கரைந்த பிம்பம்
SVRC காலேஜ் தூரமாக நகரத்தின் ஒதுக்குபுறத்தில் இருந்ததால் வெகு அதிகாலையிலேயே எழுந்து அரக்க பறக்க கிளம்பினேன். கலைந்த கார்கூந்தல் தலையணை முழுக்க படர்ந்திருக்க சஞ்சலமில்லா இதயதுடிப்போடு போர்வையை அணைத்து ஆழமான தூக்கத்தில் தொலைந்திருந்தாள் அவள். அவள் போனுக்கு "மேட்ச் போறேன் லேட் ஆகும்" என்று மெசேஜ் தட்டிவிட்டுவிட்டு பசங்களைக் காண சென்றேன்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு காலேஜ் football டீம்இல் விளையாடியவர்கள் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் என்பதால் காலேஜ் முடிந்ததும் எப்போதாவது சந்திப்பதற்கு பதில் alumni football டீம் ஒன்றை துவங்கினர். அன்று ஆரம்பித்து இப்போது யார் யார் வெளிநாடு போகாமல் உள்ளூரில் இருந்தார்களோ அவர்களெல்லாம் ஒவ்வொரு ஞாயிறும் விளையாடினோம், அவ்வப்போது மற்ற காலேஜ் alumni டீம்களுடனும் விளையாடினோம். இன்று SVRC, என் மனைவி படித்த கல்லூரி உடன் மேட்ச்.
கார் SVRCயின் புதிய செயற்கை திடலில் நுழைந்ததுமே கண்கள் பார்க்கும் திசை எங்கும் பச்சை. முதன்முறை SVRCயைக் கண்ட எனக்கு அதன் ஆடம்பரமும் செல்வாக்கும் பச்சையாய் மின்னியது. அங்கு வந்த 1 மணி நேரத்தில் warm-up முடிந்ததும் ஆட்டம் தொடங்கியது. முதல் பாதியில் அவர்கள் கோல் போட, இரண்டாம் பாதியில் நாங்கள் ஒரு கோல் போட கடைசி பத்து நிமிடங்களில் பெனால்டி மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தது எங்கள் குழுவுக்கு. எதிரணியினரால் கீழே தள்ளப்பட்டவன் நான் தான். அதனாலேயே பெனால்டி கிக் எனக்குக் கிடைக்க வெற்றியை உறுதிசெய்தேன் நான். கேம் முடிந்ததும் என்னை தள்ளிய SVRC பிளேயர் என்னை நோக்கி தர்மசங்கடமான புன்னகையுடன் வந்தான். தள்ளியதற்கு சிரித்துக்கொண்டே சாரி சொல்லிவிட்டு பிறகு தன்னை சதீஷேன அறிமுகப்படுத்தினான் அவன்.
பிறகு அவன் சொன்னது தான் சின்ன வியப்பைத் தந்தது.
"உங்க போட்டோ எங்க காலேஜில் இருக்கு தெரியுமா?" என்று சொல்லி சிரித்தான் சதீஷ்.
நான் முழிக்க பதிலுக்கு அவன், "வாங்க காட்டுறேன்," என முன்னால் நடந்தான்.
திடலின் அருகே இருந்த போர்ட்இல் டீமின் வெற்றிகள் மற்றும் போட்டோக்கள் இருந்தன. அங்கு இருந்த ஒரு போட்டோவை சுட்டிக்காட்டி, "இது சீனியர்ஸ் மேட்ச். நாங்க போட்டோ எடுக்கும்போது எங்களோட ப்ளூ jerseyஇன் மத்தியில் தனித்து தெரிஞ்ச ரெட் ஜெர்சி நீங்க தான்."
ஆம், நான் தான். புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதை கூட அறியாமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு ஓரமாக நின்றேன், அதுவும் எதிரணியின் போட்டோவில்
"அந்த வருஷம் நாங்க கப் ஜெயிச்சோம். ஆனா அதுக்கு முந்திய வருஷம் ஜூனியர் கப் நீங்க தான ஜெயிச்சீங்க" சதீஷிடம் வினவினேன்.
"நாங்க தான் சீனியர் கப் ஜெயிச்சிருக்கணும் பட் ஜூனியர் டீம் கேப்டன் அடுத்த வருஷ சீனியர் கப் இல் விளையாடல. இதோ நாங்க ஜூனியர் கப் வின் பண்ண போட்டோ" சதீஷின் விரல்கள் கீழே ஒட்டப்பட்டிருந்த போட்டோவைத் தட்டின.
ஒரு கணம் உறைந்துவிட்டேன் நான். அதே கருவிழிகள், நேர்த்தியான புருவம், மெல்லிசாய் ஒரு புன்னகை, தூசி படிந்த போட்டோவாக இருந்தாலும் என் மனைவியின் முகத்தை அறியாதவன் நானல்ல. போட்டோவின் நடுவில் நின்றாள் அவள். அவள் பக்கத்தில் ஒருவன் திரும்பி அவள் முகத்தைப் பார்க்க அவனின்பாதி முகம் புகைப்படத்தில் தெரியவில்லை.
"யார் இவங்க ரெண்டு பேரும்?" குரலில் நடுக்கம் தோன்றியது அவனின் பதில் தெரிந்தும்.
"அதுவா... அதான் ஜூனியர் டீம் கேப்டன் நித்தினும் அவனோட லவ்வரும். பாவம், சீனியர் வருசம் ஒரு பைக் விபத்தில் கால் இழந்து பிறகு அவனோட காதலியும் அவனைவிட்டு போய்ட்டா. ரொம்ப மோசமான விபத்து. இங்க பார்க்குறது கஷ்டம்னு அவனோட பெத்தவங்க அவனை 6 மாசம் சிங்கபூருக்கு treatmentகு கொண்டுபோயட்டாங்க. friends தான் உலகம்னு பெத்தவங்க பேச்சைக் கேட்காம வேல்லினாட்டில் படிக்காம சென்னைலயே MBA பண்ணான். அந்த விபத்துக்கு அப்புறம் அவன் இந்தியாவுக்கு திரும்பி வரவேயில்லை."
நித்தின் இப்போது சென்னையில் அதுவும் என் ஆபீசில் இருக்கிறான் என்று அவனுக்கு எப்படி தெரியும்.
"அந்த பொண்ணு..."
"அதான் சொன்னேனே...கால் இல்லாதவனை எதுக்கு காதலிக்கணும் அவள் break-up பண்ணிட்டு வேறு எங்கயோ போய்ட்டா. பணம் இருந்தாலும் கால் இல்லாதவன் இல்லையா...மனிதன் இத்தனை வருடங்கள் தாக்குப்பிடிப்பதற்கு சுயநலம் தான் காரணம். பிறவி குணம்."
அந்த போட்டோவை என் போனில் போட்டோ எடுத்தேன். எதற்கு என்று தெரியவில்லை, இதை அவளிடம் காட்டக்கூட மனம் கூசியது. சதீஷின் கடைசி இரு வரிகள் தான் மூளையைக் குடைந்தன. "சுயநலம் மித்திரன். கால் போனதும் ஓடிட்டா," என்ற வார்த்தைகள் அவளைப் பற்றிய என்னுடைய பிம்பத்தை நொறுக்கின. அன்று முழுக்க யோசனை நித்தினையும் அவளையும் சுற்றியிருந்தது. நித்தின் அவளுக்காக restaurantஇல் லெமன் ஜூஸ் வேண்டாம் என்று சொன்னது, இவள் அவனுக்கு சமைக்க விருப்பப்படாதது, நித்தின் அவளின் சமையைலை உதறியது என எல்லாம் இப்போது எதிரொலியாய் மூலையில் கேட்டுக்கொண்டே இருந்தன.
என் டீம் உடன் லஞ்ச் சாப்பிட்டதுக் கூட நியாபகம் இல்லை. சுயநினைவை இழந்து வேறு உலகத்தில் நான் மட்டும் தவிக்கவிட்டது போல் உணர்ந்தேன். திருமணம் ஆனதிலிருந்து நான் வெளிப்படையாக தானே பேசியிருக்கிறேன். என் புகைப் பழக்கத்திலிருந்து லாவண்யா பிரச்சனை வரை அவளிடம் ஒன்றும் மறைத்ததில்லை. இத்தனை நாள் சொல்லாதவள் இப்போது நித்தின் வந்ததும் சொல்லியிருக்கலாம் ஆனால் இருவரும் எலியும் பூனையுமாய் என் கண் எதிரே வேஷம் போட்டிருக்கின்றனர்.
லஞ்ச் முடித்துவிட்டு காரை எடுத்தபோது அவளைக் காண விரும்பாமல் என் போக்கில் ஓட்ட ஆரம்பித்தேன். அவளின் மெசேஜ்கலிலிருந்து வெளிச்சமாய் எரிந்த போனை காரின் backseat இல் வீசினேன். இங்கிருந்து தூரமாய் துரோகத்தை எங்கோ படித்த சிறுகதையாய் மறந்து என்னையே ஏமாற்றிக்கொண்டு பாதை முடியும்வரை போய்க்கொண்டே இருக்கலாம். எல்லா விரக்தியுடனும் highwayஇல் கார் பறந்தது.
மாலை நேரமும் நெருங்கி விளக்குகள் சாலையை அலங்கரித்தன. திடீரென கார் நின்றது. பெட்ரோல் தீர்ந்ததால் சக்தியின்றி நின்ற கார்போல என்னுள் இருந்த கோபமும் சக்தியை இழந்து களைப்பில் அடங்கியது. காரின் கதவைத் திறந்து வெளியில் வந்து நின்றபோது தான் சுற்றும் முற்றும் பார்த்தேன். சுற்றி மரங்கள் எல்லையின்றி வளர்ந்திருந்தன. யாருமற்ற இந்த இரவின் நிசப்தம் இரைச்சலாய் கேட்டது. குளிகாற்று மனதை ஒருமுகப்படுத்தி சலனம் அடைந்த எண்ண நீரோடை சமநிலையை அடைந்தது. காரின் பம்பர் மேல் அமர்ந்து கரங்களை நெற்றியின் இரு ஓரத்திலும் பதித்தேன். தார் சாலையில் இரவின் கறுமையில் என் நிழல் கூட என்னோடு இல்லை.
அப்போது என்னைக் கடந்து highwayஇல் சென்றுக்கொண்டிருந்த வண்டிகள் திடீரென நின்றன. நான்கு பைக்களில் இருந்து சில இளைஞர்கள் இறங்கி சிறு நீர் கழிக்க சாலையோரம் ஒதுங்கினர். அதைப் பெரிதாகக் கண்டுக்கொள்ளாத நான் இப்போது எச்சரிக்கையாய் நிமிர்ந்து பார்த்தேன். குடிபோதையில் தள்ளாடியபடி கால்கள் என்னை நோக்கி வந்தன. இந்த பிரச்சனை வேற நமக்கு தேவையா என்று கடித்துக்கொண்டு bumperஇலிருந்து எழுந்து நின்றேன். இன்று ஏற்கனவே நடந்ததை விட மோசமாகவா இருக்கப்போகிறது? என்ன நடந்தாலும் கவலையில்லை
[இதற்கு முன் ஒரு cute filler chapter போடலாம்னு இருந்தேன் பட் கதைய சீக்கிரம் முடிக்க சில அனாவசியத்தை தவிர்க்கணும். மித்திரன் திரும்ப வீட்டுக்கு போவானா? இன்னும் 3 வாரங்களில் கதை முடிவு பெரும். Please make writer happy with votes and comments so that writer can put up an epilogue/extra chapters;) ]
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro