Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚20💚

'இவர் என்ன இப்படி ரொம்பவும் அடம்பிடித்தவராக இருக்கிறார், இவரிடம் இருந்து இப்பொழுது எவ்வாறு தப்பிப்பது? மிகவும் சாதாரணமாக நான் புடவையை மாற்றி விடுகிறேன் என்கிறாரே...' என நினைக்கும் பொழுதே ஸ்ரீநிதியின் உடல் முழுவதும் கூச்சம் பிறந்தது.

ஷ்ரவணை அவஸ்தையோடு ஏறிட்டவள், "ப்ளீஸ்... விளையாடதீர்கள், சத்தியமாக என்னால் முடியாது. கதவை திறங்கள், நாம் சாப்பிடப் போகலாம்!" என்று கெஞ்சினாள்.

அவனோ ஒரு கணம் அவளை உற்று நோக்கியவன், "இங்கே பார்... ஐ அன்டர்ஸ்டான்ட் யுவர் ஃபீலிங்க்ஸ், உன்னுடைய சங்கடம் எனக்கு புரிகிறது. அதற்காக என்ன செய்ய முடியும் சொல்? சுவாதி இருந்திருந்தால் அவளே உனக்கு உதவி இருப்பாள். இப்பொழுது நான் ஒருவன் தானே இருக்கிறேன், நானும் வேண்டாம் என்றால் பக்கத்து வீட்டு ஆன்ட்டியை வரச் சொல்லவா?" என்க, "ஐயோ... அவர்களையா..." என்று அலறியபடி ஏதோ பேச முயன்றவளின் உதடுகளை பட்டென்று தன் கைகளால் மூடினான் அவன்.

"இனஃப்... நீ என்னுடைய மனைவி என்கிற முறையில் நான் உன்னுடைய கணவன் தானே என்று உனக்கு இயல்பாக உதவுவதற்காக முன் வந்தேன். நீ ரொம்பவும் அரண்டு விழிக்கவும் எனக்கு சுவாரசியமாக இருந்தது, கொஞ்சமாக விளையாடலாம் என நினைத்து... நன்றாக என்ஜாயும் செய்தேன் தான் இல்லையென்று சொல்லவில்லை..." என ஒரு மார்க்கமாக இழுத்தவனை நேராகப் பார்க்க முடியாமல் அவள் தவிக்க, "ஸ்ரீநிதி..." என்று அவன் அழுத்தமாக அழைக்கவும் தயக்கத்துடன் விழிகளை உயர்த்தினாள்.

மனைவியின் கயல் விழிகளை ஒரு முறை ஆழமாக ஊடுருவிப் பார்த்தவன் மெல்ல குனிந்து அவளின் மென் இதழ்களில் தன் இதழை மிருதுவாக பொருத்தினான்.

தன்னிடம் கணவன் எதையோ கூற முயற்சிக்கிறான் என இவள் சற்றே ஆசுவாசப்படும் நேரம் அவன் திடீரென இதழணைத்து பின்பு மெல்ல மெல்ல அதில் தன் அழுத்தத்தை அதிகரிக்க துவங்கவும் கை, கால்கள் வெலவெலக்க துவள ஆரம்பித்தாள் அவள்.

தனது கைச் சிறையில் அடங்கி இருப்பவள் நேராக நிற்க முடியாமல் தடுமாறவும் அவளின் இன்ப வேதனையை உணர்ந்தவன் மெதுவாக அவளிடமிருந்து தன்னிதழை பிரித்து அவளை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.

வேக வேக மூச்சுக்களோடு சட்டென்று ஏற்பட்ட உணர்வுக் கொந்தளிப்பில் அவள் பூவுடல் நடுங்கிக் கொண்டிருக்க அவனுள் மேலும் புதைந்துக் கொண்டாள் ஸ்ரீநிதி.

தன் மார்பில் ஆழப் புதைந்து மறைந்து விடுபவள் போல் அசையாது இருந்தவளை கண்டு மெல்லப் புன்னகை பிறக்க, "ஓய்..." என்றான் அவள் காதருகே குனிந்து.

ஸ்ரீநிதியோ விழிகளை இன்னும் இறுக்க மூடி அவன் நெஞ்சோடு அழுந்திக் கொண்டாள்.

"நிதிம்மா... கொஞ்சமாக உன் கூச்சத்தை போக்கலாம் என்று தான் நான் முதலடி எடுத்து வைத்தேன். ஆனால் நீ இப்படியே நின்றிருந்தாய் என்றால் நான் மொத்தமாக போக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் வசதி எப்படி?" என்றான் ஷ்ரவண் உல்லாசமாக.

அதில் தன்னை மீறி சிணுங்கியவளை ஒரு முறை மேலும் எழும்பு நொறுங்கும் அளவிற்கு இறுக்கி அணைத்து விடுவித்தவன், "முதலுக்கே மோசமாகி விடும் போலிருக்கிறதே... அம்மா... தாயே... கொஞ்சம் என் மேல் கருணை காட்டும்மா. நான் நல்லப் பிள்ளையாக தான் உடை மாற்ற உதவுவேன் என்பதை உனக்கு புரிய வைப்பதற்குள் என்னை ஒரு வழி ஆகி விடுவாய் போலிருக்கிறது!" என்று அதிகமாக அலட்டிக் கொள்ளவும், தன் வெட்கத்தை சிரமப்பட்டு ஒதுக்கி அவனிடமிருந்து விலகியவள் சின்ன முறைப்புடன் அவனை பார்த்தாள்.

"பரவாயில்லையே... முறைக்கும் அளவிற்கு கூச்சம் போய்விட்டது போலிருக்கிறது!"

ப்ச்... என சலிப்புடன் சென்று கட்டிலில் அமர்ந்தவளை பார்த்தவன் வார்ட்ரோபிடம் சென்றவாறு, "ஒரு புறாவுக்கு போரா... என்ன இது அக்கப்போராக இருக்கிறது என்று வடிவேலு அளவிற்கு என்னை புலம்ப வைக்கிறாள் என் பெண்டாட்டி. ஒரே ஒரு முறை உடை மாற்றுவதற்குள் எத்தனை பேச்சு... எத்தனை சமாளிப்பு!" என அலுத்தபடி அவளின் நைட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு மீண்டும் அவளருகில் வந்தான் ஷ்ரவண்.

- part to be continued on www.deepababuforum.com

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro