Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚27 💚

வெண்பட்டு வேஷ்டி சட்டையில் கண கம்பீரமாக கிளம்பி வெளியே வந்த தன் கணவனை ஆசை ஆசையாய் பார்வையால் விழுங்கினாள் ஸ்ரீநிதி.


"என்னடி கண்ணாலே கபளீகரம் செய்கிறாய்?" என்று சுற்றிலும் யாருமில்லை என்பதை அவசரமாக கவனித்து விட்டு மனைவியின் அருகில் சென்று அவள் தோளில் இடித்தான் ஷ்ரவண்.

முகம் முழுவதும் மலர்ந்து விகசிக்க, "இந்த வேஷ்டி, சட்டையில் நீங்கள் ரொம்பவும் கம்பீரமாக தெரிகிறீர்கள், உங்களை விட்டு கண்களை சிறிதும் அசைக்க முடியவில்லை!" என்றவளின் விழிகள் காதலில் வழிந்தது.

அவளையே ஒரு நிமிடம் ஆழ்ந்து நோக்கியவன், "பார்த்து... உனக்காவது கண்கள் மட்டும் தான் அசையாது, நீ இப்படியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தால் அப்புறம் எனக்கு கால்களை மட்டும் அசைக்க முடியாமல் மற்றதெல்லாம் அசைய ஆரம்பித்து விடும்!" என்றவன் ஏக்கப்பெருமூச்சு விட இவள் முகம் செம்பருத்தியாய் சிவந்தது.

"ஷ்... அப்பா... தாங்க முடியவில்லைடா சாமி. ஏன் குட்டிம்மா உன் அண்ணன் என்ன இப்படி ரொமான்ஸ் படம் ஓட்டுகிறான்?" என்று அலுப்புடன் புலம்பும் பிரசாத்தின் குரலில் கணவன், மனைவி இருவரும் வேகமாக திரும்பி பார்க்க, அவர்களின் திகைத்த முகத்தையும் கவனமாக தனது அலைபேசி கேமராவில் பதித்துக் கொண்டாள் சுவாதி.

"அண்ணா... இரண்டு பேரும் பார்த்தீர்களே ஒரு பார்வை, மை குட்னஸ்... என்ன ஒரு காதல்? இங்கே பார்!" என்று தான் எடுத்த படங்களை அவர்களிடம் காட்டினாள்.

பிரசாத்தின் கேலியை ஓரம் தள்ளி இருவரும் ஆர்வமாக படங்களை பார்த்தனர்.

முதல் படத்தில் ஸ்ரீநிதி மட்டும் ஆவலுடன் ஷ்ரவணை விழிகளால் படம் பிடிப்பது பதிந்திருக்க, அடுத்த படத்தில் அவன் இவளருகில் வந்து இவள் மீது மோதி கிசுகிசுப்பது பதிவாகி இருந்தது.

"ஐயோ... என்ன நீ இப்படி எடுத்து வைத்திருக்கிறாய்?" என ஸ்ரீநிதி தவிக்க, "ஏன் இதற்கு என்ன? எல்லாமே ரொம்பவும் அழகாக இருக்கிறதுடா குட்டிம்மா!" என்று வெளிப்படையாகவே தங்கையிடம் வழிந்தான் ஷ்ரவண்.

"மானங்கெட்ட பிழைப்புடா... ஏன்டா என் தங்கை மாதிரி உனக்கு கொஞ்சம் கூட கூச்சமோ, வெட்கமோ வரவில்லையாடா?" என்று மச்சினனை வாரினான் பிரசாத்.

"அதை எதற்காகடா அநாவசியமாக தேவையில்லாமல் நடுவில் விட்டுக் கொண்டு... ஆமாம் மற்றவர்கள் எங்கே?" என்று மீண்டும் விழிகளை சுழற்றினான் ஷ்ரவண்.

"உன் அலம்பலை எல்லாம் ஏற்கனவே கணித்து விட்டார்களா என்னவென்று தெரியவில்லை, நாங்கள் முன்னே கிளம்பி செல்கிறோம் நீ அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு வா என்று சொல்லி விட்டார்கள்!"

"ஓ... இதுதான் சாக்கு என்று நீங்கள் இருவரும் ஓசிப்படம் பார்த்தீர்களா?"

"ப்ச்... அண்ணா!" என்று சுவாதி முறைக்க, "நீங்களே கவலைப்படாமல் படம் காட்டும் பொழுது பார்க்கின்ற நாங்கள் ஏன்டா தயங்க வேண்டும்?" என்றான் பிரசாத் அதற்குமேல் கூச்சமின்றி.

"இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு..." என்று தலையலடித்துக் கொண்ட சுவாதி, "வாங்க அண்ணி... நாம் போய் காரில் உட்காரலாம்!" என அவளை அழைத்து சென்றாள்.

- part to be continued on www.deepababuforum.com

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro