25
சில நேரங்களில் மனது ஒன்றை வேண்டாம் என மறுக்கும் போது இன்னொரு புறம் அது தனக்கு வேண்டும் என்று நம் ஆழ்மனதில் பதிந்து விடும். பிருந்தாவுடனான ஈர்ப்பை ஒவ்வொரு தடவையும் விக்ரமின் மனது மறுக்க முயன்றாலும் அவனது ஆழ்மனது அதை வேண்டும் என்று சண்டை போட தொடங்கியது அவனுக்கு சங்கடத்தை கொடுத்தது.
விக்ரம் வீட்டிற்கு பிருந்தா சடுதியாக வந்தது கவிக்கும் அவனது தாய்க்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது.
"வாம்மா என்ன இந்தப்பக்கம் திடீரென்று வந்திருக்க?" என்று அன்பாக கேட்க விக்ரம்,பிருந்தாவுக்கு நடந்த பிரச்சினைகளை அவனின் தாய்க்கு விளக்கி கூறி தங்களின் அபார்ட்மண்டிலேயே இனி பிருந்தாவும் இருக்க போகின்றாள் என்பது அவருக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்தது. விக்ரம் தன் தாயிடம் பிருந்தா பற்றி எல்லாவற்றையும் கூறியிருந்தாலும் அவளின் கற்பு அவளுடைய சுய விருப்புடன் பறி போனது பற்றி மட்டும் கூறவில்லை.
"நீங்க எல்லோரும் பேசிக்கிட்டு இருங்க, நான் உடனே சமையல பண்ணிடுறேன்" என்றவர்
"பிருந்தா இன்னைக்கு நீ இங்கதான் சாப்பிடுற சரியா"என்றார். அவளும் மறுவார்த்தை இன்றி "சரி" என்றாள்.இங்கு ஹாலில் இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க அம்மாவோ சமையலில் மும்முரமாக இருந்தார். பிருந்தா எழுந்து சமையல் கட்டு பக்கம் சென்றவள் விக்ரமின் தாயிடம்
"அம்மா என்ன பத்தி உங்களுக்கு முழுசா தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன். விக்ரம் கூட இப்போ கூறும் போது ரொம்ப சுருக்கமாவே என் பிரச்சினைகளை சொல்லிட்டாரு. ஆனா நான் நீங்க நினைக்கிற மாதிரி நல்லவ இல்லம்மா. நான் ஒரு..ஒ..ரு...." என்று அடுத்த வார்த்தைகள் வெளியில் வராமல் தத்ந்தியடிக்க அவளைப்பார்த்து புன்னகைத்தார் விக்ரமின் தாய்.
"இங்க பாருமா, உன்ன பத்தி முழுவதும் எனக்கு தெரியும். கவி எல்லாமே எங்கிட்ட சொல்லிட்டா. அதனால நீ ஒன்னும் எங்கிட்ட மறைச்சதா நினைக்க வேணாம். உங்கம்மாக்காக நீ பண்ணது பெரிய விசயம். ஆனா கொஞ்சம் யோசிச்சி பண்ணியிருக்கலாம். உனக்கு வேற வழிகள் இல்லாம இருந்திருக்கலாம், ஆனா நமக்கு ஒரு பிரச்சினை வரும் போது அதை நம்மை சரியான முறையிலதான் தீர்க்கனும்னு முடிவு செஞ்சோம்னா கண்டிப்பா கடவுள் நமக்கு ஒரு வழிய காட்டுவாரு. ஆனா உன்னால அப்படி ஒரு முடிவ எடுக்க முடியாம போனது உன்னோட துரதிஷ்டம். அப்புறம் கற்பு எங்குறது உடம்புல இல்ல, அது மனசு சம்பந்தப்பட்டது.அதுக்காக நீ பண்ணது சரின்னு நான் என்னைக்குமே சொல்லமாட்டேன். அந்த நேரத்துல உனக்கு சரியான அறிவுரை கூற யாரும் இல்லாம போயிட்டாங்களே என்கிற கவலைதான் இருக்கு" என்றவர் தன் கைகளை கழுவிவிட்டு அவள் முகத்தை தன் கைகளால் ஏந்தினார்.
"இங்க பாரு பிருந்தா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்,ஏன் தெரியுமா? உன்ன முதன் முதலா பார்த்தப்போ எனக்கு ஒரு பணக்காரி அப்படிங்குறது மட்டும்தான் தெரிஞ்சிது. ஆனா நீ அன்னைக்கு நடந்துகிட்ட விதம் என் மனசுல ரொம்ப ஆழமா உன்ன பத்தின நல்ல எண்ணங்கள வரவெச்சிடிச்சி. First impression is best impression அப்படின்னு சொல்லுவாங்கள்ள அது மாதிரி. அப்புறமா நீ பட்ட கஷ்டங்கள், நீ எடுத்த தவறான முடிவுகள் பத்தி கவி சொன்னப்போ உன்மேல கோபத்துக்கு பதிலா பரிதாபம்தான் வந்திச்சி. உண்மையா சொல்லனும்னா உன்ன மாதிரி ஒரு பொண்ணு என் பையனுக்கு பொண்டாட்டியா வந்தா நல்லா இருக்கும் என்றும் சில நேரங்கள்ள தோனும்.ஏன்னா காயம் பட்ட இரண்டு மனசு ஒன்னு சேரும் போது ஒன்னுக்கொன்னு அது ஆறுதலா இருக்கும். ஆனா அப்படி ஒரு பொண்ணுக்கு நான் எங்க போறது" என்று கூற பிருந்தா
"ஒன்னும் கவலை படாதீங்கமா , விக்ரமோட நல்ல மனசுக்கு கண்டிப்பா ஒரு நல்ல பொண்ணு உங்களுக்கு மருமகளா கிடைப்பா" என்று கூறினாள்.
விக்ரமின் தாயுடைய ஏக்கத்திற்கு தானே மருமகளாக வருவதாக பிருந்தாவும் கூறவில்லை,அவளையே தனக்கு மருமகளாக வரும்படி அவரும் கேட்கவில்லை. காலத்தின் கோலம் எப்படி இருக்கும் என்பது நம் யாருக்கும் தெரியாதே.அடுத்து வந்த நான்கு நாட்களில் பிருந்தாவின் பாஸ்போர்ட்டும் கிடைத்துவிட அவள் முழு இலங்கை பிரஜையாக மாறியவள் தன்னுடைய இந்திய பிரஜாவுரிமையை கேன்சல் செய்வதற்கும் விண்ணப்பித்து அதுவும் இனிதே நடந்தது.அதே நேரத்தில் அவள் தன்னுடைய பொருட்களுடன் விக்ரம் இருந்த அபார்ட்மண்டிற்கே குடிபெயர்ந்தாள்.
கவிக்கு இப்போதெல்லாம் மிகவும் சந்தோசமாக இருந்தது. தனக்கு மிகவும் பிடித்தவள் தன்னுடைய வீட்டிற்கு அருகிலேயே இருந்ததால் அவள் தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்கள் எல்லாம் பிருந்தாவின் வீட்டிலேயே இருந்தாள். பிருந்தாவுக்கு இப்போது கையில் போதுமான அளவு பணம் இருந்ததது.அது கரையும் முன்னர் ஏதும் சிறிய பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம் என நினைத்தவள் கவியுடன் அது பற்றி கூற கவியும் யோசித்தாள்.
"அக்கா ரொம்பலாம் ஏதுமே பண்ணவேனாம்.உங்க வீட்டிலேயே நம்ம ஒரு ஹேண்ட் டிசைனிங்க் சாரீ அப்புறமா சுடிதார் எல்லாம் செய்யலாம்.என்ன சொல்றீங்க"என்று கேட்க பிருந்தாவுக்கு அவள் கூற வந்தது முதலில் புரியவில்லை. அதை உணர்ந்த கவி
"நான் தெளிவா சொல்றேன். நம்ம எந்த டிசைனும் இல்லாம Plain ஆ இருக்குற சாரி , சடிதார்லாம் வாங்கி க்ளிட்டர் (Glitter) வெர்க் பண்ணலாம். எனக்கு தெரிஞ்ச ப்ரெண்ட்ஸ் அப்புறமா பேஸ்புக் மூலமா அதை விக்க டிரை பண்ணலாம்" என்று கூற பிருந்தாவுக்கு அவளின் யோசனை மிகவும் சரி என்று தோன்றியது.
"எனக்குத்தான் டிசைனிங்க் பண்ண வராதே"என்று பிருந்தா கூற அவளைப்பார்த்து கண்ணடித்த கவி
"உங்ககூட ஒரு மோஸ்ட் டாலண்டட் டிசைனர் இருக்கா என்கிறத மறந்துட வேண்டாம்" என்று கூற அவள் யார் என்று கேட்க வாய் எடுத்த தருணம் கவி
"யாருனு கேட்டு என்ன அவமானப்படுத்தினீங்க அப்புறமா உங்ககிட்ட நான் பேசவே மாட்டேன்"என்றாள்.
"சேச்சே,நீங்க பெரிய டிசைனர்தான் மேடம்.பொருள் வாங்கிறதுக்கு தேவையான காச நான் தரேன். டிசைனிங்க் வேலை எல்லாம் நீங்க பாருங்க.சோ ப்ராபிட்ல பிஃப்டி பிஃப்டி ஓக்கேயா?" என்று கேட்க கவியும் "சரி" என்று ஒத்துக்கொண்டாள்.
தங்களின் திட்டத்தை விக்ரமிடம் கூற அவனும் அதற்கு ஒத்துக்கொண்டாலும் கவியை முழுநேரமாக டிசைன் செய்ய வைப்பதில் அவனுக்கு இஷ்டமில்லை. என்ன இருந்தாலும் மேல் படிப்புக்காக காத்திருக்கும் அவளை வேலை செய்ய வைப்பதில் அவனுக்கு இஷ்டமில்லை.
"அண்ணா இங்க பாரு , நான் எதுக்கு படிக்கனும். வேலைக்கு போய் சம்பாதிக்கதானே. அதுவே இப்போ எனக்கு கரக்டா அமையுது. கொஞ்ச நாள் இதை டிரை பண்ணி பார்க்கலாம். சக்ஸஸ் ஆச்சின்னா கண்டினியூ பண்ணலாம்.இல்லைன்னா நீ சொல்ரமாதிரி பண்ணிக்கலாம்"என்று கூற விக்ரம்
"சக்ஸஸ் ஆகலைன்னா நீ மேல்படிப்ப பார்க்க போயிடுவ, ஆனா நஷ்டம் பிருந்தாவுக்குத்தானே"என்று கேட்க இப்போது பிருந்தா
"விக்ரம் நஷ்டம் எனக்குத்தானே வர போகுது அத நான் சமாளிச்சிக்கிறேன். ப்ளீஸ் எங்கூட வேலை செய்ய கவிக்கு அனுமதி கொடுங்க"என்று கூற அவனும் அரை மனதுடன் அனுமதி கொடுத்தான்.அவனுக்கு அப்போது தெரியவில்லை இந்த முடிவு அவன் வாழ்வில் எத்தனைய மாற்றத்தை கொண்டுவர போகின்றது என்று.
இப்போதெல்லாம் பிருந்தாவுக்கும் சேர்த்தே விக்ரமின் தாய் சமையல் செய்ய ஆரம்பித்திருந்தார். பிருந்தாவின் வீட்டிலும் சமையல் பாத்திரங்கள் இருந்தாலும் அதிகமானா நேரங்களில் பிருந்தாவின் வீட்டிற்கு உணவு வேலா வேலைக்கு வந்துவிடும், இல்லை என்றால் பிருந்தா அவர்கள் வீட்டிற்கு சென்று விடுவாள்.
நாட்கள் வேகமாக நகர்ந்து மூன்று மாதங்களை விழுங்கியிருந்தது.
கவி மற்றும் பிருந்தாவின் பிஸ்னஸ் ஆரம்பத்தில் பெரிய ஒரு முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்றாலும் ஒரு நாள் சிங்கள நடிகை ஒருத்தருக்கு விளம்பர படங்களில் நடிக்க சாரி ஒன்று தேவைப்பட அந்த ஆர்டர் ஹிருனி மூலம் இவர்களுக்கு கிடைத்தது.அந்த சாரியை பயன்படுத்திய அந்த சிங்கள நடிகை இந்த சாரியை நடிகை பிருந்தாதான் டிசைன் செய்தார் என்று ஒரு பத்திரிகை பேட்டிக்கு கூற இவர்களின் வியாபாரம் சடுதியாக அதிகரிக்க தொடங்கியது.இப்படி ஒரு இலவச விளம்பரத்தை எதிர்பார்க்காத இவர்களுக்கு தங்களுடைய வியாபாரத்தை முறைப்படி பதிவு செய்து விஸ்தரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தங்களின் வியாபாரத்தை முறைப்படி பதிவு செய்து பிருந்தா கவிக்கு கூறியது போல இலாபத்தில் ஐம்பது விகிதத்தை அவளுக்கு தருவதாகவும் எழுத்தின் மூலம் பதிந்து கொண்டனர்.
"அக்கா நாளைக்கு நாங்க எல்லோரும் எங்க அம்மாவோட ஊருக்கு போறோம். கொஞ்சம் கிராமம்தான். நான் வர எப்படியும் ஒரு நாலு நாள் ஆகும்"என்று கூற அந்த நேரத்தில் அங்கு விக்ரமின் தாய் அவர்களை சாப்பிட அழைக்கவந்தவர் கவி ஊருக்கு போவதாக கூறியதும் பிருந்தாவின் முகத்தில் தோன்றிய ஏமாற்றத்தை கண்டவருக்கு ஒரு யோசனை உதிர்த்தது.
"பிருந்தா தனியா இங்க இருந்து என்னம்மா பண்ண போற, நீயும் எங்ககூட வா"என்று கூற பிருந்தா அதை மறுப்பதற்கு வாய் திறக்க முன் அவர்
"நான் சொன்னா என் பொண்ணும் பையனும் கேட்பாங்க. நீ என்ன அம்மான்னு கூப்பிடறது நிஜம்னா எங்க கூட வா" என்று அவளின் வாயை அடைத்தார். இந்த பயணம் இவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வர போகின்றது என்று யாருக்குமே தெரியவில்லை.பிருந்தா இவர்களுடன் வருவதை விக்ரமிடம் இப்போது கூற வேண்டாம் என்றும் அவள் வருவது அவனுக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று கவி கூற இருவரும் அதை ஆமோதித்தனர்.
--------
வியாழன் தான் வருவேன்னு சொன்னவன் என்னடா இன்னைக்கே வந்துட்டான்னு பார்க்குறீங்களா?
Digital Detox Try பண்ணேன். 7 நாட்களுக்கு ஆனா அது 3.5 நாள்ள முடிஞ்சது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro