Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

லஞ்ச்



வேகமாய் நடந்து வந்து என் காரின் கதவை திறந்து உடனே அங்கிருந்து வண்டியை எடுத்தேன். அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் வெறுப்பும் அருவெறுப்பும் தான் அதிகரித்ததன. எதிர்பார்த்தது போல் என்னுடைய போன் ஒலித்தது. போனைக் கடைக்கண்ணால் பார்த்ததும் அவள் தான் என்று தெரிந்து போனை எடுக்கவில்லை. முதல் முறை போன் அடித்து பின் ஓய்ந்தது. என் கோபத்தை உணர்ந்து அவள் மீண்டும் போன் பண்ணவில்லை.

சற்று தூரம் சென்றதும் தான் தோன்றியது, இப்போது எங்கே செல்வது? பசி வேறு வயிற்றைக் குடைந்தது. மனோஜ்கு போன் அடித்தேன் ஆனால் அவன் போனை எடுக்கவில்லை. போனை மேசையில் வைத்துவிட்டு ஆபீஸ் முழுக்க ரவுண்ட் அடிப்பது அவன் வழக்கம் என்பதால் அவன் போன் எடுக்காததை பொருட்படுத்தவில்லை. போனை எடுக்கவில்லை என்றால் ஆபீஸில் தான் இன்னும் இருக்கிறான் என்று சுதாரித்துக்கொண்டு காரை மீண்டும் ஆபீஸ் பக்கம் செலுத்தினேன். கொஞ்சம் வீராப்பாக ஆபீஸிலிருந்து சென்ற பின் இப்போது திரும்ப வருவது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. Wallet ஐ மறந்து விட்டோம் என்று சமாளித்துக்கொள்ளலாம்.

ஆனால் மனோஜின் மேசையை அடைந்ததும் இன்னொரு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அங்கு அவன் இல்லை. சுற்று முற்றும் தேடி பார்த்தும் அவன் கண்ணில் படவில்லை. அப்போது என் department ஆட்களில் ஒருவளான லாவண்யா என் அருகில் வந்து நின்றாள். லாவண்யாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது காரணம் அவளை வேலைக்கு சேர்த்ததோ இன்டர்வியூ எடுத்ததோ நான் அல்ல. இந்த HR ஆட்கள் ஒரு நாள் அவளை என் cabinகு அழைத்து வந்து, "உங்க departmentகு ஆள் எடுக்கனும்னு சொன்னீங்களே, இவங்கள புதுசா சேர்த்திருக்கோம்," என்று கையோடு ஒப்படைத்துவிட்டனர்.

"சார், அரை மணி நேரத்துக்கு முன்னாடியே நம்ம department இல் எல்லாரும் சேர்ந்து லஞ்ச் போய்ட்டாங்க."

ம்ம்ம் என்று தலையசைத்தேன். பிறகு தோன்றியது, அவள் மட்டும் ஏன் இன்னும் ஆபீஸில் இருந்தாள்?

"அவங்கக்கூட நீங்களும் போகலையா லாவண்யா?"

"இல்ல சார். அவங்க போற இடம் என் hostel இலிருந்து தூரம். லஞ்ச் முடிச்சுட்டு திரும்ப சாயங்காலம் டிராபிக் இல் hostel வர்றதுக்குள்ள ரொம்ப tired ஆகிடும்னு."

மீண்டும் தன் மேசைக்குச் சென்று கணினியை தட்ட ஆரம்பித்த அவளைக் காணும் போது உள்ளூர ஒரு பரிதாபம். ஆபீஸ் வெறிச்சோடி இருந்தது மதிய நேரத்தில்.

"லாவண்யா, சரி வாங்க. லஞ்ச் போகலாம் boss கூட" சிரித்தேன்.

அவள் கண்கள் விரிந்தன ஆச்சரியத்தில். keyboardஇல் விரல்களின் ஓசை நின்றது.

"உங்க thingsஐ எடுத்துட்டு வாங்க. காரில் காத்திருக்கேன். The black car at the front, you know right?" என்று அவள் மறுப்பு அளிக்க வழியில்லாமல் கூறிவிட்டு கிளம்பினேன்.

ஓரிரு நிமிடங்களில் அவள் காரில் ஏறினாள்.

"எந்த ஊர் நீங்க?"

"என்ன சார்?"

"ஹாஸ்டல்னு சொன்னீங்களே அதான் எந்த ஊர்னு கேட்டேன்."

"கும்பகோணம்"

"எவ்ளோ நாளா சென்னையில் வேலை பார்க்குறீங்க?"

"3 வருஷமா"

அதோடு உரையாடல் முற்றுப்பெற்றது. பிறகு junctionஇல் கார் நின்றபோது மீண்டும் பேச்சுக் கொடுத்தேன்.

"எங்க சாப்ட போலாம்? Any idea?"

வெகு ஆச்சரியமாக, "So Pho நு Vietnamese restaurant கொஞ்சம் தூரத்துல இருக்கு. அங்க போலாமா?" என்று பதில் வந்தது.

"மொட்டையா பெயர் சொன்னா எப்படி. Address சொல்லுங்க."

"வேளச்சேரி கிட்ட இருக்கு."

"ஏற்கனவே போயிருக்கீங்களா?"

"இல்ல சார். இது தான் முதல் முறை. புது புது உணவு ட்றை பண்ணனும்னு எனக்கு ஆசை. ஆனால் நடுத்தர குடும்பங்களுக்கு நம் இந்திய உணவு இல்லையென்றால் பர்கர், pizza மாதிரி fast food. வேற நாட்டு Cuisine சாப்டு பார்க்க முன்வர மாட்டாங்க. என்னோட ஹாஸ்டல் தோழிகளுடன் வெளிய வந்தால் இது தான் நடக்கும். பாஸ் இதுலாம் சாப்டு பழக்கமிருக்கும். அதுவும் நீங்க இன்னைக்கு காரில்கூட்டிட்டு போறீங்க சீக்கிரமா போய்ட்டு வந்துடலாம்."

"Sure."

ஒரு மணி நேரத்துக்குள் So Pho உணவகத்துக்கு முன் கார் நின்றது. உணவகம் upper middle கிளாஸ் இடமாக இருந்தது. ஊருக்குத் தன் சம்பாத்தியத்தை அனுப்பும் hostel பெண்களுக்கு கட்டுபடியாகாது என்று அவள் சொன்னது இப்போது புலப்பட்டது. சற்று விசாலமாகவும் வசதியாகவும் இருந்தது உணவகம். அமர்ந்தவுடனே waiter ஒருவர் எங்களைக் கவனித்தார். மெனு கார்ட் ஐ அலசிவிட்டு என் எதிரில் அமர்ந்திருந்த அவளை நோக்கினேன். எனக்கு முன்பே மெனு கார்ட் ஐ அலசி ஆராய்ந்துவிட்ட கண்கள் உணவகத்தின் அலங்காரத்தை நோட்டமிட்டன.

"என்ன ஆர்டர் பண்றதுன்னு பார்த்துட்டீங்களா லாவண்யா?"

அவள் தன் பார்வையை என்மேல் செலுத்தினாள். ஆம் என்று அவள் பதிலளித்தும் waiter ஐ அழைத்தேன். அவள் ஆர்டர் செய்ததும் நான் எனக்கு ஒரு beef noodles with soup base ஒன்றை தேர்வு செய்தேன்.

waiter சென்றதும் அவள் கேட்டாள், "beef சாப்டுவீங்களா சார்?"

அலட்சியமாக ம்ம்ம் என்று தலை அசைத்தேன். "நான் beef சாப்பிடுவது உங்களுக்கு comfortable ஆ இல்லைன்னா நான் சிக்கன் ஆர்டர் பண்ணவா?"

உடனே அவள் மறுத்தாள், "அப்டிலாம் இல்ல. ஜஸ்ட் curiousity இல் கேட்டேன்."

அவளின் கேள்வியைப் புரிந்துக்கொண்டு, "கடவுள் மேல் நம்பிக்கை இருக்கு. ஆனால் மதத்தின் மேல் நம்பிக்கை இல்லை."

"எனக்கு இரண்டின் மேலும் நம்பிக்கை இல்லை சார்."

"அப்போ சாப்பிட வேண்டியது தான? வியட்நாமின் கலாச்சாரத்தில் இந்த beef noodles பெயர் போனது!"

"எனக்கும் ஆசை தான் ஆனால் சில பழக்க வழக்கங்களை மாற்ற நாள் எடுக்கும்."

சுமார் ஒன்றரை மணி நேரமாக உரையாடிக்கொண்டே சாப்பிட்டோம். கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தாலும் உலகத்தை அனுபவிக்கும் ஆசை அவளிடம் இருந்ததை உணர்தேன். அவளுடைய background வைத்து சிந்தித்தால் தன் பெற்றோரின் ஏழ்மை நிலையிலிருந்து இவள் விடுபட்டு தன் சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வாழ்ந்துக்கொண்டிருகிறாள் என்றும் புரிந்தது. உலக சினிமாவையும் கிரிக்கெட்ஐயும் சுற்றி உரையாடல் அமைந்தது அன்று. பேச்சுக் கொடுக்கும் அளவுக்குத் தெரிந்துவைத்திருந்தாள் எல்லாவற்றையும்.

லஞ்ச் முடிந்ததும் என் காரிலே அவளை hostel அருகில் இறக்கிவிட்டேன். இந்த போக்குவரத்தில் U-turn செய்ய கடினமாக இருக்கும் என்று மெயின் ரோடு இலே காரை நிப்பாட்ட சொன்னாள். லாவண்யா இறங்கியதும் காரை வீட்டின் பக்கம் செலுத்தினேன்.

மணி 5.3௦ஐ நெருங்கியது. இப்போது வீட்டில் அவள் இருப்பாளா என்று சிந்தனை சிதறியது. காலையில் தன் சக ஊழியர்களிடம் தயங்கி பேசிய அவள், கூனி குறுகி என் அருகில் நின்ற அவள், மித்திரன் என்று தொய்வான குரலில் கூப்பிட்ட அவள். வீட்டுக்கு வந்திருப்பாளோ இந்நேரம்?

***

[I apologise for the delay in updates. I am a lazy person. I think about a chapter for days but I need a sudden spark of energy to write and in 30mins, I'm done.

எல்லா chapterஉம் ஹீரோ ஹீரோயின் பற்றியே இருக்க முடியாதுல;) இதுவரைக்கும் 3 வில்லனை introduce பண்ணிட்டேன் நு உங்களுக்கு தெரியுமா? ஹாஹா! மேல போட்டோ நல்லாருக்குல்ல? I also removed cast. எதார்த்தத்துக்கு முகம் அவசியமில்லை.

Vote and comment if you liked the chapter! Special thanks to my twitter friends for the constructive feedback and encouragement. Yes, I'm on twitter too;-)]

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro