17
பிருந்தாவை சந்திக்கும் முன்பாகவே கவிந்திக்கு பிருந்தாவின் முழு வரலாறும் தெரியும். கவிந்தி ஒரு தமிழ் பட பைத்தியம். எந்த தமிழ் படம் வந்தாலும் உடனே டவுன்லோட் செய்து பார்த்துவிடுவாள். திரைப்படங்களை அவள் நோக்கும் விதம் எப்போது வித்தியாசமாகவே இருக்கும். காமெடி, பாடல், சண்டைக்காட்சிகள் என்று என்டர்டைன்ட்மென்ட் காக பார்க்காமல் அவளது பார்வை காட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை, ஹீரோ ஹீரோயினின் நடிப்பு, காட்சிகள் வேறேதும் திரைப்படத்தில் இருந்து சுட்டிருக்கின்றார்களா, இசை காப்பியடிக்கப்படத்தா என ஒரு மினி ஆராய்ச்சியே செய்துவிடுவாள். அப்படி அவள் பார்த்து இம்ப்ரஸ் ஆன திரைப்படம்தான் 'கண்சிமிட்டும் வின்மீன்கள்'.
அந்த திரைப்படத்தை எத்தனை தடவை பார்த்தாள் என்று அவளுக்கே தெரியாது. அதிலும் குறிப்பாக கிளைமாக்சில் பிருந்தாவின் நடிப்பை பார்த்து தமிழ் சினிமாவுக்கு ஒரு கேட் வின்ஸ்லேட் கிடைத்துவிட்டால் என்றே நினைத்தால். இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க ஷ்யாமின் வெறிபிடித்த ரசிகை. ஹிந்திக்கு ஒரு ஆயுஷ்மான் குரானா, மனோஜ் பாஜ்பாயி போல ஹாலிவூட்டுக்கு க்ரிஷ்டியன் பேல், டி கார்ப்ரியோ போல தமிழுக்கு கமலுக்கு அடுத்து ஷ்யாம் என்றே நினைத்தாள்.
பிருந்தாவை விலை பேசியது முதல் அவளுடைய தாயின் இறப்பு வரை முழுவதும் தெரிந்தவள், அவள் ஒரு இலங்கைப்பெண் என்று கண்டுபிடிக்க முடியவில்லை கவிந்தியால்.
கவிந்தியின் கேள்விக்கு "இல்லை" என பதில் கூறியவள்
"என்னைக்கு அவங்க எனக்காக எல்லாமே இழந்தாங்களோ அன்னைல இருந்து நான் அவங்கள அம்மான்னுதான் கூப்பிடுவேன். கடைசில அவங்களும் இல்லை என்கூட. ஒரு மனுசனுக்கு காசு தேவ கவி. ஆனா அத செலவு செய்ய மனுசங்களும் வேனும். வெறுமனே காச மட்டும் வெச்சிக்கிட்டு நம்ம தனியா செலவு செய்யறதுள எந்த சுகமுமே இல்லை" என்றவள் கவியை நோக்கி
"நீ எங்கம்மாவ பத்தி கேட்ட, சோ உனக்கு முன்னாடியே என்ன பத்தி தெரியுமா? இல்லை நான் இப்போ சொன்னதாலதான் தெரியுமா?" என்றவளை கவி
"எனக்கு உங்கள பத்தி முன்னாடியே எல்லாமே தெரியும், நீங்க எங்க ஊரு ஆளு எண்டதும் உங்கம்மா நிஜ அம்மா இல்லைங்கிறத தவிர" என்க பிருந்தா கொஞ்சம் கவலையாக அவளை நோக்கி
"என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டன்னு சொல்ற. என்மேல வெறுப்பு வரல்லயா. ஐ மீன் நான் பண்ண செயல்களால" என்று கேட்க கவியும் அவள் எதை கூறுகின்றால் என்று புரிந்து
"ஒவ்வொருத்தங்களோட செயலுக்கும் ஒரு சரியான காரணம் அவங்க பக்கம் இருக்கும். கொலை பண்றவன் அவன் ஏன் பண்ணான்னு அவன் பக்க நியாயத்த கேட்டா மட்டும்தான் புரியும். எங்கப்பா எப்போமே சொல்றது ' நம்ம ஒருத்தங்களோட செயல வெச்சி அவங்கள தப்பானவங்களா நினைக்க கூடாது' அப்படின்னு. நீங்க உங்க கதைய சொன்னதும் நீங்க பண்ண காரியங்கள் என் மனசுக்கு தோணவே இல்லை. உங்க நிஜ அம்மா அப்பாவ பத்தி சொன்னதும் எனக்கு மனசுல தோன்றிய ஒரே விசயம் புலிக்கு பிறந்தது என்னைக்குமே பூனையாகாது" என்று கூற சிங்களவர்கள் மேல் இருந்த வெறுப்பு விக்ரமால் கொஞ்சம் குறைந்திருந்தாலும் கவிந்தியின் பேச்சும் அவளின் தந்தையின் வளர்ப்பும் அந்த வெறுப்பை அடியோடு மறைய செய்தது.
"கவி எனக்கு உங்கப்பாவ பார்க்கனும்னு ஆசையா இருக்கு, நம்ம உங்க வீட்டுக்கு போகலாமா? இல்லை டாக்சி அண்ணண்தான் புக் பண்ணனுமா?" என்று கேட்க கவியோ
"இல்லைக்கா, என் மொபைல்ல அப்ளிகேசன் இருக்கு. நம்ம புக் பண்ணி போயிடலாம்" என்றாள்.
இங்கு விக்ரமின் வீட்டில் தன் தாயிடம் இன்று பிருந்தாவுக்கு பிறந்த நாள் என்பது முதல் அவள் யார், இப்போது அவளின் நிலை என்ன என்பது முழுவதும் அவன் கூற அவனது தாய் அவளுக்கு இந்த பிறந்த நாளை மறக்க முடியாத நினைவுகளுடன் கொடுக்க வேண்டும் என்று எண்ணி அவருக்கு தெரிந்த ஸ்பெசல் டிஷ் எல்லாமே சமைக்க தயாரானார்.
பிருந்தாவும் கவியும் வீட்டிற்கு வர விக்ரம் அவனால் முடிந்தவரை வீட்டை பிறந்த நாளுக்காக அலங்காரம் செய்திருந்தான். இதை கண்டதும் பிருந்தா ஆச்சரியப்பட்டு அவனுக்கு நன்றி கூறியவள் அவனது தாயின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க செல்ல ஒரு கணம் அவர் தயங்கினார். அவரின் தயக்கத்துக்கு காரணம் தெரியாமல் அவரை உற்று நோக்க அவரின் கோலமே அவர் ஒரு விதவை என்பதை காட்டியது. அவள் உடனே திரும்பி கவியை பார்க்க அவளோ சுவற்றில் மாட்டியிருந்த தன் தந்தையின் மாலையிட்ட புகைப்படத்தை காட்டினாள். அதை பார்த்ததும் பிருந்தாவுக்கு தலையே சுற்றியது. காரணம் அதில் இருந்தது ஒரு ஆர்மி ஆபீசரின் புகைப்படம்.
கவியின் தாயுடைய தயக்கதை புரிந்த பிருந்தா அவரிடம் "நீங்க ஏன் எனக்கு பிளஸ்ஸிங்க் பண்ண தயங்குறீங்கன்னு புரியுதுமா. அப்படி பார்க்க போனா எங்கம்மா கிட்ட இருந்து எனக்கு என்னைக்குமே ப்ளஸ்ஸிங்க் கிடைச்சிருக்காது. விதவையா இருக்குறவங்கள் நல்ல நாள்ள மத்தவங்க கிட்ட நெருங்க கூடாது என்ற வழக்கம் என்னைக்குத்தான் மாறுமோ தெரியல" என்க அவரோ
"அப்படி இல்லை மேடம்" என்று விக்ரமின் தாய் கூற விக்ரமை பார்த்து முறைத்த பிருந்தா
"என்ன விக்ரம் சார் உங்களையும் என்னை மேடம்னு கூப்பிட சொல்லிருக்காரா? உங்க மகளா நினைச்சு என்கிட்ட பேசுறதுன்னா நான் இங்க இருக்கேன், இந்த மேடம் ,நோனான்னு பேசுறதா இருந்தா நான் இப்பவே ஹோட்டலுக்கு கிளம்புறேன்" என செல்லமாக கடிந்து கொண்டவளை அவர் வாஞ்சையாக அவள் தலையை தடவி
"நீ ஆயுசுக்கும் நல்லா இருப்பேமா. நான் ஏன் ஆரம்பத்துல உனக்கு ஆசிர்வாதம் பண்ண தயங்கினேன்னா, நான் ஒரு விதவைன்னு தெரியாம நீ என்கிட்ட ஆசீர்வாதம் வாங்க வந்துட்டியோன்னு நினைச்சேன். அப்புறம் நீ இந்தியால வளர்ந்த ஒரு ஹிந்து பொண்ணு. நீங்க சாஸ்த்திரம், சம்பிரதாயம் எல்லாம் ரொம்ப பார்ப்பீங்கள்ள. அதான் நான் அப்படி பண்ணேன்"என்று கூற பிருந்தா அதற்கு ஒரு புன்னகையை பதிலாக கொடுத்தாள். இருவரும் பேசிக்கொண்டிருக்க விக்ரம்
"சரி பிருந்தா, நீங்க இருங்க வெளில கொஞ்சம் வேலை இருக்கு. போயிட்டு வந்துடுறேன்" என்று கூறி சென்றான்.விக்ரமின் தாயும் சமையல் கட்டுக்கு செல்ல பிருந்தா வீட்டை கண்களாலேயே அளவெடுத்தாள். ஒரு அபார்ட்மண்ட் குடியிருப்பில் ஆறாவது மாடியில் இவர்கள் வீடு இருந்தது. ஒரு குட்டி ஹால், இரண்டு அறை, ஒரு சிறிய டைனிங்க் ஏரியாவுடன் ஹாலுடன் சேர்த்து ஒரு குட்டி லான் இருந்தது.
"என்னக்கா எங்க வீடு ரொம்ப குட்டியா இருக்கா. இது ஆர்மியில இறந்தவங்களுக்காக அரசாங்கம் கட்டி கொடுத்தது. எங்கப்பா கடைசி போர்ல இறந்ததால எங்களுக்கு கிடைச்சது" என்று கூற பிருந்தா "உங்கப்பா எப்படி இறந்தாங்க" என்று கேட்க தன் தந்தை இறந்த கதையை கவி கூறத் தொடங்கினால்.
"இறுதி கட்ட போர் 2009 ல நடந்துகிட்டு இருந்திச்சி. அப்போ கன்னி வெடிகள் புதைக்கப்படிருந்த ஒரு இடத்துல ஒரு அம்மாவும் பொண்ணும் மாட்டிக்கிட்டாங்க. யாருமே அவங்கள காப்பாத்த போகல. கொஞ்ச நேரத்துல அந்த இடத்துல ஏர் ஸ்ட்றைக் நடக்க போகுதுன்னு மெசேஜ் வந்ததும் எங்கப்பா அவரு உயிர பணயம் வெச்சி அவங்கள காப்பாத்தலாம்னு போயிருக்காங்க. ஆனா எங்கப்பாவாள அவங்கள காப்பாத்த முடிஞ்சது. ஆனா பணயம் வெச்ச அவரோட உயிர காப்பாத்திக்க முடியல. நாங்களும் யுத்தம் முடிஞ்சதும் அப்பா இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டதும் எதிரியோட குண்டு துலைத்துதான் உயிர விட்டிருப்பாருன்னு நினைச்சோம். ஆனா ஆறு மாசத்துக்கு பிறகு ஒரு பொண்ணும் அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்து எங்கம்மா கால்ல விழுந்து அழுதாங்க. அவங்க ஏன் அப்படி பண்ணாங்கன்னு எங்களுக்கு புரியல.அவங்கதான் சொன்னாங்க எங்கப்பா எப்படி இறந்தாங்கன்னு" என்று கூறியவள் கண்களில் ஒரு மிளிர்ச்சியுடன் கூடிய சோகம் எட்டிப்பார்த்தது.
"ஆனா எங்கப்பா நாட்டுக்காக போர் புரிஞ்சாலும் ஒரு அம்மாவும் பொண்ணுக்காக தன்னோட உயிர கொடுத்தாருன்னு நினைக்கிறப்போ எவ்வளவு பெருமையா இருந்திச்சி தெரியுமா. அதுக்கு அப்புறமா அந்த அம்மாவும் பொண்ணும் எங்க வீட்டுல ஒருத்தங்க மாதிரி ஆகிட்டாங்க" என்று கூற ஆச்சரியப்பட்ட பிருந்தா
"அவங்க போட்டோ உன்கிட்ட இருக்கா கவி" என்று கேட்க தனது மொபைலில் இருந்த போட்டோவை காட்டினால். அந்த போட்டோவில் ஒரு வயதான பெண்மணியும் ஒரு கண்கவர் அழகியும் இருப்பதை கண்டவள் கவியை நோக்கி
"இவங்கதானா அது" என்று கேட்க அவளும் "ஆமாம்" என்றவளை
"அவங்க பெயர் என்ன" என்று கேட்க
"அம்மா பெயர் அஞ்செலிகா, பொண்ணு பெயர் நான்சி" என்றாள்.
"இப்போ அவங்க எங்க இருக்காங்க" என்று கேட்க கவி விரக்தியாக புன்னகைத்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro