12
"ஹலோ விக்ரம்" என்க
மறுமுனையில் "சொல்லுங்க மேடம்"
என்றவனை பிருந்தா "வெளில போகலாம்னு இருக்கேன். நீங்க வந்தீங்கன்னா ஈசியா இருக்கும்" என்று கூறினால். இதைக்கேட்டவன் கொஞ்சம் ஆச்சரியமாக அவள் குரலில் தெரிந்த உற்சாகத்தை அவனும் உள்வாங்கியவனாக
"சரி மேடம், நான் இன்னும் ஒரு மணி நேரத்துல வரேன். வந்ததும் எங்கெங்க போகனும்னு சொல்லுங்க அதுக்கு ஏற்ற மாதிரி ப்ளான் பண்ணலாம்" என்றான்.
அதற்கு பிருந்தா" ஒரு பிளானும் தேவை இல்லை. நான் சொல்ற இடத்துக்கு மட்டும் போனா போதும்" என்று கூற ஆச்சரியமடைந்தவன்
"சரி சொல்லுங்க எங்க போகனும்"என்று கேட்டான்.
அவள் "பூவரசன் குலம்" என்று கூற கேட்டவன் கொஞ்சம் ஆச்சரியமடைந்து "பூவரசன் குலம்?" என்று இழுக்க
அதற்கு பிருந்தா" அது வவுனியாவில இருக்கு. எனக்கு அந்த ஊருக்கு போகனும்" என்க அவனும்
"சரி மேடம் அப்படியே பண்ணிடலாம். ஏசி வேன் ஏற்பாடு பண்ணட்டுமா இல்லை கார் போதுமா?" என்று கேட்க
அவள் "கார் போதும், நீங்க டிரைவ் பண்ணுவீங்கதானே?" என்று கேட்டவளை
அவன் "ஆமா மேடம்" என்று கூற
எரிச்சலுற்ற பிருந்தா "அய்யோ கடவுளே இந்த மேடத்த கொஞ்சம் விடுங்களேன்!!! எரிச்சலா இருக்கு. என்ன பிருந்தான்னே கூப்பிடுங்க" என்றால்.
அதற்கு இதழ்களில் புன்னகையை பதித்தவன்" சரி பிருந்தா நான் டிரைவ் பண்ணுவேன். ஆனா ஏதும் ஆக்சிடண்ட் ஆச்சின்னா நான் பொறுப்பு கிடையாது" என்றான்.
"அப்போ என் உயிருக்கு உத்தரவாதம் இல்லைன்னு சொல்ரீங்க. சரி பரவாயில்லை. எங்கேயோ போக வேண்டிய உசிரு உங்க மண்ணுல போகட்டுமே" என்றவள் மேலும்" சரி அப்போ நாளைக்கு காலைல போகலாம். எல்லா ஏற்பாட்டையும் செஞ்சிட்டு சொல்லுங்க" என்று கூறினால். அதற்கு அவனும் விளையாட்டாக
"அதெல்லாம் ஒரு ஏற்பாடும் இல்லை. நீங்க கட்டின புடவையோட, இல்லல்ல கட்டின சல்வாரோட வந்த போதும்" என்றவனை பிருந்தா குரலில் கொஞ்சம் கடுமையை கொண்டு வந்து
"Are you trying to flirt with me?!!!. உங்கள பேர மட்டும்தான் சொல்லி கூப்பிட சொன்னேன். இப்படி வழிஞ்சி பேச சொல்லல" என்றவளை
விக்ரம் சீரியசாக "சரி மேடம்" என்று கூற அவளுக்கு உண்மையிலேயே சிரிப்பு வந்தது. "நிஜமா இப்போ நீங்க flirt பண்ணத்தான் டிரை பண்ணுறீங்கன்னு தெரியுது மிஸ்டர் விக்ரம். காலையில நேரத்துக்கு வாங்க" என்று கூறி போனை கட் செய்தால்.
விக்ரம் எப்பொழுதும் தன் அருகில் இருப்பவர்களை கலகலப்பாக வைத்திருக்கும் கலை தெரிந்தவன். பாடசாலை, காலேஜ் என்று தொடங்கி அவனை சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவனது தொழிலில் கூட அது அவனுக்கு பெரிதாக உதவியது. அவனை ஒரு தடவை guide ஆக பயன்படுத்தியவர்கள் அவனையே தங்களின் எல்லா பயணங்களுக்கும் guide ஆக கேட்பார்கள். இதுவே அவனை அவனது நிறுவனத்தின் செல்ல பிள்ளையாக இருக்க உதவியது.
அடுத்த நாள் காலை காரை எடுத்துகொண்டு பிருந்தாவை ஏற்றியவன் அவள் கைகளில் சிறிய ஒரு பை மட்டும் இருப்பதை மட்டும் கண்டவன்
"என்ன மேடம், வேற டிறஸ் ஏதும் எடுக்கலையா. சின்ன பேக் ஒன்னோட மட்டும் வந்திருக்கீங்க" அவனை பார்த்து முறைத்தவள் "ப்ளீஸ் விக்ரம் எத்தனை தடவைதான் உங்ககிட்ட சொல்றது மேடம்னு சொல்லவேண்டாம்னு" என்று கூற அவனும் புன்னகைத்து "சரி மிஸ் பிருந்தா, இனிமே நீங்களே சொன்னாலும் மேடம்னு சொல்லமாட்டேன் போதுமா" என்க அவளும் புன்னகைத்து "சரி" என்றால்.
போகும் வழியில் விக்ரம் காரில் ஆங்கில பாடல்களை ஒலிக்கச்செய்ய" ஏன் விக்ரம், நீங்க இங்க்லீஷ் பாட்டுத்தான் கேட்பீங்களோ? தமிழ் பாட்டெல்லாம் கேட்க மாட்டீங்களா?" என்றவளை
"உங்களுக்கு எந்த மாதிரி பாட்டு வேணும்னு சொல்லுங்க போடுறேன்" என்றான்.
"நான் 90s கிட்ஸ், அதுக்கு ஏற்ற மாதிரி போடுங்க பார்க்கலாம்" என்றவளை அவனும் குறும்புடன்
"ஆஹா அப்படியா , நான் இப்போ சிட்சுவேசனுக்கு ஏத்த மாதிரி போடுறேன் பாருங்க" என்றவன்
'சுடிதார் அணிந்து வந்த சுவர்க்கமே' பாடலை ஒலிக்கச்செய்ய அவள் புன்னகையுடன்
"எல்லா பொண்ணுகிட்டயும் இப்படித்தான் ஜொல்லு விடுவீங்களா சார். எது எப்படியோ உங்ககிட்ட பேசுறது ஜாலியா இருக்கு" என்று கூற விக்ரமுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. சாதாரணமாக ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் விளையாட்டாக பேசுவதை பிருந்தா ஏன் இவ்வளவு ரசிக்கிறாள் என யோசிக்க வைத்தது. யுவனில் தொடங்கிய பாடல் ஏஆர் ரஹ்மானில் மாற்றம் பெற்றது அதன் பின் வேறு எங்குமே செல்லவில்லை. அவன் காரில் ஒலித்த அனைத்து ரஹ்மானின் பாடல்களையுக் விக்ரம் அச்சுபிசகின்றி முனுமுனுத்ததை கண்ட பிருந்தா
"என்ன சார் , ரஹ்மான் என்றால் ரொம்ப பிடிக்குமோ" என்று கேட்டாள்.
"பிடிக்குமாவா, என் கைய வெட்டினேன்னா ஒரு பக்கம் ஐஸ்வர்யா ராய் என்றும் மத்தபக்கம் ஏஆர் ரஹ்மான் என்றும் தான் வரும்" என்க அவளோ
"ஐஸ்வர்யா ராயா? ஹாஹா உங்களுக்கு ஆண்டீஸ்தான் பிடிக்கும் போல" என்று கூற சடன் ப்ரேக் போட்டவன் அவளை முறைத்தான்...
"இப்போ ஒரு கொலை விழப்போகுது. ஆண்டியாம்ல ஆண்டி. உலக அழகின்னா அது ஐஸ்வர்யா ராய்தான். உங்களுக்கெல்லாம் பொறாமை. இப்போ உங்களுக்கு இருபத்தி ஆறு வயசா. எங்க ஐசு வயசுல நீங்கதான் ஆண்டிமாதிரி இருப்பீங்க. ஏன் இப்பவே ஆண்டி மாதிரிதான் இருக்கீங்க" என்றவன் விளையாட்டாக கூறுகின்றானா அல்லது சீரியசாக கூறுகின்றானா என பிருந்தாவால் கணிக்க முடியவில்லை.
அதன் பின் இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பிருந்தாவுக்கோ கொஞ்சம் கவலையாக இருந்தது விக்ரம் எதுவும் பேசாமல் வந்தது.
"சாரி விக்ரம். நான் சும்மா தான் சொன்னேன். நீங்க சீரியசா எடுத்துக்குவீங்கன்னு நினைக்கல" என்க அவனும் "இட்ஸ் ஓக்கே" என்று ஏஆர் ரஹ்மானின் பாடலுடன் பூவரசன் குலம் வந்து சேர்ந்தனர்.
" இங்க ஏதும் தெரிஞ்சவங்க இருக்காங்களா? அட்றஸ் ஏதும் வெச்சிருக்கீங்களா?" என்று கேட்க அவள் அவனுக்கு இடது, வலம் என்று வழி சொல்லிக்கொண்டே செல்ல விக்ரமுக்கு மேலும் ஆச்சரியமானது.
பூவரசன் குலம் இருபது வருடங்களுக்கு முன் இருந்த இயற்கை அழகு மறைந்து செயற்கை ஆடம்பரத்தில் திளைத்திருந்தது. அவள் கூறிய வழிகாட்டுதலின் படி அவர்கள் ஒரு பாழடைந்து வீட்டிற்கு முன் வந்து நின்றனர். அந்த வீட்டை கண்டதும் பிருந்தாவுக்கு கண்கள் கலங்கி சொட்டு சொட்டாக வரத்துவங்கிய கண்ணீர் அருவி போல எந்த ஒரு தடையும் இன்றி வழிந்து கொண்டே இருந்தது.
இங்கு விக்ரமின் நிலைதான் என்னவென்று கூற முடியாத நிலையில் இருந்தது. காரணம் இந்தியாவில் இருந்து வந்த ஒரு பெண் இலங்கையில் இருப்பவர்களே பெரிதாக அறிந்திராத பூவரசன் குலம் செல்ல வேண்டும் என்றது அவனுக்கு முதல் அதிர்ச்சி. ஆனால் இங்கு வந்த அவள் ஒரு பாழடைந்த வீட்டுக்கு வழிகாட்டி சென்று அங்கு உட்கார்ந்து கொண்டு அழுதுகொண்டிருப்பதை கண்டவனுக்கு என்ன செய்வது என்றும் புரியவில்லை.
அவள் அருகில் சென்றவன் " என்னாச்சி பிருந்தா? ஏன் அழறீங்க" என்று அவள் தோள்களை தொட நெருப்பு தீண்டியது போல உணர்ந்தவள்
"கைய எடுங்க இல்லேன்னா அசிங்கமாகிடும். நீங்க கைட் தானே. போய் உங்க வேலைய மட்டும் பாருங்க. நான் சொல்றப்போ மட்டும் வந்தா போதும்" என்க அவனுக்கு எதுவுமே புரியவில்லை. இவ்வளவு நேரமும் தன்னுடன் ஜாலியாக பேசி வந்தவள், தான் பேசவில்லை என்று தெரிந்து மன்னிப்பு கேட்ட ஒரு பெண் இப்பொழுது என்ன காரணம் என்றே தெரியாமல் எரிந்து விழுவதை பார்த்தவனுக்கு எதுவும் புரியவில்லை. அவள் கூறியதை கேட்டு தனியாக காரில் வந்தமர்ந்தவன் தனது மொபைலை
எடுத்து செய்திகளை படிக்க தொடங்கினான்.
நான்கு மணி நேரம் கழித்து அழுது வீங்கிய கண்களுடன் வந்தவளை கண்டவன் எதுவுமே பேசவில்லை. காலையில் அவள் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடைக்கு வானில் இருந்து இறங்கிய தேவதை போல இருந்தவள் இப்போது அந்த ஆடை முழுவதும் அந்த பாழடைந்த வீட்டின் தூசியும் அழுக்கும் சேர்ந்து அவளை கசங்கிய பூவாக காட்டியது.
காரில் வந்து அமர்ந்தவள்" போகலாம்" என்று கூற அவனும் பேச்சை வளர்க்க விரும்பாமல்
"எங்கே போகனும்" என்று கேள்வியாக கேட்க அவள் "ரூமிற்கு" என்று கூறினால்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro