Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஈர்ப்பு

ஆபீஸ் செல்ல விரும்பாதவள் நித்தினுக்குச் சமைக்க சொன்னேன் என்ற ஒரே காரணத்துக்காக எழுந்து எல்லா வேலைகளையும் அரக்க பரக்க முடித்து என்னுடன் ஆபீஸ் கிளம்பினாள். அதிகாலையில் அவளிடம் முகம் கொடுத்து பேசாததால் இப்பொழுது குற்ற உணர்ச்சி உறுத்தியது. அதுவும் அங்கு அவள் தனியாக அமர்ந்து சாப்பிட்ட காட்சியும் பேச்சுத் துணைக்கு இருங்களேன் என்று கெஞ்சியதும் கண் முன் தோன்றி மனதைக் குடைந்தது. தவறுகளுக்குப் பிரயாசித்தமாய் இன்றைய டின்னருக்கு வெளியே கடையிலிருந்து வாங்கி வருகிறேன் என்று ஒரு மெசேஜைத் தட்டிவிட்டேன் 5 மணிக்கு.

"இன்னைக்கு நான் கோவிலுக்கு போறேன். நீங்க அங்க வந்து பிக் அப் பண்ண முடியுமா?" வினவினாள் அவள்.

ம்ம்ம் என்று பதிலளித்துவிட்டு அரை மணி நேரத்துக்குப் பிறகு காரை ARR ரோட் இல் அமைந்திருக்கும் பெரிய கோயிலுக்குச் செலுத்தினேன். எக்காலத்திலும் பெண்களுக்கு ஏனோ கடவுள் மேல் உள்ள நம்பிக்கை முழுமையாகக் கரைவதில்லை. கடவுள் மேல் ஓர் இனம்புரியாத ஈர்ப்பு இருந்ததுக்கு அவர் புரியாத புதிராகவே இருப்பதும் காரணம்.

காரை பார்க் செய்துவிட்டு கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தபோதே அவளை அடையாளம் கண்டுக்கொண்டேன். அங்கிருந்த நாலைந்து மக்கள் அர்ச்சகருக்காகக் காத்திருக்க இவள் மட்டும் ஓரத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல்விளக்குகளின் அருகில் அமர்ந்து தரையைப் பார்த்துகொண்டிருந்தாள். ஓரிரு விளக்குகளே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பலவீனமாய் காற்றில் ஊசலாடிக்கொண்டிருந்தன. அவளருகில் வந்து தரையில் அமர்ந்ததும் வலது பக்கம் திரும்பி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். இதழில் பூத்த புன்னகை கண்களை எட்டவில்லை. அவள் கன்னத்தில் முத்தமிட்டேன் அன்பாய், ஆறுதலாய். முரைத்துக்கொண்டே, "பப்ளிக்ல இருக்கோம்," என்றாள்.

"இருக்கட்டும். என் wifeஐ தான கொஞ்சுறேன்! சரி என்ன சொன்னார் உங்க கடவுள்?" சிரிப்புடன் கேட்டேன்.

"பழைய விஷயங்கள் மீண்டும் தலை தூக்கினாலும் இப்போ உனக்கு முக்கியமா இருக்குற விஷயங்களை மறந்துடாதன்னு அட்வைஸ் பண்ணாரு," அவள் முகம் இறுக்கமாகவே இருந்தது.

"சரி அவர்கிட்ட பேசிட்டியல்ல. வா கிளம்பலாம்," எழுந்திருக்க முற்பட்டேன்.

ஆனால் அவள் என் கையைப் பிடித்து இழுத்து, "கோயிலுக்கு வந்துட்டு pray பண்ணாம போனா எப்படி? ரெண்டு நிமிஷம் pray பண்ணிட்டு வாங்களேன்," என உட்காரவைத்தாள்.

"கடவுளே, எனக்காக என் வைப் எல்லாம் கேட்டிருப்பா. நீ அவ சொன்னதெல்லாம் நிறைவேர்த்திடு ஓகே!" என ஓரிரு வரிகளை உரக்க சொல்லி அவள் வேண்டுகோளுக்கு இணங்கினேன். அவள் மறுப்பு தெரிவிக்கும் முன் அவள் கையைப் பிடித்து விறுவிறுவென வெளியேறினேன். கடவுள் என்பது விதியாகின் அவரிடம் கேட்பதற்கு எதுவுமில்லை.

கார் வீட்டை நோக்கி விரைந்தபோது அவளின் போன் ஒலித்தது. போனை எடுத்து, "ஹலோ ராம்," எனக் கூவினாள்.

யார் இந்த ராம் என சட்டென புலப்படாததால் தொடர்ந்து அவர்களின் உரையாடலைச் செவியுற்றேன்.

"இல்ல ராம், நான் அப்படிலாம் யோசிக்கல. நீங்க இப்டி சொன்னது எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு," அவள் மொழிந்தாள்.
மறுமுனையில் ராம் ஏதோ சொல்ல இவள் சிரித்துவிட்டு, "கண்டிப்பா!" என உற்சாகக் குரலில் பதிலளித்தாள்.

போன் உரையாடல் நின்ற பின் நான் விசாரிக்கும் முன்பே என் மனைவி எல்லாவற்றையும் கொட்டினாள், "ராம் தான் கால் பண்ணான். டீம்காக சாரி கேட்டான்! சின்ன விஷயமா நினைச்சு மறந்துடுங்கன்னு சொன்னான்!"

"யாரு ராம்?"

"புது டீமில் என் கீழ வேலைப் பார்க்கிறான். அன்னைக்கு manager கீர்த்தனா, அரவிந்த், ராம் மூனு பேரோட வேலையும் திருப்தியா இல்லன்னு திட்டுனாரே," அவள் நியாபகப்படுத்தினாள்.

ம்ம்ம் என்று மட்டும் ஆமோதித்தேன். இன்று முழுக்க வாடியிருந்த அவளின் முகம் இந்த சிறு போன் காலில் மலர்ந்ததால் ஆபீஸ் விஷயமாகத் தான் இவள் குழம்பியிருக்கிறாளோ என சிந்தித்தேன். ஆனால் மற்றவர்கள் இழைக்கும் நெருக்கடிகளைப் பொருட்படுத்தாதவள் இதுக்காக தான் கோவிலுக்குச் சென்றாளா என்பதில் ஐயம். சூரியனின் வெண்ணிறத்தை தன் தேகத்தில் பூசிக்கொள்பவள் இவள். அவ்வளவு எளிதில் சலனமடைய மாட்டாள்.

அவளுக்கு ஆபீஸ் மூச்சுத் திணற வைக்கும் இடமாக மாறியதுபோல் எனக்கும் மாறியது சில நாட்களில். மனோஜ் தன் புதிய இடத்துக்கு மாறியதிலிருந்து எனக்கு சற்று நெருக்கடியாக இருந்தது அவன் டேபிளுக்கு செல்லும்போதெல்லாம், காரணம் நான் அங்கு வருகை தரும்போதெல்லாம் லாவண்யா அங்குக் குத்துக்கல்லாக அமர்ந்திருப்பாள். இவனுடன் லஞ்ச் போனால் அந்த மரமண்டையும் இளித்துக்கொண்டே அவளையும் அழைத்தான். ஆபீஸ் முழுக்க ரவுண்ட் அடிக்கும் மனோஜ் அவன் இருக்கையில் இல்லாத சமயம் பழக்க தோஷத்தில் அவன் டேபிளுக்கு வந்தால் அவள் அங்கு புலிக்கு காத்திருந்த வேடன் போல் இருப்பாள்.

நான் கவனித்தவாக்கில் அவளுடைய உடை மற்றும் அலங்காரமும் மெருகேறின ஓரிரு வாரங்களில். அதைத் தனக்கான signஆக மனோஜ் எடுத்துக்கொண்டு ஆர்வமாக அவளுக்காகப் பலவற்றை செய்யத் துவங்கினான். நான் நினைப்பது மனப்பிரமை என நான் என்னை சமாதானப்படுத்திக்கொண்டு மனோஜின் காதலுக்கு உதவ முன்வந்தேன். நான் பலமுறை வற்புறுத்திய பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு நாள் லாவண்யாவை ஆபீஸ் முடிந்து டின்னர் செல்ல அழைத்தான். அவனுனைடய பைக் இல் போக சங்கடமாக இருக்குமென என் கார் சாவியை அன்று அவனிடம் ஒப்படைத்தேன். அன்றிரவு ஒரு மெசேஜ் வந்தது அவனிடமிருந்து. "நீ சொன்ன மாதிரி டின்னர் கூட்டிட்டு போனேன் டா. நிறைய பேசினோம் ஆனா லாவண்யா மனசுல என்ன நினைக்கிறான்னு இன்னும் தெரியல."

ஆர்வத்துடன் பதிலளித்தேன், "ம்ம்ம்...பொறுமையா தான் இருக்கனும். அவள சரவண பவன் மாதிரி ஏதாவது restaurantகு கூட்டிட்டு போகலயே? நீ செஞ்சாலும் செஞ்சிருப்ப."

"இல்ல டா. லாவண்யா தான் இடம் சொன்னாள். So Pho நு ஒரு Vietnamese restaurant! Classy ஆ ஒரு டின்னர்! எப்புடி!" தோரணையுடன் அவன் பதிலளிக்க நானோ அவனின் பதிலைக் கண்டு ஒரு நிமிடம் திக்குமுக்காடினேன். சில வாரங்களுக்கு முன் நான் லாவண்யாவுடன் சென்ற அதே உணவகம் ஆனால் இப்போது மனோஜும் லாவண்யாவும் சென்றிருக்கிறார்கள், அதுவும் லாவண்யாவின் பரிந்துரைப்படி.

[வீடு, ஆபீஸ் நு இந்த ரெண்டு இடத்தை மட்டுமே சுத்தி கதை ஓடுறது எனக்கே boring ஆ இருக்கு. என்ன பண்ணலாம்?
யாரும் பழைய charactersஐ மறந்துடாதீங்கப்பா! ராம், கீர்த்தனா அப்புறம் நித்தின், எல்லாருக்கும் ரோல் இருக்கு அங்க அங்க, சோ வெயிட் பண்ணுங்க நான் எழுதும் வரை. வோட் போடுங்க, writer சீக்கிரம் அப்டேட் போடுவார்;) ]

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro