💚2💚
அறையில் சீலிங்கை வெறித்தபடி படுத்திருந்த ஷ்ரவணுக்கு எவ்வளவு யோசித்தும் அவளோடு தனக்கு ஏற்படப்போகும் திருமண பந்தத்தை தவிர்க்க வழி தெரியவில்லை.
அவள் செய்த மாபெரும் உதவிக்கு பிரதியுபகாரமாக தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டதில், அதை அவளிடம் வெளிப்படுத்தியும் விட்டதில் அவள் கேட்பதை நான் கொடுத்து தான் ஆக வேண்டும். என்னவொன்று யார், எப்படிப்பட்டவள் என்று அவளுடைய சரித்திரம் என்ன அவளைப் பற்றிய அடிப்படை தெளிவு கூட இல்லாமல் அவளோடு தனக்கு திருமணம் நடக்கப் போகிறது.
விதியின் பொம்மலாட்டத்தில் சிக்கி தன் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை. ஆனால் இதனால் சுவாதியின் வாழ்வில் எந்தவொரு பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பது தான் தற்பொழுது அவனுக்கு பேரச்சமாக இருக்கிறது.
மெல்லிய பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், 'நீ உடன் இருக்கும் பொழுது உன்னை மீறி உன்னுடைய தங்கைக்கு என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது?' என்று தனக்கு தானே கேள்வியெழுப்பி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு துணிந்து முடிவெடுத்தான்.
அடுத்த ஐந்தாவது நாள் ஷ்ரவணுடைய மனைவியாக அவனுடைய காரில் அப்பார்ட்மென்ட் வளாகத்தில் நுழைந்திருந்தாள் அவள்.
தடதடவென்று அடித்துக் கொள்ளும் இதயத்துடன் முகத்தில் எந்தவொரு உணர்வையும் வெளிப்படுத்தாது இயந்திரத்தனமாக அவள் பக்க கதவை திறந்து விட்டான் ஷ்ரவண்.
ஒரே தங்கை சுவாதியிடம் கூட தன் திருமண விஷயத்தை தெரிவிக்காது ரகசியமாய் முடித்துக் கொண்டு விட்டான்.
உறவு, நட்புக்களின் பல்வேறு தரப்பட்ட கேள்விகளுக்கு தன் அவசர திருமணம் குறித்து விளக்கம் அளித்து மீள முடியாது என்று மறைத்தான் என்றால் தங்கைக்கு தெரிந்தால் நிச்சயமாக திருமணத்தை தடுக்கப் பார்ப்பாள் அவளை மீறிச் சென்று நடந்து விட்டதாக ஆகி விடக்கூடாது என மறைத்து விட்டான்.
நடந்து முடிந்துவிட்ட நிகழ்வின் சாட்சியோடு இப்பொழுது அவள் முன் செல்லத் துணிவின்றி தான் பாசம் கொண்ட அவன் நெஞ்சம் கிடந்து தவிக்கிறது.
'இதை எப்படி அவள் தாங்குவாள்?'
காரை விட்டு நிதானமாக இறங்கிய அவன் மனைவி சுற்றிலும் பார்வையை மெதுவாக அலைய விட்டு பின்பு தன்னருகே அசையாது சிலையாக நிற்கும் கணவனின் மீது நிலைக்க விட்டாள்.
Story was removed
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro