Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சிக்கல்

"உங்களுக்கு என்னை பிடிக்கலையா ஸார்?" என்ற கேள்வியுடன் என் முன் நின்றாள் லாவண்யா. சற்று பதட்டமாகவும் குழப்பமாகவும் இருந்தது எனக்கு. எங்கள் உரையாடலின் கவனத்தை என் மேல் இருந்து பொதுவான காரணங்களுக்குத் திசைத் திருப்பினேன்.

"You are a great person லாவண்யா! இன்னைக்கு நித்தினும் நானும் English Football clubs பத்தி ரொம்ப ஆர்வமா பேசிட்டு இருந்தோம், பெரிய fans!" பிடிக்கும் என்று அவள் எதிர்பார்த்த பதிலைக் கூற இவள் என் மனைவியல்ல. அவள் மறுபேச்சு பேசும் முன் டேபிளில் இருந்த போன் அலர உடனே அதை எடுத்து பேசினேன். மனோஜ் தான் சில விவரங்கள் கேட்க போன் செய்திருந்தான் என்பதால் அவனிடம் தேவையற்ற லோன் விபரங்களைக் கேட்டு நேரத்தைக் கடத்தினேன். அதிக நேரம் அங்குக் காத்திருந்த அவள் பிறகு விரக்தியுடன் வெளியேறினாள். அவள் சென்ற பின் அறையின் வெப்பம் குறைந்ததுபோல் ஓர் உணர்வு.

லாவண்யாவின் திடீர் கேள்வி என் மனைவியை நினைவுப்படுத்த இன்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சென்றவளுக்கு லஞ்ச் டைம் முடிந்துவிட்டதா என யோசித்தேன். ஆபீஸ் அரசியலில் லஞ்ச் டைம்கென சிறப்பு அங்கீகாரம் இருந்தது. சாப்பிட்டியா என்று மெசேஜ் செய்தேன். பதில் உடனடியாக வந்தது.

இப்ப தான் ரெண்டு வாய் சாப்ட்டேன்.

ஏன் லேட் மா?

வைஷ்ணவிக்கு இன்னைக்கும் மீட்டிங் அதுவும் என் டீம் என்மேல கோபமா இருக்குது. அதுனால தனியா சாப்டனும்னு எல்லாரும் சாப்டு முடிச்சதும் காண்டீன் வந்தேன். சாப்டு முடிக்குற வரைக்கும் பேச்சுத் துணையா இருங்களேன்😇

ஓகே. பொழுது போக உனக்கு ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லவா? 😜இன்னைக்கு ஒரு female colleague என் cabin கு வந்தாங்க😙

அப்புறம்?

உங்களுக்கு என்னை பிடிக்கலையா சார் நு கேட்டாங்க😌

எவ அவ? நீங்க என்ன சொன்னீங்க?😠🤔

பொண்ணு மனச கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு பிடிக்கும்ன்னு சொல்லிட்டேன்😜
வண்டுக்கு மலர் பிடிப்பதில்லை என்பது உண்டா? அங்ஙனமானால் ஏன் ஓயாமல் மலரைச் சுற்றி வட்டமிட்டு மதிமயங்கி விழுகிறது?😍

இதெல்லாம் அவகிட்ட சொன்னீங்களாக்கும்👿

ஆமாம். பாவம் புள்ள, ஆசையா கேட்டுச்சு😜😌

அடப்பாவி! நான் கேட்டப்போ கூட இந்த அளவுக்கு சொல்லலையே நீங்க😱

அப்போ நியாபகம் வரல மா😕

அவள பார்த்ததும் கவிதை கொட்டுதாக்கும்?😏

ஆமாம், உனக்கும் சொல்லவா? மேகத்துக்கு மின்னலை
பிடிக்கவில்லையென்றா தன்னைப் பிளந்துக்கொண்டு பாய்ந்தோடும் மின்னலை மார்போடு அணைத்துக்கொள்கிறது😘

நீங்க எனக்கு ஐஸ் வைக்கிறீங்க🙈
By the way, நாங்களும் பொன்னியின் செல்வன் படிச்சிருக்கோம்😎

நான் புதுசா புக் எழுத முடியும்? ஒரிஜினலா இன்னொரு நாள் சொல்றேன். சாப்டு முடிச்சியா😒

இன்னும் கொஞ்சோண்டு இருக்கு. சரி அவ ஏன் உங்கக்கிட்ட அப்டி கேட்டா?

சின்ன பொண்ணுல...நான் உம்முன்னு இருக்குறத பார்த்து ஏதாவது நினைச்சிருக்கும். By the way, நித்தின் லஞ்ச் நல்லாருக்குன்னு சொன்னான்😋

சிறிது நேரம் கழித்து பதில் வந்தது.
ம்ம்ம் என்று மட்டுமே டைப் செய்திருந்தாள். பிறகு, "சாப்டு முடிச்சுட்டேன். அப்புறம் பேசுறேன்," என மெசேஜ் அனுப்பினாள். நித்தினுக்கு அவள் சமைப்பது பிடிக்கவில்லை இவளுக்கு அவன் சாப்பாட்டை பாராட்டியது பிடிக்கவில்லை. எனக்குக் குழப்பமாக இருந்தது.

அப்போது மனோஜ் cabin கதவைத் திறந்தான், "லாவண்யாவ திட்டுனியா?"

"ஏன் இந்த வீராப்பு? அதுலாம் இல்ல. சரி அவள விசாரிக்க தான் நீ இந்த பக்கம் வந்தியா?" கிண்டல் செய்தேன் அவனை.

"கண்டிப்பா! பெண்களுக்கு நம்ம தான் உதவியா இருக்கனும் மச்சான்," சிரித்தான் அவன், "ஏன் போனில் அறுத்துட்டு இருந்த என்கிட்ட?"

"லாவண்யாவ வெளிய அனுப்ப தான்," பெருமூச்சுடன் கூறினேன். என்னுடைய பர்ஸனல் spaceஇல் மற்றவர்கள் இருப்பதை விரும்புவதில்லை என்பது மனோஜும் அறிந்த ஒன்று.

"பாஸ், சின்ன ஹெல்ப்." மனோஜ் தயங்கிக் கேட்டான்.

"சொல்லுடா."

"என்னோட deskஐ வேற இடத்துக்கு மாத்த உன்கிட்ட இருந்து பர்மிஷன் வாங்கனுமாம். HR ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி நடத்துறாங்க. Emailஇல் approved நு எழுதி அவனுங்களுக்கு அனுப்பிடுறியா?"

சரி என்று சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்வதுக்குள் குதூகலத்துடன் அங்கிருந்து மனோஜ் கிளம்பியதால் அவனிடம் சொல்ல நா வரை வந்த  விஷயங்கள் தொண்டைக் குழியில் மீண்டும் முழுங்கப்பட்டன. பிறகு ஈமெயிலைத் திறந்தபோது மனோஜ் HRகு அனுப்பியவற்றை எனக்கு cc செய்திருந்ததைக் கவனித்தேன். இரண்டு X குறிப்பிடப்பட்டிருந்தன அவனுடைய பழைய இடத்தையும் புதிய இடத்தையும் சுட்டிக்காட்டி. கூர்ந்து நோக்கியதும் . மனோஜின் புதிய இடம் லாவண்யாவுக்கு அடுத்த டேபிளாக இருந்தது!

[ரொம்ப சின்ன chapter but how was it though:/ If u think u guessed the story, no. This is just a tiny twist;)
Thank you for the support especially to the first 15 people who read this almost immediately. நீங்க vote போட்டதும் ஓஓ...இவங்க படிச்சுட்டாங்க, chapter பிடிச்சிருக்குன்னு அவ்ளோ பெரிய சந்தோஷம்! That ok kanmani phone dialogue and சில்லென்று ஒரு காதல் phone convo of suriya and bhoomika are my favourites. Watch on youtube😍]

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro