Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

2. புதுமை

காலத்தை கனத்தோடு கடத்திக்கொண்டிருந்தேன். ஜப்பான்காரர்களின் நடுவில் வாழ்க்கையை அமைதியோடு கழிக்க முற்பட்டாலும் உள்ளினுள் இருந்த உணர்வுகள் அவ்வப்போது தலைத்தூக்கி திக்குமுக்காடச் செய்தன. Engineகளும் screwdriverகளுமாய் மனிதர்களிடமிருந்தும் உணர்ச்சிகளிடமிருந்தும் தனித்து ஒரு வாழ்வு மெல்ல நகர்ந்தது. ஆனால் என் இயந்திர வாழ்க்கை அன்று மாறும் என்று எனக்கு எப்படி தெரியும்? 7 மணிக்கு அடிக்காத போன் அலாரம் தவிர மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அதே நீல வானம், அதே குளிர்ந்த காற்று. வாழ்க்கையை மாற்றும் விஷயங்கள் சிறு சலனத்தால் ஏற்படுகின்றன, இதுவும் butterfly effectஇல் அடங்கும்.

அடிக்காத அலாரம் எழுப்பாததால் 9 மணிக்கு தானாக வந்தது முழிப்பு. போனில் நேரத்தைப் பார்த்ததும் அலாரத்திலிருந்து கடவுள் வரை எல்லாவற்றையும் திட்டிக்கொண்டே அவசரமாக கிளம்பினேன். On time வந்தாலே ஏறெடுத்து பார்ப்பார்கள் இந்த ஜப்பான் ஒழுக்கத்தரிசிகள் ஆனால் எப்படி தாமதமாக indian timingஇல் வருவது நம் கலாச்சாரமோ சீக்கிரம் வருவது அவர்களின் கலாச்சாரம்.

கிளம்பிய அவசரத்தில் காலை டிபன் சாப்பிடவில்லை. வழியில் மட்டமான ஒரு காபியை வாங்கி dashboardஇல் வைத்துக்கொண்டே காரை ஓட்டினேன். ஆனால் இவ்வளவு லேட் ஆக சென்றதால் சாலைகள் வெறிச்சோடிக் காணபப்ட்டன. 100km/h வேகத்தில் ஆபீஸ் கார்பார்க்கை வந்தடைந்தாலும் பார்க் செய்ய காலி இடம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை. Security இலிருந்து manager வரை மீண்டும் எல்லோரையும் மனதுக்குள் திட்டிக்கொண்டே பக்கத்து பில்டிங்கில் காரை பார்க் செய்துவிட்டு மீண்டும் என் பில்டிங்க்கு நடந்தேன்.

"ஹே ராஜ்!" பக்கத்து டேபிள் colleague சிரித்துக்கொண்டே கைக்காட்டினான்.

"இவனுங்க நக்கலா சொல்றாங்களா இல்ல நல்ல எண்ணத்துல ஹாய் சொல்றாங்களான்னு confusionஆ இருக்கே. இருடி இரு. Engine கிஞசின்னு என்கிட்ட தான வரனும்." சிரித்துக்கொண்டே கையை உயர்த்தினேன் அவனுக்கு ஹாய் சொல்லும் வண்ணம். இயந்திர பாகங்கள் சூழ engineஇன் உர்ர் சத்தம் பின்னனி இம்சையாய் ஒளிக்க அந்நாள் வேலை துவங்கியது.

வேலை முடிந்து 6 மணிக்கு பில்டிங் கார்பார்க்கில் வந்து காரைத் தேடினேன். அப்போது தான் அந்த security வந்து சொன்னான் பக்கத்து பில்டிங்கில் பார்க் செய்திருக்கிறேன் என்று. காலையில் அவனைத் திட்டியதற்கு மனதினுள் சாரி கேட்டுக்கொண்டு பக்கத்து பில்டிங் கார்பார்க்குள் நுழைந்து காரைத் தேடினேன்.
மாற்றம் ஹீல்ஸ்ஸின் டக் டக் ஒலியில் கேட்டது. Strawberry perfume இல் மணந்தது. முக்கியமாய் அழகு தமிழில் அதுவும் சிங்கள தமிழில் கொஞ்சியது.

"இல்லை அம்மா. இங்கு எல்லாம் உண்டு. நீங்ஹள் பயப்படுவதற்கு இது அமெரிக்கா இல்லை, ஜப்பான். நீங்ஹள் கல்யணம் எண்டு சொன்னீர்கள் அதுனால் தான் நான் இண்டு வந்தேன். மீண்டும் கோபத்தைக் கிளராதீர்ஹள்." என் முன் நடந்துக்கொண்டே அப்பெண் போனில் உரையடிக்கொண்டிருந்தாள். ஒரு கையில் போனும் இன்னொரு கையால் ஹேண்ட்பேக்கை தன்னோடு அணைத்தபடி அவளின் உருவம் முன்னால் சென்றது.
திடீரெனெ வலது பக்கம் வளைந்து நடக்க நான் என் காரின் அருகே நின்றுவிட்டேன். ஒட்டுக்கேட்பதைக் காட்டிக்கொள்ளாமல் நாசூக்காக செய்யவேண்டுமே. அப்பெண் இன்னும் சற்று தூரம் நடந்து அவளுடைய காரை unlock செய்து ஏறினாள். அதோடு இன்னிசை நின்றது.
நானும் காரை எடுக்க என் முன் தான் அவளின் கார் பயணம் செய்தது கார்பார்க்கிலிருந்து வெளிவரும் வரை.

தமிழ் குரல் கேட்டு எத்தனை மாதங்களாகி விட்டன. Skypeஇல் கேட்கும் தமிழ் எதற்கும் ஈடாகாது. முன்னால் இருந்த தமிழ் பெண்ணின் கார் வலது பக்கம் திரும்ப புன்னகைத்துக்கொண்டே நாம் இடது பக்கம் காரை வளைத்து ரூமை நோக்கி வண்டியை ஓட்டினேன்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro