Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பிரிவு

திங்களிலிருந்து வியாழன் வரை என்னிடம் பேச எத்தனையோ யுத்திகளைக் கையாண்டாள் ஆனால் எதற்கும் நான் இடங்கொடுக்கவில்லை. டைனிங் டேபிளில் இருந்த உணவு மூடியே இருந்தது ஒவ்வொரு காலையும் மாலையும் கூடவே அங்கே அவளும் பொறுமையாகக் காத்திருந்தாள். ஆனால் வீடு என்பது தூங்குவதற்கான விடுதியாய் மாறியது. இரவில் தாமதமாய் வருவதும் வந்தாலும் sofaவோடு என்னைப் பொருத்திக்கொள்வதுமாய் விலகி நின்றேன். 

அவ்வாரயிறுதியில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நிகழ்ந்தன. ஒன்று நித்தின் முன்கூட்டியே UK க்கு திரும்பியது. எப்படியோ நிலைமையை சுதாரித்துக்கொண்டு 2 வாரங்கள் முன்கூட்டியே திரும்பி சென்றுவிட்டான். இறுதி நாளன்று சின்ன பார்ட்டியும் வைத்தார்கள் ஆபீஸில் காரணம் அவனை எல்லோருக்கும் அதிகம் பிடித்திவிட்டது குறுகிய காலத்தில். எனக்கும் தான். ஆனால் இப்போது விரக்தியும் வெறுப்பும் மேலோங்கியது. பார்ட்டி முழுக்க என் முகத்தைக் கவனித்தவன் கிளம்பும் முன் என் cabinகு வந்தான்.

"மித்திரன் உனக்கு past பத்தி தெரியும்னு எனக்கும் தெரியும். ஆனால் அந்த விபத்துக்கு பிறகு உன் மனைவிகிட்ட நான் பேசல, சமீபமா அவங்களை கண்டும். கஷ்டக்காலத்தில் கைவிட்டவர்களை மறப்பதோ மன்னிப்பதோ இயலாதது," அவன் சொல்லிவிட்டு கிளம்பினான்.

அவன் கிளம்பிய அன்று அவளும் கிளம்பினாள். டைனிங் டேபிளில் ஒரு பேப்பரில்  மட்டும் கிறுக்கியிருந்தது, "ஊருக்கு போறேன். என் பக்க நியாயத்தை கேட்கும்  பொறுமை  வந்ததும் போன் பண்ணுங்க. பேசலாம்." ஓரிரு எழுத்துகள்நீர் பட்டு  smudgeஆகி இருந்தாலும் விஷயம் புரிந்தது. 

அதன் பிறகு வீட்டின்  வெறுமையை நிரப்பவும் எனக்கு துணையாக இருக்கவும் மனோஜ் வீட்டின் spare bedroomஇல் பாதி நாட்கள் தங்கினான். அவன் தான் கண்டெடுத்து கையில் தந்தான் அவளின் sketchbookஐ. ஆதங்கத்திலும் சோகத்திலும் தன் இதயத்தின் கீரல்களை காகிதத்தில் கிறுக்கியிருந்தாள். பக்கங்களெல்லாம் என் முகத்தால் நிரம்பியிருந்தது. அருவெருப்பு, கோபம், அலட்சியம், வெறுப்பு என ஒவ்வொரு ஓவியமும் என் முகபாவனைகளைச் சித்தரித்தது. இவற்றை ஒவ்வொரு நாளும் பார்க்க மனமில்லாமல் தான் அவளே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாள் போலும். 

அவள் சென்ற இந்த 5 மாதங்களில் வீட்டின் ஒவ்வொரு மூளையிலும் இடுக்கிலும் அவள் தென்பட்டாள். அவளின் டீ கப், கிட்சன் tabletop இல் கொஞ்சியது, sofaவில் சேலையில் எனக்காகக் காத்திருப்பது என காலம் அவளின் முகத்தை மறைக்காமல் நினைவூட்டிக்கொண்டே இருந்தது. இன்னும் இருவருக்கான மெத்தையில் அவளின் பக்கம் படுப்பதில்லை. நாட்டின்  எல்லை பார்டர் போல் தாண்டாத அந்த இடைவெளி, அவள் இப்போதும் அவ்விடத்தை ஆக்கிரமிப்பது போலயே உணர்ந்தேன் ஒவ்வொரு நீண்ட இரவிலும். எனையே அறியாமல் கைகள் அவள் அருகில் தேடிஏமாறும் பொழுதுகளைவிடியல் எனக் கணக்கில் கொண்டேன். அணைத்ததாகத்தான் ஞாபகம்... ஆனால்நினைவுகள் நெருக்கியஒவ்வொரு இரவும் பற்றி எரிவதேனோ...

அவள்  இல்லாவிட்டாலும் என் இரவுகள் விடிந்தன.

3 மாதங்களில் நாங்கள் பிரிந்து வாழ்வது என் அம்மாவின் காதுக்கு எட்டியது. பிரச்சனை என்னவென்று துருவித்துருவி கேட்டாள் ஆனால் தாய் கூட மூன்றாவது ஆளாக தோன்றினாள் கணவன் மனைவி உறவில். பிரச்சனை தெரியாவிட்டாலும் தன் மகனுக்காக மருமகளை கரித்துக்கொட்டினாள் அம்மா ஆனால் எனக்கு கோபத்தைவிட ஏமாற்றம் அதிகமாயிருந்தது. இப்போது அக்காவும் அம்மாவுடன் சேர்ந்து குறை சொல்ல இருவரிடம் பேசுவதையும் குறைத்துக்கொண்டேன்.

"ஊர் திருவிழாவுக்கு வந்துட்டு போடா. உன் அக்காவும் வர்றா. எவ்ளோ நாள் தான் அதையே யோசிச்சிட்டு இருப்ப?"

"வேலை இருக்கு. நீங்க போங்க."

"உன்ன பார்த்து 6 மாசம் ஆகபோகுது. மூணு நாள் வந்துட்டு போறதுல ஒன்னும் குறைஞ்சிடாது." அம்மா முடிவெடுத்துவிட்டாள். 

[Two more chapters! Yes, எதிர்பார்க்குறது தான் நடக்கபோகுது ஆனா கொஞ்சம் அழகா எழுதியிருக்கேன். இந்த chapter சிறப்பா இல்லை ஆனா நேரம் இருந்தால் இன்னும் கொஞ்சம் மெருகேத்துறேன். Questions, comments and votes are appreciated:) I'll do a #AskGuardianoftheMoon to end it off.]

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro