32
மறுநாள் ரயிலில் எல்லோரும் வீடு வர ஏற்பாடாகியிருந்தது. பிருந்தாவுக்கோ அந்த ஊரை விட்டு பிரிய மனமே இல்லை. மீண்டும் கொழும்பு (இலங்கையின் தலை நகர்) சென்றாள் இயற்கையின்அரவணைப்பு இல்லாமல் செயற்கை செவிலித்தாயின் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதை வலிக்கச் செய்தது. எது எப்படி இருந்த போதிலும் நிஜத்தை நோக்கி நகருவதே நம் வாழ்க்கை என்று அவள் மனதுக்கு தோன்றியது. நிஜ வாழ்க்கை என்பதும் உண்மையை மட்டும் சார்ந்து வாழ்வது என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்பதை அவள் மனது ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
கொழும்பு வந்து சேர்ந்ததும் பிருந்தா அவளின் வீட்டிற்கு செல்ல அவளிடம் வந்த கவி
"அக்கா நைட்டுக்கு நான் உங்க வீட்டுக்கு வரேன். இரண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கலாம்" என்று கூறியவள் பிருந்தாவின் பதிலைக்கூட எதிர்பாராமல் உடனே அவளின் வீட்டிற்கு சென்றாள். இங்கு பிருந்தாவின் நிலமையோ மிகவும் மோசமாகி இருந்தது.விக்ரமின் கேள்விகளுக்கு என்ன பதில் கூறலாம் என்று யோசிக்க இருந்தவளுக்கு கவியின் செயல்பாடுகள் அவளை யோசிக்க விடாமல் தடுத்தது.
இரவு ஆனதும் கவி பிருந்தாவுக்கு இரவு உணவை கொண்டு வந்து மேசையில் வைத்தவள் குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்த பிருந்தாவிடம்
"அக்கா சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்" என்று குரல் கொடுக்க அவளும் சரி என்று கூறினால். காலை முழுவதும் பிரயாணம் செய்து வந்ததன் காரணமாக அவளுக்கு பசி அதிகமாக இருந்தது. குளித்து வந்ததும் பசியின் கோடூரத்தில் தலையை கூட ஒழுங்காக துவட்டாமல் துவாலையை தலையில் கட்டி சாப்பிட ஆரம்பித்தாள்.
இவள் சாப்பிடும் அழகை பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்த கவி மனதுக்குள்
'எப்படி சாப்பிடுது பாரு.முன்னாடி ஒரு பொண்ணிருக்கே அவ சாப்பிட்டாளா இல்லையான்னு ஒரு வார்த்தை கேட்குதா' என்று குமுறியவள் தண்ணீரை எடுத்துக்குடித்தாள்.
சில நிமிடங்களில் பசி அடங்கியதும் ருசிக்காக பிருந்தா சாப்பிட ஆரம்பித்த போதுதான் கவி கொண்டு வந்திருந்த உணவு இருவருக்கு போதுமானது என்று அவளுக்கு தோன்றியது.உடனே அவள்
"கவி நீ சாப்பிட்டியா?" என்று கேட்க அவளை பார்த்து கவி முறைத்தாள்.
"ஹ்ம்ம் இப்போதான் என்கிட்ட கேட்க தோனிச்சா. நல்லவேலை கேட்டீங்க இல்லைன்னா இரண்டு பேரோட சாப்பாட்டையும் நீங்களே சாப்பிட்டு முடிச்சிடுவீங்கன்னு நினைச்சேன்" என்றவள் பசியின் கொடூரத்தில் வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.சாப்பிட்டு முடிக்கும் போது இறுதியாக ஒரே ஒரு சிக்கன் லெக் பீஸ் மட்டும் மீதம் இருந்தது.ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க இருவரும் ஒரே நேரத்தில் அந்த சிக்கன் துண்டை எடுப்பதற்கு முயற்சிக்க அவர்களுக்குள் அந்த சிக்கன் துண்டுக்காக சண்டையே வந்தது.
"கவி எனக்கு கொடுத்திடு, உங்க வீட்டுல இருந்து வந்த சாப்பாடு. சோ இங்க நான் தான் விருந்தாளி. இப்ப நீ எனக்கு இதை கொடுக்கல உங்கம்மாகிட்ட சொல்லிடுவேன்"என்று கூற கவி அவளைப்பார்ர்து நக்கலாக சிரித்தாள். காரணம் கோழித்துண்டின் பெரும் பாகம் அவள் கைப்பிடுக்குள் இருந்தது.
"என்னதான் நீங்க விருந்தாளியா இருந்தாலும் உங்களுக்காக என் வாழ்க்கையையே நான் தொலைக்க தயாரா இருக்கேன். எனக்கா இந்த ஒரு கோழித்துண்டை விட்டுக்கொடுக்க மாட்டீங்களா?" என்று கேட்க தனது பிடியை பிருந்தா உடனே விட்டாள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கவி உடனே தன் கையில் சிக்கியிருந்தா கோழியை இரண்டாக பிரித்து ஒரு துண்டை பிருந்தாவுக்கு கொடுக்க அவள் புன்னகையுடன்
"நீயே சாப்பிடு கவி. எனக்கு போதும்" என்றவள் தன் கைகளை கழுவ சென்றாள்.பிருந்தா தன் மனதுக்குள் இன்று கவியின் மனதில் ஓடும் எண்ணத்தை முற்று முவதுமாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியானவள் அதற்கு தேவையான ஒத்திகைகளையும் பார்த்துக்கொண்டாள்.
இருவரும் கடந்த மூன்று நாட்களாக நடந்தது எது பற்றியும் பேசாமால் சாதாரனமாக பேசிக்கொண்டிருந்தனர். பின்னிரவாக தொடங்கியதும் பிருந்தா
"கவி ரொம்ப லேட் ஆகிடிச்சி. நீ வீட்டுக்கு போ" என்று கூற அவள்
"இல்லைக்கா இன்னைக்கு உங்க கூடதான் தூங்க போறேன். அம்மாகிட்ட சொல்லிட்டேன்"என்று கூற பிருந்தாவின் முகம் மாறுவதை கண்டவள்
"என்னக்கா உங்க கூட தூங்குறதுல உங்களுக்கு இஷ்டம் இல்லையா" என்று கேட்டாள்.பிருந்தாவும் இந்த பேச்சை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என நினைத்தவள் தன் மனதுக்குள் எப்படி பேச வேண்டும் என்பதை தன் இரு கண்களையும் ஒரு நிமிடம் மூடி தனக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டாள்.
"கவி இப்போ நான் பேசப்போற விடயம் முழுவதும் நீ கேட்ப அப்படின்னு சொன்னா மட்டும் நான் பேசுவேன்.இல்லை பாதியில நீ கோபப்பட்டு எந்திரிச்சி போயிடுவேன்னா நான் பேசல"என்று கூற கவியும்
"சரி நீங்க முழுவதும் பேசி முடிக்கிற வரைக்கும் நான் எதுவுமே பேசல்ல சரியா"என்று அவளைப்பார்த்து கண்ணடித்தாள்.அவள் கண்ணடித்ததற்காக அவளை முறைத்தவள்
"கவி ,நீ உன் மனசுல என்ன நினைச்சி அன்னைக்கு அப்படி பேசினேன்னு எனக்கு தெரியல.ஒரு பையனும் பொண்ணும் காதலிச்சாதான் அதுக்கு பேரு காதல். ஒரு பொண்ணும் இன்னொரு பொண்ணும் காதலிச்சா அதுக்கு பேரு காதல் இல்ல. அது இயற்கைக்கு முரணானது. நீ படிச்ச பொண்ணு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. என் வாழ்க்கையில நான் பண்ண ஒரே ஒரு கெட்ட விசயத்தால என் கூட இருக்குற எல்லோருக்குமே கெட்ட பெயர் வர்ர மாதிரி பண்ணிட்டேன். நீயும் அதே தப்ப பண்ணாத கவி.உங்கம்மா,அண்ணன்கிட்ட போய் உன்னால நான் பிருந்தாகூடதான் கடைசி வரைக்கும் இருக்க போறேன்னு சொல்லி பாரு. அவங்க உன்ன திட்டுறதுக்கு முன்னாடி என்னோட கடந்த கால வாழ்க்கையை குத்திக்காட்டி என்னைத்தான் வசை பாடுவாங்க.ஆனா இதுவே உங்கண்ணன் என்ன காதலிக்கிறதா சொன்னா தலையில் வெச்சு கொண்டாடுவாங்க. உனக்கு இதுலயே நீ பண்றது எவ்வளவு பெரிய அபத்தம்னு புரியும். என்னால உன் வாழ்க்கை வீணா போறத பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது. அதுக்காக வேண்டும் என்றால் நான் விக்ரம கல்யாணம் பண்ணிக்கிறேன். என்னால இன்னொரு பொண்ணோட வாழ்க்கை வீணாக வேண்டாம்"என்று கூற உடனே கவி தாவி வந்து பிருந்தாவை அணைத்துகொண்டவள் விசும்ப தொடங்கினாள்.
கவி எதற்காக தன்னை அணைத்தாள் ,இப்பொழுது ஏன் அழுகின்றாள் என்பது கூட பிருந்தாவுக்கு புரியவில்லை.அவளை சிறிது ஆசுவாசப்படுத்திய பிருந்தா மெல்ல தன்னிடம் இருந்து அவளின் முகத்தை பார்க்க அவள் கண்களில் ஒரு குறும்பு புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.
"உங்க வாயால எங்கண்ணன கட்டிக்கிறேன்னு சொல்ல வைக்கிறதுக்கு நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான்பா தெரியும். அன்னைக்கு தோப்புக்கு போனப்போ ஏதோ நடந்திருக்குன்னு மட்டும் எனக்கு புரிஞ்சது. அதனாலதான் நீங்களும் அண்ணனும் முகம் பார்த்து பேசிக்கலன்னும் தெரியும். ஆனா அவன் முகத்துல தெரிந்த ஒரு வகை சந்தோசத்த பார்த்து ஏதோ நல்ல விசயம்னு மட்டும் தெரிஞ்சது.ஆனா நீங்க அவனுக்கு கொடுத்த ஆப்சன் உண்மையா காதலிக்கிற பசங்க மனச எவ்வளவு ஹேர்ட் பண்ணும் தெரியுமா? உண்மையா காதலிக்கிறவன் கிட்ட போய் உனக்கு என் உடம்பு வேணும்னா எடுத்துக்கோன்னு சொன்னா அவன் மனசுக்குள்ளேயே செத்துடுவான்.அந்த வலியை கண்டிப்பா எங்கண்ணன் உணர்ந்திருப்பான். அந்த கோவத்துல தான் நான் உங்கள அன்னைக்கு அடிச்சிட்டேன்.
ஆனா அதுக்கு அப்புறமா நீங்க வந்து என்கிட்ட பேசினப்போதான் புரிஞ்சது உங்க மனசுலயும் நிறைய கஷ்டங்கள தாங்கிக்கிட்டுதான் அண்ணன் கிட்ட அப்படி பேசியிருப்பீங்கன்னு.அண்ணன் கிட்ட நீங்க பேசினத யோசிச்சி யோசிச்சி உங்க மனசு இன்னும் வேதனைப்படும்னு எனக்கு தெரியும்.அதனாலதான் அத பத்தி உங்கள யோசிக்க விடாம நான் அப்படி பேசினேன். அப்படி பேசும் போதே எனக்கு உவ்வேக் என்று வாந்தி வர்ர மாதிரி நிறைய வாட்டி இருந்திச்சி. இருந்தாலும் எங்கண்ணன் அப்புறம் எனக்கு ரொம்ப பிடிச்ச பிருந்தா அக்காக்காகத்தானேன்னு மனச கொஞ்சம் கட்டுப்படுத்திக்கிட்டேன்.ஓஹ் சாரி சாரி அக்கா இல்லை அண்ணி.ஆனா கடைசில நான் போட்ட பளான் எல்லாமே பக்காவா வேலை செஞ்சது"என்று பிருந்தாவை பார்த்து கண்ணடிக்க கோபம் கொண்டவள் கவியை பளார் என்று அறைந்து தனதறைக்குள் சென்று கதவை தாழிட்டுகொண்டாள்.
----------------
ஹாய் வட்டீஸ்,
"ஆகாயம் தீண்டாத மேகம்"இன்னும் இரண்டு அப்டேட்களுடன் முடிவடைந்துவிடும். அதனை தொடர்ந்து இரண்டு கதைகள் யோசித்து வைத்துள்ளேன் .
முதல் டீசர் முழுவதும் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை முன்னோக்கி இருக்கும் கதை. இரண்டாவது டீசர் காதல் கலந்த ஒரு திரில்லர் கதை.
எதுவேண்டும் என்பதை உங்கள் கைகளிலேயே விட்டுவிடுகின்றேன்.
கதை ஒன்று -டீசர்
"டேய் சத்தியமா நான் அவள கொல்லனும்னு நினைக்கலடா. அவதான் என்னோட முதல் காதலால நான் பட்ட கஷ்டங்கள்ள இருந்து என்ன வெளில கொண்டு வந்தா. ஆனா அவள இன்னொருத்தன் கூட பார்த்ததும் என்ன பண்றதுன்னு தெரியல. நான் வீட்டுக்குள்ள வந்ததும் அவன் ஓடிப்போயிட்டான்.யாருன்னு கூட என்னால கண்டு பிடிக்க முடியல. ஆனா அவன் முகம் அப்படியே ஞாபகம் இருக்கு.
அவன் போனதும் இவ வந்து என்ன சமாதானம் பண்ண தொட்டப்போ கிட்ட வராதன்னு தள்ளிதான் விட்டேன். ஆனா பல நாளா கவனிக்காம சுவத்துல இருந்த ஆணியில அவ தலை மோதி இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை.நான் போலீஸ்ல சரண்டர் ஆகிடுறேன்" என்ற தன் நண்பனுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் அவனை அணைத்துக்கொண்டான்.
..........
"ஜப்பானுக்கு போன புருசனுக்கு உன் பர்த்டே கூட ஞாபகம் இல்ல போல" என்று நக்கலாக கேட்ட அவனை
" இப்போ எதுக்கு அவர பத்தி பேசுற. இனிமே அவர பத்தி எங்கிட்ட பேசுறதா இருந்தா இந்த பக்கமே வந்துடாத" என்று அவள் கூற தன் காதலியை சமாதானப்படுத்தும் பொருட்டு
" ஹேய் சும்மாதான்பா கேட்டேன். உன் பர்த்டேக்காக நான் ஹாங்காங்க்ல இருந்து வந்துருக்கேன் தெரியுமா. ப்ளீஸ் நான் சொன்னத மன்னிச்சிடுங்க எஜமானியம்மா" என்றான் அவளின் காதலன்.
--------------------------
கதை இரண்டு டீசர்
தன் சகாக்களுக்கு ரிஷி தாங்கள்
செய்யப்போகுக் காரியம் பற்றி விளக்கிக்கொண்டிருந்தான்.
"அந்த நெக்லஸ் ரொம்ப பெறுமதி வாய்ந்தது. ப்ரீஃப் கேஸ்ல இருந்து அத எடுக்க்கிறதுக்கு பாஸ்வேர்ட் அண்ட் விரல் ரேகை வேண்டும். பாஸ்வேர்ட்ட நம்ம தெரிஞ்சிக்கிட்டாலும் நம்மால விரல் ரேகைய எடுக்க முடியாது. அது ரொம்ப ரிஸ்க். ஆனா ப்ரீஃப் கேஸ்ல இருந்து நெக்லஸ எடுத்து கழுத்துல போடுறதுக்கு ஒரு டைமர் செட் பண்ணுவாங்க.
அந்த டைமர் முடிஞ்சதும் ஒன்னு அந்த நெக்லஸ் யாரோடயாச்சும் கழுத்துல இருக்கனும்.இல்லன்னா நெக்லஸ்ல இருக்குற டிராக்கர் ஆட்டோமெட்டிக்காக ஆன் ஆகி ஸ்பெசல் செக்கியூரிட்டி டீம்கு அலேர்ட் போயிடும்"
என்று கூற எல்லோரும் அவனை முறைத்துக்கொண்டிருக்க அதில் ஒருவன்
"அந்த நெக்லஸ்ஸோட பெறுமதி என்ன" என்று கேட்க ரிஷி
"15 மில்லியன்" என்று கூற எல்லோரும் வாயடைத்து போய் நிற்க அவன் மேலும்
" டாலர்" என்று கூற அவ்விடத்தில் குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவு அமைதி நிலவியது.
--------
" ஹேய் டார்லிங்க், உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் வெச்சிருக்கேன்" என்று கூற மறுமுனையில் அவள்
" டேய் நாளைக்கு எங்க்கேட்ஜ்மண்ட வெச்சிக்கிட்டு இன்னைக்கு அமெரிக்கால இருக்கியே இது நியாயமாடா. ஏழு வருச லவ்,பைனலா அடுத்த ஸ்டேஜுக்கு போகுது என்ற ஆர்வம் உனக்கு கொஞ்சம் கூட இல்லைடா. என்ன காதலிக்கிறதுக்கு பதிலா நீ அந்த செக்கியூரிட்டி கம்பனியையே காதலிச்சிருக்கலாம்" என்று தன் மீது கோபப்படும் தன் ஆசை காதலியை எப்படி சமாளிப்பது என்று யோசித்தான்.
----------
அடுத்த கதை வெளிவர கண்டிப்பாக ஒரு சில மாதங்கள் ஆகும்.குறைந்தது 75% விகிதமான கதையை எழுதிய பின்னரே வாட்பெட்டில் இரண்டு நாட்களுக்கு ஒரு அப்டேட் என பதிவிடும் எண்ணம் உள்ளது. எந்த கதை எழுதினால் நன்றாக இருக்கும் என்று வாசகர்களாகிய உங்களிடமே விட்டு விடுகின்றேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro