💚16💚
ஷ்ரவண் தன்னிடம் வெளிப்படுத்திய காதலில் ஶ்ரீநிதி மொத்தமாக உடைந்து விட தன் மீது ஆதரவாக சாய்த்துக் கொண்ட கணவனின் தோளில் ஆழப்புதைந்து அழ ஆரம்பித்தாள் அவள்.
"ப்ச்... ஏய்... நிதிம்மா... என்ன இது? காம் டவுன்!" என பலவாறு மனைவியை தேற்ற முயன்று தோற்றவன் சட்டென்று அவளை அதட்டினான்.
"ஷ்... அப்பா... ஏய்... நீயென்ன பள்ளியில் பயில்கின்ற டீனேஜ் பெண்ணா? நான் காதலை சொன்னவுடன் இப்படி அதிர்ந்துப் போய் தேம்பி தேம்பி அழுகிறாய். இவ்வளவு நேரமாக ஐ ஹேட் யூ... ஐ ஹேட் யூ... என்று என்னிடம் பெரியதாக வாய் கிழியக் கத்தினாயே. அதேபோல் என்னை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என நேராக சொல்லிவிட்டு போடி... எதற்காக இப்படி என் ஷர்ட்டை ஈரமாக்குகிறாய்?" என்று சலித்தான் ஷ்ரவண்.
அவனுடைய கணை இலக்கு தவறாமல் சரியாக சென்று அவளை தாக்கி நிமிர்ந்து அமரச் செய்ய, கோபத்துடன் முறைத்தாள்.
'பிடிக்காமல் தான் இவர் மீதே சாய்ந்துக் கொண்டு அழுவார்களா?' என முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டாள்.
மனைவியின் அழுகையை சமாளிப்பதை விட அவளின் கோபத்தை சமாளிப்பது ஷ்ரவணுக்கு சுலபமாக இருந்தது.
தன்னிடமிருந்து விலகி உர்ரென்று அமர்ந்து இருந்தவளை சுவாரஸ்யமாக பார்த்தபடி ரகசிய சிரிப்போடு நெருங்கியவன், "சரி போ... நான் இந்த வாலி அஜீத் மாதிரி காதல் செய்து விட்டுப் போகிறேன்!" என்றான் மேலும் அலுப்புடன்.
ஶ்ரீநிதி ஒன்றும் புரியாமல் அவன் முகம் நோக்க, "என்ன விழிக்கிறாய்? நீ அந்த படம் பார்க்கவில்லையா?" என்று தீவிரமாக வினவினான்.
அவள் மறுப்பாக தலையசைக்க, "அதில் அண்ணன் அஜீத் நாயகி சிம்ரனை ஒருதலையாக காதலிப்பான். அவன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பாடல் கூட உண்டு, அதில் வரும் வரிகளை நான் ரொம்பவுமே ரசிப்பேன்!" என்று சிலாகித்தான்.
'அப்படியென்ன வரிகள்?' என அவள் மனம் சிந்தனையில் ஆழ, ஷ்ரவண் மெல்லிய குரலில் அதைப் பாட ஆரம்பித்தான்.
"வானில் காயுதே வெண்ணிலா...
நெஞ்சில் பாயுதே மின்னலா...
நீ பேசவே ஓ... ஓ... ஓ... ஓரு மொழி இல்லையா...
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா... ஆ... ஆ... ஆ...
வானில் காயுதே வெண்ணிலா...
நெஞ்சில் பாயுதே மின்னலா...
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்...
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்..."
மனைவியின் முகத்தையே ஆழ்ந்துப் பார்த்தபடி ரசனையுடன் பாடியவன், இறுதி வரியை மீண்டுமொரு முறை அழுத்தமாகப் பாடிவிட்டு கண்சிமிட்டினான்.
கணவனின் காதல் பாட்டும், கண்சிமிட்டலும் அவள் இதயத்தில் பரபரப்பை கூட்ட இமைகள் படபடத்தது.
"புரிகிறதா... நீ என்னை காதலிக்கவே வேண்டாம். நான் மட்டுமே உன்னை காதலித்து விட்டுப் போகிறேன்!" என்று அலட்சியமாக தோள்களை குலுக்க, இவள் முகத்தில் மெல்லிய வெட்க நகை பூத்தது.
'அடேங்கப்பா... இவர் மட்டுமே காதலிப்பாராமே...'
அந்நினைவே இதயத்தை குளிரச் செய்து மனதில் இனிமையை தோற்றுவிக்க கணவன் முகத்தை பார்க்க இயலாமல் விழிகளை தாழ்த்தியவளின் கன்னங்கள் சூடேறி சிவந்தது.
அதில் இதழ் மலர்ந்தவன் அவளை மேலும் நெருங்கி குனிந்து, "இப்பொழுதாவது நீ சொன்னதுப் பொய் என்று ஒத்துக்கொண்டு லவ் யூ சொல்லடி இல்லையென்றால் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்!" என்று கிசுகிசுப்பாக எச்சரித்தான்.
'இவ்வளவு கடுமையாக யாரும் யாரையும் எச்சரித்து இருக்க மாட்டார்கள்!' என மெல்லிய சிலாகிப்புடன் பளிச்சென்று மலரத் துடித்த அதரங்களை மேல்வரிசை முத்துப் பற்களால் அழுந்தக் கடித்து அடக்கினாள் ஶ்ரீநிதி.
Story was removed
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro