16
அன்றைய நாள் வேறு எங்குமே செல்லாமல் தனது அறைக்கு வந்த பிருந்தா ஹிருனியிடம் ஏதும் தேவை இருந்தால் அழைப்பதாக கூறியிருந்தால். அடுத்த நாள் காலை விக்ரமுக்கு மீண்டும் அழைப்பை மேற்கொள்ள அவனது கைபேசியில் இருந்து எந்த ஒரு பதிலும் வராமல் இருக்க அவள் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.
'விக்ரம் ஏன் இப்படி செய்கின்றான், விக்ரம் என் அழைப்பை ஏற்காமல் போனால் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்'
இரண்டு கேள்விகளுக்குமே அவளிடம் தெளிவான பதில் இல்லை. இரண்டாவது கேள்வி அவளுக்கானது என்ற போதும் அவளின் மனதில் இருக்கும் தடுமாற்றத்தை அவள் உணரவில்லை.
விக்ரமுக்கு அழைப்பை எடுத்த அடுத்த சில நிமிடங்களில் ஹிருனியிடம் இருந்து அழைப்பு வர அதை ஏற்காதவள் என்ன செய்வது என்று தெரியாத ஆற்றாமையால் தனது கைபேசியை கட்டிலில் தூக்கி வீசிய தருணம் அவள் மனதில் ஒரு புது சிந்தனை உதித்தது.
அந்த நாள் முழுவதும் அவள் விக்ரமுக்கு எந்த அழைப்பையும் மேற்கொள்ளாதவள் அடுத்த நாளின் விடியலுக்காக காத்திருந்தால்.
இங்கு விக்ரமின் நிலைமையோ மிகவும் மோசமாக இருந்தது. நான்சிக்கு பின் எந்த பெண்ணிடமும் உரிமை எடுத்து பழகாதவன் எப்படி பிருந்தாவிடம் மட்டும் ஏன் இப்படி நடந்துகொண்டான் என்று யோசித்து யோசித்தே தலை வலித்தது. ஆரம்பத்தில் பிருந்தாவிடம் அவன் சாதாரணமாக பழகியிருந்தாலும் அவள் யார், அவளுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி அறிந்ததும் ஏன் தன் மனம் அவளுக்காக யோசிக்க தொடங்கியது என்று புரியவில்லை. ஆனால் அவன் மனதுக்கு புரியாதது அவனது மூளைக்கு தெளிவாக புரிந்தது.
'கற்பை கண்ணியமாக கருதும் தமிழ் நாட்டு பெண்ணின் கற்பு அவளின் ஆற்றாமையை பயன்படுத்தி, விலைபேசப்பட்டு, சிதைக்கப்பட்டு கடைசியில் அவளுக்கு என்று யாருமில்லாமல் ஆக்கப்படிருக்கின்றது.'
பிருந்தாவை இதன் பின்னும் தனியாக சந்தித்தால் அவன் பார்வையை அவனால் கட்டுப்படுத்த முடியாதென்பது தெளிவாக தெரிந்தவன் அவளைவிட்டு தூரமாகவே இருக்க எண்ணினான். அவனுக்கு தெரியும் இது ஒரு அனுதாபத்தில் ஏற்படும் கவர்ச்சி என்பது. இருந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிய எண்ணியவனின் எண்ணம் ஈடேறுமா இல்லையா என்பதை காலம்தான் பதில் கூற வேண்டும்.
மறு நாள் அதிகாலையிலேயே விக்ரமுக்கு மெசேஜ் செய்ய அதை பார்த்து புன்னகைத்தவன் உடனே ஒரு பொக்கேயை ஆர்டர் செய்து விட்டு ஹிருனிக்கு கால் செய்ய அவளின் கைபேசி அணைக்கப்பட்டிருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் கவியை அழைத்து விடயத்தை கூற அவளால் அவனது அழைப்பை தட்டவும் முடியவில்லை.
"கவி இன்னைக்கு முழு நாளும் பிருந்தா கூடவே இரு. என்ன தேவைன்னாலும் எனக்கு கால் பண்ணு .ஹிருனியோட போன் ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருக்கு. அவ கால் பண்ணதும் அவள வர சொல்றேன்" என்று கூறியவன் தங்கைக்கு உபரை புக் செய்ய சென்றவன் ஏதோ யோசித்து விட்டு அவனது பைக்கிலேயே கவியை அழைத்து கொண்டு ஹோட்டலுகு விரைந்தான்.
ஹோட்டல் ரிசப்சனில் கவியும் விக்ரமும் காத்திருக்க பிருந்தா வந்த தோற்றம் வானத்தில் இருந்து தேவதை ஒன்றுதான் இறங்கி வந்துள்ளதோ என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது . ஒருவரின் ஆடை அவரின் அழகை எப்படி மாற்றும் என்பது இன்றைய பிருந்தாவே சாட்சியாக இருந்தால். அவள் அணிந்திருந வெந்தய நிற சேலை அவளது நிறத்திற்கு சரியாக பொருந்திருக்க விக்ரமோ வாயை ஆவென பிளந்து அவளை பார்த்து ஜொல்லுவிடுவதை உணர்ந்த கவி லேசாக அவனது கையில் கிள்ள அவன் சுயநினைவிற்கு திரும்பினான்.
கையில் இருந்த பொக்கேயை பிருந்தாவிடம் கொடுத்த விக்ரம்
"ஹாப்பி பர்த் டே, நல்ல வேலை அதிகாலைலேயே சொல்லிட்டீங்க. நீங்களும் கவியும் கோயிலுக்கு போயிட்டு எங்க போகனும்னு தோனுதோ போயிட்டு வாங்க. ஹிருனியோட போன் ஆன்சர் இல்லாம இருக்கு. அவள் கூப்பிட்டதும் உங்க கூட அவள ஜாயின் பண்ண சொல்ரேன்" என்று கூற விக்ரமுடன் இன்று அவனின் நடவடிக்கைகளுக்கு காரணம் கேட்க வேண்டும் என நினைத்தவளுக்கு அவன் கூட வரமாட்டான் என்ற பதிலை அவன் நேரடியாக கூறாமல் சுத்தி வலைத்துக்குக்கூறுவதை உணர்ந்த பிருந்தா மனதுக்குள்
'என்கிட்ட பேசாம தப்பி போகலாம்னு நினைக்கிறீங்க போல மிஸ்டர் விக்ரம். நீங்க ஒரு பிளான் போட்டா அதுக்கு மேல நான் போடுவேன். இப்போ பாருங்க இந்த நடிகையோட நடிப்ப' என எண்ணியவள்
"விக்ரம் எனக்கு யாராச்சும் பெரியவங்ககிட்ட பிளஸ்சிங்ஸ் வாங்கணும்னு ஆசையா இருக்கு. ஒவ்வொரு வருசமும் எங்க அம்மா எனக்கு விஷ் பண்ணுவாங்க. இந்த வருசம் அம்மா இல்லை. என்ன உங்க வீட்டுக்கு கூட்டி போய் உங்க அம்மா அப்பா கிட்ட ஆசீர்வாதம் வாங்கி தரீங்களா" என்று கேட்க அவனால் அவளது கோரிக்கையை தட்டவே முடியவில்லை.
" சரி நீங்க ரெண்டு பேரும் கோயிலுக்கு போயிட்டு நேரா வீட்டுக்கே வாங்க. இன்னைக்கு எங்க அம்மாவோட ஆசீர்வாதத்தையும் சேர்த்து சமையலும் செய்ய சொல்லுறேன்" என்று கூற அவளும் அதை தட்டிக்கழிக்காமல் ஏற்றுக் கொண்டால்.
கோயிலில் இருந்து வெளியில் வரும் போது கவி
"நீங்க சரியான கேடிதான் போங்க, ஆனா எங்கண்ணனுக்கு மட்டும் இது தெரிஞ்சது முடிஞ்சது" என்று கூற புன்னகைத்த பிருந்தா
"உங்கண்ணனுக்கு நீ வேணும்னா பயப்படலாம், நான் எதுக்கு பயப்படனும். எனக்கு அந்த ஹிருனி கூட போக பிடிக்கல. உன்கூட இருந்தா கொஞ்சம் ஜாலியா இருக்கும்னு தோனிச்சி. அதான் உங்கண்ணன்கிட்ட இன்னைக்கு என் பர்த்டேனு ஒரு பிட்ட போட்டேன். அவரும் அத நம்பிட்டாரு. இதுல டிவிஸ்ட் என்னான்னா உங்க வீட்டுக்கு என்ன கூப்பிடுவாருன்னு நான் கொஞ்சமும் நினைக்கல" என்று கூற கவியோ அவளின் கையை பிடித்து கொஞ்சம் அழுத்தமாக அழுத்தியவள்
"நீங்க உங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்றீங்களா?" என்று கேட்க பிருந்தாவின் கண்கள் குளமாகியது. தான் ஏதும் தவறான கேள்வியை கேட்டுவிட்டோமோ என பதறியவள்
"நான் வேணும்னு கேட்கலக்கா, சாரி" என்றவளை பிருந்தா
"இல்லை கவி, எனக்கு சிங்களவங்கன்னாலே பிடிக்காது" என்றவளை கவி கேள்வியாக நோக்க தொடர்ந்த பிருந்தா
"நீ நினைக்கிற மாதிரி தமிழ்நாட்டுல இருக்குறவங்க வெறுக்கிற மாதிரி நான் காரணம் இல்லாமல வெறுக்கல்ல.நான் பிறந்து என்னோட ஆறு வயசு வரைக்கும் இலங்கைலதான் வளர்ந்தேன். 2000 ஆண்டு சிங்கள ராணுவம் வவுனியா பூவரசன் குலம் பகுதியை இயக்கத்திடம் இருந்து மீட்டாங்க. அவங்க பண்ண வீர தீர செயல் மட்டும்தான் உலகுக்கும் சக இலங்கையர்களுக்கும் தெரியும். அவங்க பண்ண அக்கிரமங்கள் தெரியுமா?" என்று உணர்ச்சிமிகுந்து பேசியவளை அவள் பேசி முடிக்கட்டும் என்று கவி அமைதியாக இருக்க பிருந்தாவும் தனது மனதில் இருக்கும் பாரங்களை இறக்கி வைக்க சரியான ஒரு சந்தர்ப்பம் அமைந்ததை எண்ணி தன் மனதில் இருக்கும் சிறு வயது வடுக்களை கூற தொடங்கினால்.
"எங்கப்பா இயக்கத்துல இருந்தவரு. அந்த யுத்தத்துல இலங்கை ராணுவத்திடம் துரதிஷ்டவசமா அவரு மாட்டிக்க எங்கப்பாவ பிடித்துக்கொண்டு எங்க வீட்டுக்கு வந்தவங்க எங்கம்மாவ கூட்டுப்பலாத்காரம் பண்ணாங்க. எந்த யுத்தம்னு வந்தாலுமே முதல்ல பாதிக்கபடுறது பொண்ணுங்கதானே. அந்த வலி தாங்க முடியாம எங்கம்மா அந்த இடத்துலயே இறந்துட்டாங்க. எங்கம்மா இறந்ததும் கோவத்துல எங்கப்பாவையும் கொண்ணுட்டானுங்க அந்த ஆர்மிகாரங்க. அப்பவும் அந்த ஆர்மிகாரங்களுக்கு வெறி அடங்கல. ஆறே வயசான என்னையும் அவங்க தப்பான நோக்கத்தோட நெருங்க எங்க பக்கத்து வீட்டுல இருந்த அக்காதான் என்ன காப்பாத்தினாங்க. போர்ல அவங்களோட கணவன் மற்றும் குழந்தைகளை இழந்துட்டாங்க. நான்னா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். என்ன காப்பாத்தனும் என்ற நோக்கத்துல ஒரு பொண்ணு தன் உயிருக்கும் மேலாக மதிக்கும் கற்ப அந்த அயோக்கியனுங்ககிட்ட இழந்துட்டாங்க. அங்க இருந்து ஒரு வழியா தப்பிச்சு நாங்க தமிழ் நாட்டுக்கு போயிட்டோம். அங்கயும் அகதி முகாம்ல ஆயிரம் பிரச்சினைகள். என்ன காப்பாத்தனும்னே என்னோட பக்கத்து வீட்டு அக்கா தன்ன கெடுத்துக்கிட்டாங்க. ஒன்னுமே இல்லாத ஒரு பொண்ணுகிட்ட இந்த சமூகம் எதிர்பார்க்கிறது அவளோட உடம்பு.இந்த சமூகம் அத அவங்க கிட்ட கேட்கும் போதெல்லாம் அவங்களால அத கொடுக்கிறத தவிர வேறு வழியில்லாம அந்த தப்பை தொடர்ந்து பண்ணிட்டாங்க. ஒரு கட்டத்துக்கு மேல அவங்களுக்கு அது வருமாணம் தருகிற மாதிரி ஆனதும் தூரலில்தான் நனைஞ்சாச்சி, மழையிலும் முழுசா நனைஞ்சிடலாம்னு முடிவெடுத்து அதை ஏத்துக்கிட்டாங்க" என்று கூற கவியோ என்ன சொல்வது என்று புரியாமல் இருந்தவள்
"அப்போ சென்னைல கேன்சர் வந்து இறந்தது உங்கம்மா இல்லையா?" என்று கேட்க பிருந்தா "இல்லை" என்றாள்.
--------
ஹாய் வட்டீஸ்,
இந்த கதை எழுத ஆரம்பித்ததும் நான் எடுத்துக்கொண்ட முக்கிய கரு சினிமா துறையின் கரை படிந்த பக்கங்களை காட்டுவதே.ஆனால் சமீபத்தில் சுஷாந்தின் வழக்கில் நடக்கின்ற திருப்பங்கள் என்னுடைய கருவை அப்படியே ஒத்திருப்பதால் என் கதையின் கருவை மாற்றியுள்ளேன்.பிருந்தா கூட போதை பொருள் பாவிப்பதாகத்தான் ஆரம்பத்தில் மறைமுகமாக கூறியிருப்பேன்.எங்கு என கேட்பவர்களுக்கு .." பிருந்தா இவ்வளவு பிரச்சினை நடக்கும் நேரத்திலும் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லாத வாறு நடந்து கொள்வதும், வழமையை விட நேரத்துடன் தூங்குவதாகவும் கூறியிருப்பேன்"..
இப்போது இதை எல்லாம் சேர்த்து எழுதினால் நன்றாக இருக்காது என்பது என் எண்ணம் . அதானாலேயே கதை ஆரம்ப கருவில் இருந்து மாறி பயணிக்கும்.
ஆரம்பத்தில் வந்த சினிமா சார்ந்த காரக்டர்கள் மறுபடி வருவார்களா என தெரியவில்லை.கதை பிடித்தால் தொடர்ந்து படியுங்கள் இல்லை எனில் வேறு நல்ல கதைகள் வாட்பெட்டில் ஆயிரம் உண்டு உங்களின் வாசிப்புக்கு தீனி போட...
--நன்றி --
--ஆஷிக்--
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro