30
எந்த ஒரு ஆணுக்கும் அழகான ஒரு பெண்ணை பார்க்கும் போது தனக்கு அவள் காதலியாக,மனைவியாக அல்லது குறைந்த பட்சம் ஒரு தோழியாகவாவது இருக்க வேண்டும் என்று தோன்றும்.இதுதான் ஆணின் இயல்பு.கடவுளின் படைப்பில் ஆண் என்பவன் மிகவும் விசித்திரமானவன்.
அவனின் செயல்பாடுகளை மற்றவர்கள் கணிக்க கூடியதாக இருந்தாலும் அவனின் எண்ண ஓட்டத்தை அவனாலேயே கணிக்க முடியாமல் தினறுவான். கதைகள், திரைப்படங்களில் வருவது போல ஒருத்தியை மட்டுமே நினைத்து வாழுகின்ற ஜீவன் ஆண் என்பவன் கிடையாது,அதற்காக பார்க்கின்ற பெண்களை எல்லாம் அடைய எண்ணுபவனும் ஆண் அல்ல.ஆனால் ஒரு பெண் தன் மீது அக்கறை கொண்டு அவன் கஷ்டங்களில் பங்கு கொண்டாள் கண்டிப்பாக அவளை அவன் மேற்கூறிய மூன்று வகையினுள் கொண்டுவர துடிப்பான்.
ஆணுக்கு மனைவி, காதலியைவிட தோழியானவள் ஒரு வித்தியாசமானா ஒரு உறவாக இருக்கும். தெருவில் ஒரு பெண் மாராப்பை சரி செய்யாமல் சென்றாள் அவளை பார்ப்பவன் அதுவே தன் தோழி அப்படி இருந்தால் அவள் மீது சண்டை இடுவான்.சிலருக்கு தோழியே மனைவியாக அமையும் பாக்கியம் கிடைக்கும். அப்படி மட்டும் கிடைத்தால் அதற்காக உலகில் எதை வேண்டுமானாலும் இழந்து அவளை அடைவதில் எந்த நஷ்டமும் இல்லை.
பிருந்தாவின் விளக்கம் கவிக்கு சரி என்று தோன்றினாலும் பதின்ம வயதில் இருக்கும் பெண்ணுக்கே உரித்தான சிறப்பு அவளிடம் கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டது. அதுதான் தான் நினைத்தது மட்டுமே சரி என்று நினைப்பது.பிருந்தா அவ்விடத்தை விட்டு சென்ற பத்து நிமிடத்துக்குள் கவி தன் மனதுக்குள் இரண்டு மணி நேரம் வாதம் புரிய வேண்டிய பட்டிமன்றத்தையே நடத்திவிட்டாள்.
மொபைலில் வீட்டிற்குள் கவரேஜ் இல்லாததினால்தான் பிருந்தா வெளியில் வந்தாள்.ஆனால் இங்கு வேறு ஏதோ நடந்துவிட்டதே என்று மறுபடியும் வெளியில் வந்து தனது மொபைலில் சிக்னல் கிடைக்கின்றதா என்று தேட சில நிமிட போராட்டத்திற்கு பின் அவளின் மொபைலில் சிக்னல் கிடைத்தது.
பிருந்தாவையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்த கவி அவளுக்கு சிக்னல் கிடைக்க கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டிருந்தாள். ஆனால் நம் வேண்டுதல் எல்லாமே கடவுளால் அங்கீகரிப்படுவதில்லையே.
பிருந்தாவை விட்டு அவள் சிறிது தூரமாக இருந்தாலும் தனது காதை கூர்மையாக்கி அவள் என்ன பேசுகின்றால் என்பதை கேட்க அவளுக்கு தெரிந்தது அஜய்யால் உடனே இங்க வர முடியாது என்பதே.இது ஓரளவுக்கு கவிக்கு நிம்மதியை கொடுத்தாலும் பிருந்தாவின் அருகில் சென்றவள் அவளது கையில் இருந்த மொபைலை பிடுங்கி யாருக்கோ கால் செய்தாள்.
"ஹலோ நான் பிருந்தா மேடத்தோட பிஏ பேசுறேன். நீங்க இப்போதைக்கு இங்க வரவேண்டாம்.அவங்களுக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு" என்றவள் மறுமுனையில் ஏதோ கூற பிருந்தாவிடம் மொபைலை கொடுத்து கண்களாலேயே தான் கூறியது போலவே சொல்ல சொன்னாள்.பிருந்தாவும் அஜய்யிடம் இப்போதைக்கு அவனை இங்கு வரவேண்டாம் என்று கூறியவள் காலை கட் செய்ய கவி அவளிடம் எதுவுமே பேசாமல் வீட்டிற்கு சென்றாள்.
கவியின் இன்றைய கோபம் பிருந்தாவுக்கு புதியது.தனக்கும் ஒரு தங்கை இருந்திருந்தால் இப்படித்தான் செல்ல சண்டை இட்டிருப்பாளோ என்ற எண்ணம் அவளுக்கு தோன்றாமல் இல்லை.அதை நினைக்கும் போது அவள் இதழ்கள் தானாகவே புன்னகைத்துக்கொண்டது.என்ன இருந்தாலும் அவளின் கோபம் தன்னை கை நீட்டி அடிக்கும் அளவுக்கு இருக்கின்றது என்றால் அவள் விக்ரம் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளால் என்பதும் பிருந்தாவுக்கு புரிந்தது.
இரண்டு மனி நேரம் பிருந்தா வீட்டின் முற்றத்திலேயே இருக்க உள்ளே சென்ற கவி அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாள்.அவளின் யோசனை மிகவும் பலமானதாகவும் எதிராளியின் கவசத்தை இலகுவில் சேதமடைய செய்யக்கூடியதாகவும் இருந்தது. இது எதுவும் அறியாத பிருந்தா வெளியில் மரத்தின் நிழலில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தாள்.
பிருந்தாவுக்கு கவியின் செயல்கள் மிகவும் பிடித்திருந்தது .அதிலும் குறிப்பாக அஜய்யிடம் போன் போட்டு அவனை இங்கு வரவேண்டாம் என்றவள், கண் அசைவாலேயே தனக்கு ஆணையிட்டதை எண்ணி மிகவும் சந்தோசம் கொண்டாள்.இதை மனதில் நினைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற பிருந்தா அவர்களின் தங்கியிருந்த அறைக்குள் கவி தன் முதுகை காட்டி ஜன்னலின் ஊடே தெரிந்த அழகிய பெசன் புரூட் (Passion Fruit) கொடியில் தாவும் அணில் குஞ்சுகளின் சேட்டைகளை பார்த்துக்கொண்டிருந்தால்.
பிருந்தா சத்தமில்லாமல் அறைக்குள் வந்தவள் கவியை பின்னால் இருந்து அணைக்க துனுக்குற்ற கவி
"அறிவில்ல, நான் அவ்வளவு திட்டியும் என்கிட்ட வந்து இப்படி பண்றீங்க"என்று இல்லாத கோபத்தை இருப்பது போல காட்டிக்கொண்டாள்.
"இங்க பாரு கவி, எனக்கு விக்ரம கல்யாணம் பண்ணிக்க முடியாது. வேணும்னா உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்.உங்கண்ணன வெச்சிக்கிறேன்.என்ன சொல்ற" என்று தன் அழகிய புருவங்களை மேல் உயர்த்தி கண்ணடித்து கேட்க நிஜமாக கவியால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள்.
"அப்பா, ஒரு மாதிரி சிரிச்சிட்டே. உன்ன சிரிக்க வைக்க நான் எவ்வளவு கஷ்டபட வேண்டி இருக்கு.பாவம்டி உன்ன கட்டிக்க போறவரு" என்று கூறினால்.இதை கேட்டதும் போலியாக கோபித்த கவி
"அப்போ என்ன கட்டிக்கிறேன்னு சொன்னது பொய்யா?" என்று முகத்தில் வருத்தத்தை காமிக்க பிருந்தா ஒரு நொடி குழம்பிப்போனால். ஏனென்றால் கவியின் முகத்தில் தெரிந்தது நிஜமா அல்லது விளையாட்டா என்பதை அவளால் கணிக்க முடியவில்லை.
"ஹே கவி லீவ் இட்" என்றவள் அவளின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை கண்ட பிருந்தா ஒரு கணம் நடுங்கிவிட்டாள்.இயற்கைக்கு முரனான ஒரு விடயத்தை விளையாட்டாக கூற அதை கவி சீரியசாக எடுத்துவிட்டாளோ என்ற பிருந்தாவுக்கு தோன்ற அவள் முதுகுவடம் சில்லிட்டது.
"ஏய் கவி, நான் சும்மா ஏதோ விளையாட்டுக்கு சொன்னத..." என்று முடிக்கு முன் அவள் பிருந்தாவை கட்டிக்கொண்டவள்
"எனக்கு தெரியல, நீங்க எனக்கு அண்ணியா வரனும்னு நினைச்சேன்.ஆனா எங்கண்ணன் கூட நீங்க பேசினதுல இருந்த எதார்ந்த்தம் எனக்கு புரியல. ஆனா நீங்க இப்போ வெளில வந்து என்கிட்ட சொல்லும் போதுதான் திருமன வாழ்க்கை உங்களுக்கு எவ்வளவு கஷ்டத்த கொடுக்கும்னு தெரிஞ்சிக்கிட்டேன். நீங்க என்ன கட்டிக்கிறேனு சொன்னப்போ ஒரே ஒரு செக்கன்தான் எனக்கு அது விளையாட்டா தோனிச்சி. அதுக்கு அப்புறமா என் மூளைக்கு தோன்றினது எல்லாமே 'எனக்கு நீங்க அண்ணியா வரனும்னு நான் நினைக்கல்ல.என்கூட எங்கவீட்டுல என் கண் முன்னாடி நீங்க இருக்கனும்னுதான் நினைச்சிருக்கேன்னு' தோனிச்சி" என்று கூற பிருந்தா உச்சபட்ச அதிர்ச்சியில் இருந்தாள்.
கினறு வெட்ட பூதம் வெளிப்படுவது போல இது என்ன புதிய பிரச்சினை என்று அவளுக்கு தோன்றியது.
"கவி ப்ளீஸ் சும்மா விளையாடாத. பி சீரியஸ்" என்று கூற கவியும் அவள் அருகில் வந்து அவள் கைகளை மெதுவாக பற்றி
"என் கண்ண பார்த்து சொல்லுங்க,நான் விளையாடுறேனா இல்லை நிஜமா பேசுறேன்னான்னு" என்று கேட்டாள்.கவியின் கண்களை பார்த்த பிருந்தாவுக்கு பாழடைந்த பங்களாவுக்குள் தனியாக ஒருவன் பிரவேசித்தால் அவன் மன நிலை எப்படி இருக்குமோ அதே போல பயத்தால் அவள் உடல் நடுங்கியது.கவியின் பேச்சு நிஜமானது என்பதை அவள் கண்கள் எடுத்துக்காட்டியது.
"இங்க பாருங்க, நீங்க எங்கண்ணன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நாளைக்கு நான் வேறொருத்தர என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்படி பண்ணிக்கிட்டேன்னா நான் உங்கள விட்டு தூரமாக வேண்டி வரும்.என்னால உங்கள விட்டு இருக்க முடியாது. நீங்க உங்களோட நிலைப்பாட்ட ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்க. நானும் இப்போ ஒரு முடிவெடுத்திருக்கேன்.எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். நம்ம இப்போ பண்ற மாதிரி பிசினஸ்ஸ தொடந்து பண்ணலாம். எனக்கும் கல்யாணம்லாம் வேணாம்.உங்களுக்கு வேணும்னா எங்க அண்ணன கட்டிக்கோங்க.எனக்கு எந்த அப்ஜக்சனும் இல்லை. ஆனா நான் யாரையும் கட்டிக்க மாட்டேன். உங்க கூட காலம் பூரா இருக்க போறேன்" என்று கூற பிருந்தாவுக்கு பயத்தில் வார்த்தைகளே வரவில்லை.
கவியின் பேசிய விடயம் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அவளின் பேச்சில் இருந்த உறுதி பிருந்தாவை ஒரு கனம் உழுக்கியது. இருக்கின்ற பிரச்சினைகளுக்குள் இது என்ன புதிய ஒரு பிரச்சினை என்று பிருந்தாவுக்கு தோன்றியது.இதற்கு தீர்வு என்ன என்பது மட்டும் அவளுக்கு புரியவில்லை.
---------
இன்றைய நாள் பிறந்த tharakannan ஐடியில் இருக்கும் கண்ணனின் வாழ்வு மென்மேலும் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.
FaaikaFaree அவர்களின் "இன்றைய சிந்தனை" என்ற தினமும் ஒரு வாசகம் சூப்பரா இருக்கு. ஒரு நிமிடம் தினமும் ஒதுக்கினால் மனதுக்கு தேவையான நிம்மதி அந்த பதிவுகளில் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
BalaSundarnovels அவர்களின் "ஷ் ! இது வேடந்தாங்கல்" சூப்பர் ஸ்டோரி.
ஒரு விலைமகளின் கதையை ஒரு சொல் கூட முகம் சுழிக்காமல் படிக்கலாம். அந்த கதையில் அவ்வளவு நேர்த்தி. கண்டிப்பாக எல்லோரும் படியுங்கள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro