அத்தியாயம் - 13 💫
அவனின் தீடீர் குரலின் வல்லமை அவளுக்குப் பதற்றம் தர, சற்று தல்லாடத்துடன் ஓவியத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு திரும்பினாள். அவளின் அருகில் நித்விக்கைக் கண்ட ரதி, கைக் கால் நடுக்கம் ஏற்படக் கீழே விழச் சென்றாள்.
அதற்குள் அவனின் கரம் விழாமல் அவளின் கையில் இருந்த ஓவியத்தைக் கைப் பற்றியது. இதைச் சற்றும் நித்விக்யிடம் எதிர் பார்க்காத ரதி, புவியிருப்பு சக்திக்குக் கட்டுப்பட்டு கையைத் தரையில் பதித்துக் கீழே விழுந்தாள்.
தரையைப் பார்த்தவாறு "தத்தி " என முனங்கினாள் ரதி.
"ஐய்யயோ ரதி, உனக்கு ஒன்னும் இல்லையே?" ஓவியத்தை டேபிள் மேல் வைத்து விட்டு அவளின் அருகில் மொட்டிப் போட்டு அமர்ந்து அவளின் கையைப் பார்த்தான் நித்விக்.
கையை தடவிக் கொண்டே எழுந்து நிற்க முடியாமல் உதட்டைப் பற்களால் கடித்து கொண்டே அவனை முறைத்தாள். அவளின் பார்வையின் பொருள் அறிந்து "சாரி" என்றான். ரதி ஏதும் பேசாமல் கண்களால் அவனை எரித்து கொண்டு இருந்தாள்.
"நீ பெயின்டிங்க எங்க கீழே போட்டுவிடுவியோனுப் பயந்துடேன், அதான், உண்மையா சாரி" என அவளின் கண்களைத் தேடினான்.
அவன் பார்வையை அலட்சியப் படுத்திவிட்டு "ஹ்ம்ம்... இட்ஸ் ஓகேங்க" என நித்விக்கின் உதவியோடு எழுந்து நின்று காலை உதறினாள்.
"அது எங்க அம்மா வரைந்தது" என கூறி அவளின் கைகளுக்கு ஃபர்ஸ்ட் அய்டு பாக்ஸ்யில் இருந்து ஸ்ப்ரே மட்டும் அடித்துவிட்டு மீண்டும் மணிப்புக் கேட்டான்.
நித்விக் கின் பின்னாடி மாலையுடன் அவனின் தாய்ப் புகைப்படத்தைப் பார்த்த ரதி "சாரிங்க, அது கீழே ஆணியில் தொடுகிட்டு இருந்துச்சு, நானும் அதைக் கீழே விழாமல் பிடிக்கத் தான் ஏறினேன், உங்க கிட்டையேச் சொல்லி இருக்காலம், யோசிக்காமல் ஏரிட்டேன்" எனக் கூறினாள்.
"சரி விடுங்க, காலில் இல்ல வேற எங்கையும் அடிப்பட்டு இருக்கா ரதி "
"அதெல்லாம் இல்ல கை மொட்டிலத் தான் லைட்டா வலிக்குது " என இழுத்துச் சொன்னாள்.
"உங்க அம்மாவை வரச் சொல்லுங்க ரதி, விவரம் சொல்லணும், அந்த ரூமில் வாஷ் பேசின் இருக்கு, முகம் அலம்பிக்கோ" எனக் கூறிவிட்டு நடந்துச் சென்று, அவனின் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
ரதி சில நிமிடங்களில் அவள் இருந்த மற்றொரு அறையில் இருந்து வௌிவந்தாள். துப்பட்டாவைச் சரிச் செய்துக் கொண்டே, அவனை நோக்கி வேகமாக நடந்து வருவதைப் பார்த்த நித்விக் சுழலும் நாற்காலியில் அமர்ந்தவாருப் பின்னாடிச் சென்று கொண்டிருந்தான்.
நித்விக்கை வேகமாக நெருங்கியவள், முன்னால் வந்து விழுந்த ஜடையை ஒரு கையால் பின்னாடிப் போட்டு, அவன் கண்களைப் அவளின் பார்வையினால் சிறைப் பிடித்தாள்.
அவனை இன்னும் ஒரு அடியில் நெருங்கியவள், நித்விக்கிற்கு அவள் அருகே வர வர, இதயத் துடிப்பு பலமாக அடித்தது, அதற்குள் ரதி அவன் அமர்ந்திருந்த நாற்காலியை நெருங்கி வர, ஒரு வினாடிக் கண்களை மூடிக் கொண்டான். அவளோ அங்கு அருகில் இருந்த அவளின் காலணிகளைக் குனிந்து எடுத்து அணிந்துக் கொண்டாள்.
"ஊப்ஃப்... செருப்பு தான் எடுக்க வந்தியா " எனக் கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு, எழுந்து சுவரோடு சாய்ந்து நின்றுக் கொண்டான்.
"ஆமா, ஏன் சார்"
"இந்த ஸ்டூள்ளில் ஏரிருந்தால் எட்டி இருந்திருக்கும் " என ரதி ஹை ஹீல்ஸ் அணிவதைப் பார்த்து அவனுக்குள் சிரித்துக் கொண்டு பிதற்றினான்.
"என்ன ? " என புருவத்தைச் சுருக்கினாள்.
"ஒன்னும் இல்லைன்னுச் சொன்னேன்" என சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
அவனுக்கு முன்னால் இரண்டு அடி எடுத்து வைத்தவள், கால் தடுக்கி "ஐய்யோ சந்திரா " என அவள் சொல்லி முடிப்பதற்குள் ஓவியத்தில், இளவரசன் ரோஜாப் பூவை ஏந்தியதுப் போல் அவனின் அஜானுபாஹு உடலில் சாய்ந்த அவளின் பொன் மேனியைத் தாங்கியது அவனின் கைகள். சிவப்பு வெள்ளை ரோஜா நிறங்களில் இளவரசியாக அவள், ரதி.
இருவரின் கண்களும் ஊடுருவ, அவள், அவன் தொடுகையில் விழி சிமிட்ட மின்னல் வெட்டியதுப் போல் அவன் விழி மூட. அவளின் மனதில் மழைப் பொழிய, அவனின் இதயத்தில் இடி இடிக்க. இவர்களின் ஸ்பரிசம் இவர்களுக்கு இரு வேறாய் அமைந்து, விதியின் செயலால் விளையாடியது.
இருவரும் அவர்களின் சுய நினைவிற்கு வந்து ஒன்றும் நடக்காதது போல் பேசாமல் நகர்ந்து கொண்டனர்.
தேன்மொழி யிடம் ரதியின் உடல் நிலைப் பற்றியும் அவளை வெளியில் இயற்கை சார்ந்த இடத்திற்கும் , காலையில் நடைபயிற்சி மற்றும் தியானம் யோகா அவற்றைத் தினமும் கடைப்பிடிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறினான். நித்விக் அங்கு இருந்த நாட்காட்டியைப் பார்த்து ஒரு வாரம் கழித்து அவர்களை அடுத்த வெள்ளிக் கிழமை கிளின்க்கு வருமாறு கூறினான்.
"ஏதாவது சந்தேகம் இருக்கா? " என இருவரையும் பார்த்துப் பொதுவாகக் கேட்டான்.
"இப்போ ரதிக்கு பரவாலையா ?" எனக் கேட்டார், தேன்மொழி.
"அவுங்க இப்போவே ஆள்ரைட் தான் , சீக்கிரம் சரி ஆகிடுவாங்க, டோண்ட் வொர்ரி மேம். நைட் மட்டும் தனியா தூங்க வைக்காதிங்க" என்றான்.
"சரி டாக்டர் தம்பி" என்றார் தேன்மொழி.
"வேற ஏதும் சந்தேகம் இருக்கா ? "
தேன்மொழி ரதியைப் பார்க்க, "சரி டாக்டர், நாங்க கிளம்புரோம்" என்றாள் ரதி.
"நீங்க எதையும் யோசிக்காமல் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு குடுங்க, அதுவே போதும், டேக் கேர்" வராத புன்னகையை வரவழைத்தான் நித்விக்.
இருவரும் விடைப் பெற்று அன்று வெள்ளிக் கிழமை என்பதால் ராகு காலப் பூஜைக்கு துர்கை அம்மனை வழிபட அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்றனர்.
"ஏன் ரதி, காலேஜ் சேர்ந்த பிறகு நீ கோவிலுக்கே வரவே இல்ல தானே"
"அப்படியா "
"ஆமா, என்கிட்ட எவளோ சயின்ஸ் பேசுற ! எல்லா புனிதத் தலங்களிலும் பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கு, கூட்டு பிரார்த்தனை என நீ தான எல்லாத்தையும் சொன்ன, கடவுள் நம்பிக்கை இல்லனாலும் அதுகாகவாது கொஞ்சம் வர பாரு அம்மு "
"அவ்..என் குட்டி அம்மா இவளோ பேசுறாங்க....சரிங்க குட்டி அம்மா இனி வாரம் ஒரு முறைச் சுற்றிப் பார்க்க வந்திடலாம்" என அர்ச்சனை முடித்த தேங்காய் யைப் தரையில் வைத்து ஒடைத்துக் கொண்டிருந்தாள்.
ரதியைப் பொறுத்த வரையில் அவள் தான் தேன்மொழிக்குத் தாய். தேன்மொழியின் வெளி உலகம் அறியா வெகுளித் தனமும், அவளின் மிகுந்த இரக்க குணமும் அவளுக்கு பல விஷயங்களில் இழப்பை மட்டும் தான் தந்துள்ளது. அதில் பல முறை ரதி தான் உதவி செய்வாள். தேன்மொழிக்கும் ரதி அவளைக் குட்டி அம்மா எனச் செல்லமாகக் கூப்பிடுவது பிடித்துப் பழகிப் போனது.
அங்கு ஷ்யாம் வர தேன்மொழியைப் பார்த்து சிரித்து விட்டு " என்னமா ரதி , எப்படி இருக்க? நித்விக் ஒழுங்கா பார்த்துக் கிடுறானா ? " என நலம் விசாரித்தார்.
" நல்லா இருக்கேன் தாத்தா " என்பதுடன் நிறுத்திக் கொண்டாள்.
"உன்னால தான் என் பேரன் கிட்ட பேச வாய்ப்பு கிடைச்சிருக்கு " என முகம் முழுவதும் அவரின் சிரிப்பு பரவியது.
"என்ன அங்கிள் சொல்லுறீங்க ?" என்றாள் தேன்மொழி.
"ஆமா மா, இந்த வயசான காலத்துல எனக்கு இப்படி ஒரு மனக் கஷ்டம். ஒரே வீட்ல இருந்து, அவன் அம்மா இறந்ததுல இருந்து, என்கிட்ட அவன் சுத்தமா பேசுறது இல்ல , இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக பேசுறான் "
"எல்லாம் சரயாகிவிடும் அங்கிள் " என தேன்மொழி கூறினாள். அதற்குள் ஷ்யாம்மிற்கு கைப்பேசியில் அழைப்பு வர அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தார். அவர்களும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
அன்று இரவும் நித்விக்கின் நினைவில் ஆழ்ந்திருந்தாள் ரதி. வில் போன்ற கண்களால் சந்திரனைப் பார்த்து விடைத் தெரியாதப் பல கேள்வி அம்புகளை எய்துக் கொண்டு இருந்தாள் ரதி. அவளின் கேள்விகளுக்குப் பயந்து மேகங்கள் பின் மறைந்து ஒளிந்து கொண்டார், அவர்.
சந்திரன் தான் பாவம் என்ன செய்வார்? அவளின் எல்லா ரகசியங்களும் அறிந்த ஒரே ஒரு நபர் அவர் தான். இரவில் பல நாள் தூக்கம் தொலைத்தவளுக்கு துணையாக இருக்கும் நிலவை , அவளின் இஸ்ட தெய்வமாக நினைத்துக் கொண்டவள். நாளடைவில் அது ஒரு தலைக் காதலாய் மாறியது. பின், எதற்கெடுத்தாலும் அவரை அழைக்க ஆரம்பித்து விட்டாள்.
இங்கு நித்விக் எழுதும் டைரியின் வரிகளில் ரதி வந்து தங்கிக் கொண்டிருந்தாள். இருவரும் சிறிது நேரத்தில் கண் அயர்ந்து விட்டார்கள்.
நாட்கள் உருண்டோடியது, ரதி காலையில் எழுந்து நடைப் பயிற்சி முடிந்து தோட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்திருந்தாள். கல்லூரி முடிந்து மாலையில் யோகா வகுப்பில் சேர்ந்து தினமும் ஒரு மணி நேரத்தை அங்குக் கழித்தாள். இறுதி ஆண்டு என்பதால், புராஜக்ட் ரிவ்யூ , லேப் டெஸ்ட் என வேறு எதையும் பற்றி யோசிக்க முடியாமல் அவளின் கவனம் முழுவதும் படிப்பில் மூழ்கியது. நித்விக் கிற்கும் எப்போதும் போல் மருத்துவமனை வீடு என அவனின் நாட்கள் சுழன்று கொண்டிருந்தது.
வெள்ளிக் கிழமை வர அன்று மாலை ஆறு மணிக்காக இரு இதயங்கள் துடித்தாளும், இவர்களின் இரு மூளையும் அதை நிராகரித்தது. ரதி தேன்மொழி இல்லாமல் இம்முறை கண்ணன்னோடு கிளினிக் வந்தாள்.
கண்ணனுக்கு நித்விக்கிடம் கவுன்சிலிங் வருவது சுத்தமாகப் பிடிக்கவில்லை, அதற்குக் காரணம் நித்விக் இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த நிலை. இருப்பினும், அதை வெளிக் காட்டாமல் அவனிடம் பொதுவாகப் பேசி முடித்தார் கண்ணன்.
"இன்னும் எத்தனை நாள் ஆகும் டாக்டர் தம்பி " எனக் கேட்டார் கண்ணன்.
"உடல் ரீதியான பிரச்சினைகளாக இருந்தால், இத்தனை நாள் என்று ஒரு மாத்திரையைக் குடுத்து சரிப் பணிறலாம், இது மன ரீதியில் வரக் கூடியது, அது ரதி மனதைப் பொறுத்து தான் சார் இருக்கு, கவலை வேண்டாம், அவுங்க ரொம்ப நாள் இங்கு வர வேண்டியது இருக்காது" என கண்ணனின் மனதின் எண்ணத்தைப் படித்துப் போல் நீண்ட விளக்கம் குடுத்தான் நித்விக்.
"சரி டாக்டர் தம்பி " என கூறிவிட்டு வெளியில் சென்றார், கண்ணன். இங்கு இருவர்களின் முகமும் காலையில் மலர்ந்த மலர்களைப் போல் மலர்ந்து இருந்தது.
"தென் ரதி, ஹவ் ஆர் யூ? " என்றான் நித்விக்.
"ஃபின் சார்" என்றாள் ரதி.
"நீங்கள் யாரையும் நேசிக்கிறீர்களா? " என ஒற்றை விரலை நெற்றியில் தேய்த்துக் கொண்டு கேட்டான் நித்விக்.
அவளின் பதிலுக்காக காத்திருந்தான் நித்விக். இவனின் தீடீர் கேள்வியில், ரதி என்ன சொல்வது என்று தெரியாமல் திருடன் போல் முழித்துக் கொண்டிருந்தாள்.
"இல்லத் தனிப்பட்ட விஷயம் என்றால் சொல்ல வேண்டாம், நான் கேட்டதுக்கு காரணம் இருக்கு அதான்" என அவனின் மூக்கு கண்ணாடியைச் சரி செய்துக் கொண்டே இழுத்தான் நித்விக்.
ரதி ஆமாம் என்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டி....
Hi Guys!
Update pathi ungal karuthai sollungal, thiturathunahh msg potu thitunga, I'm pawam!🙊
Intha update pidichirukunu ninaikiravunga vote podunga.
Thanks for reading!
Lots of love,
Maayaval!💙
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro