10
என்ன சித்து அப்படி பாக்குற எங்க அம்மா உன்னை மாப்பிள்ளை னு கூப்பிட்டது தானே யோசிக்கிற அது ஒன்னுல அவங்க அண்ணன் பையன் உன்னை மாதிரியே இருப்பான் அதான் அந்த பழக்க தோசத்துல உன்னை மாப்பிள்ளை னு கூப்பிட வேண்டியதா ஆயிடுச்சு.என்று அவள் எப்படியோ சமாளிக்க
ஓ....அப்படியா அப்படினா சரி.
சரி சரி வாங்க எல்லாரும் கை கால் அலம்பிட்டு வாங்க சாப்பாடு பறிமாறன் என்று நம் சாருவின் தாய் சமையலறை நோக்கி சென்று அங்கிருந்த உணவு பாத்திரங்களை கொண்டு வந்து தரையில் ஒவ்வொன்றாக அடுக்கி வைக்க பக்கத்தில் இருந்த வாழைமரத்திலிருந்து இலைகளை பறித்து வந்து அவர்களுக்கு இலையை விரிக்க மூவரும் அமர்ந்தனர் பக்கத்தில் ராகேஷூம் அமர முதலில் இலையில் இனிப்பிற்காக சேமியா கேசரியை வைத்துவிட்டு பிறகு பக்கத்தில் காய்கறி பொறியல் வைத்து நடுவில் சாதம் அள்ளி வைக்க அதில் ஆங்காங்கே சில காய்கள் தென்படுமாறு வைத்திருந்த பருப்பு சாம்பாரை ஊற்றி சிறிது நெய் விட ஆஹா.....கமகம வென்று இருந்தது. எதைவிடுவது எதை சாப்பிடுவது என்று தெரியாமல் சித்து அசந்துவிட "ஆண்டி சமையல் சூப்பர்"என்று பாராட்ட தன் மருமகன் பாராட்டி விட்டான் என்ற சந்தோஷத்தில் அவர் மிதக்க...பிறகு எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின் அவரும் சாப்பிட தன் தாயிற்கு சாரு பறிமாறினாள். அம்மா நல்லா சாப்பிடு மா......
அம்மாடி எம்புட்டு நாள் ஆச்சு தெரியுமா நீ பறிமாறி என்று அவளுடைய தாய் கூற இதை கவனித்த மது "மா...கவலையே படாதிங்க இனி நானும் உங்களுக்கு மகள் மாதிரி தான்"என்று தானும் அவள் பங்குக்கு வந்து காய்பொறியலை பறிமாற இப்படியே மதியநேரம் சென்றுவிட்டது.
மாலை எல்லோரும் குளித்துமுடித்துவிட்டு சுத்தமாக தயார் ஆகினர் கோவிலுக்கு. ஆம் அம்மனுக்கு மல்லிபூ அலங்காரம் என்பதால் நீண்ட செண்டாக கட்டி வைத்த மல்லிகை மாலையை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.
சித்துவிற்கு இதெல்லாம் புதுசாக இருந்தது "இதையெல்லாம் பார்க்க வா கோவிலுக்கு போறது "என்று அவன் சாருவிடம் கேற்க "ஏய் சித்து இந்த கோவில் திருவிழா வித்தியாசமான அனுபவமா இருக்கும் இங்க ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பூவில் அலங்காரம் பன்னுவாங்க அம்மனுக்கு பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கும் நீ வேணும்னா பாரேன் என்று கூற அதற்கு மது "அட நீங்க வேற சாரு எங்க அண்ணன் இந்த கோவில் சாமி இதெல்லாம் வரவே வராது. இது தான் புதுசு. பக்திக்கு அவனுக்கும் ரொம்ப தூரம் ஹாஹா....
ஹாஹா.... மது ஆனால் எங்க ஊர் திருவிழா க்கு திரும்பி போக மனசே வராது.
மாப்பிள்ளை வாங்க உங்க கையால சாமிக்கு மாலை செலுத்துங்க என்று சாருவின் தாய் கூற "அட இவங்க வேற மாப்பிள்ளை மாப்பிள்ளை னு மானம் போது என்று சித்து நினைக்க "ஸாரி சித்து கொஞ்சம் அட்ஜஸ் பன்னிக்க "
ஹாஹா ஓகே சாரு உனக்காக அட்ஜஸ் பன்னிக்கிறன் 😊😊என்றபடி அவளை பார்க்க யாரோ சாமிக்கு வீசிய மாலை சட்டென்று சித்துவின் கழுத்தில் விழ அவனுக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம் வர...அந்த மாலையை கையில் ஏந்தியபடி பார்க்க விரைவில் மணமேடையில் மாலையும் கழுத்துமாக நிற்க அவனுக்குள் ஆசைவர "அட லூசு சித்தார்த் இன்னும் 4 வருஷம் இருக்கிறது டா உன் கல்யாணம்க்கு என்று அவன் மனசாட்சி சொல்ல அவனோ சட்டென்று சிரித்துவிட அருகில் இருந்த மது 'டேய் அண்ணா என்ன இமேஜினேஷனா....😂😂😂😂போதும் போதும் சாமியை பாரு.
தொடரும்.
அப்டேட் எப்படி இருக்கிறது??😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro