💚21💚
ஸ்ரீநிதியின் வார்த்தைகளில் வாய் விட்டு சிரித்த ஷ்ரவண் அவளை மேலும் நெருக்கியபடி, "என்ன செய்வதுடா செல்லக்குட்டி? உன் மாமாவிற்குள் இருக்கும் குட்டி மூளை அவ்வளவு தான் வேலை செய்கிறது. இதில் உடலில் உண்டாகும் சலனம் வேறு அதற்கு பிடித்திருக்கிறதா என்ன என்று ஒன்றும் புரியவில்லை. தனக்கு வசதியாக அதை மட்டுமே யோசித்து வேறு எதையும் தலையில் தோன்ற விட மாட்டேன் என்கிறது!" என்று ரொம்பவும் குறைபட்டுக் கொண்டான்.
கணவனிடம் சண்டையிடும் வேகத்தில் கேட்டு விட்டவள் அவன் சிரிக்க ஆரம்பிக்கவுமே, 'ஐயோ... என்ன இப்படி பேசி விட்டேன்?' என சங்கடத்தில் நெளியத் துவங்கினாள்.
இதில் அவன் அதற்கு விளக்கம் வேறு கொடுக்கவும் தன் முகத்தை எங்கே கொண்டு மறைப்பது என்று புரியாமல் அவனுடைய தோளிலேயே சரண் புகுந்தாள் ஸ்ரீநிதி.
அவனோ அவள் கூந்தலில் மோகத்துடன் முகம் புதைத்து, "பீல் பெட்டர்?" என்று கேள்வி எழுப்பினான்.
ம்... என்று முனகியவளுக்கு அவனை விட்டு விலக சற்றும் மனம் வரவில்லை.
சிறிது நேரம் கழித்து நினைவு ஏதோ வந்தவனாக மனைவியை தன்னை விட்டு வேகமாக விலக்கினான் ஷ்ரவண்.
அதில் சற்று ஏமாற்றம் அடைந்தவள் முகத்தில் அதை கவனமாக மறைத்து அவன் மடியை விட்டு எழுந்தாள். அவனோ அதற்காகவே காத்திருந்தவன் போல் இவளை விட்டு விலகி எழுந்து செல்ல நெஞ்சில் அடைக்கும் உணர்வுகளை விழுங்கியபடி நின்றிருந்தாள் ஸ்ரீநிதி.
சுற்றுப்புறத்தை மறந்து தனுக்குள்ளே உழன்றுக் கொண்டிருந்தவளை அவன் மீண்டும் இழுத்து அருகில் அமர வைக்க, என்னவென்று முகத்தை சுளித்தபடி அவனை பார்த்தாள் அவள்.
அவளின் வலது கையை எடுத்துக் கொண்டவன், தான் வைத்திருந்த ஐஸ் க்யூபால் வீக்கத்தின் மீது மெல்ல மெல்ல அழுத்தி ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தான்.
லேசாக வலி எடுத்து பல்லைக் கடித்துப் பொறுத்தாலும் கணவன் தன் மீது காட்டும் அக்கறையில் ஸ்ரீநிதியின் மனம் நெகிழ்ந்துக் கிடந்தது.
நிமிர்ந்து அவள் முகம் நோக்கிய ஷ்ரவண், "கொஞ்சம் வலியை பொறுத்துக் கொள். ஒரு இரண்டு, மூன்று முறை ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறைந்து விடும்!" என்றான்.
அவனிடம் உருகி கிடந்தவளோ, "எனக்கு வலிக்கவில்லை!" என்றாள் கனவில் திளைத்தவளாக.
நெற்றியை சுருக்கி கணவன் தன்னை ஊடுருவவும் சுதாரித்து, "இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை!" என்றாள் அவசரமாக.
முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான் ஷ்ரவண்.
ஸ்ரீநிதியோ உதட்டை கடித்தபடி, 'நான் சொன்னதை எதுவும் கேட்டிருப்பாரோ...' என்று அவன் முகத்தை ஆராய்ந்தாள்.
கையில் வைத்திருந்த ஐஸ் கட்டியை தான் எடுத்து வந்திருந்த பௌலில் போட்டு விட்டு அவளிடம் திரும்பியவன் அதே வேகத்தில் தன்னுடைய சில்லிட்ட கரத்தால் அவளுடைய இடையை பற்றி இழுத்து தன் மீது சாய்க்கவும், மெல்லிய புடவையை தாண்டி அவனின் தீண்டல் மேனியை சிலிர்க்கச் செய்ய உடல் கூசியவள் அவன் மீது புதைந்தாள்.
"ம்... என்ன சொன்னாய்?"
"எதைக் கேட்கிறீர்கள்?" என்றாள் ஏதுமறியாதவளாக.
"வலியை பொறுத்துக் கொள்ளச் சொன்னதற்கு ஏதோ சொன்னாயே..."
உதட்டில் வெட்கச் சிரிப்பு குமிழியிட, "இப்பொழுது பரவாயில்லை என்றேன்!" என்றாள் மென்மையாக.
"ம்... அதற்கு முன்னால்..." என்றவன் தன் மீசை ரோமத்தால் அவள் காதில் மெலிதாக உரச, அவனின் கேள்வியிலும்,செயலிலும் முகம் சிவந்தவள், "சொல்ல மாட்டேன்!" என கிசுகிசுத்தாள்.
"எனக்கு தான் கேட்டு விட்டதே... ஏன் வலிக்கவில்லை?" என்று போதையுடன் கேட்டவன் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கவும் விழிகள் சொருக அந்த மயக்கத்தை ஆசையுடன் அனுபவித்தாள் ஸ்ரீநிதி.
சில கணங்களுக்கு அப்படியே அவள் மீது தலை சாய்த்திருந்தவன், "நிதிம்மா..." என்று மெல்ல அழைத்தான்.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro