💚30💚
மறுநாள் காலை விடியலில் மூவரின் முகத்திலும் சரியான தூக்கமின்மையால் சோர்வு தெரிந்தாலும் அதையும் மீறி ஒருவித தெளிவும், நிம்மதியும் குடிக் கொண்டிருக்க உற்சாகமாக ஒருவருக்கொருவர் காலை வணக்கம் கூறிக்கொண்டனர்.
சுவாதி குளியலறைக்குள் நுழைந்த நேரம் வேகமாக மனைவியை நெருங்கி அதிரடியாக அவள் முகத்தை அருகில் இழுத்து வன்மையாய் அவளின் இதழை சிறைச் செய்திருந்தான் ஷ்ரவண்.
இதுவரை கணவனிடம் கண்டிராத முரட்டுத்தனத்தில் திணறிப் போன ஶ்ரீநிதி அவனை பிடித்து தன்னிடமிருந்து தள்ள முயன்று தோற்றுத் தடுமாறினாள்.
மூச்சு விடவும் இயலாது அவள் தவிப்பதை உணர்ந்த பின்பு தான் சிறிது மனமிறங்கி அவளை விடுவித்தவன் ஒற்றை கரத்தால் அவளின் கன்னங்களை அழுந்தப் பிடித்து தன்னை விட்டு விலகாமல் நேராக பார்க்கும்படி நிற்கச் செய்தான்.
"இனி ஒரு தடவை அப்பா கொலைகாரர், ஆட்டுக்குட்டி கொள்ளைக்காரர் என்று ஏதாவது சொல்லி என்னை விட்டு ஒதுங்கிப் போவதும், சண்டைப் போடுவதுமாக இருந்துப் பார் கொன்று விடுவேன் உன்னை... எப்பொழுது பார் அவர்களை நினைத்து பயந்தேன், இவர்களை நினைத்து வருந்தினேன் என்று ஏதாவது லூசுத்தனமாக பேசி அழுது வடிவதற்கு பதிலாக உனக்கு ஆன்லைனில் டிசைனிங் கோர்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறேனே அதை உருப்படியாக கற்றுக்கொள். அதோடு என்னையும், என் பிள்ளையையும் எப்படியெல்லாம் நன்றாக சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம் என்பதையும் சேர்த்து நல்லப் பெண்டாட்டியாக தெரிந்துக் கொள்கிறாய் நீ. என்ன புரிகிறதா?" என்று அவன் உதட்டை கடித்து மிரட்டவும் ஒரு நொடி அரண்டு விழித்தாள் ஶ்ரீநிதி.
முதலில் கணவன் தன்னை உண்மையாகவே எதற்காகவோ அதட்டுகிறான் என்று அவனுடைய அதிரடியில் பயந்துப் போனவள் பின்பே அவன் பேச்சின் சாராம்சம் புரிந்து மெல்ல அவனை பார்த்து முறுவலித்தாள்.
"ஏய்... நான் உன்னை மிரட்டிக் கொண்டிருக்கிறேன், நீ என்னடாவென்றால் சிரிக்கின்றாய்!" என்றவன் மேலும் முறைக்க, "சிரிப்பதென்ன... கட்டிப்பிடிக்கவும் செய்வேன்!" என்று அவனை தன் கரங்களால் சுற்றிவளைத்து தோளில் தலைசாய்த்துக் கொண்டாள் அவள்.
உதட்டில் சட்டென்று பூத்த குறுநகையை வேகமாக விழுங்கியவன், "முதலில் என்னை விட்டு நகருடி!" என்று முசுடாக அவளை விலக்க முயன்றான்.
"நான் ஒன்றும் எனக்காக கட்டிப்பிடிக்கவில்லை, என் பிள்ளை தான் அவர்கள் அப்பாவை கட்டிக்கொள்ள வேண்டும் என்று சொன்னது!" என்றாள் ஶ்ரீநிதி ரோஷமாக.
"என்ன?" என்றவன் அவளை விலக்கி முகம் பார்க்க, "அதுதான் சொன்னேனே... பிள்ளைக்காக என்று..." என இதழ் சுழித்தாள்.
"பிள்ளைக்காக கட்டிப்பிடித்தாயா... இப்பொழுது ஒழுங்கு மரியாதையாக நீ உனக்காக என்னை கட்டிப்பிடிக்கிறாய். ம்... கட்டிப்பிடி!" என்று பிடிவாதமாக அவளை ஷ்ரவண் இழுக்கவும் முகம் சிவந்தவள், "மாட்டேன்!" என்றதற்கு மாறாக அவன் நெஞ்சில் சந்தோஷமாக சாய்ந்துக் கொண்டாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னையை நோக்கி அவர்கள் கார் பறந்து கொண்டிருந்தது.
பிற்பகல் மூன்று மணியளவில் வீட்டை அடைந்தவர்கள் ஓய்விற்காக தங்கள் அறைகளில் முடங்கினர்.
வாசல் கதவை பூட்டி தங்கையின் அறைபுறம் ஒரு பார்வையை செலுத்தி விட்டு தங்கள் அறைக்குள் நுழைந்த ஷ்ரவண் மனைவியை விழிகளால் உரசியவாறு கதவை தாளிட அப்பொழுது தான் உடைமாற்றி முடித்தவள் அவனுடைய விழிகளை ஒருமுறை எதிர்கொண்டு விட்டு அமைதியாக கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள்.
அருகில் வந்தவன் எதுவும் பேசாமல் அவள் மடியில் தலைசாய்க்க, வழக்கத்திற்கு மாறான அவன் செய்கையில் உள்ளம் சிலிர்த்தவள் கை நடுங்க அவனுடைய சிகையை கோதினாள்.
அதை உணர்ந்தவன் அவள் கரத்தை எடுத்து தனது உதடுகளில் பதிக்க, "நானும் படுத்துக் கொள்ளவா?" என்று ஏக்கத்துடன் அவனிடம் அனுமதி கேட்டாள் ஶ்ரீநிதி.
மெல்ல சிரித்தவன் நகர்ந்து படுக்க அவனருகில் நெருங்கிப் படுத்தவள் தனக்காக அவன் காட்டிய தோள்வளைவில் கன்னம் பதித்து அவனோடு ஒண்டிக் கொண்டாள்.
இவளுக்கு வசதியாக திரும்பியிருந்தவனின் முகத்தை இவள் கண்கொட்டாமல் பார்க்க, "இனி இந்த ஸ்கேனிங் வேலையெல்லாம் என்னிடம் வைத்துக்கொண்டாய், கண்கள் இரண்டையும் நோண்டி விடுவேன்!" என்று முறைத்தான் ஷ்ரவண்.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro