2
2
வாசகர்களே இந்த கதை முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்த சினிமா சூட்டிங்கில் இருந்து முன்னைய காலத்திற்கும் அதற்கு பிந்தய காலத்திற்கும் மாறி மாறி பயணிக்கும். அந்த சினிமா சூட்டிங்கை உங்கள் மையப்புள்ளியாக எடுத்து படிக்கவும். அந்த சம்பவத்தை நான் இறுதி படப்பிடிப்பு என்று பெயர் வைத்து கொண்டு செல்கின்றேன்.
இறுதி படப்பிடிப்பு அன்று,
படப்பிடிப்பு முடிந்த கையோடு அவசரமாக ஷ்யாம் தனது காரில் சென்று விட வினீத்தோ தனது முதல் படம் இது என்பதால் எல்லோரும் செல்லும் வரை காத்திருந்தான். எல்லோரும் சென்று விட அவனும் பிருந்தாவும் தங்கள் காருக்காக காத்திருக்க அவர்களிடம் வந்த அந்த படத்தின் தயாரிப்பாளர் ராமலிங்கம் முற்பதுகளின் இறுதியில் இருந்தார். பார்ப்பதற்கு கிராமத்து படங்களில் வரும் நாட்டாமையை போல இருந்தவர் வினீத்திடம் வந்து
"தம்பி இந்த படம் சூப்பரா வரப்போகுது. வசூல் மழைல நான் நனைய போறேன்னு இப்பவே எனக்கு தெரியுதுப்பா. உனக்கு நான் ஒரு கார் பரிசா கொடுக்கலாம்னு இருக்கேன்" என்று கூற எதுவும் கூறாமல் புன்னகைத்த வினீத்தை பார்த்தவர்
"அது எப்படிப்பா மத்த டைரக்டர்லாம் சூட்டிங்க் ஸ்பாட்ல காட்டு கத்து கத்துவானுங்க. ஆனா நீ உன் கண் அசைவாலேயே எல்லாத்தையும் பண்ற. நீ ஒரு ஜீனியஸ் பா" என்று கூற அதற்கும் புன்னகை ஒன்றையே பரிசளிக்க அந்த படத்தின் துணை நடிகை பிருந்தாவின் பக்கம் திரும்பியவர்
"பாப்பா உன்னோட நடிப்பும் சூப்பர்மா. இந்த படத்துல ஹீரோயினை விட உன் காரக்டர்தான் சூப்பரா இருந்துச்சு. அதுவும் அந்த கிளைமாக்ஸ்ல உன்னோட நடிப்புக்காகவே இந்த வருசத்துக்கான எல்லா அவார்ட்டும் உனக்குத்தான் கிடைக்க போகுது. டைரக்டர் தம்பி உன்ன இந்த படத்துக்கு ஹீரோயினா போடாம ஏன் அந்த சமிக்ஷாவ கேட்டாருன்னு தெரியவே இல்லை. அவளுக்கு தமிழே ஒழுங்கா வரல்ல. நீ என்ன அழகா தமிழ் பேசுற. அப்புறம் பாப்பா என்னோட அடுத்த படம் டைரக்டர் ஜகன் கூட பண்றேன். பெரிய பட்ஜெட் படம். அதுல நீதான் ஹீரோயின். என்னம்மா சொல்ற" என்று கேட்க இப்படி ஒரு பெரிய பட்ஜட் படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என அவள் கனவிலும் நினைக்கவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தவள்
"கண்டிப்பா பண்றேன் சார். நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பேனா" என்றவளின் கன்னத்தில் தட்டியவர்
"நல்ல பொண்ணு. சரிப்பா வினீத் கார் உன் வீட்டுக்கு நாளைக்கு காலைல வந்திடும். ஜகன் கூட படம் முடிஞ்சதும் அடுத்த படம் உன்கூட பண்ணலாம்னு இருக்கேன் பா. ஏதும் புது கதை இருக்கா?" என்று கேட்க அவன் தடுமாறாமல்
"இல்லை சார் , புது கதைலாம் ஒன்னும் இல்ல. இனிமேதான் எழுதனும். எழுதி முடிஞ்சதும் சொல்றேன்" என்றவனை கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தவர்
"சரிப்பா" என்று கூறி முடிக்க அதே வேலை அவர்களை ஏற்றி செல்ல அவர்களது வாகனங்களும் வந்து சேர எல்லோரும் தத்தமது வீடுகளுக்கு சென்றனர்.
வீட்டிற்கு வந்த வினீத்திடம அவனின் தங்கை மீனாக்ஷி
"என்னண்ணா இன்னையோட உன்னோட படம் முடிஞ்சது போல. அங்க பெரிய வீட்டுல த க்ரேட் ஆக்டர் ரொம்பத்தான் உன்னப்பத்தி புகழ்ந்து கிட்டு இருந்தாரு" என்றவளை பார்த்து புன்னகைத்தவன்
"சரி சாப்டியா நீ" என்று கேட்க அவள்
"இல்லண்ணா, இன்னைக்கு மரகதம்மா அவங்க வீட்டுக்கு சாப்பிட வர சொன்னாங்க.நீ ப்ரஷ் ஆகிட்டு வந்தேன்னா நாம போயிட்டு வரலாம்" என்று கூற அவனும் எதுவும் பேசாமல் குளிக்க சென்றான்.
தன் தங்கையுடன் ஷ்யாமின் வீட்டை அடைந்ததும் ஷ்யாமின் தாயார் மரகதம்
"அட வாங்க டைரக்டர் சார், இரண்டு தடவை தேசிய விருது வாங்கின என் பையயனயே வெச்சி செஞ்சிட்டிங்களாமே. அவன் இன்னைக்கு சூட்டிங்க் முடிச்சி வந்ததுல இருந்து ஒரே புலம்பல்" என்று சிரித்து கூற அவனும் சிரித்துக்கொண்டு
"அதுக்குத்தான்மா இவன நான் இந்த படத்துக்கு ஆரம்பத்துலேயே கமிட் பண்ணல. நான் போய் பேசின இரண்டு ஆக்டர்ஸும் சூட்டிங்க் ஸ்டார்ட் பண்ணதும் கதையில மாற்றம் கொண்டு வரனும்னு சொன்னாங்க. ஆனா ப்ரொடியூசர் சார் என் மேல நம்பிக்கை வைச்சிருந்ததால கடைசிவரைக்கும் அவரு என் கதைய மாற்றதுக்கு கொஞ்சம் கூட இஷ்டப்படல. அந்த நேரமா பார்த்து இவன் உள்ள வந்துட்டான். ஷ்யாம் ஓக்கே சொல்லிட்டான் என்றதுமே எங்க செட்ல எல்லோருக்கும் ஒரே குஷி. கடைசில நானும் ஏதும் சொல்லாம ஓக்கே சொல்லிட்டேன்" என்றவன் ஷ்யாமும் வர எல்லோரும் ஒன்றாகவே உண்டனர்.
என்னதான் ஷ்யாம் சிறந்த ஒரு நடிகனாக இருந்தாலும் அவன் இப்பொழுதும் லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகனே அன்றி ஒரு மாஸ் ஹீரோவுக்கான சம்பளம் அவனுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவன் நடித்தது எல்லாமே சிறந்த திரைப்படங்கள். நடிப்புக்கு பெயர் போனதே தவிர லாபம் எதுவும் பெரிதாக சம்பாதிக்கவில்லை.
உணவை முடித்த பின் ஷ்யாமும் வினீத்தும் தனியாக இருக்க மீனாக்ஷி மரகதத்திற்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் கிட்சனில் புகுந்து கொண்டாள்.
"வினீத் நீ ஏன் இந்த படத்துக்கு பிருந்தாவ ஹீரோயினா போடல. அவள ஹீரோயினா போட்டிருந்தா அவளுக்கு நல்ல சம்பளம் கிடைச்சிருக்கும்ல" என்று கூற அவனை முறைத்த வினீத்
"நான் ஏன் அவள ஹீரோயினா போடலைன்னு உனக்கு தெரியாதா. நீ இந்த ப்ராஜக்ட்டுக்கு வர முன்னாடி இந்த ஸ்டோரில அவதான் ஹீரோயின். ஆனா நீ வந்ததும் என்னால அவள ஹீரோயினா போட முடியல. அது ஏன்னு உனக்கே தெரியும். என்மேல நம்பிக்கை வெச்சு ஆல்ரெடி ப்ரொடியூசர் ஏகத்துக்கும் செலவு பண்ணிட்டாரு, அதான் நீ வந்ததும் நான் எதுவுமே சொல்லாம ஓக்கே சொல்லிட்டேன். ஆனா அதுவும் நல்லதுக்குத்தான். இந்த படத்துல ஹீரோவோட கேரக்டருக்கு சமனா பிருந்தாவோட கேரக்டரும் பேசப்படும். நாங்க இன்னைக்கு பேக்கப் பண்ணி வரும் போது ராமலிங்கம் சார் அவரோட அடுத்த படம் ஜகன் கூட பண்ணப்போறாராம். அதுக்கு பிருந்தாவ பிக்ஸ் பண்ணிட்டாரு. இனி அவளுக்கு ஏறுமுகம் தான். நல்லா பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி அழகா இருக்கா, அத விட முக்கியமா நல்லா தமிழ் பேசுறா. மத்த மும்பை ஹீரோயின்ஸ் மாதிரி வாயில பப்பிள்கம்ம சாப்பிட கொடுத்து நடிக்க வைக்கத்தேவையில்ல. சிட்சுவேசனா சொன்னா ரொம்ப ஈசியா புரிஞ்சிக்கிட்டு நடிக்கிறா. கண்டிப்பா அவ ஒரு பெரிய ரவுண்டு வருவாடா" என்று கூற சிரித்த ஷ்யாம்
"அப்போ இனிமே வர போற உன்னோட எல்லா படத்துக்கும் அவதான் ஹீரோயின் போல. இப்படி வக்காலத்து வாங்குற" என்று கூற அவனோ
"வக்காளத்தெல்லாம் இல்லடா. அவகிட்ட டாலண்ட் இருக்கு. சோ கண்டிப்பா அவ ஒரு பெரிய ரவுண்டு வருவான்னு சொன்னேன்" என்று கூறினான்.
வாரத்தில் எப்படியும் மூன்று நாள் மீனாக்ஷியும் வினீத்தும் ஷ்யாமின் வீட்டிலேயே சாப்பிட சென்று விடுவார்கள். சிறு வயதில் தங்கள் பெற்றோரை இழந்தவர்களுக்கு இன்னொரு தாயாக இருந்து பார்த்துக்கொண்டது மரகதம்தான். மரகதத்தின் மனதில் மீனாக்ஷியை எப்படியாவது தனது மருமகளாக்க வேண்டுமென்ற ஆசை சில நாட்களாக இருக்கின்றது. அது கைகூடுமா இல்லையா என்பதை காலம்தான் பதில் கூற வேண்டும்.
----------------
முன்பு இருந்ததை போலவே,புதிய எழுத்தாளர்கள் மற்றும் நல்ல கதைகள் இருந்தால் அறியத்தரவும். மற்றவர்களுக்கும் அதை அறியச்செய்யலாம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro