சுடிதார்
7.30 மணிக்கு ஐபோன் அலாரம் அடித்தது. அந்த snooze பொத்தானைத் தேடி பிடித்து தட்டுவதைவிட லேசாக slide செய்தால் அலாரம் முழுதாக நின்றுவிடும். இவ்வாறு அலாரம் off ஆகுவதினாலேயே ஒன்றுக்கு பதிலாக 5 அலாரம் வைத்திருந்தேன் 2 நிமிட இடைவேளைகளில். ஒருவழியாக 7.40 கு எழுந்துவிட்டேன். பல் துளக்கி dining table கு தூக்கக் கலக்கத்தில் தள்ளாடி வந்தேன். எப்போதும் மேசை மேல் மூடி வைக்கப்பட்டிருக்கும் காபி அன்று இல்லை. காபியிலிருந்து காலை டிபன் வரை எல்லாம் செய்து மூடிவைத்துவிட்டு தான் அவள் அலுவலக்கத்துக்குக் கிளம்புவாள். இன்று மேசை சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தது என் தூக்கக் கலக்கத்தைச் சற்று தள்ளி வைத்தது.
"இருங்க, சூடா இட்லி இருக்கு. அதை சாப்டுட்டு காபியைக் குடிங்க," குரல் ஒலித்தது என் இடது பக்கத்திலிருந்து. பால்கனியில் துணி காயப்போட்டு விட்டு வெறு வாலியை கையில் எடுத்துக்கொண்டு வந்தாள் என் மனைவி. ஒரு கணம் திகைத்தேன்.
"சூடா இட்லிங்குற, காபிங்குற! என்னடி, நேத்து கனவுல வந்ததெல்லாம் காலையில் நிஜமாகுது?"
"ஆஹான். கனவுல வேற என்ன வந்துச்சாம்?" என்ற ஒரு குறும்பு புன்னகையுடன் கிட்சனுக்கு சென்று hotboxஐ எடுத்து மேசையில் வைத்து பரிமாற ஆரம்பித்தாள்.
"நீ எனக்கு டிபன் ஊட்டிவிடுற மாதிரியும் கனவுல வந்துச்சு மா" என்று ஆசையாக பதிலளித்தேன்.
"வந்துருக்கும் வந்துருக்கும்" கண் சிமிட்டினாள். பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவளும் சாப்பிட எத்தனித்தாள். நான் விடுவேனா? அதிசயமாய் என்னருகில் ஆபீஸ் கிளம்பும் பரபரப்பின்றி சிரித்துக்கொண்டிருந்தவளை எப்படியாவது எனக்கு ஊட்டிவிட வைக்க வேண்டுமென தோன்றியது. பெண்களைக் கொஞ்சினால் பாதி வேலை முடியும். கெஞ்சினால் மீதியும் முடிவடையும். என் தட்டையை அவள் பக்கம் தள்ளிவிட்டு அவளையே பரிதாப முகத்துடன் உற்று நோக்கினேன். எதுவும் கண்டுக்கொள்ளாதவாறு பாசாங்கு செய்தாள் இரண்டு வாய் இட்லிக்கு. நானும் விட்டுக்கொடுக்கவில்லை. பிறகு, "ஆபீஸ்கு லேட் ஆகிடும் எருமை" என்று செல்லமாகக் கடித்துக்கொண்டே ஊட்டிவிட ஆரம்பித்தாள்.
சாப்பிடும்போது அவளே சொன்னாள்,"எல்லாரோட வேலையையும் நான் எதுக்கு இழுத்துப் போட்டு செய்யனும்? நான் ஏன் 8.30 மணிக்கு ஆபீஸில் டான்னு நிக்கனும்? தேவையில்லை. அதான் 9.30கு போகலாம்னு முடிவெடுத்துட்டேன். எவன் என்ன கேட்டாலும் பரவாயில்லை, ஏன், கேட்கவும் முடியாது. அந்த அளவுக்கு நான் வேலையில் effort போடுறேன்," அவள் தன் முடிவை உறுதிப்படுத்திக்கவும் தனக்கு தானே கூறிக்கொண்டாள்.
காலை உணவு முடிந்து 15 நிமிடத்தில் உடை மாற்றி வீட்டைப் பூட்ட காத்திருந்தேன். ரூமிலிருந்து ஒரு காட்டன் சேலையுடனும் ஹேண்ட் பேக் உடனும் அவள் வெளியில் வந்தவுடன் நேற்றிரவின் காட்டன் சேலையும் அலங்காரமும் நினைவுக்கு வந்தது. ஆபீஸில் எத்தனை சனியன்கள் இவளை வைத்த கண் பார்க்காமால் பார்க்கப்போகிறார்களோ என்று எரிச்சலடைந்தேன்.
"என்ன புதுசா புடவை உடுத்தியிருக்க ஆபீஸ்கு?"
"இன்னைக்கு புடவை கட்ட நேரம் இருந்துச்சு. ஏதோ தோனுச்சு அதான்" மடிப்புகளை சரிசெய்துக்கொண்டே என் முகத்தைப் பார்க்காமல் பதில் சொன்னதால் என் முகம் கறுகறுத்ததை அவள் அறியவில்லை.
கண்ணுக்கு இடும் mascaraவை கண்டுப்பிடித்தவன் ஓர் ஆண். அதைப்போலவே இந்த சேலையை கண்டுபிடித்ததும் நம் ஆட்களில் ஒருவனாக தான் இருக்கும். அதிகம் சிந்தித்து, ரசித்து, இந்தியப் பெண்களின் அழகில் லயித்து, சேலையை வடிவமைத்திருக்கிறான். வெளிப்படையாகக் காட்டும் மேற்கத்திய உடையைவிட மறைத்தும் மறைக்காமலும் காட்டும் இந்த சேலை மிகக் கவர்ச்சியானது.
இட்லிக்குக் கெஞ்சிவிட்டேன். இப்போது சேலைக்குக் கொஞ்சிவிடலாம்.
அவளருகில் சென்று இயல்பாகவே அவள் இடுப்பில் கையை வைத்தேன். கண்டிப்பாக சேலையை ஒரு மொள்ளமாரி தான் கண்டுபிடித்திருக்கிறான். கை பட்டவுன் அவள் நிமிர்ந்து பார்த்தாள். "அந்த சுடிதாரை போட்டுட்டு வாயேன்"
"ஏன்? காலைல ஆசையா அயன் பண்ணி கட்டிருக்கேன்."
"அப்டியே கசங்காம மடிச்சு வச்சுட்டு வா. சாயந்தரம் வீட்டுக்கு வந்ததும் கட்டிக்கலாம்"
"புடவை அழகா இருக்குதுங்க" ஏக்கத்தோடு சொன்னாள்.
"ஆமாம் அழகா தான் இருக்கு. உண்மைய சொல்லட்டுமா? அதைவிட இந்த புடவைல நீ ரொம்ப அழகா இருக்க. பெண்ணுக்காக எத்தனை போர் நடந்திருக்கு வரலாற்றில். இந்த புடவைனால இன்னொரு போர் மூலட்டும்"
"நீங்க சண்டைலாம் போடுவீங்களா?" புருவத்தைத் தூக்கிக் கேலியாகக் கேட்டாள்.
"என்னவளின் அழகை நான் மட்டும் தான் ரசிக்கனும். மத்த எவன் எதாவது நினைச்சா கண்டிப்பா சண்ட தான்."
"அவ்ளோ அழகா இருக்கேனா?" குழந்தை போல் கேட்டாள்.
அவள் கன்னத்தில் என் கையைப் பதித்து,"ரொம்ப" என்று கொஞ்சினேன். சிறு வெட்கத்தோடு தலையசைத்துவிட்டு உடை மாற்றி வந்தாள். இப்போது இருவரும் ஆபீஸ்கு கிளம்பினோம், அதுவும் பெரும் நிம்மதியுடன்.
Note: படிச்சுட்டு சின்னதா ஒரு smiley ஆவது போடுங்களேன்:) ஏதோ ஒரு flow இல் plan பண்ணாம எழுதிட்டு இருக்கேன்:)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro