💚8💚
சுவாதியை தன் மனைவி பாராட்டிப் பேசவும் அவளை வியப்புடன் திரும்பி பார்த்த ஷ்ரவண் சட்டென்று நினைவு வந்தவனாக தனது அத்தையிடம் நியாயம் கேட்டான்.
"என்னை தப்பு செய்ய வைத்ததே அவள் தான் என்பது நன்றாக தெரிந்திருந்தும் ஏன் அத்தை என்னிடம் மட்டும் இப்படி கோபித்துக் கொள்கிறீர்கள்?"
"ம்... அவள் மீது தப்பே இருந்தாலும் இப்படி ஒரு அத்தை உனக்கு இருக்கிறேன், என்னுடன் கலந்து ஆலோசிக்காமல் நீ தன்னிச்சையாக முடிவெடுப்பது என்பது முடியாது என்றெல்லாம் அவளுக்கு தெரியுமா? நீ அவளிடம் சொன்னாயா?" என்று அவனை ஆழ்ந்துப் பார்த்தார் கற்பகம்.
அவரின் குற்றஞ்சாட்டும் பார்வையில் தடுமாறியவன், "இல்லை... நான் அவளிடம் எதுவும் சொல்லவில்லை!" என்று தலைக்குனிந்தான்.
"அப்புறம்... நான் எப்படி ஷ்ரவண் அவள் மீது கோபப்பட முடியும்? இந்த வீட்டுப் பையனான நீயே என்னை பற்றி யோசிக்கவில்லை எனும்பொழுது அடுத்த வீட்டுப் பெண்ணிடம் எவ்வாறு நான் குறைக்காண்பது? இதில் அவளை வேறு என் முன்னே குற்றவாளியாக்க முயற்சிக்கிறாய் நீ..." என்றார் வருத்தத்துடன்.
"ஐ ஆம் சாரி அத்தை!" என்று தலை நிமிராது பதிலளித்தவனின் முகம் பற்றி தன்புறம் திருப்பியவர், "போனதுப் போகட்டும் விடுடா... நீ எந்த சூழ்நிலையில் எப்படி திருமணம் முடித்திருந்தாலும் சரி நம் வீட்டிற்கு வந்திருப்பவள் நல்லப் பெண்ணாக தான் வந்திருக்கிறாள். அவளுடைய மனதில் என்ன இருக்கிறதோ... நம்மிடம் தன் விவரங்களை சொல்ல விரும்பவில்லை எனும்பொழுது நாமும் அவளை வற்புறுத்த வேண்டாம். அவளுக்கே எப்பொழுது நம்மீது நம்பிக்கை வருகிறதோ அப்பொழுது தன் மனதை திறக்கட்டும். அதுவரை அவள் கூறியதுப் போலவே யாருமற்றவள் என்கிற நினைவோடு நாமும் அவளிடம் பழகலாம். என்னம்மா சரியா?" என்று ஷ்ரவணை சமாதானப்படுத்தி விட்டு ஶ்ரீநிதியிடம் வினவினார் கற்பகம்.
அது... என சில கணங்கள் திணறி விட்டு, "என்னை மன்னித்து விடுங்கள்!" என்று இமைகளை தாழ்த்தினாள் அவள்.
"உஷ்... அப்பா... காலையில் இந்த வீட்டிற்குள் நான் நுழைந்ததில் இருந்தே புருஷனும், பெண்டாட்டியும் மாற்றி மாற்றி இதையே கூறி என் கழுத்தை அறுக்குறீர்களே... குட்டிம்மா... தயவுசெய்து வேறு ஏதாவது பேச்சை ஆரம்பித்து இவர்களிடமிருந்து என்னை காப்பாற்றேன்!" என்று திரும்பி மருமகளிடம் கெஞ்சினார் கற்பகம்.
சிலபல நினைவுகளால் சற்றே தயங்கி குழந்தையுடன் சமையலறையிலேயே ஒதுங்கியிருந்த சுவாதி, அத்தையின் கூக்குரலில் தன்னை மீட்டு முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டு வெளியே வந்தாள்.
காலை உணவு முடிந்து நிதானமாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான், அவர் வந்திருக்கும் காரணத்தை தெரிவித்தார் கற்பகம்.
ஊருக்கும், உறவுக்கும் அறிவிக்காமல் முடிந்துவிட்ட திருமணத்தை முறைப்படி அனைவருக்கும் தெரிவிக்க வரும் வாரத்தில் சின்னதாக ஒரு ரிசப்ஷன் வைத்துக் கொள்ளலாம் என்றார் அவர். அது சரி வருமா... ஊராரின் பேச்சுக்கு எவ்வாறு பதில் சொல்வது என சற்றே குழம்பி யோசித்த ஷ்ரவணை மேலே சிந்திக்க விடாமல் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தவர் அதற்கான வேலைகளில் இறங்கினார்.
Story was removed
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro