27
காலையில்,
"அம்மா நான் பிருந்தாவை கூட்டிட்டு ஊர சுத்திக்காட்டிட்டு வரேன்" என்று கூற அவனின் தாயும் அதற்கு சம்மதித்தார்.
"அண்ணா நானும் வரேன்" என்று கவி கேட்க விக்ரம் "இல்லை நீ அம்மா கூட வீட்ல இரு" என்று கூறியவன் பிருந்தாவை நோக்கி "டிறஸ் மாத்திட்டு வாங்க நம்ம போயிட்டு வரலாம்" என்றான்.
பிருந்தாவுக்கு அவன் ஏன் தன்னை மட்டும் அழைத்து செல்ல முயலுகின்றான் என்பது ஓரளவுக்கு புரிந்தாலும் இன்று விக்ரமிடம் இது பற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்ற நினைப்பில் இருந்தாள்.
வான் நீல நிற பாவாடை சட்டை அணிந்து வந்தவளை விக்ரம் முன் போல் ஜொல்லு வடிக்காமல் சாதாரணமாக பார்க்க கவிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எங்கு தன் அண்ணனின் பார்வையை வைத்து அவனை பிருந்தா தவறாக எண்ணி விடுவாரோ என்ற பயம் அவளுக்கு. அதுவும் இருவரும் தனியாக வெளியில் போகின்றார்கள் என்றதுமே அவளுக்கு நெஞ்சு பட பட வென அடித்துக்கொண்டது. கவிந்தி முன்பெல்லாம் பிருந்தா போல ஒரு பெண் தனக்கு அண்ணியாக வர வேண்டும் என நினைத்தவள் இப்போது பிருந்தாதான் தனக்கு அண்ணி என்று முடிவே செய்திருந்தால்.
பச்சை பசுமையாக இருந்த அந்த ஊரின் அழகை தன் கண்களால் அளவலாவிக்கொண்டு வந்தவள் "விக்ரம் உங்க ஊருல ஏரிலாம் இருக்கா? எனக்கு ஏரில குளிக்கனும்னு ரொம்ப ஆசை" என்றவளை பார்த்து புன்னகைத்தான்.
"ஏரிக்கு இன்னொரு நாள் போகலாம்.இன்னைக்கு உங்கள வேறொரு இடத்துக்கு கூட்டு போறேன்" என்று அவளை அழைத்து சென்று நிறுத்திய இடம் ஒரு மாந்தோப்பு.
கண்ணுக்கெட்டும் தூரம் வரையும் மா மரமும், பலா மரமும் தென்பட பிருந்தாவின் கண்களை அவளால் நம்பமுடியவில்லை. நாம் இரவு பேசியதை ஒருவேலை இவன் கேட்டிருப்பானோ என்ற எண்ணத்தில் அவனை பார்த்தாள்.
"நீங்க நினைக்கிறது நூறு விகிதம் சரி. நைட்டு நீங்களும் கவியும் பேசிக்கிட்டு இருந்தது என் காதுல கேட்டிச்சி. அதான் உங்களோட சின்ன சின்ன ஆசைகள்ள ஒன்றான மாங்காய் பறிக்க வேண்டும் என்பதை நிறைவேற்ற அடியேன் உங்களை கூட்டி வந்துள்ளேன் மகாராணியாரே" என்று கூற அவளின் இதழ்களில் குறும்புடன் கூறிய புன்னகை விரிந்தது.
பெண்களின் குறும்பு புன்னகைக்கு மயங்காத ஆண் இவ்வுலகில் எங்கும் உண்டா. நான் அறிந்து இல்லை என்றே கூறுவேன். பிருந்தாவுக்கோ இங்கு சந்தோசம் தாளவில்லை. விக்ரம் மீதிருந்த மரியாதையையும் தாண்டி அவன் மேல் அவளுக்கு ஒரு பிடிமானம் உருவாகிக் கொண்டிருந்தது.
அங்கிருந்த பல மா மரங்களை பார்த்தவள் உயரத்தில் மிகவும் குட்டையாக இருந்த மரத்தை காட்டி "விக்ரம் அந்த மரத்துல மாங்கா பறிக்கவா?" என்று கேட்க அவனும் புன்னகையுடன் "சரி"என்றான்.
தன் பெற்றோரிடம் ஒரு விளையாட்டு பொம்மை கேட்டு, அது உடனே கிடைக்கும் போது குழந்தைகளுக்கு இருக்கும் சந்தோசம் இப்போது பிருந்தாவுக்கு வந்தது. அந்த மரத்தின் அருகில் வந்து பிருந்தா தன்னாள் முடிந்தவரை துள்ளி துள்ளி மாங்காவை தொட முயல அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அவளின் அனுமதியை கூட கேட்காமல் விக்ரம் அவளை தன் கைகளால் அவளுடைய முழங்கால்களை அணைத்து தூக்கி பிடிக்க என்ன நடக்கின்றது என்று புரியாமல் பிருந்தா முழித்தாள்.அவள் அணிந்திருந்தது பாவாடை சட்டை என்பதால் அவன் தூக்கியதும் அவளுடைய முழங்காளுக்கு கீழ் பகுதி அவன் கண்களுக்கு விருந்தானது. அவளின் வெற்று கால்களை பார்த்து தடுமாறியவன் உடனே சுதாகரித்துக்கொண்டான்.இங்கு பிருந்தாவுக்கோ வெட்கம் தாளவில்லை.
காதலிக்கும் போது காதலனின் ஸ்பரிசத்தில் வெட்கம் கொள்ளும் கன்னிகை போல பிருந்தாவின் முகம் சிவப்பேறியது.அவள் நெஞ்சுக்குள் ஒரு ரயில் ஓடுகிறதோ என எண்ணும் அளவுக்கு அவள் நெஞ்சம் பட படவென அடித்துக்கொண்டது.
இங்கு விக்ரமுக்கோ அவளின் வெற்று முழங்கால்கள் அவனின் முகத்துக்கும் நெஞ்சுக்கும் இடையில் இருக்க இந்த நொடி இப்படியே உறைந்துவிட கூடாத என்று இருந்தது.
இந்த நிமிஷம் என் நிமிஷம்..
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்..
பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம்..
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்..
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்...
வாசனை வீசும் பூ நிமிஷம்..
—
இப்படியே இப்படியே இருந்து விடக் கூடாதா..
என் கண்ணில் உன் இமைகள் பொருந்திவிடக் கூடாதா ஆ...
இப்படியே இப்படியே இறந்து விடக் கூடாதா..
இப்படியே காலங்கள் உறைந்து விடக் கூடாதா..
வெட்டவெளி பூ வனமாய் மலர்ந்துவிடக் கூடாதா..
வின்மீண்கள் நிலவாகா வளர்ந்துவிடக் கூடாதா..
அன்பே உன் பக்கத்தில் அணைக்கின்ற வெப்பத்தில்
உயிருள்ள காலம் வரை ஊடாட கூடாதா..
மனதில் ஓடிய பாடலை இடையில் நிறுத்தியவன்,
"ஒரு பிரச்சினையும் இல்லை, நான் உன்ன மரத்துல ஏத்தி விடுறேன். நீ வேண்டிய மட்டும் மாங்காய பறிச்சிக்கோ"என்றான்.தடுமாற்றமான அந்த நொடிகளிலும் விக்ரம் தன்னை ஒருமையில் அழைத்ததை பிருந்தா தன் மனதில் பதிய வைத்தவள் இந்த இடத்தை விட்டு போக முன் எப்படியும் விக்ரமிடம் தங்களை பற்றி பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.
அவள் மரத்தில் ஏறி ஒரு கெப்பில் கஷ்டப்பட்டு லாவகமாக அமர்ந்து மாங்காய்களை பறிக்க ஆரம்பிக்க சற்று தூரத்தில் ஒரு கிழவி "ஏய் யாரு அது " என்று கத்த அவள் பயந்து கீழே பார்த்த போது அங்கு விக்ரம் இல்லை.சுற்றும் முற்றும் தேட அவனை எங்கேயும் காண முடியாமல் இருக்க அந்த கிழவியும் இவள் அருகில் வந்தார்.
"பாட்டி நான் தெரியாம இங்க...."என்று இழுக்க "ஏண்டி திருட்டு கழுதை, என் தோட்டத்துக்கு வந்து மாங்கா திருட பார்க்குறியா. முதல்ல கீழ இறங்குடி" என்று சத்தமிட்டார்.
பிருந்தா கஷ்டப்பட்டு கீழே இறங்க அந்த கிழவி தன்கையில் இருந்த ஒரு குச்சியால் அவளை அடிக்க ஆரம்பித்தார். அந்த கிழவி அடித்தது வலிக்கவில்லை என்றாலும் பிருந்தாவுக்கு அவமானமாக இருந்தது.
கண்களில் கண்ணீருடன் நின்றவளை "போடி, இனிமே இந்த பக்கம் உன்ன பார்த்தேன் கொன்றுவேன்" என்று கூற அவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
கால்களில் அவள் ஹீல்ஸ் வைத்த செருப்பு அணிந்திருந்ததால் அவளால் அந்த மனல் நிறைந்த தோப்பில் சரியாக நடக்க முடியவில்லை. தன் செருப்பை கையில் எடுத்தவள் வெறும்பாதங்களை கீழ் வைத்து நடக்க அவளின் இடது காலில் சிறு சிறு முட்கள் குத்தியது. அது எதையும் பொருட்படுத்தாது பிருந்தா நடக்கலானாள். தோப்பின் எல்லையை தாண்டும் போது அவளை பார்த்து விக்ரம் குறும்பாக புன்னகைத்து கொண்டிருந்தான்.
"ஏய் திருட்டு கழுதை" என்று அவன் கூப்பிட அவள் தன் கைகளில் இருந்த செருப்பை அவனுக்கு வீசினால். "உன்மேல கொல வெறில இருக்கேன். என் பக்கத்துல கூட வந்துடாத. எனக்கு எவ்வளவு அவமானமா போச்சி தெரியுமா?"என்று கண்ணீர் சிந்த தொடங்கினால்.
அப்போது அவளின் கால்களை கவனித்தவன் இடது காலில் சிறிதாக இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.அவள் அருகில் வந்து அவளை தன் கைகளில் சிறு குழந்தையை போல லாவகமாக தூக்கியவனை அவள் அடிக்க அவன் அது எதையும் சட்டை செய்யாமல் அங்கிருந்த ஒரு கிணற்று கட்டில் அவளை உட்காரவைத்தான்.மெதுவாக அவளின் பாதங்களை தன் கைகளில் ஏந்தியவன் அவள் கால்களில் இருந்த முட்கள் ஒவ்வொன்றாக கழற்ற அவளும் வலியில் "ஸ்ஸ்ஸ்ஸ்" என்று முனகினாள்.
"அதான் கீழ முள் இருக்குன்னு தெரியுதுல,அப்புறமா எதுக்கு நீங்க செருப்ப கழட்டினீங்க" என்று கேட்க அவன் மறுபடியும் தன்னை பன்மையில் பேசுவதை தன் மனதில் நிறுத்தியவள்
"அந்த கிழவி என்ன திட்டி அவமானப்படுத்தியத விட இந்த முள் குத்தினது ஒன்னும் பெரிய வலி இல்லை" என்றாள்.
"உங்களுக்கு மாங்கா பறிக்கனுமா?இல்லை திருட்டு மாங்கா பறிக்கனுமா?உங்க ஆசை திருட்டு மாங்காதானே. அதுவும் மாட்டிக்கிட்டு முழிக்கனும்னு வேற சொன்னீங்கள்ள கவிகிட்ட, அதான் நான் இப்படி பண்ணேன். இப்போ உங்களுக்கு திருட்டு மாங்கா பறிக்க போய் மாட்டிக்கிட்டா எப்படி இருக்கும் என்பது முழுசா தெரிஞ்சிடிச்சில்ல. உங்க வாழ்க்கை பூரா இது ஒரு சுகமான அனுபவமா இருக்கும்" என்று கூற அப்போதுதான் பிருந்தாவுக்கு அவன் காணாமல் போனதற்கு காரணம் புரிந்தது. கால்களில் இருந்த முட்களை கழற்றியவன்
"சரி எல்லா முள்ளையும் எடுத்தாச்சு. உங்களால நடக்க முடியுமா?" என்று கேட்க தன் வலக்காலிலும் முட்கள் தைத்திருக்க கூடாதா என்று பிருந்தாவின் மனம் ஏங்கியது. அவள் கண்களில் விக்ரம் மீது காதல் பொங்கி வழிந்தது அப்பட்டமாக தெரிந்தது.
அவளின் முகத்தை பார்த்தவன் அந்த பார்வையின் வீரியம் தாங்காமல் மீண்டும் அவள் பாதங்களை துடைக்க செல்ல அவனை கைகளால் தடுத்த பிருந்தா தன் முகத்தின் அருகில் அவனின் முகத்தை கொண்டு வந்தவள்
"விக்ரம் நான்...ஐ.....ஐ.."என்று வார்த்தைகள் தந்தியடிக்க இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றுடன் ஒன்று கலந்த சமயம் பிருந்தா விக்ரமின் கன்னத்தில் முத்தமிட்டாள். விக்ரமுக்கு இங்கு என்ன நடக்கின்றது என்பது கொஞ்சமும் புரியவில்லை. பிருந்தா தன் காதலை சொல்ல வந்தவள் அந்த வார்த்தைகள் முற்று பெறாமலேயே அவனுக்கு முத்தம் கொடுத்தது அவனுக்கு என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வை ஏற்படுத்தியது.
அவன் எதுவுமே அவளிடன் பேசவில்லை. அவளை தன் கைகளில் ஏந்தியவன் தோப்பின் எல்லையை கடந்து மன்சாலை வரும்வரை அவன் சிறு குழந்தைகளை இருகைகள் கொண்டு தூக்கி வருவது போல அவளை தூக்கி வர பிருந்தா அவள் கைகளை மாலையாக்கி அவன் கழுத்தை சுற்றியிருந்தாள்.
சாலை வந்ததும் அவளை கீழே இறக்கி தான் அணிந்திருந்த மென்மையான பாதனிகளை அவளுக்கு கொடுக்க கீழே இறங்கிய பிருந்தா அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். வேறு எதுவுமே அவள் பேசவில்லை. அவளுக்கு அப்போது தேவையாக இருந்தது ஒரு இறுக்கமான அணைப்பு, அதை அவன் கொடுக்கவில்லை எனினும் இவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அதன் பின் இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்த்தனர்.
இவர்கள் இருவரின் இந்த காதல் நாடகத்தை மேலே சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்த காக்கைகள்
'உங்கள் காதலுக்கு நான் வைக்கின்றேன் ஒரு முற்றுப்புள்ளி' என்பது போல கரைந்து கொண்டிருந்தன.
-------
முடிந்த வரை இந்த அப்டேட்டை என்னுடைய வழமையான பாணியில் இல்லாமல் வித்தியாசமாக கொடுக்க முற்பட்டுள்ளேன். இடத்தை பற்றிய வர்ணனைகளை அதிகம் கொடுத்து சம்பாசனைகளை குறைத்துள்ளேன்.
இந்த மாற்றத்தை நான் ஏற்படுத்த காரணம் GuardianoftheMoon
அவர்களின் "கதைப்போமா" வில் miru_writes Madhu_dr_cool @d-inkless-pen போன்றோரின் அறிவுரைகளும் ஒரு கதையை அவர்கள் படிக்க எப்படி தெரிவு செய்கின்றார்கள் என்பதையும் கேட்டு நான் எனது எழுத்துக்களில் மாற்றம் ஏற்படுத்த முயன்றுள்ளேன்.எந்த அளவிற்கு இது சரியாக அமையும் என்று தெரியவில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro