5
விருது வழங்கும் விழாவுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்,
படப்பிடிப்பு தளம் மிகவும் பிசியாக இருந்தது. சூப்பர் ராக்கிங்க் ஸ்டார் விக்னேஷின் படப்பிடிப்பு அதிரடியாக நடந்து கொண்டிருந்தது. வழமையாக விக்னேஷின் படத்துக்கு ஹீரோயினை அவனே தெரிவு செய்வது வழமை. ஏனென்றால் அவனுடைய படத்தில் ஹீரோயினுக்கு நடிக்கச் சந்தர்ப்பமே இருக்காது. கிளாமருக்கு மட்டுமே அங்கு இடமிருக்கும். மற்ற அனைத்து இடங்களையும் விக்னேஷே நிரப்பி படத்தை அவனது மாஸானா ரசிகர்களால் வெற்றி பெற செய்து விடுவான். இந்த படத்துக்கு கமிட் ஆன பின்னாடியே பிருந்தாவுக்கு இது புரிந்தது. இருந்தாலும் படத்திற்கு சைன் பண்ணியதால் அவளால் இந்த படத்தில் இருந்து விலக முடியவில்லை. அப்படி விலகினால் அவளுக்கு இனி படங்களில் நடிக்க வாய்ப்பே கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை. சும்மா இருக்கும் பத்திரிகைகளில் இல்லாததையே எழுதி ஒருவரின் வளர்ச்சியை இல்லாமல் செய்து விடுவார்கள். அதுவும் விக்னேஷ் போன்ற ஒரு மாஸ் ஹீரோவின் படத்தில் இருந்து விலகினால் அவளின் சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் சொந்த வாழ்க்கை கூட பாதிக்க வாய்ப்பிருக்கின்றது.
அன்றைய தினம் ஒரு பாடல் லாங்க் சாட்டில் எடுத்துக் கொண்டிருந்தனர். திடீரென்று பிருந்தா விக்னேஷை அறைந்து விட சூட்டிங்க் ஸ்பாட்டே அதிர்ந்து விட்டது. என்ன நடந்தது என்று தூரத்தில் இருந்த படக் குழுவினருக்கு தெரியவில்லை. உடனே அங்கிருந்த வந்த பிருந்தாவை நோக்கி லட்சுமி
"என்னாச்சி பிருந்தா"என்று கேட்க
"ப்ளடி ராஸ்கல், இந்த படத்துல அவன் கூட நடிக்கத்தான் நான் சம்பளம் வாங்குறேன். படுக்குறதுக்கு இல்லை " என்று அவளிடம் கூறிவிட்டு அவளின் காருக்கு சென்றுவிட்டால். லட்சுமிக்கு புரிந்தது என்ன நடந்திருக்கும் என்பது. விக்னேஷ் ஏற்கனவே ஒரு சபலப்பேர்வழி. துணை நடிகைகளையே விட்டு வைக்க மாட்டான். பிருந்தாவிடம் வாலாட்டாமலா இருந்திருப்பான் என நினைத்தவள் பிருந்தா இருக்கும் காருக்குள் சென்று
"என்ன காரியம் பண்ண பிருந்தா. இப்படி நீ அவன பப்ப்ளிக்ல அடிச்சிட்டு வந்துட்ட. உன்னோட கரியர பத்தி யோசிச்சி பார்த்தியா" என்று கூற கண்கள் சிவப்பேறி இருந்த பிருந்தா பசிகொண்ட ரத்தக் காட்டேறி போல கோவத்துடன் காணப்பட்டாள்.
"ஓ அப்போ அவன் எது செஞ்சாலும் பொறுத்துக்கிட்டு போகனும்னு சொல்றியா" என்றவளை
"இல்லடி உன் சினிமா கரியர், சினிமால இதெல்லாம் சகஜம்தானேடி. சூட்டிங்க் முடியற வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிருக்கலாமேடி " என்றவளை அவள்
"உன் வாய கொஞ்சம் மூடுறியா. நான் இங்க நடிக்க வந்தேனா இல்ல விபச்சாரம் செய்ய வந்தேனா. எங்கம்மாக்காக ரெண்டு நாள் நான் பண்ண தப்பு என்ன தினம் தினம் கொன்னுகிட்டுருக்கு. இதுல இவன் வேற தினமும் என்ன கொல்றான். என்னால இவன் கூட இனிமே நடிக்க முடியாதுனு நான் சொல்லபோறேன்" என்றவளை லட்சுமி என்ன செய்வது புரியாமல் முழித்துக்கொண்டிருக்க காருக்கு வெளியில் படக்குழுவினர் என்ன நடந்தது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தனர்.
வெளியில் வந்த லட்சுமி அவர்களிடம்
"சார் நாளைக்கு சூட்டிங்க வெச்சிக்கலாமா?" என்று கேட்க எல்லோரும் திரு திரு என முழித்துக்கொண்டிருக்க அவ்விடத்திற்கு வந்த விக்னேஷ்
"டைரக்டர் சார் இன்னைக்கு இதோட பேக்கப் பண்ணிக்கலாம். இனிமே படத்துல மேடம் மேல கை படாம சீன் எடுங்க. அப்போதான் மேடம் கூட நடிக்கலாம் போல இருக்கு. உங்க படம் என்னமோ பண்ணிக்கோங்க " என்று கூறியவன் அவளிடம் அடிவாங்கியதை பெரிய ஒரு விடயமே இல்லாதது போல பேசி விட்டு செல்ல படக்குழுவுக்கு புரிந்தது என்ன நடந்திருக்கும் என்று.அந்த கூட்டத்தில் இருந்த ஏதோ ஒரு கருப்பு ஆடு தனக்கு தெரிந்த ஒரு பத்திரிகைக்கு இன்று நடந்ததை மெசேஜ் செய்தவன் அத்துடன் சேர்த்து பிருந்தா விக்னேஷை அடிக்கும் வீடியோவை ஸ்னாப்சொட் எடுத்து அந்த நிருபருக்கு அனுப்பி வைத்தான்.
அடுத்த நாள் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளிலும் விக்னேஷை பிருந்தா அடித்த செய்தியே கொஞ்சம் மங்களான புகைப்படத்துடன் சென்சேசனல் செய்தியாகி இருந்தது. இப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று முன்கூட்டியே கணித்த லட்சுமி உடனே விக்னேஷிற்கு கால் செய்து
"என்ன சார், நம்ம யூனிட்ல இருக்குற யாரோ இப்படி செய்திய பரவ விட்டுட்டாங்க.பிருந்தா வளர்ந்து வரும் ஒரு நடிகை .இப்போ போய் இப்படி ஒரு செய்தி வந்தா அவ சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாகிடும்.ஏதாச்சும் செஞ்சி அந்த நியூஸ பொய்யான செய்தின்னு ஒரு பிரஸ் மீட்ல சொல்லிடுங்க சார்" என்று கூற அவனோ நக்கலாக
"அதையும் நீங்களேதான் பேசுவீங்களா லட்சுமி, உங்க மேடம் பேச மாட்டாங்களா?" என்று கேட்க அவளோ உடனே போனை பிருந்தாவிடம் கொடுக்க அவள் ஜாடையில் யார் என்று கேட்க லட்சுமி ஜாடையாலேயே விக்னேஷ் என்று கூறி அவள் கையில் போனை கொடுக்க பிருந்தா அதை ஸ்பீக்கரில் போட்டவள்
"சொல்லுங்க விக்னேஷ் "என்று கூற லட்சுமி தலையில் அடித்துகொண்டாள்.மறுமுனையில் அவனோ
"நான் என்ன சொல்ல, உங்க பிஏ தான் கால் பண்ணி ஏதோ ப்ரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்ய சொன்னாங்க" என்று கூற பிருந்தா அமைதியாக இருக்க அவனோ
"இங்க பாரு பிருந்தா, நீ இப்போது தான் இண்ட்ஸ்ட்றிக்குள்ள வந்திருக்க, ஆரம்பத்துலயே உனக்கு ப்ளாக் மார்க் வந்திடிச்சின்னா உன்னோட கரியர் இல்லாமலே போயிடும். நான் உனக்காக வேணும்னா பிரஸ்மீட் வெச்சி அது படத்தோட ஒரு சீன்னு சொல்லி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வெச்சிடலாம். ஆனா எனக்கு என்ன பண்ணுவ" என்று கேட்க அவளுக்கு அடுத்து அவன் என்ன கேட்பான் என்று புரிந்தது. பிருந்தாவின் முகத்தில் தோன்றிய கோபத்தை கண்ட லட்சுமி உடனே பயந்து அவள் கையில் இருந்த போனை பிடுங்கி
"விக்னேஷ் பிருந்தா அப்புறமா பேசுவா" என்று காலை கட் செய்தாள்.
இங்கு பிருந்தாவோ தன் கைகளால் முகத்தில் அடித்துக்கொண்டு
"கடைசில என்னையும் ஒரு விபச்சாரியா மாத்திட்டாங்கள்ள. இப்போ என்ன மூணாவதா நான் இவன் கூடவும் படுக்கனுமா? சொல்லு லட்சுமி, சொல்லு? படுக்கனுமா" என்று ஹிஸ்டீரியா வந்தவளை போல கத்த லட்சுமி என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தாள்.
"ஏன் லட்சுமி, பொண்ணுங்க யாரும் நேர்மையா முன்னேறவே முடியாதாடி. ஏண்டி இந்த உலகம் இப்படி பார்க்குது. வேலை செய்ற இடத்துக்கு போனா என்னதான் அவகிட்ட ஆம்பிளைங்க நல்ல விதமா பேசினாலும் அவ பின்னாடி அவ ஏதோ தப்பு பண்ண வந்த மாதிரி பார்க்குறது. ஏண்டி இந்த ஆம்பளைங்க எல்லாம் இப்படியே இருக்காங்க" என்றவளை லட்சுமி
"எல்லா ஆம்பிளைங்களும் அப்படி இல்லைடி .ஒரு சிலர் பண்ற தப்பால மொத்த ஆம்பளைங்களையும் தப்பானவங்கன்னு சொல்ல முடியாதுடி" என்று கூற அவளை பார்த்து நக்கலாக சிரித்த பிருந்தா
"எவண்டி நல்லவன், இங்க எவனுமே நல்லவன் இல்லை. ஒன்னு தப்பு பண்ணவன் இல்லைன்னா தப்பு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காதவன். ஆம்பளைங்கள்ள எவனுமே நல்லவன் இல்லைடி" என்று கூற அவளை அர்த்தமாக பார்த்த லட்சுமி
"உங்கப்பாவையும் சேர்த்தா சொல்ற"என்று கேட்க கண்கள் கலங்கியவள் லட்சுமியை அணைத்துக் கொண்டாள். தன் தந்தையை பற்றி லட்சுமி கூறியதும் பல நாட்களாக மறந்திருந்த தன் பெற்றோரின் ஞாபகம் வர பிருந்தாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இங்கு விக்னேஷ் கையில் மதுவுடன்
"அவ என்ன பெரிய இவளா. சும்மா டச் பண்ணதுக்கே என்னை அடிச்சிட்டு போறா. என்கூட நடிக்க எவ்வளவு பெரிய ஹீரோயின்லாம் ரெடியா இருக்கும் போது நான் ஏன் இவள தேர்ந்தெடுத்தேன். இந்த ஹிந்தி காரிங்க எல்லாம் போரடிச்சி போச்சே பார்க்குறது தமிழ் பொண்ணு மாதிரி இருக்காலே, இவளை கொஞ்ச நாளைக்கு வெச்சிக்கலாம்னு பார்த்தா ரொம்பதான் துள்ளுறா. என் படத்துல ஹீரோயினுக்கு அவுத்து போட்டு ஆடுறத விட வேற என்ன வேலை இருக்கு. இவளுங்க நடிப்பு என் படத்துக்கு எதுக்கு, என் படம் எல்லாமே என்னோட மாஸ்காக நூறு நாள் ஓடும். எல்லாம் அந்த வினீத் படத்துல நடிச்சதுக்கு அவளுக்கு கிடைக்கிற விருதுகள்னால வருகின்ற திமிர். என்ன ஆரம்பத்துல நாந்தான் அந்த படத்துக்கு ஹீரோவா இருந்தேன். எனக்காக கொஞ்சம் கதைல மாற்றாம் ஏற்படுத்த சொன்னேன். அவன் ஏதோ புடுங்கி மாதிரி அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டான். நான் அநத் படத்துல இருந்தப்போ இவதான் ஹீரோயின். அதுக்கிடைல அவன் என்ன பண்ணானோ உடனே இவள துணை நடிகை ஆக்கிட்டேன். எனக்கு அப்பவே இவ மேல கண்ணு. இப்போ என் படத்துல வந்து மாட்டினா நான் சும்மா விடுவேனா" என்றவன் உடனே தன் பிஏ வை பார்த்து
"நாளைக்கு பிரஸ் மீட்கு அரேஞ் பண்ணிடுங்க, அவள எப்படி கார்னர் பண்ணனும்னு எனக்கு தெரியும்" என்று சினிமாவில் ஹீரோவாக இருக்கும் வில்லதனமான விக்னேஷ் சிரித்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro