15
"அப்போ அவ அண்ணினு கூப்பிட சொன்னாலும் நீ கூப்பிடுவ" என்றவன் அப்போதுதான் உணர்ந்தான் தான் என்ன வார்த்தை கூறினோம் என்று.
தான் கூறிய வார்த்தையின் வீரியத்தை அவன் உணர்ந்த போது தன்னைவிட வயதில் குறைந்தவளிடம் மாட்டிக்கொண்டோமே என்ற எண்ணம் விக்ரம்க்கு வர அவன் கைகளால் இருகப்பற்றியிருந்த தன் தங்கையின் கூந்தலை இன்னும் பலமாக அவன் முறுக்கினான். தன் அண்ணனின் பிடி இருகியதால் கவியால் எதுவுமே பேச முடியவில்லை. இல்லை என்றால் அவன் கூறிய வார்த்தைக்கு அவனை நோக்கி ஆயிரம் கேள்விகள் தொடுத்திருப்பாள்.
"டேய் அண்ணா ரொம்ப வலிக்குது, விடுன்னு சொல்ரேன்ல" என்றவளை விக்ரம்
"சரி இனிமே நீ க்ளையண்ட்ஸ் கிட்ட மேடம்னுதான் பேசனும். இந்த அக்கா,ஆண்டி,ஆட்டுக்குட்டின்னுலாம் பேசக்கூடாது" என்க அவள் அவனை முறைத்தவள்
"இனிமே நீயே கூப்பிட்டாலும் உன் க்ளையண்ட்ஸ் எவளையும் பார்க்க நான் வரப்போறதில்லை. ஆனா உன் மனசுல ஏதோ ஒன்னு இருக்குன்னு மட்டும் நல்லா தெரியுது" என்றவள் அவன் கைபிடி லேசாக தளர்ந்ததும் அவனை விட்டு ஓடினால். இங்கு விக்ரமின் நிலைமையோ கல்லெறிபட்ட குளத்து நீர் போல எந்த ஒரு தெளிவும் இன்றி அலையலையாய் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
'நான் ஏன் பிருந்தாக்கு அந்த டிறஸ் எடுத்துட்டு போனேன்'
என சிந்திக்கும் போதுதான் அவனுக்கு தான் செய்த தவறு உரைக்க தன் அறைக்கு சென்றவன் கதவை மூடிவிட்டு அழத்தொடங்கினான். அவனது விசும்பல் சத்தம் வீட்டில் இருந்த எல்லோருக்கும் கேட்க விக்ரமின் தாய் கவியை பார்த்து
"என்னாச்சு கவி, அண்ணன் ரூம்ல அழுகை சத்தம் கேட்குது" என்று கேட்க கவியும் அம்மாவின் கைபிடித்து
"அம்மா அவன் அழட்டும்மா. ஒரு வருசமா அவன் மனசுக்குள்ள தேக்கி வெச்சிருந்த குப்பையெல்லாம் வெளில வரட்டும்" என்க கவியை நோக்கி சந்தேகமாக பார்த்த அவளின் தாயிடம் கவி
"நான்சிக்காக வாங்கி வெச்சிருந்த டிறஸ்ஸ இன்னைக்கு அவன் அந்த தமிழ்நாட்டு பொண்ணுக்கு கொடுக்க எடுத்து வந்தான்" என்று கூற அவளது தாயோ
"ஆமா கவி, நாந்தான் உனக்கு மட்டுமில்லாம அந்த பொண்ணுக்கும்ன் சேர்த்து உன் டிறஸ்ஸையே கொடுத்து அனுப்பினேன்" என்க தன் தாயை பார்த்து புன்ன்கைத்த கவி
"நல்ல வேல செஞ்ச போ. என் டிறஸ் அவங்களுக்கு எப்படி பத்தும். அதான் அண்ணன் என்ன பண்றதுன்னு தெரியாம நான்சிக்கு கொடுக்க வெச்சிருந்த டிறஸ்ஸ எடுத்து வந்துட்டான். அவன் அவரசத்துக்கு பண்ணானோ இல்லை கடவுள் சித்தமோ..இப்போ அண்ணா மனசுல ஒரு வருசமா பூட்டி வெச்சிருந்த கவலை எல்லாம் வெளில வரப்போகுதும்மா. அவன டிஸ்டர்ப் பண்ணாம நம்ம கொஞ்சம் விலகியே இருக்கலாம்" என்க அவளது தாய்
"எப்படியோ என்பிள்ளை அந்த பாழாப்போன நினைப்புல இருந்து வெளில வந்துட்டா போதும். எனக்கு வேறஎதுவுமே வேணாம்" என்றார். தன் தாயை பார்த்தவள்
"அம்மா தயவு செய்து அண்ணா முன்னாடி இப்படி பாழாபோன நினைப்புன்னு சொல்லாத, அது அவனுக்கு இன்னும் ரொம்ப வருத்தத்தை கொடுக்கும்" என்றாள்.
இங்கு பிருந்தாவின் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது. ஆரம்பத்தில் மிகவும் கண்ணியமாக பழகிய விக்ரம் தான் சுகவீனமுற்றதில் இருந்து அவனது பார்வையும் செயல்களும் வித்தியாசமாக இருந்த்தை உணர்ந்தவள் எதனால் இந்த மாற்றம் என்று மட்டும் அவளுக்கு புலப்படவில்லை. எதுவாக இருந்தாலும் நேரடியாக கேட்கும் பிருந்தாவுக்கு இதை கேட்க மட்டும் நா எழவில்லை. அது ஏன் என்றும் அவளுக்கு புரியவில்லை.
மறு நாள் காலை விக்ரம் ஹோட்டல் வருவான் என்று எதிர்பார்த்திருந்த பிருந்தாவுக்கு விக்ரமின் நிறுவனம் சார்பாக வந்தது வேறொரு நபர். அதுவும் ஒரு அழகிய இளம்பெண் பிருந்தாவின் அறை கதவை தட்ட கதவை திறந்த பிருந்தாவிடம் அவள் நுனி நாக்கில் ஆங்கிலத்தை வரவைத்து
"ஹாய் மேம் ஐம் ஹிருனி, மிஸ்டர் விக்ரம் உங்களுக்கு தேவையான உதவிகளையும் இனிமே உங்களுக்கு தேவைப்படுகின்ற எல்லா ஏற்பாடுகளையும் பார்க்க சொல்லிருக்காங்க. இப்போதைல இருந்து நாந்தான் உங்களு கைட்" என்று அவள் கூற அவளை ஏற இறங்க பார்த்த பிருந்தாவுக்கு ஒரு சில நொடிகள் பொறாமை வந்தது. அவள் புருவங்கள் நேர்த்தி செய்யப்படு, கூந்தலை கொஞ்சம் உயர்த்திக்கட்டி காண்பவர் கண்கவரும் மங்கையாக இருந்தால். ஆனால் அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் டீசேர்ட் தான் அவளின் அங்கங்களை வெளியில் இருப்பருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவது போல இருந்தாலும் அவள் அணிந்திருந்த விதத்தில் ஆபாசம் இல்லாமல் கவர்ச்சி மட்டும் இருந்தது. பிருந்தா அவளை ஆராய்ச்சி செய்வதை உணர்ந்தவள்
"மேம் நீங்க உங்க மூவில இருந்தத விட நேர்ல ரொம்ப அழகா இருக்கீங்க" என்று கூற சுதாரித்த பிருந்தா
"என்ன சொல்றீங்க" என்று புருவத்தை உயர்த்தி கேட்க ஹிருனி
"இல்லை மேம் நீங்க உங்களோட படங்கள்ள இருந்தத விட நேர்ல ரொம்ப அழகா இருக்கீங்க" என்று கூற பிருந்தா
"நான் சினிமால நடிச்சவன்னு உங்களுக்கு எப்படி தெரியும்" என்று கேட்க அவள் சாதாரணமாக
"இல்லை நேத்துதான் விக்ரம் உங்களை பத்தி சொன்னாரு. நேஷனல் அவார்ட் வின் பண்ண ஒரு ஆக்ட்ரஸ் வந்திருக்காங்க, அவங்களுக்கு ஒரு லேடி கைட் தேவைன்னு. அதான் நான் உடனே யெஸ் சொல்லி வந்துட்டேன். அப்புறம் நைட் பூரா நீங்க நடிச்ச கண்சிமிட்டும் விண்மீன்கள் மூவிதான் பார்த்தேன். நீங்க ஹீரோயின் இல்லைன்னாலும் உங்க நடிப்பு சூப்பரா இருந்துச்சு" என்று கூற வந்ததும் வராததுமாக லொட லொட என்று பேசும் ஹிருனியை ஆரம்பத்திலேயே பிருந்தாவுக்கு பிடிக்கவில்லை.
பிருந்தா நாகரீகம் கருதி அவளை அறையினுள் இருக்க செய்தவள் குளித்து முடித்து வெளியில் வந்தாள். ஆனால் ஹிருனியோ அவளிடம் தொன தொன வென கேள்விகளாகவே கேட்டுக்கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில்
"மேடம் நானும் கவியும் ப்ரெண்ட்ஸ்தான். ரெண்டு பேருக்குமே பேஷன் டிசைனிங்க் படிக்கனும்னு ஆசை. எங்க ஊருல அதுக்கு வசதிகள் இல்லை.உங்களுக்கு தெரிஞ்ச ஏதும் நல்ல காலேஜ் உங்க ஊருல இருந்தா சொல்லுங்க. நீங்க சினிமால இருக்குறவங்க. உங்களுக்கு தெரியாம இருக்காதுல்ல" என்று கூற வராத புன்னகையை வரவழைத்த பிருந்தா
"உன் நம்பர கொடு, நான் ஊருக்கு போனதும் விசாரிச்சி சொல்றேன்" என்றவள் மனதுக்குள்
'நம்ம ஊருல இருக்குற எதுவுமே நமக்கே தெரியாது. இதுல இவளுக்கு வேற பார்த்து சொல்லனுமாம். என்ன கொடுமைடா இது' .
ஹிருனியின் கைபேசிக்கு அழைப்பு வர
" யெஸ் விக்ரம் டார்லிங்க். நீங்க சொன்ன மாதிரியே பண்ணிட்டேன். அவங்க இன்னும் எந்த செட்யூல்லும் சொல்லல. அவங்க கிட்ட பேசிட்டு நான் அப்டேட் பண்றேன்" என்று கூற பிருந்தாவுக்கு அவள் பேசிய வேற எதுவுமே கேட்கவில்லை. ஆரம்பத்தில் அவள் கூறிய டார்லிங்க் என்ற வார்த்தையே அவள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
ஹிருனி அழைப்பை துண்டித்ததும் பிருந்தா தனது மொபைலை எடுத்து விக்ரமிற்கு அழைக்க அவளது அழைப்பு பதில் அளிக்கப்படாமலேயே துண்டிக்கப்பட்டது. என்ன செய்வது என்று புரியாமல் குழம்பியவள் ஹிருனியை நோக்கி
" ஹிருனி எனக்கு டிறஸ் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணனும். ஒரு நல்ல சாப்பிங்க் மாலுக்கு போவோமா?" என்று கேட்க அவளும் சந்தோசத்துடன் சரி என்றவள் பிருந்தாவை அழைத்துக்கொண்டு பம்பலபிட்டியில் இருக்கும் மெஜஸ்ட்டிக் சிட்டிக்கு சென்றனர்.
மெஜஸ்ட்டிக் சிட்டி பெரிய ஒரு சாப்பிங்க் மால் இல்லை என்றாலும் ஒரு டூரிஸ்ட்கு தேவையான பொருட்கள் எல்லாமே அங்கு இருந்தது. பர்ச்சேஸ் முடிந்ததும் அங்கேயே புட் கோட்டில் இருவரும் சாப்பிட அமர்ந்தனர். அந்த நேரம் பார்த்து அங்கிருந்த ஒரு சிலர் பிருந்தாவை அடையாளம் கண்டு கொண்டனர். அதில் ஒரு வாட்டசாட்டமான இளைஞன்
" ஹாய் ஐ ம் அஜய். நீங்க ஆக்ட்றஸ் பிருந்தாதானே" என்று கேட்க அவளும் புன்னகையுடன்
" ஆமா" என்றவளிடம் அவன்
"தமிழ் நாட்டுல வெச்சே உங்க கிட்ட பேசனும்னு ரொம்ப ஆவளோட இருந்தேன். ஆனா உங்கள சந்திக்கவே முடியல. இது என்னோட கார்ட், நீங்க எந்த நேரம் வேணும்னாலும் என்ன காண்டாக்ட் பண்ணுங்க" என்று கூற அவள் பட படவென பேசும் அவனிடம்
"நீங்க யார்னு சொல்லவே இல்லையே?" என்று கேட்க அவன் புன்னகையுடன்
"நான் ஸ்கை நைன் புரொடக்சன் முதலாளியோட மகன்" என்று கூற அவளும் அவனின் கார்ட்டை வாங்கி வைத்துக்கொண்டாள்.
----------------
கதை இனி இலங்கையில் பயணிக்கும் என்பதால் இந்திய நண்பர்களுக்கு இலகுவாக இடங்களை புரிந்துகொள்ள சில படங்களையும் இணைக்க உத்தேசித்துள்ளேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro