Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

31

இன்று காலையில் இருந்து நடந்த எந்த ஒரு விடயத்தையும் பிருந்தாவால் ஜீரனித்துக்கொள்ள முடியவில்லை. கவி உண்மையாகவே தன்னை பிரிய விருப்பம் இல்லாமல் பேசுகின்றாளா? அல்லது தன்னை வேண்டுமென்று குழப்புகின்றாளா? என்பதை கூட அவளால் திட்டவட்டமாக அறிந்துகொள்ள முடியவில்லை.

பிருந்தாவின் வாழ்வில் அவள் சந்தித்த மனிதர்களை பற்றி மிக எளிதாக புரிந்துகொள்வாள். ஆனால் முதன் முறையாக இன்று கவி பேசிய விதம் அவளை எந்த ஒரு முடிவும் எடுக்க விடாமல் தடுத்தது.

அந்தி சாயும் வேலையில் விக்ரம் வீட்டிற்கு வர எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து தேனீர் மற்றும் தின்பண்டங்கள் உண்ண தயாராகினர்.அவர்களின் வீட்டில் தளபாடங்கள் எதுவும் இல்லாமல் இருக்க எல்லோரும் தரையிலேயே அமர்ந்து விக்ரம் வாங்கி வந்திருந்த சமோசாவை சாப்பிட விக்ரமின் தாய் சமையல் அறையில் தேனீர் தயார் செய்துகொண்டிருந்தார்.

விக்ரமால் பிருந்தாவின் முகத்தை பார்க்க முடியவில்லை. பிருந்தாவால் விக்ரம் மற்றும் கவியின் முகத்தை கூட பார்க்க முடியாமல் சமோசாவை ஏதோ ஆராய்ச்சி கட்டுரை போல மிக மெதுவாக உண்டு கொண்டிருந்தாள்.விக்ரம் தன் கால்களை ஊன்றி உடலை சுவற்றுக்கு அருகில் இழுத்து கொஞ்சம் சொகுசாக உட்கார எண்ணியவன் தற்செயலாக பிருந்தாவை பார்க்க அவள் அமர்ந்திருந்த விதம் அவனை பித்தம் கொள்ள செய்தது.

இரண்டு கால்களையும் ஒரு பக்கமாக மடித்து தான் இடப்பக்கம் சரிந்து விடாமல் இருக்க இடக்கியை தரையில் ஊன்றியிருந்தாள்.

'என்னடா இவ எப்படி பார்த்தாளும் அழகா இருக்காளே'

என நினைத்தவன் அவள் உட்கார்ந்திருக்கும் அழகை தன் கண்களால் பருகிக்கொண்டான்.

அவளை பார்க்கவே ஒரு கவிதையை படிப்பது போல இருந்தது.இவை எல்லாவற்றையும் கவனித்த கவி "ஹ்ஹ்ம்கும்" என்று தன் குரலை செரும விக்ரம் தன் நிலைக்கு வந்தான். அந்த சத்தத்திற்கு பிருந்தா கவியை பார்க்க அவள் குறும்பாக கண்ணடிக்க பிருந்தாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

இரவு எல்லோரும் தூங்கிய பின் பிருந்தா தூக்கம் வராமல் இருக்க வெளி முற்றத்திற்கு வந்தவள் காற்று வாங்கிக்கொண்டிருந்தாள். நவம்பர் மாத இளம் குளிர்காற்று அவள் முகத்தில் பட்டு அவளின் செம்மையேறிய கன்னங்களை மேலும் சிவப்பேற செய்தது. பத்தாம் நாள் நிலவும் போதியளவு வெளிச்சத்தை பூமிக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்க அந்த மிதமான ஒளியில் பிருந்தா தேவலோக கன்னிகை போல இருந்தாள்.

தன் பின்னால் யாரோ வருவதை உணர்ந்தவள் சட்டென்று திரும்பி பார்க்க அங்கு விக்ரம் இதழ்களில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.அவனின் புன்னகையில் அவனுக்கு தன் மீது எந்த கோபமும் இல்லை என்று புரிந்தவள் அவனை நோக்கி சினேகமாக புன்னகைத்தாள்.

"பிருந்தா நீங்க நேத்து இரவு என்கிட்ட பேசிட்டு போனப்போ எனக்கு ரொம்ப கோபமா வந்திச்சி. அதனாலதான் நான் காலையிலேயே எல்லோரும் எழுந்திருக்க முன்னாடி வெளியில போயிட்டேன். அருவியில போய் குளிச்சிட்டு அங்க இருந்த பசுமைகள பார்த்த போதுதான் எனக்கு ஒரு விசயம் தோனிச்சி.நீங்க சொன்ன பல விசயங்கள் எதார்த்தமானது.உங்க கடந்த கால வாழ்க்கையினால மத்தவங்களுக்கு மனக்கஷ்டம் ஏற்பட்டா அது உங்களுக்கு எவ்வளவு சிரமத்தை தரும் என்று தெரிஞ்சது.

உங்களுக்கே புரிஞ்சிருக்கும், எனக்கு உங்கமேல ஒரு ஆர்வம் ஏற்பட்டுடிச்சின்னு.அதனாலதான் நான் நேற்றிரவும் 'காலையில ஏதோ சொல்ல வந்தியே, அத முழுசா சொல்லிமுடிக்கலாமே' அப்படின்னு கேட்டேன்.ஆனா நீங்க பேசினத நான் ரொம்ப நேரம் ஆழமா யோசிச்சு பார்த்தப்போதான் எனக்கு என்னை பற்றிய ஒரு உண்மை தெரிஞ்சது. எப்போமே நான்சி மட்டும்தான் அப்படின்னு நினைச்சு வாழ்ந்துக்கிட்டு இருந்த என் மனசு இப்போ அதுக்கு மாற்றமா எண்ணத்தொடங்கிவிட்டது என்று.

ஒரு வகையில பார்த்தா நீங்க நேற்று இரவு பேசின விசயங்கள் எல்லாமே உண்மை.ஆனா நம்ம வாழ்க்கையில எப்போமே உண்மைகளோட மட்டும் வாழ முடியாது. சில நேரங்கள் சில பொய்களும் நம்ம வாழ்க்கைக்கு தேவைப்படும். அப்படி சில பொய்களை ஏற்றுக்கொண்டு வாழனும்னு நினைச்சீங்கன்னா 'ஐ லவ் யூ'.

எனக்கும் காதல் மட்டும் போதும்.அதுக்காக உடல் தேவை தேவையில்லன்னு சொல்ல மாட்டேன்.எந்த ஒரு ஆணுக்கும் உடல் தேவை என்பது ரொம்ப முக்கியமானது.அவனோட மிகப்பெரிய ஸ்ட்றஸ் பஸ்டரே அதுதான்.

உங்க கிட்ட வந்து என்னால ஐ லவ் யூ மட்டும் சொல்லிக்கிட்டு காலம் பூரா இருக்க முடியாது. மூனு மாசம் ஆகும் போது முத்தமிடுவேன். இடுப்புல கை போடுவேன். தோலோட சேர்த்து அணைச்சிக்கனும்னும் தோனும். ஏன்னா நீங்க அவ்வளவு அழகு.இவ்வளவு அழக வெச்சிருக்குற உங்கள வெறும் வாய் வார்த்தைகளால மட்டும் காதலிச்சிக்கிட்டு இருக்க என்னால முடியாது.எப்பவாச்சும் ஒரு நாளைக்கு நான் எல்லை மீறி ,நீங்களும் அத அக்சப்ட் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் உங்கள குற்ற உணர்ச்சி தாக்கிடுச்சின்னா என்னால அத ஆயுளுக்கும் மறக்க முடியாது.

காதலோட அடுத்த கட்டம்தான் உடல் சேர்க்கை. அதுவும் ஒரு வகையில காதல்தான். நம்ம துணையை வார்த்தைகளினால் காதலித்து அதில் இருந்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறது. பல காதலர்கள் அந்த இடத்துல தவறு பண்ணிடுவாங்க. தன்னோட மறுபாதியோட தேவை என்ன என்பத மறந்து தான் மட்டும் சுகப்பட்டா போதும்னு நினைப்பாங்க. சிலருக்கு அப்படியான சந்தர்ப்பம் அமையும் போது இவ்வளவு நாள் தான் தன் துணை மீது கொண்ட காதல் கூட தவிடுபொடியாகிடும்.நான் இங்க சொல்ல வருவது என்னன்னா உடல் ரீதியான தேவை எல்லா காதலுக்கும் காதலர்களுக்கு தேவை.அது சமூகம் அங்கீகரிச்சதா இருக்கனுமா இல்லையா என்பது அவரவர் மனநிலைய பொறுத்தது.என்னால வெறும் காதல மட்டும் வெச்சிக்கிட்டு காலம் பூரா வாழ முடியும்னு தோனல பிருந்தா.

ஒரு ஐந்து வருடம், பத்து வரும் ஏன் இருபது வருடம் கூட காதலிச்சிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னாக்கூட என்னால அந்த நாளுக்காக காத்திருக்க முடியும்.ஆனா அதே நேரம் காதலிக்கிறவளோட கைய புடிக்காம ,தோலோடு தோல் இடிக்காம அப்பப்போ முத்தம் கொடுக்காம இருக்குறது எல்லாம் என்ன மாதிரி சராசரி ஆம்பளைக்கு சரி வராது.சோ அதுக்காகவே ஐ டோண்ட் வாண்ட் டு லவ் யூ.

நான் இப்போ ரெண்டுமே சொல்லிட்டேன்.ஐ லவ் யூ அண்ட் ஐ டோண்ட் வாண்ட் டு லவ் யூ. எது வேண்டும் என்று நீங்கதான் முடிவு செய்யனும். அப்புறமா உங்களோட செகண்ட் ஆப்சன் எனக்கு தேவையே இல்ல. காதல் இல்லாம வெறும் உடம்பு மட்டும்தான் வேணும்னா அதுக்கு வேற வழிகள் இருக்கு பிருந்தா" என்று தன்னுடைய பெரிய விளக்கத்தை அவளுக்கு கொடுத்தான். இப்போது பந்து பிருந்தாவின் பக்கம் இருந்தது. அதுவும் விக்ரம் அந்த பந்தை மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் அடித்திருந்தான்.

"நான் செகன்ட் ஆப்சன அந்த அர்த்தத்துல சொல்லல விக்ரம் ப்ளீஸ் தப்பா புரிஞ்சிடாதீங்க, இப்போதான் அதனால வந்த ப்ராப்ளத்த சால்வ் பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்று கூறினாள்.

உடனே தன் புருவத்தை உயர்த்தி "சால்வ் பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னா... அம்மா அல்லது கவி கிட்ட இத பத்தி பேசினீங்களா" என்று சற்று பயத்துடன் கேட்டான்.

"இல்லை கவி நேத்து இரவு நம்ம பேசிக்கிட்டத கேட்டிருக்கா. நான் உங்கள காதலிக்கலன்னாலும் பரவாயில்லை,அதெப்படி எங்கண்ணன் கிட்ட அப்படி கேட்கலாம்னு ஒரே சண்டை என்கூட" என்று கூறினாள்.

ஒரு சில நொடிகள் யோசித்த விக்ரம் "அவளுக்கு நான் என்றால் ரொம்ப பிடிக்கும் அதான் அவ அப்படி பேசியிருப்பா, நீங்க மனசுல எதுவும் வெச்சிக்க வேணாம். நீங்க இப்போவே முடிவு சொல்லனும்னு இல்லை. நாளைக்கு காலையில நம்ம ஊருக்கு போறோம்.போற வழி எல்லாம் யோசிங்க. உண்மையோடவாழனுமா? இல்லை சில பொய்களோட வழலாமான்னு" என்று கூறி தனதறைக்குள் சென்றுவிட்டான்.

விக்ரமின் பேச்சு பிருந்தாவை திக்குமுக்காட செய்தது. எதிராளிக்கு தான் பெரிய ஜீனியஸ் எல்லாம் இல்லை என்பது போல காட்டிவிட்டு , தன்னை எல்லோரும் எப்படி வேண்டுமென்றாலும் ஆட்டுவிக்கலாம் என்பது போன்ற மாயையை எதிராளிக்கு ஏற்படுத்தி சமயம் பார்த்து எதிராளியை கவிழ்ப்பது என்ற நுட்பத்தை பிருந்தா தன் வாழ்வில் முதன் முறையாக எதிர்கொண்டாள்.

விக்ரமை கார்னர் செய்ய அவள் இரண்டு தெரிவுகளை அவனுக்கு கொடுத்திருந்தவள் விக்ரம் ஏதாவது ஒரு தெரிவை மேற்கொள்வான் என நினைத்தாள்.ஆனால் இன்று விக்ரம் அந்த தடையை உடைத்து அவளது நுட்பத்தினூடே இரண்டு தெரிவுகளை அவளுக்கு கொடுத்துவிட்டான்.

----------

in this special day.. உங்க எல்லோருக்கும் ஒரு ஸ்பெசஷல் டிரீட் ஆ ஞாயிறு அன்று போடவேண்டிய அப்டேட்ட இப்பவே போட்டுட்டேன். இன்னும் மூன்று அப்டேட்டோட இந்த கதை முடிந்துவிடும். கண்டிப்பா ஒரு வித்தியாசமான முடிவை நோக்கி இந்த கதை செல்லும். அது எல்லா வாசகர்களுக்கும் பிடிக்குமா இல்லையா என்பது தெரியவில்லை.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro