தூரம்
வீட்டின் கதவைத் திறந்தபோது கண்கள் உடனே sofaவின் பக்கம் திரும்பியது. ஷூவைக் கலட்டிவிட்டு உள்ளே ரூமுக்குள் சென்றேன், எங்கும் அவள் இல்லை. சூழ்ந்திருந்த காற்று கனத்தது போல் ஓர் உணர்வு. உடை மாற்றிக்கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்து dining tableஇல் அமர்ந்தேன். சூடாக ஒரு கப் டீ இப்போது நம் கைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியபோது அவளின் மேல் வெறுப்பு அதிகமானது. சுயமாக டீ போட்டுக் குடிப்பதைவிட தண்ணீரை குடித்துவிடலாம், self-cooking செய்பவர்களுக்குப் புரியும் சாப்பிடுவதற்கு பதிலாக பட்டினியாகவே இருந்துவிடலாம் என்று. சில நொடிகளுக்குப் பிறகு bag இல் இருந்த laptop ஐ வெளியிலெடுத்து வாரம் முழுக்க ஒத்திவைத்த blogs, reviews, videos என்று எல்லாவற்றையும் படித்துக்கொண்டிருந்தேன்.
கதவு திறக்கும் சப்தம் கேட்டு கண்கள் laptopஇலிருந்து விலகின அவளின் வருகையை உறுதிச்செய்ய. உள்ளே வந்த அவள் என்னைக் கடந்து ரூமுக்குள் செல்லும்வரை அவளைப் பொருட்படுத்தாதவாறு laptopஐயே பார்த்துக்கொண்டிருந்தேன். என் பார்வையிலிருந்து அவள் மறைந்ததும் எழுந்து என் காரின் சாவியை எடுத்தேன். இருவருக்குமிடையில் நீண்ட தூரத்தை பற்றி இப்போது யோசிக்க மனம் இடம்கொடுக்கவில்லை.
எண்ணம் தோன்றிய கணமே வண்டியை எடுத்துக்கொண்டு யாரிடமும் அனுமதி கோறாமல் வீட்டிலிருந்து கிளம்புவது ஆண்களுக்கே உரிதான சுதந்திரம்.
கார் சிறிது தூரம் சென்றவுடன் தான் என்னையே அறியாமல் கடற்கரையை நோக்கி நான் பயணித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். காரை நிறுத்திவிட்டு வெளியில் இறங்கி மணலின் ஓரத்தில் நின்றேன். சூரியனின் இறுதி ஒளிக்கதிரை வானம் பிடிவாதமாய் அணைத்துக்கொள்ளும் அந்திமாலை நேரம். காரின் முன் பகுதியில் சாய்ந்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபோது சுண்டல் விற்கும் பசங்களையும் வாக்கிங் வந்த வயதானவர்களையும் தவிர வேறெவரும் அதிகமாகத் தென்படவில்லை இந்த வாரநாளில். இதமான கடல் காற்று தலையை முடியைக் கோதியது.
கொஞ்சம் நடந்து அங்கிருந்த டீ கடையில் சூடாக காபி ஒன்றை வாங்கினேன். அங்கு டீ கடையில் நின்று குடிப்பது திருமணத்துக்கு முன் bachelor ஆக இருந்த காலத்தில் ஞாயிற்று கிழமைகளில் நண்பன் ஒருவனை அனைவருக்கும் டீ வாங்கிக் கொண்டு வரச் சொல்லி அவனை எரிச்சலடைய வைத்த நினைவுகள் மனதில் உதித்தன. அவனுக்குக் காசுக் கொடுக்காதது வேறு விஷயம். இப்போது அவன் எங்கிருக்கான் என்ற கேள்விக்கு Facebook account எளிதில் விடையளித்தாலும் எப்படி இருக்கிறான் என்பது ஐயமே. சீனி அதிகமாகவும் காபி தூள் கம்மியாகவும் போடப்பட்டிருந்த அந்த காபி தொண்டையை நனைத்து முடிப்பதற்குள் வானம் மை பூசப்பட்டிருந்தது.
ஒரு பெண்ணின் சமையலை சாப்பிடாதது ஒரு ஆணின் பைக்கிலோ காரிலோ ஏறாததற்கு சமம். அலட்சியத்தின் அதிகபட்சம். காலையும் மதியமும் அவளருகில் அமர்ந்து சாப்பிடவில்லை என்பதால் வீட்டில் டின்னர் சாப்பிடலாம் என மீண்டும் காரில் ஏறினேன். இப்போது மனம் ஓரளவு சமாதானமடைந்திருந்தது. போனை எடுத்துப் பார்த்தபோது இதுவரைக்கும் ஒரு மெசேஜ் கூட அவளிடமிருந்து வரவில்லை என்பதைக் கண்டு குற்ற உணர்ச்சியும் பயமும் அவளைத் தடுத்தது போலும் என சுதாரித்தேன். போன் செய்யாததும் நல்லது தான்.
என் வரவை எதிர்பார்த்தவாறு dining table இல் உணவு மூடியிருந்தது. அவளும் அங்கே தான் இருந்தால் போனில் ஏதோ பார்த்துக்கொண்டு. உணவு பரிமாறிவிட்டு அவளும் சாப்பிட அமர்ந்த பின் எங்களுக்கிடையில் உரையாடல் துவங்கியது.
"கோபமா? நான் தான் சொன்னேன்ல வேலை ஜாஸ்தின்னு. திடீர்னு நீங்க வந்து நின்றதும்"
"இப்ப நான் சாப்டவா வேணாமா?" குறுக்கிட்டேன். மௌனம் நிலவியது.
காலையில் வழக்கத்தைவிட அரை மணி நேரம் கழித்தே எழுந்தேன் காரணம் அவள் வீட்டிலிருந்து கிளம்பியதும் நான் ரெடியாகலாம் என. அவ்வளவு ஏக்கத்துடனும் சந்தோஷத்துடனும் வந்த நான் ஏமாற்றமடைந்ததற்கு இன்றும் அவளிடம் பேசாமல் இருப்பது நியாயமாகத்தான் தெரிந்தது. அவளை காரில் drop பண்ண வேண்டாம் அவளே அந்த ஆபீஸை தலையில் வைத்து கொண்டாடட்டும்.
அவளை வென்ற சிறு குதூகலத்துடன் ரூமிலிருந்து வெளியே வந்தால் அவள் குத்துக்கல்லாக அமர்ந்திருந்தாள் sofaவில். தனக்கு லேட் ஆகினாலும் பரவாயில்லை என்ன தான் நடக்கிறது என நான் விழிக்கும்வரை காத்திருந்தாள் போலும். புருவங்களை உயர்த்தி என்ன என்று மட்டும் சைகைச் செய்தாள். கள்ளி, என்னை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள். சலிப்புடன் நானும் விரைவாகக் கிளம்பினேன்.
கார் சிறிது தூரம் சென்றதும் குனிந்து எதையோ எடுத்தாள்.
"லாவண்யா மனோகரன்?"
"என்ன?" கார் ஓட்டிக்கொண்டிருந்ததால் அவளைப் பார்க்காமல் வினவினேன்.
"Debit card கார் கீழ கிடக்குது" கார்ட்டை dashboard இன் மேல் வைத்தாள்.
நேற்றைய லஞ்ச் பற்றி வாய் திறக்காமல் நாசூக்காக, "நேற்று half day. அதான் colleagueஐ ஹாஸ்டலில் drop பண்ணேன்"
சில நிமிடங்களில் அவள் எப்போதும் இறங்கும் metro நிலையத்தின் வெளியில் காரை நிப்பாட்டினேன். ஆனால் அவள் இறங்காமல் அங்கேயே உட்கர்ந்திருந்தாள். இடதில் திரும்பி குழப்பத்தோடு அவளை நோக்கியபோது திடீரென அவள் நகர்ந்தாள்.
வலி பொறுக்க முடியாமல் கண்கள் இறுக மூடின என்னையறிமால,"ஏன் டி இப்ப கன்னதை கடிச்ச?"
முரைத்துக்கொண்டே, "எனக்கு உங்கமேல கோவமா இருந்துச்சு. அதான் கடிச்சேன்."
கன்னைத்தைத் தடவிக்கொண்டே "நியாயமா நான் தான் உன்மேல கோபப்படனும் பார்த்துக்க!"
"வேணும்னா என் கன்னத்தை கடிச்சுக்கோங்க" அவளுடைய சீரியஸான பதிலுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.
"எனக்கு இந்த வாரம் முழுக்க project நு சொல்லியும் புரிஞ்சுக்காம முகத்தை தூக்கி வச்சிடுறது" என அவள் முணுமுணுத்துக்கொண்டே காரின் கதவைத் திறந்தாள்.
"என்ன சொன்ன?"
"ம்ம்ம்...மூஞ்சு கேவலமா இருக்குன்னு சொன்னேன். ஏன்? காதும் அவுட் ஆ?" காரின் கதவை வேகமாக மூடியதும் எழுந்த சத்தத்தில் திடுக்கிட்டு கதவை உடைத்ததற்கு சாரி என கெஞ்சிவிட்டு உள்ளே metro நிலையத்தினுள் அவள் நுழைந்ததைக் கன்னத்தைத் தடவியவாரே புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். சின்ன பல் என்றால் அதிகம் pressure தானே? அவள் கடிதத்தில் அச்சு விழுந்திருக்கும் என இன்னும் அழுத்தமாகக் கன்னத்தைத் தேய்த்தேன்.
***
[ Chapter dedicated to omahazeeya ! My biggest encouragement on wattpad and I'm honoured to have this book on her favourites list. Check out her writing too! Luv u gurl!
1. Book cover updated! நல்லாருக்கா? I don't know photoshop so yeah...bad attempts
2. Should female point of view be included? மித்திரனின் பார்வைய விட்டு அவளோட பார்வைல 2 chapter எழுதலாமா இல்ல இப்டியே தொடரலாமா?
3. நீதானே என் பொன்வசந்தம்>> விண்ணை தாண்டி வருவாயா 😎
Comment below with suggestions மக்களே:) sorry for late updates but laziness is innate, can't change]
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro