💚11💚
ஶ்ரீநிதியின் முனகலில் சற்று வித்தியாசமாக உணர்ந்த ஷ்ரவண் சந்தேகத்தோடு அவளை நெருங்க, அவளது இடது கையின் மணிக்கட்டு கத்தியால் அறுக்கப்பட்டு அதிலிருந்து குபுகுபுவென்று இரத்தம் வழிந்து சிங்கில் கொட்டிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துப் போனவன் வேகமாக அவளின் கரத்தை இறுகப் பற்றினான்.
"ஏய்..." என்றவன் பதறும் பொழுதே தனது ஒட்டுமொத்த ஆவேசத்தையும் அடிமனதில் இருந்து ஒன்று திரட்டி அவனை பிடித்து முரட்டுத்தனமாக தள்ளினாள் ஶ்ரீநிதி.
துவண்டு நின்றிருந்தவளிடம் அத்தகைய சக்தியை எதிர்பாராதவன் தடுமாறி பின்புறமிருந்த சுவற்றில் மோதி நிற்க, அவனுடைய அதிர்ச்சி விலகும் முன்னே அடுத்து வெறிப்பிடித்தவள் போல் அவன் மீது ஶ்ரீநிதி பாத்திரத்தையும் எடுத்து வீசிவிட, நொடிப்பொழுதில் தன்னை சுதாரித்து ஷ்ரவண் விரைவாக விலகவும் பாத்திரம் சுவரில் பட்டு பலமான சத்தத்துடன் தரையில் விழுந்து உருளவும் சரியாக இருந்தது.
மனைவியின் அடுத்தடுத்த அதிரடி செயல்களால் ஒருபுறம் விக்கித்து மலைத்து நின்றவனுக்கு மறுபுறம் கட்டுக்கடங்காமல் ஆத்திரம் பெருகியது.
'என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்? சரியான ஆங்காரம் பிடித்தவள்... இவளுக்காக நான் பதறினால், என்னையே கீழே தள்ளி விட்டு விட்டு பாத்திரத்தை வேறு விசிறியடிக்கிறாள்!' என சீற்றத்தோடு அவளை நெருங்கினான் ஷ்ரவண்.
முன்தின மதிய உணவிற்கு பிறகு எந்தவித ஆகாரமும் உட்கொள்ளாதது, இரவெல்லாம் கணவன் வீடு திரும்பாததில் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருந்த ஶ்ரீநிதியின் உடல் ஏற்கனவே பலகீனமாகியிருந்தது. இந்த நிலையில் அவன் வேறு அவள் மனதை புண்படுத்தியே ஆக வேண்டும் என்கின்ற வெறியில் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளை விட்டு விட உடல் பலவீனத்தோடு உள்ளமும் சேர்ந்து துடிக்க ஒரு கட்டத்தில் தன் நிலையை இழந்தவள் கடுஞ்சினத்துடன் கொதித்தெழுந்தாள்.
தன்னை வாழாவெட்டி ஆக்குவேன் என்கின்ற அவன் எண்ணத்தை ஒருபோதும் வெற்றியடைய வைக்க கூடாது என்பது ஒன்றே அவளை வெறிக்கொண்டு செலுத்த விறுவிறுவென்று சமையலறைக்கு சென்றவள் எதையும் யோசிக்காது கத்தியை எடுத்து பட்டென்று தன் மணிக்கட்டை அறுத்துக் கொண்டாள்.
தலை முழுவதும் அவனுடைய வார்த்தைகளே திரும்ப திரும்ப எதிரொலித்து அவளின் ஆவேசத்தை சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஷ்ரவணே பதறி துடித்து அருகில் வரவும் அவளுக்குள் ஆங்காரம் தான் பீறிட்டுக் கிளம்பியது.
அதன் எதிரொலியாக அவனை தள்ளி விட்டவளுக்கு அப்பொழுதும் மனம் ஆறாமல் தான் கைக்கு கிடைத்ததை எடுத்து அவன்மீது வீசியும் இருந்தாள்.
கையில் இருந்து தொடர்ந்து இரத்தம் வெளியேற வெளியேற இருந்த பலகீனத்தில் அவளுக்கு மேலும் கண்களை சொருகி மயக்கம் வேறு வந்தது. ஆனாலும் தன்னை மீண்டும் நெருங்குபவனை வெறுப்புடன் நோக்கியவள் வீம்பாக தனது உடலின் சக்தியை மறுபடியும் ஒன்றுதிரட்டி அவனை தள்ளிவிட முயன்றாள்.
"ஐ ஹேட் யூ... போங்கள்... வெளியே போங்கள்... இன்று இரவும் வரமாட்டேன் என்று சொன்னீர்கள் தானே, அப்படியே போங்கள். இங்கே எதற்காக வருகிறீர்கள்? எனக்கு உங்களை பார்க்கவே பிடிக்கவில்லை, பக்கத்தில் வராதீர்கள் போங்கள்... போங்கள்!" என்று சற்றும் பலமில்லாமல் முனகியபடி அவன் நெஞ்சின் மீது தன் கையை வைக்க முயல அது துவண்டு கீழே விழும் பொழுதே, தானும் மயங்கி சரிய ஆரம்பித்தாள் ஶ்ரீநிதி.
தன்னை சிறிதும் மதிக்காமல் ஆவேசமாக நடந்துக் கொண்டிருப்பவளை அடக்குவதற்காக கோபமாக அவளை நெருங்கியவன் அவள் மயங்கி விழவும் பதறிப்போய் வேகமாக தாங்கினான்.
Story was removed
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro