Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

24

என்னதான் ஒரு மனிதனின் இயல்பை சூழ்நிலை மாற்றும் என்றிருந்தாலும் பெண்ணுக்கு உரிய வெட்கம், நானம் என்பதெல்லாம் என்றும் எச்சந்தர்ப்பத்திலும் அவளை விட்டு நீங்காது. இங்கு அதே போன்று ஒரு நிலையிலேயே பிருந்தாவும் இருந்தாள்.

வெளியில் இருந்த விக்ரமோ ஒரு இனிமையான அவஸ்த்தையில் மாட்டிக்கொண்டிருந்தான். அவன் மனதுக்குள்

'நல்ல வேல கவி இருந்தா, இல்லைன்னா இன்னைக்கு என்னென்ன ஆகியிருக்குமோ'
என்று எண்ணியவன் கவியை பார்க்க அவள் அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.தன் தங்கையின் பார்வை எதனால் இப்படி உள்ளது என தெரிந்தவன் தலை குனிந்தான்.

"டேய் எருமை மாடு, என்னடா பண்ணியிருக்குற. ஒரு பொண்ண இப்படியா பார்ப்ப. இங்க பாரு நீ விட்ட ஜொல்லுல இங்க ஒரு ஆறே ஓடுது" என்றாள். விக்ரமுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இருந்தாலும் தன் தங்கையிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என எண்ணியவன்

" நான் என்ன பண்ணேன். ஒரு பொண்ணு அப்படி வந்ததும் கொஞ்சம் தடுமாற்றத்துல பார்த்துட்டேன். இது தப்புதான் இல்லைன்னு சொல்லல.ஆனா நானும் ஒரு ஆம்பளமா. அதுக்குனு கெட்டவன்லாம் இல்லை.இவ வேற அழகா இருக்காளா,சரி கவி அழக ரசிக்கிறது தப்பா? இல்லை தானே?" என்று கேள்வியும் கேட்டு பதிலும் அவனே கூற இப்போது கவி தலையில் அடித்துக்கொண்டாள்.

"ஆமா நீ எதுவுமே பண்ணல பாரு, அவங்க குளிச்சிக்கிட்டு இருக்கும் போது கால் வந்தது. அதனாலதான் அவங்க அப்படியே வந்துட்டாங்க. அதுவும் அவங்க இருந்த டென்சன்ல என்ன டிறஸ் போட்டிருக்கோம் என்றத மறந்துட்டு உனக்கு கதவ திறந்திட்டாங்க. அதுக்குனு இப்படியா நீ பார்ப்ப. இரு அம்மாகிட்ட சொல்லிகொடுக்குறேன்" என்று கூறிய நேரம் பிருந்தா குளியறையில் இருந்து நீல நிற சல்வார் அணிந்து தோகைவிரித்தாடும் மயிலின் அழகுடன்  வந்தாள்.

இங்கு விக்ரமோ
'என்னஇவ ,எந்த டிறஸ் போட்டாலும் அழகா இருக்காளே' என மனதுக்குள் நினைக்க கவி அவனின் பார்வை போன போக்கை கண்டு அவனை கண்களாலேயே முறைத்தாள். தான் வந்த வேலை என்ன, இப்போது தான் செய்து கொண்டிருக்கும் வேலை என்ன என்று மனதுக்குள் தன்னை தானே திட்டிக்கொண்டான்.

"உங்க டாக்குமெண்ட்ஸ்லாம் நான் பார்க்கலாமா?" என்று விக்ரம் கேட்க பிருந்தா தன் தோழி தனது லக்கேஜில் வைத்திருந்த டாக்குமெண்ட்ஸ் பைலை அவனிடம் கொடுத்தாள். அந்த பைலில் இருந்த தேவையற்ற டாக்குமெண்ட்சை அவளிடம் கொடுத்துவிட்டு அவளது பர்த் சர்ட்டிபிகேட் மற்றும் அவளுடைய பெற்றோரின் திருமண அத்தாட்சி பத்திரம் இரண்டை மட்டுமே எடுத்தவன் அவளை நோக்கி குறும்பாக புன்ன்கைத்தான். எதற்காக தன்னை பார்த்து இப்படி குறும்பாக புன்னகைக்கின்றான் என புரியாத பிருந்தா அவனை நோக்கி "என்ன" என்று கண்களாலேயே கேட்டால்.

"பிருந்தா என்கிற பெயர விட மகிழ்வதனி என்ற உங்க நிஜ பெயர் ரொம்ப அழகா இருக்கு" என்று கூற அவளும் "நன்றி" என்றாள்.

"ரகுராம் அங்கிள்கு பாஸ்போர்ட் ஆபீஸ்ல தெரிஞ்சவங்க இருக்காங்க. அவருகிட்ட நான் ஆல்ரெடி போன்ல பேசிட்டேன். நாளைக்கே நம்ம அவர் மீட் பண்ணலாம். டாக்குமெண்ட்ஸ்லாம் சரியா இருந்தா இந்த வாரத்துக்குள்ளேயே உங்களுக்கு இலங்கை பாஸ்போர்ட் எடுத்திடலாம்" என்று கூறினான்.

அவள் அவனை நன்றியோடு பார்த்து கைகூப்பியவள் "ரொம்ப நன்றி விக்ரம். இந்த உதவிய நான் என்னைக்குமே மறக்கமாட்டேன். அப்புறம் என்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு. ஆனா இதே போல தொடர்ந்து நான் ஹோட்டல்ல இருந்தேன்னா அது சீக்கிரமாவே கரைந்து போயிடும். ஏதாச்சும் நல்ல ஹாஸ்டல் மாதிரி ஏதும் இருந்தா சொல்லுங்க கொஞ்ச நாளைக்கு நான் அங்கேயே தங்கிக்கிறேன் இல்லைனா சின்னதா ஒரு வீடுன்னா கூட எனக்கு ஓக்கேதான்" என்றவளிடம்

"சரி பிருந்தா நான் பார்த்துட்டு சொல்றேன். முதல்ல நாளைக்கு பாஸ்போர்ட் வேலைய பார்க்கலாம். அப்புறமா நீங்க தங்கிறதுக்கு இடம் பார்க்கலாம். இப்போதைக்கு வேணும்னா எங்க அபார்ட்மெண்ட்லேயே ஒரு வீடு இருக்கு. அந்த வீட்டுக்காரம்மா அவங்க பையன் வீட்டுல இருக்காங்க. அவங்க வீட்ட வாடகைக்கு விடனும்னு சொல்லியிருந்தாங்க. முதல்ல நீங்க வந்து பாருங்க. உங்களுக்கு ஓக்கேன்னா அவங்க கிட்ட பேசலாம்" என்று கூற அவளும் சரி என தலையசைத்தாள்.

கவி பிருந்தாவை நோக்கி "அக்கா பாஸ்போர்ட் கிடைச்சதும், நீங்க எங்க எல்லோருக்கும் பெரிய டிரீட் கொடுக்கனும்" என்று கூற அவளை நோக்கி விக்ரம் முறைக்க பிருந்தாவும்

"இப்போ எதுக்கு சும்மா சும்மா அவள பார்த்து முறைக்கிறீங்க. என்கிட்ட இப்படி உரிமையா கேட்க யாருமில்லையேன்னு ரொம்ப ஏங்கியிருந்தேன். இப்போ எனக்கு கூட பிறக்காத தங்கச்சி மாதிரி இவ கிடைச்சிருக்கா.எப்போ பார்த்தாலும் அவள முறைச்சிக்கிட்டு இருக்காதீங்க. அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும்" என்றவள் கவியை பார்த்து

"கவி டிரீட் என்ன நம்ம எல்லோரும் சேர்ந்து டிரிப் ஒன்னு போகலாம் சரியா" என்க இங்கு கவியோ தன்னை அவள் தங்கை என்று கூறிவிட்டாளே என்ற கவலையில் முக வாட்டத்துட்டன் விக்ரமை பார்க்க, தான் திட்டுவேன் என்ற பயத்தில்தான் கவி இப்படி கவலையாக இருக்கின்றால் என தவறாக நினைத்தவன் எதுவும் மறுத்து கூறாமல் "முதல்ல பாஸ்போர்ட் வேலை முடியட்டும். அப்புறமா மத்தத பத்தி யோசிக்கலாம்"என்றான்.

கவியை அழைத்துக்கொண்டு விக்ரம் வீடு செல்லும் வழியில் Galle face தனது பைக்கை நிறுத்தி இரண்டு ஐஸ்கிறீம் வாங்கி வந்தவன் " சாரி கவி, எப்போ பார்த்தாலும் நான் உன்ன ரொம்ப கஷ்டபடுத்துறேன்ல.நேத்து வந்த பிருந்தாவுக்கு உன்ன புரிஞ்ச அளவுக்கு என்னால புரிஞ்சிக்க முடியல. உனக்கு எல்லாமே நீ கேட்க முன்னாடியே செஞ்சிடனும்னு நினைப்பேன். ஆனா என்னதான் அண்ணனா இருந்தாலும் ஒரு பொண்ணோட தேவைகள இன்னொரு பொண்ணாலதான் ஈசியா புரிஞ்சிக்க முடியும்ல" என்று கூற அவனிடம் இருந்த ஐஸ்கிறீமை வாங்கி அவனை பார்த்து புன்னகைத்தாள்.

"அட போண்ணா நான் நீ முறைச்சதுக்கு ஒன்னும் கவலை படல, அவங்க என்ன தங்கச்சின்னு சொன்னது கொஞ்சம் ஒரு மாதிரி இருந்திச்சி. நான் தங்கச்சின்னா நீ அவங்களுக்கு அண்ணனா?"என்று கேட்க தன் தங்கை எதற்கு அடி போடுகின்றாள் என்பது புரிந்தவன்

"உன்ன முறைச்சதுல தப்பே இல்லைடி"என்று பொய்யாக முதுகில் இரண்டு அடி கொடுத்தான்.

மறு நாள் காலை விக்ரம் ரகுராமை கூட்டிக்கொண்டு பிருந்தாவின் ஹோட்டலுக்கு சென்றவன் அங்கு அவளது பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான எல்லா பார்மாலிட்டீஸையும் சரியாக கேட்டுகொண்டான். "ரொம்ப தாங்க்ஸ் அங்கிள். நீங்க எப்போமே ரொம்ப நேர்மையா இருப்பீங்க. உங்ககிட்ட எப்படி இத கேட்குறதுன்னு ரொம்ப யோசிச்சேன். ஆனா நீங்க ரொம்ப சிம்பளா முடிச்சிட்டீஙக்" என்றவனை நோக்கிய அவர்

"என்னப்பா நீ இப்படி பேசுற, உங்கப்பா என் தங்கச்சியையும் அவ பொண்ணையும் அவரு உசிர கொடுத்து காப்பாத்தினவரு. உங்க குடும்பத்துக்கு எப்படிடா நன்றி கடன் தீர்க்கலாமனு பார்த்துக்கிட்டே இருந்தேன். நீதான் என்கிட்ட எதுவுமே கேட்க மாட்ட .இந்த பொண்ணு மூலமா அதுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு. நான் இந்த பொண்ணுக்குத்தான் நன்றி சொல்லனும் இப்படி ஒரு சூழல ஏற்படுத்தி கொடுத்ததுக்கு. அப்புறம் நான் எதுவும் சட்டவிரோதமா செய்யல. இவ ஒரு இலங்கை பிரஜை, என்ன அவகிட்ட இந்திய பாஸ்போர்ட் இருக்குற விசயத்த நாம சொல்லாம இப்போ பாஸ்போர்ட் எடுக்க போறோம் அவ்வளவுதான்" என்றவரை பிருந்தாவும் விக்ரமும் நன்றி கூற அவர் விடைபெற்று சென்றார்.

"விக்ரம் இன்னைக்கே நம்ம அந்த வீட்ட பார்க்க போகலாமா?" என்று கேட்க விக்ரமும் அவளின் திட்டம் அறியாமல்

"சரி "என்று கூற அவள் உடனே "நான் ரெடியாத்தான் இருக்கேன். இப்படியே போகலாம்" என்றாள். பூட்டியிருந்த வீட்டின் சாவியை செக்கியூரிட்டிடம் கேட்க அவரும் எந்த தயக்கமும் இன்றி விக்ரமுக்கு கொடுத்தார். காரணம் அந்த வீட்டின் உரிமையாளர் விக்ரமிடம் வீட்டை வாடகைக்கு கொடுக்க கூறியிருந்தமை அவருக்கு தெரியும் என்பதால்.

வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்க்க விக்ரமின் வீட்டை போலவே இருந்தாலும் அதைவிட கொஞ்சம் சிறியதாக இருந்தது. அந்த அபார்ட்மண்ட் முழுவதுமே மூன்றுவகையான வீடுகள் இருந்தன. பூட்டியிருக்கும் இந்த வீடு கொஞ்சம் சிறிய வீடு, விக்ரம் குடியிருப்பது நடுத்தரமானதும் அடுத்து மூன்று படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடும். பிருந்தாவுக்கு இந்த வீடு மிகவும் பிடித்துவிட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் அவள் வீட்டு கதவை திறந்தால் முன் இருப்பது விக்ரமின் வீடு.

"விக்ரம் எனக்கு வீடு பிடிச்சிருக்கு, நாம இப்பவே அட்வான்ஸ் கொடுத்திடலாம்" என்க அவனும் சரி என்றான்.

"விக்ரம் அப்படியே உங்க வீட்டுக்கு போய் அம்மாவ பார்த்துட்டு போகலாமா?" என்று கேட்க அவனால் மறுக்க முடியவில்லை. விக்ரமுக்கு இப்போது ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. பிருந்தா இப்போது அவன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டாள் என்பது.

--------------
ஹாய் வட்டீஸ் வியாழக்கிழமை போட வேண்டிய அப்டேட்ட இப்பவே போட்டுடுறேன். அப்புறம் ஞாயிற்றுக்கிழமை வழமை போல
அப்டேட் வராது.
அடுத்த வியாழன் ஒரு அப்டேட்டும் வெள்ளி மற்ற அப்டேட்டையும் கொடுத்து கடன தீர்த்துக்கிறேன்.
ஒரு வாரத்துக்கு என்னிடம் இருந்து எந்த வோட் அல்லது காமன்ஸ்ட் யாருக்கும் கிடைக்காது. சாரி ரைட்டர்ஸ்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro