அத்தியாயம் - 4💫
ரதியின் உடல் ஐஸ் சில் வைத்தார் போல் ஜில் என்று இருக்க, அனைவரும் சேர்ந்து ரதியை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.
"டாக்டர் , இப்போ என் பொண்ணு எப்படி இருக்கா ? " என ரதிகென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரூமில் இருந்து வெளியே வந்த , டாக்டரைப் பார்த்துப் பதற்றத்தோடு வினவினார், கண்ணன்.
"ஷி இஸ் பெர்பெக்ட்டிலி ஆல்ரைட், நத்திங் டு வொர்ரி " என்று படங்களில் காட்டும் மருத்துவர்கள் போல் அதே வாக்கியத்தைக் கூறினார், மருத்துவர் ஷ்யாம்.
"என் பொண்ணுக்கு என்ன ஆச்சு ? நல்லாதான் இருந்தா, தீடிருன்னு இன்னிக்கு காலையில மயங்கி கிடந்தாள் " என்று அவளின் இக்கதிக்கு காரணம் அறியாததால் கவலையுடன் கேட்டாள் தேன்மொழி.
"அவுங்க இருக்க கண்டிஷனைப் பார்த்தா , சாப்பிடாம தூங்காம ஒரு வாரம் மேல இருந்திருப்பாங்க போல , ரொம்ப பலவீனமா இருக்காங்க, அந்தப் பொண்ணுக்கு நல்ல ரெஸ்ட் வேண்டும். மதப்படி நீங்க எதுக்கும் கவலைப் பட வேண்டாம் . நல்ல ஹெல்தியான ப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் கொடுங்க , வூட்டமின் டேப்லெட்ஸ் கொடுத்திருக்கேன், அது போதும் " என்று மருந்துச்சீட்டை எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார், மருத்துவர் ஷ்யாம்.
"எப்போ நாங்க வீட்டுக்குக் கூட்டிப் போக டாக்டர் " என்று கண்ணன் கேட்க, " சாயங்காலம் ஒரு சாதாரண செக் அப் பண்ணிட்டு நீங்க கிளம்பலாம் " என்று செவிலியர் ஒருவரை ரதியுடன் இருந்துப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு நகர்ந்தார், மருத்துவர் ஷ்யாம்.
"பிள்ளைகளை உன்னால ஒழுங்காகப் பார்த்துக்க கூட முடியாதா, எல்லாமே நான் தான் பார்க்கணும்மா " என்று கண்ணன் டென்ஷன் ஆகி தேன்மொழியைப் பார்த்து ஏச்சத் தொடங்கினார்.
'இந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்ல, ஹாஸ்பிட்டலுணு கூட பார்க்காம கத்திட்டு இருக்காரு... தனியா பின்னாத்திட்டு இருங்கனு ' என்று மனதில் எண்ணிக் கொண்டு பதில் ஏதும் அவரிடம் கூறாமல் , முறைத்துக் கொண்டே ரூமிற்குள் நுழைந்தாள், தேன்மொழி.
கண்ணன் மருந்து வாங்கி வர மருந்துக் கடைக்குச் சென்றார்.
அதற்குள் கண் விழித்த ரதி, "ராஜேஷ்... நீ செத்தது பத்தாதுனு ஏன் என் உயிரை வாங்குற...ராஜேஜேஜேஜேஷ் " என்று திமிறிக் கொண்டு எழுந்து அங்கு மேஜையில் இருந்த எல்லாப் பொருட்களையும் தள்ளி விட்டாள். அதைப் பார்த்த இரு ஜோடிக் கண்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. என்ன நடக்கிறது என்று அங்கு இருந்த செவிலியருக்கும் தேன்மொழிக்கும் புரியவில்லை.
இவளை சமாளிக்க முடியாமல் செவிலியர், அடுத்த வினாடி மருத்துவர் ஷ்யாம் மை அழைக்க விரைவாகச் சென்றாள்.
"ரதி... ரதி..." என்று எவ்வளவு முயற்சித்தும் தனந்தனியாக தேன்மொழியால் ரதியைக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை.
ரதியோ அவளின் தாயைக் கண்டதும், இரண்டு மூன்று முறை "அம்மா...அம்மா..." என்று மட்டும் கத்திவிட்டு கதி கலங்கி சுருண்டு மயங்கினாள்.
தற்போது, ஷ்யாமும் வந்து விட, எல்லாரும் சேர்ந்து ரதியை படுக்கையில் கிடத்தினர். இதை முழுவதுமாக கவனித்த தேன்மொழி க்கு ரதியைப் பார்த்துப் பயமும் கவலையும் மனதில் தொற்றிக் கொண்டு, அவ்விடம் நகராது சிலைப் போல் நின்றாள்.
அங்கு இருந்த செவிலியர், ராஜேஷ் ஒரு வேளை அவளின் காதலனாக இருக்க நேரிடும் என்று நினைத்து ஷ்யாமிடம் அதைக் கூறினாள். அவரும் அப்படித் தான் இருக்க வேண்டும், அவர் இறந்ததாகச் சொல்கிறாள் தானே , அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கலாம் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்.
இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு , என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள், தேன்மொழி.
மனம் அவள் மகள் அவளின் அப்பாவின் சுய ரூபம் தெரிந்து இந்த மாதிரி காதல் கத்திரிக்காய் எல்லாம் செய்திருக்க முடியாது என்றுக் கூறினாலும், இவர்கள் பேசியதும் ரதிக் கூறியதும் ஒத்துப் போவதுப் போல் தெரிய, குழப்பமான நிலையில் இருந்தாள், தேன்மொழி.
கண்ணனும் ஆதவனும் வந்து விட, அங்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் , ஷ்யாம், அவர்களுக்கு எடுத்துக் கூறினார். பின் , அவரே ரதியின் மயக்கம் தெளிந்தப்பின் கவுன்சில்லிங் குடுப்பதாகக் கூறி விட்டு வெளியேறினார்.
இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த கண்ணனுக்கு ரதி அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றினாலும், மருத்துவர் கூறுவதையும் நம்பாமல் இருக்க முடியவில்லை. தேன்மொழி யைப் பார்த்தவர், ஒன்றும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், தேன்மொழியின் நிலையைக் கண்டு அங்கு இருந்த நாற்காலியில் அமர வைத்தார்.
"அப்பா, அம்முக்கு என்ன ஆச்சுப்பா, ஏன் எந்திருக்கமா இப்படியே இருக்கா ? " என்று வருத்தத்துடன் கேட்டான் ஆதவன்.
"ஒன்னும் இல்ல ஆதவா , எல்லாம் சரி ஆகிடும் " என்று ஆதவனின் தோளைக் கட்டியவாரு சாந்தமாகக் கூறினார் கண்ணன். இதுவரை கண்ணனை இந்த அமைதியில் ஆதவன் பார்திருக்காததால், அவரின் கண்களையேப் பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதவன்.
ஆறு மணி நேரம் கழித்து, இரண்டு மணி அளவில் கண் விழித்தாள், ரதி. அவள் கண் விழிக்க காத்துக் கொண்டு இருந்தவளாய் ,
"அம்மு .." என்று அவளின் அருகில் முயல் வேகத்தில் ஓடிச் சென்று அருகில் வந்து நின்றாள் தேன்மொழி.
ரதியோ ஆமை வேகத்தில் அவள் இருந்த அறையைச் சுற்றியும் கண்களால் அளவு எடுத்துக் கொண்டு இருந்தாள்.
இம்முறை அவளிடம் நிதானம் இருந்தது. ரதியிடம் கேட்கக் கூடிய கேள்விகள் நிறைய இருந்தாலும் , தேன்மொழி அதைப் பற்றி ஏதும் பேசாமல் அமைதிக் காத்தாள். ரதிக்கும் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. எவ்வளுதான் அவள் யோசித்தாலும், அவளுக்கு கழுத்தும் தலையும் வலித்தது தான் தவிர, எதற்கு மருத்துவமனையில் இருக்கிறாள் என்று தெரியவில்லை.
ஆதவனும் கண்ணனும் ஹோட்டலில் இருந்து உணவு வாங்கி வர, அவர்களைக் கண்டதும் ரதிக்கு நடப்பதெல்லாம் கனவா , நிஜமா என்று தெரியாமல் , யோசனையில் மூழ்கி இருந்தாள்.
கண்ணனுக்கு கோவம் வந்தாலும், ரதியின் உடல்நிலையைப் பார்த்து ஏதும் கூற முடியாமல் மருத்துவரை அழைக்கச் சென்றார்.
சில நிமிங்களிலேயே மருத்துவரும் வர, " ஹலோ ரதி.. டாக்டர் ஷ்யாம் ஹீயர்...ஹவ் யூ ஃபீல் ? " என்று அவளின் நாடித் துடிப்பைக் கையைப் பிடித்து கவனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
"ஹை டாக்டர், ஹ்ம்ம்... ஃபைன் " என்றாள் அழுத்தமாக, "இப்போ ஏதும் யோசிக்காம சாப்பிடுங்க...சாப்ட பிறகு நம்ம பேசலாம் , ஓகே !" என்று அவளின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு அவளின் பெற்றோரை வெளியே அழைத்துச் சென்றார்.
ஷ்யாம் அவர்களிடம், ரதியிடம் யாரும் எதைப் பற்றியும் பேச வேண்டாம் எனவும், எப்போதும் போல உணவு உண்ணக் கொடுக்குமாறு சொல்லிவிட்டு நகர்ந்தார்.
மருத்துவரின் ஆலோசனைப்படி அவளும் சாபிட்டு முடித்து, கொஞ்சம் தெளிவு பெற்றிருந்தாள். இவளிடம் யாரும் ஏதும் பேசாமல் இருந்ததால், சற்று கஷ்டமாகத்தான் இருந்தது ரதிக்கு.
கதிரவன் கடலின் மடியில் துயில் கொள்ளச் செல்ல , அவனின் கரங்கள் சுருங்கி , மேகத்தின் ஒளியில் மாலை நேரம் மங்கி மிதந்தது.
"குட் இவினிங் ரதி " என்று ரதியை ப் பார்த்து உற்சாகத்துடன் கூறினார், டாக்டர் ஷ்யாம்.
காலையில் வந்த போது, மருத்துவர் ஷ்யாமை கண்டுக்கிடாத ரதி. இப்போது அவரை நோட்டம் விட்டு கொண்டு இருந்தாள். அவளின் கண்கள் அவரின் சுண்ணாம்பு நிறத் தாடியையும் சட்டை பொத்தான் எப்போது வேணடுமானாலும் வெடிக்க போகும் நிலைமையையும் பார்த்து , அவளுக்கு அவரின் வயதும் இடையும் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.
"ஹை டாக்டர்.. எனக்கு என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்லுறீங்களா ? " என்று தவிப்புடன் கூறினாள், ரதி.
அவளின் பெற்றோரைப் பார்த்து வெளியே கொஞ்சம் இருக்கும் படி கூறினார், ஷ்யாம் . ரதிக்கு கவுன்சில் குடுக்கப் போவதாக எண்ணிய டாக்டர் ஷ்யாம்ற்கு, ரதி காவுன்சிலிங்க் கொடுத்து வெளியே அனுப்பினாள்.
"உங்கப் பொண்ணுக்கு மன நலம் பாதிச்சிருக்குனு நினைக்கிறேன்... ஷி இஸ் அன் ஸ்டேபிள்" என்று அவளின் பெற்றோகளிடம் வந்துக் கூறினார், ஷ்யாம்.
"டாக்டர் நீங்க சொல்றது புரியல " என்றார் கவலையுடன் கண்ணன்.
"உங்கப் பொண்ணுகிட்ட இன்னும் ரெண்டு வாட்டிப் பேசுனா , நான் அவ்வளவு த் தான், எனக்குப் பைத்தியம் பிடிச்சிரும் " என்று கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு பதறிக் கூறினார், ஷ்யாம்.
"டாக்டர் பிளீஸ், காலையில இருந்தே என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்கோம் , கொஞ்சம் என்னன்னு தெளிவா சொல்லுங்க " என்று பொறுமை இழந்தக் கண்ணன் குரலை உயர்த்திக் கேட்டார்.
' அப்பாவும் பொண்ணும் டாக்டர்னுக் கூடப் பார்க்காம மாத்தி மாத்தி கத்துறாங்க ' என்று மனதில் எண்ணிக் கொண்டு உள்ளே நடந்தவற்றை விளக்கினார், ஷ்யாம்.
பொதுவாக சில விஷயங்கள் கேட்டுப் பேசியப் பின் முக்கியமான விடயத்துக்கு வந்தார் , ஷ்யாம்.
" ரதி , நீ என்கிட்ட எதையும் மறைக்காமல் , உண்மையைச் சொன்னால் தான் என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்... யூ ஷுட் கோப்பேரட் வித் மீ ( you should co-operate with me) " என்று தீர்க்கமாகச் சொன்னார், ஷ்யாம்.
சிறிது நேரம் யோசனையில் இருந்த ரதி, 'வேறு வழி இல்லை, நடப்பதும் ஏதும் புரியவில்லை' என்று மனதில் எண்ணிக் கொண்டே " சரி டாக்டர் .. ஐ வில் " என்று பெரும் மூச்சை வெளியே விட்டபடிக் கூறினாள்.
"ராஜேஷ் யாரு ? உங்க காதலனா ? " என்று அவர் ரதியின் கண்களைப் பார்த்துக் கேட்டார்.
"இல்ல டாக்டர், அவன் சின்னப் பையன் " என்று பொறுமையாகப் பதில் கூறினாள்.
"சரி , ராஜேஷ் எப்படிச் செத்தாரு ? " என்று கையில் இருந்த ரெக்கார்டர் டேப்பை ஆன் செய்தார், ஷ்யாம்.
"தெரியாது, ஆனால், அவன் செத்துடானு மட்டும் தெரியும் " என்றாள் ரதி.
"ஓஹ.. பாவம்.. யார் சொன்னாங்க அவன் செதுட்டானு " என்றார் ஷ்யாம்.
"அவனேத் தான் வந்து சொன்னான் " என்றாள்.
"அவன் சாகுறப் போறதுக்கு முன்னாடி கேட்கலமா அவன் செத்தது உனக்கு யார் சொன்னாங்க ? " என்று அவர் தெளிவாகக் கேட்பதாக எண்ணி மீண்டும் கேட்டார்.
"இல்ல சார், அவன் செத்தப் பிறகு தான் வந்து சொன்னான் " என்றாள் ரதி.
"வாட் ? "
~ அவளின் உலகம் தொடரும்!
Hi Guys!
How is the update?
If you have any doubts, suggestions and comments. Please don't hesitate to shoot out your queries!
Thanks for reading!
Please, Don't forget to give your valuable votes and comments!
If you like this story , please share with your friends!
(Sharing is caring)
**Puppy eyes**
உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்💖
Wishing my dear friend a many more happy birthday deardivvyy 💗
The one who introduced me to the world of books and Wattpad as well.
With Lots of Love,
Lolita! 💙
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro