22. ராவணா
------------------------------------------------
ராவணா
இருகண் படைத்தவனேஇவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்என்ன செய்வேன்?
- கவிஞர் கவிக்கோ அப்துல் இரகுமான்
------------------------------------------------
மேடையேறி மாப்பிள்ளையிடம் ஹாய் மச்சான் என நலம் விசாரித்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க போட்டோகிராபரைப் பார்க்க திரும்பியபோது அவள் வந்தாள்.
ஒரு கணம் ராஜ் திக்குமுக்காடிவிட்டான். உள்ளே நுழைந்தவள் முதலில் மண்டபத்தை எதார்த்தமாக தான் பார்த்தாள் ஆனால் அங்கு ராஜ் நிற்பதைக் கண்டு வினோவும் நின்றுவிட்டாள். பல மாதங்கள் கழித்து தன் காதலன் மேல் படும் அவளின் முதல் பார்வையால் பாலைவனத்தில் மழை பெய்ததுபோல் இருந்தது ராஜின் மனதில். ராஜ் சுய நினைவைடைந்ததும் சிரிதாய் சிரித்தான். அதைக் கண்ட வினோவின் கண்கள் தரையை நோக்கின. வினோ மண்டப ஹாலைக் கடந்து ஒரு ஓரத்தில் தோழிகளோடு நாற்காலியில் அமரும்வரை வெளிச்சத்தின் பின்னால் மயங்கி போகும் லிட்டில் பூச்சிபோல் வினோதினியை கண்கள் பின் தொடர்ந்தன.
ஸ்டேஜ் இலிருந்து இறங்கிய ராஜ் காந்தத்தை ஈர்க்கும் இரும்பாய் வினோதினி அருகே வந்தான். மேகங்கள் வானின் ஓரத்தில் குமித்துவைக்கப்பட்டதுபோல் அந்த நாற்காலியில் வினோதினி அமர்ந்திருந்தாள். அருகில் வந்து நின்றதும் இருவரின் கண்களும் பூரிப்பில் சந்தித்துக்கொண்டும் பின் வெட்கத்தில் பிரிந்துக்கொண்டும் பின் மீண்டும் சேர்வதுமாய் நாட்டியமாடின.
சுற்றியிருந்த நண்பர்களிடமிருந்து விலகுவது அநாகரிகமாகப் பட இருவரும் தத்தம் வட்டத்துக்குள் இருந்துக்கொண்டு பார்வையால் அம்பு எய்தனர். பின் மாப்பிள்ளையின் சொந்தக்காரர் இவர்களை சாப்பிட அழைத்ததும் ஆண் பெண் இரு வட்டமும் சாப்பாடு ஹாலுக்குச் சென்றது. அச்சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு எல்லோரும் உட்கார இடம் பிடிக்க ராஜ் வினோ அருகில் உள்ள நாற்காலியில் துண்டு போடாத குறையாக இடத்தைப் பிடித்துக்கொண்டான். முதலில் தயங்கிய வார்த்தைகள் சற்று நேரத்தில் நீர்வீழ்ச்சி போல் கொட்டின. ராஜின் வலது கை சோற்றை பிசைய அவனின் இடது கை மேசைக்கு கீழ் வினோதினியின் கையைப் பிசைந்தது.
"சாப்பிட்டு முடித்ததும் நான் முன்னாடி போறேன். நீ கொஞ்சம் தள்ளி பின்னாடியே வா," என ராஜ் வினோதினியிடம் சொல்லிவிட்டு எழுந்தான்.
நம்ம ஆளு புத்திசாலி. மண்டப ஸ்டேஜ்ஜில் மண மக்கள் நிற்பதால் ராஜ் மாப்பிள்ளை ரூமுக்கே அழைத்து வந்துவிட்டான் வினோதினியை.
"இங்க யாராவது வந்துட்டா?" வினோ கதவை எட்டி பார்த்தாள்.
"வரட்டும்."
"ம்ம்கும்" வினோதினியின் முகம் மட்டும் போலி கோபத்தில் கோனியது.
"எப்டி இருக்க ராஜ்?"
"எதோ இருக்கேன். உயிர் வாழ்றேன்."
"அப்டிலாம் சொல்லாத டா. நல்ல விஷயங்கள் கொஞ்சம் டைம் எடுக்கும். அவ்ளோ தான்."
ராஜ் சற்று எரிச்சலுடனும் சலுப்புடனும் தரையைப் பார்த்தான். வினோதினி அவனின் தாடையில் கை வைத்து அவன் முகத்தை திருப்பினாள், "நீ டேலண்டட் ஆன ஆளு. எனக்கு நம்பிக்கை இருக்கு." தன் மேல் ஒரு பெண் நம்பிக்கை வைத்திருக்கிறாள், தன்னை சார்ந்து இருக்கிறாள் என்பது பெரும் போதை. பெரும் மோடிவேஷன்.
பேசிக்கொண்டே நேரம் கரைய ராஜ் தன் கையை இழுக்கையில் எதேச்சையாக வாட்ச் இன் முகத்தின் வெளிச்சம் வினோதினி கண்களில் ஒளிர உடனே வினோ அவசரமாய் எழுந்தாள். "வீட்டுலேர்ந்து பிக் அப் பண்ண யாராவது வர்ரேன்னு சொன்னாங்க. நான் கீழ போறேன்." எழுந்தவள் பெண்களுக்கே உரிதான நடத்தையாய் கண்ணாடியில் கூந்தலைக் கோதினாள். நெற்றியில் இருந்த பொட்டை அழுத்தினாள். சுடிதார் தாவணியை நீவினாள். போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் கண்ணாடியைப் பார்த்து புன்னகைத்தாள்.
"என்ன கண்ணாடி பார்த்து சிரிக்கிற?"
"அது அப்டிதான். இந்தா இது உனக்காக நான் வாங்குனது," என பர்ஸ் இலிருந்து ஒரு கிப்ட் டப்பாவை எடுத்தாள். பல நாள் கழித்து பார்க்கும் காதலிக்கு வெறுங்கையோடு வந்திருக்கிறோமே என ராஜ் தன்னை தானே கடித்துக்கொண்டான்.
" இது ரொம்ப ஸ்பெஷலான கிப்ட்," என வினோ அந்த அன்பளிப்பை அவன் கைக்குள் திணித்தாள்.
"இப்பவே பிரிக்கலாமா இல்ல நீங்க போனதும் தான் ஓபன் பண்ணனும்னு ரூல்ஸ் இருக்கா மேடம்?" ராஜ் கிண்டலாய் கேட்டான்.
" இப்பவே திற."
மலரின் இதழ்களை களைவது போல் அந்த சிறு டப்பாவை சுற்றியிருந்த தாளை கிழிக்காமல் மென்மையாய் திறந்துக்கொண்டிருந்தான் ராஜ். மிடில் கிளாஸ் பையன், அரிதாய் காணும் wrapping paper ஐ சேமிப்பது சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்ட பழக்கம். வினோதினி அவனின் பொறுமைக்கு முற்றுப்புள்ளியாய் அவனின் கையிலிருந்து டப்பாவை வாங்கி பேப்பரை பிய்த்துவிட்டு டப்பாவை மீண்டும் அவனிடம் கொடுத்தாள்.
" ஏன் இந்த அவசரம்?"
"எனக்கு நேரமாச்சு. சீக்கிரம் திறந்து பாரு ராஜ்."
டப்பாவை திறந்த போது உள்ளே ஒரு புத்தம் புதிய வாக்மேன் இருந்தது.
"முதல் மாச சம்பளத்துல உனக்காக நான் வாங்குன கிப்ட்."
ராஜ் ஆச்சரியத்துடன் வினோதினியைப் பார்த்தான். சம்பளமா?
------
எதிர்பார்க்கலைல? இவ்ளோ சீக்கிரம் அடுத்த சாப்டர் அதுவும் இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கலைல? இதுதான் 2020!
Say hi to me on Twitter at @_Mynaah_:D I'm there on days when I am not writing on Wattpad.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro