1
"கட் கட் கட்" என்று கூற அங்கிருந்த எல்லோரும் அவனை புதுமையாக பார்க்க அங்கு நடித்துக்கொண்டிருந்த ஹீரோ அந்த டைரக்டரை நோக்கி
"இப்போ என்ன சார்? இன்னுமொரு டேக் ஆ?" என்று எரிச்சலுற்றவனை அவனால் எதுவுமே கூற முடியவில்லை. இரண்டு முறை தேசிய விருது வாங்கிய சிங்கிள் டேக் ஹீரோ என்று பெயர் பெற்ற ஷ்யாமிடம் எப்படி உங்கள் நடிப்பு சரியில்லை என்று எப்படி அவனால் கூற முடியும். அவன் மீது நம்பிக்கை வைத்திருந்த அவனது உதவியாளர்கள் உடனே ஷ்யாமிடம் சென்று ஒரு சில மாற்றங்களை கூற அவனோ
"ஏன் உங்க டைரக்டர் என்கிட்ட வந்து சொல்ல மாட்டாரா? முதல் படத்துலயே இவ்வளவு ஆட்டிடியூட் காமிக்கிறாரு இட்ஸ் நாட் குட் பார் ஹிம்." என எரிச்சலுடன் ஆரம்பித்து அக்கறையில் முடித்துக்கொண்டான். இறுதி நாள் சூட்டிங்க் முடிந்ததுமே எல்லோருக்கும் புரிந்தது இந்த திரைப்படம் ஒரு அல்ட்றா ப்ளாக்பஸ்டர் திரைப்பட பட்டியலில் இணைந்து கொள்ள போகின்றது என்று.
மூன்று மாதத்தின் பின் நடைபெற்ற அவார்ட் பங்க்சனில்,
"சிறந்த திரைப்படமாக இந்த வருடம் எந்த திரைப்படம் என்று நான் கூற வேண்டியதில்லை. சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இயக்குனர் என எல்லா அவார்ட் பங்க்சனிலும் விருதுகளை வென்று குவித்த திரைப்படம் 'கண்சிமிட்டும் வின்மீண்கள்' திரைப்படத்திற்கே எங்களுடைய அவார்ட் பங்க்சனிலும் சந்தேகத்துக்கு இடமின்றி பெறுகின்றது. இத்திரைப்படத்தின் சிறந்த நடிகர் ஷ்யாம், துணை நடிகை பிருந்தாவும் இங்கிருக்க திரைப்படத்தின் இயக்குனர் இங்கில்லை. அவருடைய விருதையும் அவரின் நண்பர் ஷ்யாமே பெறுவார்" என்று கூற அவனது விருதையும் சிறந்த டைரக்டருக்கான விருதையும் ஷ்யாமே பெற்றுக்கொள்ள விழா ஒருங்கினைப்பாளரை நோக்கி ஷ்யாம்
"நான் ஒரு ரெண்டு நிமிசம் பேசலாமா?" என்று கேட்க அங்கிருந்த எல்லோருமே அவனை ஆச்சரியமாக பார்த்தனர். காரணம் எட்டு படங்களில் மட்டுமே நடித்து தற்போது மூன்று தேசிய விருதுகள் மற்றும் இரண்டு கோல்டன் க்லோப் விருதுகளுடன் சேர்த்து மொத்தமாக இருபது விருதுகளை தன் கையில் வைத்திருந்தவன் எந்த ஒரு விழா மேடையிலும் பேசியது இல்லை. காரணம் அவனுக்கு மேடைகளில் சரியாக பேச வராது. ஆனால் இன்று அவனாகவே பேச கேட்டது எல்லோரரையும் ஆச்சரியப்படுத்தியதில் எந்த தவறுமே இல்லை.
தங்களின் விழா நிகழ்வுக்கே பெரிய வெற்றியாக ஷ்யாமின் பேச்சு இருக்க போகின்றது என்பதை உணர்ந்த விழா ஒருங்கிணைப்பாளர் உடனே அவனின் கைகளில் மைக் தரப்பட்டது.
"சார் ஒரு இரண்டு வார்த்தை பேசிட்டு போங்க "என்று கூற இதழில் புன்னகையுடன் வர அரங்கமே கரகோசமிட்டது. ஷ்யாமிற்கு என்றும் அவனுக்கு என்று தனியான ரசிகர் கூட்டம் எல்லாம் இல்லை. அவனுக்கு ரசிகர் பட்டாளம் என்பதை விட அவனது நடிப்புக்கு ரசிகர் பட்டாளம் இருப்பதே உண்மை.
மைக்கை கையில் எடுத்தவன் அது Shure SLX2 என்றிருக்க புன்னகைத்தவன் தனது கையில் இருந்த zenith கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு
"நான் ரொம்ப நேரத்த எடுத்துக்க விரும்பல. இது என்னோட எட்டாவது திரைப்படம். நான் இந்த திரைப்படத்தோட சேர்த்து மூன்று தேசிய விருது வாங்கிவிட்டேன். மற்ற இரண்டு தேசிய விருதுகளும் என்னோட நடிப்புக்கு கிடைத்திருந்தாலும் அந்த படம் எதுவுமே கமர்ஷியலா வெற்றிய கொடுக்கல. ஆனா இந்த படம் காமர்ஷியல் வெற்றியோட சேர்த்து எனக்கும் போகின்ற இடமெல்லாம் விருதுகளை பெற்றுக் கொடுக்கின்றது. நான் சின்ன வயசா இருக்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கின்றேன். ஆனால் அந்த நேரங்கள்ள கூட அம்மா டிறஸ் வாங்க காசு கொடுத்தா அந்த காசுக்கு கிடைக்கிற டிறஸ்ஸ வாங்காம அம்மா கொடுக்குற காச சேர்த்து வெச்சு எனக்கு பிடிச்ச நல்ல டிறஸ்ஸையே வாங்குவேன். இன்னைக்கு என் கைல world best class mic இருக்கு. அதுல நான் பேசுறேன்னு நினைக்கும் போது என் லைப்ல நான் ஏதோ சாதிச்சுட்டேன்னு நினைக்கிறேன்.
நான் ஏன் என்னோட சின்ன வயசு காலத்தை சொல்றேன்னா எனக்காச்சும் அம்மா அப்புறம் எனக்கு உதவி செய்ய நிறைய நண்பர்கள் இருந்தாங்க. ஆனா இந்த படத்தோட டைரக்டர் வினீத்துக்கு யாருமே இல்லை. சின்ன வயசுலயே அவனோட பேரண்ட்ஸ் இறந்துட்டாங்க. சின்ன வயசுல அவரோட வீடு எங்க வீட்டுக்கு அருகில் இருந்ததால அவரும் அவரது தங்கச்சியும் எங்களுடைய வீட்டில்தான் வளர்ந்தாங்க. ஆனா நான் அவருக்கு முன்னாடியே சினிமால கொஞ்சம் பேமஸ் ஆனாலும் என்னுடைய உதவிய கொஞ்சம் கூட எதிர்பார்க்காம அவர் தன்னுடைய சொந்த முயற்சியிலேயே இந்த வெற்றி பெற்றுள்ளார். சொல்ல போனால் இந்த திரைப்படத்துக்கு ஆரம்பத்தில் ஹீரோவாக இரண்டு நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு சூட்டிங்க் நடந்திருந்தாலும் கதையில் சில மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியதற்காக தனது கதையில் ஒரு எழுத்தை கூட மாற்ற மாட்டேன் என்று கூறிய போது இயக்குனர் மீது தயாரிப்பாளர் வைத்திருந்த நம்பிக்கை காரணமாக எனக்கு இந்த படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது என்பது உங்கள் யாருக்குமே தெரியாத உண்மை.
எனக்கு வினீத் தம்பி மாதிரி. இதை நான் இன்னைக்கு சொல்ல காரணம் இருக்கு. அது என்ன காரணம்னு சொல்ல போறதில்ல. உங்களுக்கே அது என்னவென்று சில நாட்கள்ள புரியும். ஐ லவ் யு வினீத்" என்று கண்களில் கண்ணீர் துளிக்க அவ்விடத்தை விட்டு சென்றவன் விழா முடியும் வரை கூட இருக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான். எப்போதும் தனியாகவே கார் ஓட்டும் பழக்கம் கொண்ட ஷ்யாம் இன்று வேகமாக காரை ஓட்டிக்கொண்டிருந்தான். காரை யாருமில்லாத ஒரு ஒதுக்குப்புறமாக காரை நிறுத்தியவன் கையில் இருந்த சிறந்த இயக்குனருக்கான விருதை பார்த்தவன் அதை தூக்கி கீழே போட்டு தன் கால்களால் மிதித்தவன்
"உனக்கெல்லாம் எதுக்குடா சிறந்த இயக்குனருக்கான விருது. கோழை கோழை உன்ன என் கையால கொல்லனும்னு இருந்தேன் தப்பிச்சிட்ட" என்று கூற அழ ஆரம்பித்தவன் தன் கால்களால் மிதித்த அந்த விருதை தன்கைகளில் வைத்துக்கொண்டு சின்னஞ்சிறு குழந்தையை தடவிக்கொடுப்பது போல தடவி
"வினீத் ஐ அம் சாரிடா. என்ன மன்னிச்சிடு.என்னாலதானே உனக்கு இப்படி ஆச்சு. என்ன மன்னிச்சிடுடா" என்று அழுதவனை அவனது போன் தனக்கு பிடித்த 'ஜீன்ஸ் திரைப்படத்தில் தனக்கு பிடித்த the bet ரிங்க்டோன் ஒலிக்க போனை கையில் எடுத்தவன் அது பிருந்தா என்று காட்டியது. போனை சைலண்டில் போட்டவன் காரை எடுத்துக்கொண்டு வீடு சென்றான்.
வீட்டிற்கு வந்தவனை அவனது தாய்
"என்னப்பா இன்னைக்கும் அவார்ட் பங்க்சனா?" என்று வினவ
"ஆமாம்மா, இன்னைக்கும் வினீத்தோட படத்துக்கு மூன்று விருதுமா" என்றவனை அவனின் தாய் கவலையாக பார்த்தவர் அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி
"இங்க பாருப்பா, வினீத் இப்படிப்பண்ணுவான்னு கொஞ்சமும் நினைக்கல. உனக்கு அவன் மேல ரொம்ப கோபம் இருக்கும். ஆனா என்னால அவன் மேல கோபப்பட முடியல. அவன் எது செஞ்சாலும் சரியா யோசிச்சுதான் செய்வான் என்ற நம்பிக்கைப்பா. அதுவும் என் வயித்துல பொறந்த உன்னைவிட வளர்த்த அவன் மேல எனக்கு நம்பிக்கை அதிகம்னு உனக்கே தெரியும். அவன் அப்படி பண்ணதுல கண்டிப்பா ஏதோ ஒன்னு இருக்கு" என்று கூற தன் தாயை கோபமாக பார்த்தவன் அவரின் கைகளை தட்டிவிட்டு தன் அறைக்கு சென்றான்.
அங்கு அவனும் வினீத்தும் சிரித்துக்கொண்டிருக்கும் போட்டோவில் தலைக்கு எண்ணெய் வைத்து வகிடெடுத்து இருந்த தன் சிறு வயது தோழன், தன் சகோதரன், தன் ரோல் மாடல் அவன் முகத்துக்கு முன் அவனுக்கு சொந்தமான விருதை காட்டியவன்
"வினீத் இது உன்னோட ஒரு படத்துக்கு கிடைச்சிருக்குற ஆறாவது அவார்ட். இந்த வருசம் எந்த அவார்ட் பங்க்சனுக்கு போனாலும் நம்ம மூனு பேருக்கும் எந்த சந்தேகமும் இல்லாம அவார்ட் கொடுக்குறாங்க. எந்த அவார்ட் பங்க்சனிலும் பேசாத என்னையே உனக்காக பேச வெச்சிட்டீயே டா" என்று அந்த அவார்ட்டை அவர்கள் இருவரும் இருக்கும் போட்டோவில் தூக்கி வீச அந்த போட்டோ ப்ரேமில் இருந்த கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு உடனே உள்ளே வந்த மீனாக்ஷியை அவன் ஒரு வெற்றுப்பார்வை பார்க்க அவளோ எதுவும் பேசாமல் அவனுக்கு முட்டை ஆம்லட்டும் ஐஸ் காபியையும் அங்கிருந்த டேபிளில் வைத்துவைட்டு உடைந்த கண்ணாடி சில்லுகளை தன் கைகளால் அள்ளி அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போட்டாள்.
சிறந்த இயக்குனருக்கான விருதை தன் கைகளால் எடுத்து அதை வருடியவள் வினீத்தும் ஷ்யாமும் இருக்கும் புகைப்படத்தை மீண்டும் ப்ரேம் செய்வதற்காக எடுத்து சென்றால்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro