💚12💚
"என்னம்மா ஒரு வழியாக இன்றோடு எக்ஸாம்ஸ் முடிந்து விட்டதா? பெரிய ஆர்கிடெக்ட் ஆகி விட்டீர்கள்!" என்று கேலி செய்யும் ஷ்ரவணுக்கு வலிக்காது ஒரு அடிப் போட்ட சுவாதி மலர்ச்சியோடு அவனருகில் அமர்ந்தாள்.
"ஆமாண்ணா... எப்படியோ நான்கு வருடங்களை ஓட்டியாகி விட்டது. ஒரு வாரம் நன்றாக என்ஜாய் செய்து விட்டு, அடுத்த திங்கள் அன்று கன்சல்டென்சியில் வேகன்ஸி பற்றி விசாரித்து வேலைக்கு செல்லலாம் என்று இருக்கிறேன்!"
"இல்லைடா குட்டிம்மா... ஒரு இரண்டு மாதங்களாவது சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளேன். வேலையில் சேர்ந்து விட்டாய் என்றால் அடுத்து அதற்காக இயந்திரத்தனமாக ஓட வேண்டியது இருக்கும். அப்புறம் திருமணம், குடும்பம், குழந்தை என அடுத்தடுத்து தொடர்ந்து கமிட்மென்ட்ஸ் உருவாகி விடும். ஸோ... இதுதான் உனக்கே உனக்கென்று நீ செலவழிக்க கூடிய சரியான நேரம்!"
"அப்படி என்கிறாயா... ஆனால் வீட்டில் தனியாக போர் அடிக்குமே!" என்று முகத்தை சுருக்கினாள் சுவாதி.
பெற்றோரின் இழப்பை எண்ணி சடுதியில் எழுந்த வேதனையை விழுங்கி, "உனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு விஷயத்தில் கவனத்தை செலுத்தி அதை உபயோகமாகவும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடு!" என்று ஆலோசனை வழங்கினான் ஷ்ரவண்.
ம்ஹூம்... என யோசித்தவள் சட்டென்று நினைவு வந்தவளாக, "பார்... மறந்தே போய் விட்டேன். நாளை காலை ஒரு ஆறு மணிக்கு எல்லாம் நான் வெளியில் கிளம்புகிறேன். விடுதியில் இருக்கும் தோழிகள் அறையை காலி செய்து ஊருக்கு கிளம்புவதற்கு முன்னால் நாளை அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றலாம் என்றிருக்கிறார்கள். காலையில் நேராக பீச், அப்புறம் ஷாப்பிங், மூவி அப்படி இப்படி என்று என்னென்னமோ திட்டமிட்டு இருக்கிறார்கள்!" என்றாள்.
"அதற்காக அவ்வளவு சீக்கிரமாக கிளம்பி செல்ல வேண்டுமா?" என்று அண்ணன் தயக்கம் காட்ட, "ஆமாம்... அப்பொழுது தானே மாலைக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு வீடு திரும்ப வசதியாக இருக்கும்!" என்றாள் தங்கை.
"ம்... அதுவும் சரிதான், ஓகே... நன்றாக என்ஜாய் செய்து விட்டு வா!" என்று அனுமதி அளித்தான்.
மறுநாள் காலை தோழிகள் அனைவரும் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி கடற்கரை செல்வதற்காக குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஒன்றாக குழுமினர்.
அடுத்தடுத்து ஒவ்வொருவராக வந்துக் கொண்டிருக்க, அப்பொழுது தான் தன் வீட்டிற்கு அருகில் இருந்த தோழி ஒருவளுடன் அங்கே வந்த சுவாதியும் அவர்களிடம் விரைந்தாள்.
"ஹேய்... சுவாதியும் வந்து விட்டாள்!" என்று அவர்களில் ஒருவள் கூவ, இவளும் அவர்களை நோக்கி கையாட்டியபடி உற்சாகமாக நடக்க ஆரம்பித்தாள்.
அடுத்த நிமிடம் என்ன நடந்தது என்பதை அவள் முழுதாக உணர்வதற்கு உள்ளாகவே அவளை பிடித்து யாரோ பலமாக தள்ளிவிட, சட்டென்று பிடிப்பிற்கு எதையும் பற்ற இயலாமல் அங்கே ப்ளாட்பாரத்தில் போடப்பட்டு லேசாக சிதிலமடைந்த இரும்பு நாற்காலி வரிசையின் மேல் விழுந்த சுவாதியின் நெற்றியை அங்கிருந்த துருப்பிடித்த விரிசல் பதம் பார்க்க இரத்தம் துளிர்விட ஆரம்பித்தது.
இவளுடன் வந்தவள் இவளைப் போலவே தோழிகளை கவனித்தபடி வேக நடையிட்டு அடுத்த அடி எடுத்து வைத்தப் பிறகே கீழே விழும் சுவாதியை பார்த்து அதிர்ந்துப் போனவள், அடுத்து எதிரே கண்களில் கொலைவெறியுடன் கையில் கூரான கத்தியை பிடித்தபடி நின்றிருந்தவனை கண்டு கூச்சலிட ஆரம்பித்தாள்.
Story was removed
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro