💚28 💚
விறுவிறுவென்று வீட்டிற்குள் நுழைந்த ஷ்ரவண் முன்னறையில் அமர்ந்திருந்த தங்கையிடம் கேள்வியாய் புருவங்களை உயர்த்த அவள் உள்ளறையை விழிகளால் ஜாடை காட்டினாள்.
மனதில் பொங்கும் எரிச்சலுடன் தன்னவளை தேடிச் சென்றான் அவன்.
'அவ்வளவு என்ன பிடிவாதம்? நான் சற்று நேரத்தில் வருகிறேன் என்று சொன்னதை கூட காதில் வாங்காமல் பட்டென்று போனை கட் செய்கிறாள்!'
ஷ்ரவண் உள்ளே நுழையும் பொழுது அதுவரை ஜன்னலை வெறித்தபடி படுத்திருந்தவள் அவன் வரும் அரவம் உணர்ந்து வேகமாக இமைகளை பூட்டிக் கொண்டாள்.
அதைக் கண்டு மேலும் சினம் ஊற்றெடுக்க வேகமாக அருகில் வந்து அவளை வலுக்கட்டாயமாக எழுப்ப முயன்றவன் அப்பொழுது தான் அவளின் உடல்மொழியை நெருக்கத்தில் கவனித்தான்.
வயிற்றில் பிள்ளையை தாங்கி கொண்டிருப்பவள் அந்த நிலையிலும் லேசாக உடலை குறுக்கி படுத்திருந்தாள். ஒரு கை தலையணையை இறுக்கப் பற்றியபடி இருக்க மற்றொரு கை மெத்தைவிரிப்பை சுருட்டி பிடித்திருந்தது. முகத்தில் மெலிதான அச்சம் பீடித்திருக்க சுவாசம் சீராக இல்லாமல் பதற்றத்தில் ஏறி இறங்கும் நெஞ்சோடு மூடிய இமைகளுக்குள் விழிகளை இங்கும் அங்கும் உருட்டிக் கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி.
கொதிக்கின்ற பாலாய் உள்ளுக்குள் பொங்கி கொண்டிருந்த அத்தனை கோபமும் தண்ணீர் ஊற்றிய பாலாக அடங்கி உள்ளே போக அமைதியானான் ஷ்ரவண்.
புருவங்கள் சுளித்திருக்க அப்படியே அவளை பார்த்தபடி யோசனையாய் நின்றிருந்தவன், பின் அறை வாயிலுக்கு சென்று, "குட்டிம்மா... உன் அண்ணி படுப்பதற்கு முன்னால் ஏதாவது குடித்தாளா இல்லையா?" என்று தங்கையிடம் விசாரித்தான்.
"இல்லைண்ணா ... நானும் சொல்லிப் பார்த்தேன், அவர்கள் கேட்கவில்லை!" என்றாள் சுவாதி வருத்தமாக.
"ஓ... சரி வா, நமக்கும் சேர்த்து போடலாம்!" என தங்கையுடன் சமையலறைக்குள் நுழைந்தவன், அவளிடம் கோவிலில் மனைவி நடந்துக் கொண்ட முறைகளை பற்றி மெதுவாக விசாரித்து அறிந்துக் கொண்டான்.
"ம்... நிச்சயமாக அவள் ஏதோ மனக் குழப்பத்தில் இருக்கிறாள் போலிருக்கிறது. நான் மெல்ல பேசி அவளிடம் இருந்து விஷயத்தை கறக்க முடிகிறதா என்று பார்க்கிறேன், இல்லையென்றால் வழக்கம் போல் அவள் மனம் அமைதி அடையும்படி சமாளிப்பாக ஏதாவது செய்ய வேண்டியது தான். சரி பாருடா நான் போய் அவளிடம் பேசுகிறேன்!" என்று சின்னப் பெருமூச்சோடு செல்லும் தமையனை கண்டு வேதனை பிறந்தது இவளுக்கு.
'இந்த அண்ணிக்கு இன்னமுமா இவன் மேல் நம்பிக்கை வரவில்லை... அவர்கள் மீது எத்தனை அன்பை பொழிகிறான், அதில் கூடவா மனம் இறங்கி உண்மையை சொல்லக் கூடாது!'
கணவன் கதவை தாளிடும் சத்தம் கேட்கவும் இதயத்தின் படபடப்பு அதிகரிக்க தலையணையை மேலும் இறுக்கி பிடித்துக் கொண்டாள் ஸ்ரீநிதி. மனைவியை கவனித்தபடி அருகில் வந்த ஷ்ரவண் மெத்தையில் அமர்ந்து அவளையே சிறிது நேரம் உற்றுப் பார்த்திருந்தான்.
அவன் தன்னை எழுப்பாமல் வேடிக்கைப் பார்த்திருக்கவும் இவளுக்கு உள்ளுக்குள் குறுகுறுப்பாக இருந்தது. அவன் பார்வை இவளை ஏதோ செய்ய திரும்பி படுக்க உடல் கெஞ்சினாலும் அசைந்தால் விழித்திருப்பது தெரிந்து விடுமே என்று அவஸ்தையாக படுத்திருந்தாள் நம் நாயகி.
மனைவியின் உடல் மொழியை கண்டு அவளின் நிலையை புரிந்துக் கொண்டவன் மெல்லப் புன்னகைத்தபடி அவள் தலையை தூக்கி தன் மடி தாங்கினான். அப்பொழுது தான் விழிப்பவள் போல மெதுவாக இமைகளை திறந்தவளை இவன் கண்கள் இடுங்க நோக்க அவள் விழிகள் அலைபாய்ந்தது.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro