நாட்கள்ள சும்மா இருக்காம அத படி" என்றாள்.

பிருந்தாவின் ப்ளைட்டிற்கு நேரமாக அவள் தனது ப்ளைட் இருக்கும் கேட்க்கு செல்ல துவங்கினாள்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் முப்பது நிமிடமே ப்ளைட் பயணம்.
அந்த முப்பது நிமிடமும் லட்சுமியைப் பற்றி மட்டுமே பிருந்தா நினைத்துகொண்டிருந்தாள்.
தன்னை விட மூன்று வயது அதிகமான லட்சுமி சிறு வயதிலேயே திருமணம் முடித்திருந்தாள். லட்சுமியின் கணவன் சினிமாவில் கேமராமேனிற்கு எடுபுடி வேலை பார்ப்பவன். அவனது சம்பளம் முழுவதும் குடிக்கும் ,கூத்துக்குமே சரியா இருக்க கணவனின் தொடர்புகளை வைத்து அவளும் சினிமாவில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்தாள்.

சிறு பாத்திரம் என்றால் குணச்சித்திர வேடம் எல்லாம் கிடையாது. ஹீரோயினுக்கு வரும் தோழிகள் ஐவர் என்றால் இவள் லிஸ்ட்டில் ஐந்தாவதாக இருப்பாள். இதுவரை அவள் முப்பது படங்களில் நடித்திருத்நாலும் அவள் பேசியது நூற்றுக்கும் குறைவான வசனங்களே.

ஆரம்பத்தில் நல்ல தோழியாகப் பழகிய லட்சுமியை பிருந்தா தான் ஒரு நடிகையான பின் தன்னை வைத்து பணம் சம்பாதிக்க முயலுகின்றாள் என்றுதான் நினைத்தாள். அவள் அப்படி நம்ப ஒரு வலுவான காரணமும் இருந்தது.
வீட்டில் சரியில்லாத கணவனின் குடிக்கு அவன் உழைக்கும் பணம் போதவில்லை. சினிமாவில் இருக்கும் ஒரு சிலருக்கு தன் மனைவியை தாரை வார்த்துக்கொடுத்த போது ஆரம்பத்தில் முரண்டு பிடித்த லட்சுமி போகப்போக இதுதான் நம் வாழ்க்கை என ஏற்றுக்கொள்ள தொடங்கினாள்.

எங்கே அவளது வாழ்க்கை வீணானதைப் போல தன் வாழ்க்கையையும் பாழாக்கிவிடுவாளோ என்ற பயம் பிருந்தாவுக்கு அவ்வப்போது வரும். ஆரம்பத்தில் பிருந்தா தன் தாயை காப்பாற்ற எடுத்த முடிவானது அவளது கையறு நிலை என பிருந்தா தன் மனதில் நினைத்திருந்தாள்.

ஆனால் பிருந்தாவுக்கு ஒரு விசயம் அப்போது புரியவில்லை , ஒரு நல்ல விசயத்தை செய்ய நாம் ஒரு கெட்ட விசயத்தை கையில் எடுக்கும் போது அந்த நல்ல விடயங்களும் அழிந்து போகும் என்று.

------------
என்னப்பா கொமண்ட்ஸ், வோட் வருதில்ல.. இனி 100 வோட் வராம அடுத்த அப்டேட் போட  மாட்டேன் ( அப்படின்னா நீ காலத்துக்கும் அப்டேட் போட மாட்டே என்று உங்கள் மைண்ட் வாயா சொல்றது கேட்குது)..
Just for fun... as usual,
இந்த கதை கூட எனது மனத்திருப்திக்காகவே அன்றி பிரபல்யம் தேட அல்ல.. நான் சிறிய குறிப்பு எழுத காரணம் புது எழுத்தாளர்கள் யாரும் இருந்தால் அவர்களின் கதைகளை இன்பாக்ஸ் செய்யுங்கள். அவர்களை பிரபல்ய படுத்தி விடலாம்.. வேறு நல்ல கதைகள் இருந்தாலும் லிங்க் தரவும்.. ஏதும் சோகமான முடிவு உள்ள கதைகள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro