Prologue
சிகாகோ விமான நிலையம்.
இரவு - எட்டு இருபத்தைந்து.
"Your attention please ... Passengers to flight RS577 , to New Delhi, India are requested to assemble at Gate G6. The flight takes off in twelve minutes..."
கணினிக் குரல் தலைக்குமேல் இருந்த ஒலிப்பெருக்கிகளில் எதிரொலிக்க, மக்கள் கூட்டம் தென்முனையில் இருந்த G6 கேட்டருகில் குழுமியது. பயணிகள் ஒவ்வொருவராகத் தங்கள் போர்டிங் பாஸ்-ஐக் காட்டி அனுமதிபெற்று அந்த இருநூறடி வான்திமிங்கலத்தின் வயிற்றுக்குள் நுழைந்து அவரவர் இருக்கையில் அமரத்தொடங்கினர். அவர்களது துணிப்பைகள், சூட்கேஸ்கள், சகடைப் பெட்டிகள் என அனைத்தும் பாரபட்சமின்றி விமானத்தின் அடிப்பாகத்தில் குவிக்கப்பட்டன.
விமானத்தின் உட்பகுதியில், 'ஏர் இந்தியா'வின் ட்ரேட்மார்க் நிறமான அடர்நீல இருக்கைகளில் அவரவர் பயணச்சீட்டுக்கேற்றவாறு பயணிகள் அமரவைக்கப்பட்டனர். பாதி இந்தியர்கள், தாயகம் திரும்பும் மகிழ்ச்சியில். மீதி இந்தியர்கள்... மீண்டும் வரவேண்டிய வருத்தத்துடன். சில வெளிநாட்டவர், காணாததைக் காணப்போகும் கற்பனைகளுடன்.
"மம்மி!!! நான் இந்த ஜன்னல் சீட்டுலதான் உட்காருவேன்! I want to see the clouds!!! I wont come there mommy!!" எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிணுங்கி ரகளை செய்த குழந்தையை கிட்டத்தட்ட விமானத்தில் இருந்த அனைவருமே திரும்பிப்பார்த்தனர்.
"Mohit...behave yourself!! அப்பாகிட்ட நான் சொன்னேன்னா உன்னை ஒரு வாரம் எங்கயும் வெளிய கூட்டிட்டுப் போகமாட்டார்.. That seat is not ours. இந்த ரெண்டு சீட்தான் நம்மளோடது.... so come this side!"
கோபமும் கெஞ்சலுமாய் அவனை சமாதானப்படுத்த முயன்றாள் அவனது அன்னை. அவனோ எதற்கும் மசியாமல் அந்த இருக்கையிலேயே அமர்ந்திருக்க, என்ன செய்வதெனப் புரியாமல் அந்தப் பெண் கைகளைப் பிசைய, அதற்குள் அந்த சண்டைக்குக் காரணமான ஜன்னல் சீட்டுக்கு ஆள் வந்துவிட்டது.
வெளிர் பச்சை நிறத்தில் குர்த்தியும், ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்து, கையில் ஒரு லேப்டாப் பையும் வைத்திருந்த அந்த யுவதிக்கு, இருபத்திரண்டு, இருபத்துமூன்று வயது இருக்கும்.
"It's alright... let him sit. குழந்தைதானே... ஆசைப்படறான்... நீங்க போய் அவங்க அப்பா கிட்ட போட்டுக் குடுத்தறாதீங்க"
புன்னகையுடன் சொல்லிவிட்டு, இருவருக்குமிடையில் நடுசீட்டில் அமர்ந்துகொண்டவளை நன்றியோடு பார்த்தாள் அந்த அன்னை. அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.
"By the way, என் பேர் சஞ்சனா... நீங்க?"
"நான் மாலதி, அவன் மோகித். Mohit, say hi to Sanjana"
"Hi sanj!"
அவனது கிள்ளை மொழியிலும் அமெரிக்க சாயலோடு அவளது பெயரை ஸ்டைலாக சுருக்கிக் கூப்பிட, புன்னகையுடன் அவனது கன்னங்களைக் கிள்ளினாள் அவள்.
" அவங்க அப்பா இங்க Infolabல வேலை பாக்கறார். ஆறு வருஷமா இங்கதான் இருக்கோம். அவரோட பாட்டிக்கு உடம்பு சரியில்லைனு போனவாரம் அவர்மட்டும் பார்க்கப் போனார்.. ரொம்ப சீரியஸா இருக்காங்களாம். அதான்..எங்களையும் வர சொல்லிட்டார்.. நான் இவனை வச்சுகிட்டுக் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்."
பேசுவதற்கு ஆள்கிடைத்த சந்தோஷத்தில் தனது மொத்த வரலாற்றையும் கொட்டினாள் அந்தப் பெண். தலையாட்டிக் கேட்டுக்கொண்டாள் சஞ்சனா.
"நீங்க? டூரிஸ்டா? இல்லை சிகாகோ தானா?"
'என் கதையும் உங்களைப்போல சாதாரணமாக இருந்திருக்கலாமோ...'
"அ..இங்கதான். TSLல வேலை பாக்கறேன்... ஒரு... முக்கியமான விஷயமா இந்தியா போறேன்."
"ம்... சிகாகோ தானா?.... இல்லை பக்கத்து சிட்டியா? Exactஆ எங்க?"
மாலதி விடாமல் கேட்க, சஞ்சனா பெருமூச்சுடன் பதிலளித்தாள்.
"Michigan Avenue"
"ஓ... தெரியும். ரொம்ப பணக்கார வீடுங்களா இருக்குமே!... நீங்க அங்க இருக்கீங்கன்னா... நீங்களும் well-off ஆ?"
மையமாகப் புன்னகைத்தாள் சஞ்சனா.
"மிச்சிகன் அவென்யூவை நிறையப் பேர் அப்படித்தான் நினைக்கறாங்க, ரொம்ப காஸ்ட்லியான இடம்னு. பட், அமெரிக்காவோட மத்த ஊர்களை கம்பேர் பண்ணறப்ப, இது எக்கனாமிக் தான். I can afford it easily."
அந்தப் பெண்ணோ விடாமல், "ம்... ஆனா சிம்பிளா இருக்கீங்க நீங்க... ஃபேமிலி பத்தி சொல்லுங்க? அப்பா என்ன பண்றார்? பெரிய ஆளோ?" என்றாள்.
சட்டெனப் புன்னகை மறைந்தது அவளிடம்.
"அ... அப்பா... அப்பா இல்லை... தவறி ரெண்டு வருஷமாச்சு..."
"அச்சச்சோ.... very sorry... I didn't--"
"No no, that's okay... இங்க நானும் அம்மாவும் இருக்கோம். எங்களோட சொந்த ஊர் பழனி."
"ஓஓ... அப்ப, நீங்க வேலைக்காக சிகாகோ வந்திருக்கீங்க, அப்படித்தான?"
"ம்ம். ஆமா.. அதுவும் ரெண்டு வருஷம் ஆச்சு."
"ஓ.. அடிக்கடி ஊருக்குப் போயி பழக்கமோ?"
"இல்லை.. இப்பதான் முதல்தடவை ரிட்டன் போறேன்."
மாலதி சற்றே ஆச்சரியமாகப் பார்த்தாள். சஞ்சனா மையமாகச் சிரித்தாள். மாலதி விடவில்லை.
"ஹ்ம்ம்.... சோ, எப்படியும் ஆறு மணி நேரம் இப்படியேதான் உட்கார்ந்திருக்கப் போறோம்... பேசிக்கிட்டே போகலாமே...? எனக்கு கதைகள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். உங்க கதை இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்னு தோணுது. அவனும் ஃபோன் கிடைச்சா உலகத்தையே மறந்துடுவான்... நீங்க சொல்லுங்க, உங்களைப் பத்தி!"
குழந்தை மோகித், ஜன்னலோடு முகத்தை ஒட்டி வைத்து தரையிலிருந்தே மேகங்களைத் தேடிக் கொண்டிருந்தான். விமானம் கிளம்புவதற்கான அறிவிப்பும் ஒலித்து, அனைவரையும் சீட் பெல்ட் போட்டுக் கொள்ளுமாறு விமானப் பணிப்பெண்கள் ஒயிலாக மிரட்டிக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக வானில் 'ஏர் இந்தியா' சீறிப் பாய, அவளது நினைவு வானில் மூன்றாண்டுகள் பின்னோக்கிப் பறந்தாள் அவளும்...
****************************
வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.
'அழகிய கனாக்காலம்'....
ஒரு மென்மையான கதைத்தலம்... கதையே full and full flashback தான். அதுவும் கொஞ்சம் சென்சிடிவான சப்ஜெக்ட். இதுவரை எனக்கு இதுபோல் எழுதிப் பழக்கமில்லை. இப்போதே சொல்லிவிட்டேன்!!
கதையின் கருத்துக்கள் சிலருக்கு முரண்பாடாக இருக்கலாம், சிலருக்கு ஏற்கமுடியாததாக இருக்கலாம். எனவே, இது வெறும் கதை என்பதை நினைவில் கொண்டு படிக்கவும்! அத்தோடு, அடுத்த பாகம் எப்போது வரும்னு எனக்கே தெரியாது. எப்போதாவது எழுதத் தோன்றினால் எழுதுவேன். இல்லை ஒருவேளை நிறையப் பேர் ஆசைப்பட்டுக் கேட்டால் எழுத முயற்சி செய்கிறேன்.. பார்ப்போம்.
முதல் முயற்சி, இந்த மாதிரிக் கதைத்தளத்தில். படிப்பவர்கள் தங்களது honest commentsஐத் தந்து ஆதரிக்கவும்!✌
புது வாசகர்களுக்கு, நேரமிருந்தால் என்னுடைய மற்ற கதைகளையும் அமேசானில் பார்க்கவும். நிச்சயம் பிடிக்கும் உங்களுக்கு. 😁😊
Warm regards,
Madhu_dr_cool
Wattpad, Kindle, Fb, Twitter, Instagram, literally every place: Madhu_dr_cool.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro