5
அன்று கல்லுரியின் முதல் நாள் என்பதால் சற்று பதற்றத்துடன் கல்லூரி வாசலை மிதித்தாள் சாருலதா. சுற்றி முற்றி கல்லூரியின் கட்டிடமும் வெள்ளை நிற பூக்களுடன் இருக்கும் செடிகளும் காணபட்டன. அழகான அந்த கல்லூரி யை சுற்றி சில மரங்களும் இருந்தன. முதலாவது ஆண்டு மாணவ மாணவிகள் எல்லாம் ஆங்காங்கே அவர்கள் வகுப்பறைக்கு செல்ல இவளும் கம்ப்யூட்டர் சைனஸ் பிரிவில் இருக்கும் வகுப்பறைக்கு செல்ல "எக்ஸ்கியூஸ் மீ மேம்"என்று அவள் குரல் கேற்க எல்லோருடைய பார்வையும் சாருலதா மீது இருந்தது.
சாருலதா உள்ளே நுழைந்து முதல் இருக்கையில் (பெஞ்சில்)அமர்ந்தாள். இதை கவனித்த சித்து அவளுக்கு நேராக இருக்கும் முதல் பெஞ்சில் வந்து தானும் அமர்ந்து கொண்டான். "ஹாய் சாரு ஐயம் சித்தார்த்"
ஓ...ஹாய் நான் சாரு....சாருலதா.
இருவரின் கண்களும் நேருக்கு நேராக சந்தித்து கொண்டது
இந்த சந்திப்பு சற்றே வித்யாசமாக தெரிந்தது சாருவிற்கு . இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் காம இட்சைகாக மட்டுமே ஆண்களின் பார்வை தன் மீது விழுந்திருந்த நிலையில் இன்று ஒரு நட்பு பார்வை தன் மீது விழ ,ஏதோ ஒரு ஆண் நண்பர் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் அவள் இருக்க "ஹலோ ...பாடத்தை கவனிங்க என்று மேம் குரல் கொடுக்க முதல் வகுப்பு துவங்கியது.
வகுப்பில் கேற்கபட்ட கேள்விகள் அனைத்திற்கும் டக்டக் என பதில் கூறிய சாருவை பார்க்கும்போது சித்துவிற்கு ஆச்சரியம் . மதிய உணவு இடைவேளி நேரத்தில் அவளருகே செல்ல"ம்ம்ம் சாரு உங்களுக்கு எப்படி மேம் கேக்குற எல்லா கேள்விக்கும் பதில் தெரிது??☺️
ஹாஹா நான் ஏற்கனவே ஒருவருஷம் படிச்சிட்டு தாங்க வந்துருக்கேன் பாதியில் விட்டுட்டேன் அதான் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறன்.
ஓ...நீங்களும் நம்ம கேஸா நானும் ஒரு வருஷம் பிஸ்.ஸி சேர்ந்து வேஸ்ட் பன்னிட்டு தான் வந்துருக்கேன்😂😂😂
ரொம்ப பெருமை தான் போங்க.
இருவரின் நட்பு இந்த உரையாடலில் மலர ஆரம்பித்தது.
🌼🌼🌼🌼🌼
இரண்டு நாள் கழிந்தது.
சித்துவின் அத்தை மகளுக்கு திருமணம் ஆதலால் சித்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு செல்ல அங்கு அவனது அத்தையின் இரண்டாவது மகளை சித்துவிற்கு நிச்சயம் செய்ய முடிவு செய்தனர் பெரியவர்கள்.
அத்தை - டேய் சித்து உனக்கு என் பொன்னு ராதிகாவை கட்டிக்க சம்மந்தம் தானே ??😊சொல்லு நிச்சயம் பன்னிடலாமா.???
சித்து - அத்தை நான் இப்ப தான் இன்ஜினியரிங் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்,ராதிகா இப்ப தான் பிளஸ்1 படிக்கிறா அதுக்குள்ள என்ன அவசரம்???☺️
அதுக்கில்ல டா மருமகனே என் முதல் பொன்னு தான் அஸல் ல கல்யாணம் பன்னவேண்டி போச்சு இரண்டாவது பொன்னு ராதிகா ஆச்சும் உன்னை கட்டிகிட்டு நல்லாருக்கும் தோனுது. அதான் நிச்சயம் பன்னிகிட்டா மனசுக்கு த்ருப்தி. கல்யாணம் இன்னும் 4 வருஷம் கழிச்சு வச்சிப்போம்.
என்னவோ பன்னி தொலைங்க😂ஆனால் ராதிகாவை கேட்டு பன்னுங்க .
சரி சரி ...என்றபடி அந்த கல்யாண நிகழ்ச்சியில் இவனது நிச்சயமும் நடந்துவிட ஏதோ விளையாட்டாக ஒரு நிச்சயம் என்பது போல் அரங்கேறியது.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro