தனக்கானது - 2
கலகலவென வளையல் ஓசை தூக்கத்திலிருந்து எழுப்பியது. சற்று நிமிர்ந்து headboard மேல் சாய்ந்து அமர்ந்தாலும் விழிகள் உலகைக் காண மறுத்தன. துயில்கொண்டிருந்த என்னை எழுப்ப வேண்டாமென அறையின் விளக்கைப் போடாமல் டிரெஸ்ஸிங் டேபிள் மேல் ஒரு டேபிள் lamp வைத்து அலங்காரம் செய்துக்கொண்டிருந்தாள் அவள். சேலை நெய்யும் விரல்கள் போல அவளின் விரல்கள் கருங்கூந்தலை பின்னி french braid இல் முடித்தன. இன்று மயில் பச்சையில் காட்டன் சேலையும் உடுத்தியிருந்தாள். மயில் தன் தோகையை இழந்திருந்தால் தங்க தேகமாய் இருக்கும் போல. மை பூச கண்கள் கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தபோது அதில் என் பிம்பத்தைக் கண்டு புன்னகைத்து ஏதோ பூஜை, celebration என்று அவள் சொல்ல தூக்கக் கலக்கத்தில் நான் தலையாட்டினேன். பிறகு தலை தலயணையைத் தேட மீண்டும் எழுந்தபோது மணி 9ஐ தாண்டியிருந்தது. குளித்துவிட்டு மூடியிருந்த காபியை சூடு பண்ணி குடித்தபின் யோசித்தேன், "இப்போது என்ன செய்வது?"
என் அபார்ட்மென்ட் இன்று அகலமாய் அண்டமாய் விரிந்திருந்தது. காபி கப்பை டேபிள் இல் வைத்தபோது எழுந்த ஒலி பெரும் சப்தமாய் எதிரொலித்தது. பெண்களுக்கு வீட்டில் இருப்பது எளிதாக இருந்தாலும் ஆண்களுக்கு கூட்டுக்குள் அடைப்பட்டது போல் ஒரு நெரிசல். ப்ளூ ஜீன்ஸ், வைட் polo tee, shades என்று இரு வினாடிகளில் கிளம்பி காரை எடுத்தேன்.
லாவண்யாவை இறக்கிவிட்ட அதே ஜங்ஷனை அடைந்ததும் ஒரு ஓரமாய் காரை நிறுத்தி அங்கு டீ கடையில் நின்றவரிடம் விசாரித்தேன். ஆம், அடுத்த ரைட் turn இல் ஒரு hostel இருந்ததாம், அவர் சொன்னார். மனோஜ் என்னிடம் அனுமதி வாங்காமல் லீவ் எடுத்துக்கொள்வான் ஆனால் லாவண்யாவுக்கு அந்த சுதந்திரத்தையோ உரிமையையோ நான் வழங்கவில்லை. இப்போது ஆபீசில் அவள் இருப்பாள் என்று யூகித்துக்கொண்டு ரைட் turn இல் திரும்பியபோது லேடீஸ் hostelஇன் சின்ன போர்டு ஒரு மூன்று மாடி கட்டிடத்தின் முகப்பில் மாட்டியிருந்தது. பெண்கள் ஸ்கூட்டியை போடுவதற்காக hostel முன்னாள்ஒதுக்கப்பட்ட அந்த சிறு இடம் தற்போது காலியாக இருந்ததால் அங்கேயே என் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தேன்.
அங்கு சிறிய வரவேற்பரையில் டேபிள் பின்னால் ஒரு ஐம்பது வயது தக்க மூதாட்டி என்ன வேண்டும் என்று கேட்காமல் மூக்குக்கண்ணாடி பின்னால் என்னை ஏறெடுத்துப் பார்த்தார். எல்லா hostel இலும் ஒரு ப்ரியாவோ காயத்ரியோ இருக்கமாட்டார்களா என்ன என்ற தைரியத்தில் இருமினேன். பதிலுக்கு அந்த அம்மா இன்னும் வாய் திறக்காமல் என்னைப் பார்த்தது.
"காயத்ரி இருக்காங்களா? அவங்கள நான் பார்க்கணும்."
"ஏன்..நீங்களே அவளுக்கு போன் பண்ணி கீழ வரசொல்ல வேண்டியது தான?"
"போன் சுவிட்ச் ஆப் நு சொல்லுது."
சலிப்புடன், "இங்கேயே நில்லுங்க," என்று கூறிவிட்டு முனங்கிக்கொண்டே மாடியை நோக்கி சென்றார். எல்லா பெண்களும் காலேஜ் வேலை என்று போய்விடுவார்களே இந்த அம்மா எங்கேந்து ஒரு காயத்ரியை கூட்டிட்டுவரும் என்று நினைத்துகொண்டு நிற்கையில் திடீரென, "மித்திரன்!" என் பெயர் கேட்க ஒலி வந்த திசையை நோக்கினால் அங்கு ஓர் இளம் பெண் nightieஇல் மாடியிலிருந்து கைக் காட்டினாள். பிறகு, ஐந்து நிமிடத்தில் கீழே வருகிறேன் என சைகைக் காட்டிவிட்டு மறைந்தாள். அந்நேரம் பார்த்து மாடியிலிருந்து இறங்கி வந்த அந்த அம்மா , "காயத்ரி காலேஜ் போய்ட்டா. அவ இல்லைன்னு தெரிஞ்சு தான் இங்க வந்தீங்களா?" என சந்தேகத்துடன் வினவினாள்.
"இதோ 5 நிமிஷத்துல வந்துருவாங்க," என்று கூறிவிட்டு அவர் முன்னாலேயே ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தேன்.
5 நிமிடங்களில் சுடிதாருக்கு மாறி கீழே இறங்கி வந்தார் அந்த பெண்.
"ஹாய் மித்திரன்! லாவண்யா போட்டோ காட்டியபோது கூட இவ்ளோ tall and handsome நு தெரியல! நல்லா தான் செலக்ட் பன்னிர்கா." குரல் உற்சாகத்தில் இரண்டு octave ஏறியது.
சரியான ஆளின் கண்களில் தான் நாம் பட்டிருக்கிறோம் என, "ஹாய். உங்கக்கிட்ட நான் கொஞ்சம் பேசணும், தனியா," என்றேன்.
எங்கள் உரையாடலை கவனித்துகொண்டிருந்த அந்த அம்மாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, "ரெண்டு கடை தள்ளி ஒரு காபி ஷாப் இருக்கு. வாங்க அங்க போகலாம்," என சொல்லிவிட்டு முன்னாடி நடந்தாள். விறுவிறுவென குதித்தோடிய கால்கள் வாசலில் நின்றன, "வாவ்! லாவண்யா சொன்ன அதே same black BMW! கார் செமையா இருக்கு!"
"இந்தாம்மா, showroom போனா ஆசை தீர ஒட்டி பார்க்கலாம். காபி ஷாப்க்கு நடைய கட்டுங்க," என்று சிரித்துவிட்டு முன்னாள் போகுமாறு சைகை செய்தேன்.
காபி ஷாப்பினுள் நுழைந்ததும் அவளுக்கு மட்டும் ஒரு காபி ஆர்டர் செய்துவிட்டு நாங்கள் பேச தொடங்கினோம்.
"உங்க பெயர்?"
"ப்ரியா." நான் பேசுவதற்கு முன் என்னை முந்திக்கொண்டு அவள் தொடர்ந்தாள், "உங்கள பத்தி லாவண்யா நிறைய சொல்லிர்கா. ஏன் எனக்கு மட்டுமில்ல ஹாஸ்டலில் எல்லாருக்குமே தெரியும்!"
"எனக்குக் கல்யாணம் ஆச்சுன்னு லாவண்யா சொன்னாளா?"
காபி டம்ளரிலிருந்து கண்கள் விரிந்தன.
"அப்போ நீங்க அவளுக்கு அனுப்பிய மெசேஜ் வெளிய கூட்டிட்டு போனது எல்லாம் பொய்யா?" அவள் குமுறினாள்.
"மனோஜ் பத்தி சொல்லியிருக்காலா?"
"மனோஜ் யாரு?"
"அவளை உருகி உருகி காதலிக்கும் என் நண்பன்." இதைக் கூறியதும் தான் ப்ரியா என் பேச்சைக் கேட்க முன்வந்தாள்.
"லாவண்யா பந்தா பண்ணுவா ஆனால் இந்த அளவுக்கு நாடகம் போட எங்கேந்து துணிச்சல் வந்துச்சு எனக்கு தெரியல," ப்ரியாவும் குழம்பியிருந்தாள்.
பெண்கள் போல் ஒரே பிரச்சனையை சுவாரஸ்யமாய் பேசுவதில் எனக்கு ஈடுபாடு இல்லை. தீர்வின் பக்கம் பேச்சை திசை திருப்பினேன். "whatsapp மெசேஜ் பத்தி ஏதாவது தெரியுமா?"
"whatsapp என்ன facebook கூட பார்த்திருக்கேன்! அவள் ரொம்ப பந்தாவா காட்டுவா எங்கக்கிட்ட! வேணும்னா உங்க facebook profile காட்டுறேன், நீங்க அவகிட்ட பேசியது அங்க இருக்கும்," என் ப்ரியா அவள் போனை எடுத்து என்னிடம் காட்டினாள்.
ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டேன். அச்சு அசல் நகலாய் ஒரு profile. status இலிருந்து போடோஸ் வரை எல்லாம் இருந்தது குறிப்பாக என்னிடம் கூட இல்லாத ஆபீஸ் மற்றும் football போடோஸ் இருந்தன. எல்லாவற்றையும் குறித்துவைத்துக்கொண்டு போனை அவளுடன் கொடுத்தேன். "நீங்க தான் எனக்காக லாவண்யாவை கண்காணிக்கணும். லாவண்யா, மனோஜ் என்று எங்கள் மூவருக்கிடையில் இருக்கும் இந்த பிரச்சனை ஆபீஸ் முழுக்க பரவுவதற்குள் இதை கண்டுபிடித்தாக வேண்டும்."
"கண்டிப்பா மித்திரன்! by the way, உங்க wifeகு இந்த பிரச்சனை பற்றி தெரியுமா?"
சிரித்தேன், "தெரியும். இன்னும் நீங்க என்னைய நம்பலைன்னா என் wife கூட தான் வந்து நிக்கணும்."
காபி முடிந்ததும் மீண்டும் hostelக்கு சென்றோம். ப்ரியாவிடம் இருந்து விடைப்பெற்றதும் காரினுள் AC ஐ போட்டு யோசிக்க ஆரம்பித்தேன். இந்த விபரங்களை வைத்து என்ன செய்வது? உடனே இயல்பாய் கை போனுக்கு சென்றது அவளுக்கு போன் செய்ய.
"நீங்க சொல்றதை வச்சு பார்த்தா லாவண்யா ஏதோ ஆள் மாறாட்டம், identity theft வேலை பண்ற மாதிரி தெரியுது ஆனால் ஏன் நு தெரியல. யார் வேண்டும்னாலும் facebook அக்கவுண்ட் திறக்கலாம் அதுனால அந்த whatsapp மெசேஜ் பத்தி தெரிந்தால் தான் மனோஜ்க்கு புரியவைக்க முடியும்."
"ம்ம்ம்..ப்ரியா கிட்ட கண்காணிக்க சொல்லிர்கேன்."
"சரி...ஒரு நாள் லீவ் விட்டா கூட ஆள் வீட்டுல இருக்குறது இல்லை போல..கிளம்பிட்டீங்க"
"நிலவில்லா வானமாய் நீயில்லா வீடு. எப்படி இருக்க முடியும் சொல்லு?"
"ஆஹான், ஐஸ் வச்சது போதும். லஞ்ச்க்கு என்ன பண்றீங்க? இங்க ஆபீஸ் இல் பூஜை, celebrationன்னு buffet இருக்குறதால நான் சமைக்கல."
ஜன்னல் வெளியே சாலையை பார்வையிட்டேன், "இதோ, இங்க வெளிய எங்கயாவது தான்."
"எங்க ஆபீஸ்கு வர்றீங்களா? இன்னைக்கு வேலை எதுவும் இல்ல, ரொம்ப கோலாகலமா ஜாலியா இருக்கும்!"
உடனே என் மனதில் அன்று அவள் ஆபீஸ் சென்று அவமானப்பட்டு அலட்சியமாய் பார்க்கப்பட்ட நினைவு கசந்தது. சுயமரியாதையை விட்டுக்கொடுக்க விருப்பமில்லை.
"வேணும்னா நான் அங்க வந்து pick up பண்றேன். வெளிய போய் சாப்டலாம். அங்கலாம் சாப்டமுடியாது."
சிறிது நேரம் யோசித்துவிட்டு பதிலளித்தாள், "சரி, போகலாம்."
[web இல் படித்தவர்கள் இந்த chapter முழுமையா படிச்சீங்க ஆனா மொபைல் இல் படித்தவங்க பாதிதான் படிச்சீங்க. @vishnumoorthi சொல்லி தான் தெரிந்தது. so sorry! And I'm keeping a backup copy on my pc asap]
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro