Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

செம்புல பெயல் நீர்

"எனக்கு பயமா இருக்கு. இது கடைசில நமக்கு எதிரா முடிஞ்சுடும்னு தோனுது," அவள் குரலில் சலனம் தென்பட்டது.

இதற்கு நித்தின் ஆறுதலாய் பேசினான், "அதான் நான் இருக்கேன்ல. என்ன நடந்தாலும் நான் இருக்கேன்."

"உங்கம்மாவோட அதிகாரத்தையும் அகங்காரத்தையும் பார்த்துட்டு தான் சொல்றீங்களா? அவங்க எதற்கும் சம்மதிக்கப்போறதில்ல," அவள் மேலும் வருந்தினாள்.

"இப்டி கவலைப்படுறது பெண்களின் காதலின் அடுத்த கட்டம் போல. முதலில் காதலை சொல்ல மறுப்பதும் சொன்னபின் பயப்படுவதும்," நித்தின் கிண்டலாய் கேட்டான்.

"இவ்ளோ தூரம் வந்துட்டு கடைசில ஒன்னும் சாத்தியம் இல்லைன்னு இருந்தா இத்தன நாளோட அன்பை எங்க கொட்டுறது?" அவள் கண்களின்  ஓரத்தில் நீர் துளிர்த்தது.

நித்தின் தன் இடது கரத்தால் அவள் முகத்தை நிமிர்த்தி தன் இன்னொரு கரத்தால் அவள் கூந்தலை நெற்றியிலிருந்து விலக்கி ஈரம் படிந்த அவள் கண்களை நோக்கி மொழிந்தான்,
"யாயும் ஞாயும் யாராகியரோ?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"

அவள் திடுக்கிட்டு எழுந்தாள் தூக்கத்திலிருந்து. முகம் முழுக்க வேர்த்திருந்தது. இதயம் தன் இஷ்டத்துக்கு வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன் நித்தினைப் பார்த்ததிலிருந்து அவளுக்கு பல சிந்தனைகள் உதித்தாலும் இதுவே முதன்முறை அவன் அவளின் கனவில் தோன்றியது. இந்த அறிகுறி  மனதுக்கு சரிதாகப்படவில்லை. கட்டிலின் பக்கத்திலிருந்த standஇல் இருந்த போனைப் பார்த்தால் மணி 5 என்றுக் காட்டியது. இனிமேல் தூக்கம் தேடினாலும் வராது என்று புரிந்தவளாய் அன்றைக்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தாள். மித்திரன் 7.30மணிக்கு எழுந்து தன் வாரநாள் இயல்பு நிலைக்குத் திரும்பினான். அவர்கள் நேற்று ஞாயிறு முழுக்க மௌனமாய் ஒருவரை ஒருவர் தவிர்த்தது இப்போது திங்கட்கிழமை காலையில் ஒரே நேரத்தில் ஆபீஸ் கிளம்புப்போது இடையூறாய் அமைந்தது. என்ன சொல்வதென்று இருவருக்கும் தெரியாததால் ஒன்றும் கண்டுக்காதவாறு அமைதி காத்தனர். இறுதியில் அவளே தன் அமைதிக் கொடியைக் காட்டினாள் லஞ்ச் உடன்.
"இந்தாங்க உங்களுக்கும் உங்க ப்ரெண்ட்க்கும் லஞ்ச்," என டேபிளில் வைத்தாள்.

இப்போது மித்திரனுக்கு திக்குமுக்காடியது, "லஞ்ச் வேண்டாம் என்று நித்தின் சொன்னதை இவளிடம் எப்படி சொல்ல?" ஆனாலும் அன்று அவள் தனக்கு  நித்தினைப் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாகச் சொன்னாலும் இன்று தான் கேட்டுக்கொண்டதுக்காக இப்போது லஞ்ச் எடுத்து வைப்பது அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. மாலை அவளிடம் இதைப் பற்றி கூறுவோமென அவன் அவ்விஷயத்தை ஒதுக்கி வைத்தான்.

கார் பயணம் டிராபிக் இரைச்சலுடன் ஊர்ந்தது. கார் கண்ணாடி வெளியே வெறிச்சோடிப் பார்த்துகொண்டிருன்தவள் திடீரென திரும்பி கார் ரேடியோவை உற்று நோக்கினால் திகைப்புடன்.

ஒரு மெல்லிய பெண் குரல், "யாயும் ஞாயும்" என ஒலித்துக்கொண்டிருந்தது. கடந்த அரை மணி நேரத்தில் அவள் முதன்முறையாக வெளியில் பார்க்காமல் தன் பார்வையை ரேடியோவின் மேல் செலுத்தியது மித்திரனுக்கு தன்னுடைய அமைதியை உடைக்க ஒரு வழியாய் அமைந்தது.

"பாட்டு நல்லாருக்குல்ல! படம் இன்னும் ரிலீஸ் ஆகல."

அவள் இப்போது அவனை அதே அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

அவளின் திகைப்பை வேறு விதமாய் புரிந்துக்கொண்ட மித்திரன் விளக்கினான்,

"யாயும் ஞாயும் யாராகியரோ

என் தாயும் உன் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள் 

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

என் தந்தையும் உன் தந்தையும் உறவல்ல

நீயும் யானும் எவ்வழி அறிதும்

 நீயும் நானும் எவ்வழியிலும்  இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை

செம்புலப் பெயல் நீர்போல

  செம்மண்ணில்  பெய்த மழை போல   

அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே

 நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன ."

"சங்க இலக்கியம். தலைவி எதிர்காலத்தை பற்றி பயப்படுபோது தலைவன் சொல்வது," அவள் அவனுக்கு பதில் அளித்தாளா அல்லது தன்னிடமே பேசிக்கொண்டாளா என்பது புலப்படவில்லை.

மித்திரன் புன்னகைத்தான், "மழையும் மண்ணுமாய்   கலந்துவிடும் இரு மனங்கள் பிரியாதுன்னு சொல்லுவான்."

அவள் திரும்பி அவனை பார்த்தபோது அவனிடத்தில்நித்தினின் சாயல் தெரிந்தது போல் ஒரு பிரமை உருவாகியது. ஒரே சிந்தனை, ஒரே ரசனை, ஒரே உயிர் வேறு உடல் போல. தான் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்றிலிருந்து விலகினாலும் தானாய் தன்னை சேருகிறது.

"எனக்கு மனசு சரியில்ல." மெட்ரோ ஸ்டேஷன் இல் கார் நின்றதும் அவள் சொன்னாள்.

மித்திரன் பெருமூச்சுடன் அவளை அணைத்தான். காரில் உட்கார்ந்திருக்கையில் இது எளிதாக இல்லை. "சரி," என்ற ஒற்றை வார்த்தை மட்டும் பதிலாய் வந்தது.

நித்தினாக இருந்தால் காரணம் கேட்டு குடைந்திருப்பான் அனால் இவன் எதுவும் கேட்கவில்லை. ஒரு வேளை இருவரும் ஒன்றல்லவே. ஆனால் இவன் காட்டும் இந்த புரிதல் எல்லா விஷயங்களிலும் நீடிக்குமா என்பது வேறு ஒரு புதிர்.


[எதிர்பார்த்த காதல் கதையா இருந்தாலும் அதை சொல்லுற விதம்னு ஒன்னு இருக்கு. Hope you don't get disappointed with the plot. I have a beautiful way of writing emotions:) 

 fast, குட்டி அப்டேட்! காரணம், திடீர்னு அந்த வெரி famous சங்க இலக்கியம் கண்ணுல பட்டுச்சு. நல்லாருந்துச்சு! இன்னும் கொஞ்சம் இப்டி ஏதாவது add பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆசை! இந்த சங்க இலக்கியம் பாடலிலும் இருக்கு! லிங்க் மேல இருக்கு, கேளுங்க:) ]

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro